துடுப்பு
துடுப்பு (fin) என்பது ஒரு பெரிய உடல் அல்லது கட்டமைப்பில் இணைக்கப்பட்ட ஒரு மெல்லிய கூறு அல்லது இணைப்பாகும். இந்த இழைகள் பொதுவாக ஏற்றம் அல்லது உந்துதலை வழங்கும் படலங்களாக செயல்படுகின்றன. இவை நீர், காற்று அல்லது பிற திரவங்களில் பயணிக்கும்போது இயக்கத்தை வழிநடத்தும் அல்லது நிலைப்படுத்தும் திறனை வழங்குகின்றன. இவை வெப்ப பரிமாற்ற நோக்கங்களுக்காக, மேற்பரப்பு பகுதிகளை அதிகரிக்க அல்லது வெறுமனே அலங்கார நோக்குடன் பயன்படுத்தப்படுகின்றன.[1][2]
துடுப்புகள் பரிணாம வளர்ச்சியில் முதலில் மீன் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் நகர்வதற்கான ஒரு வழிமுறையாக உருவானது. இந்த துடுப்புகள் நீந்தும்போது உந்துதலை உருவாக்கவும், நிலைத்தன்மையை அடையவும், இயக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படுகின்றன. நீர்வாழ் விலங்குகள் முதுகு, வால் மற்றும் குத துடுப்புகள் என பல வகையான துடுப்புகளைக் கொண்டுள்ளன.[3][4]
படல வடிவ துடுப்புகள் இயங்கும் போது உந்துதலை உருவாக்குகின்றன. துடுப்பின் ஏற்றம் திரவங்களின் மீது ஒரு ஆற்றலை வெளிப்படுத்தும் போது இவை துடுப்பை எதிர் திசையில் தள்ளுகின்றன. நீர்வாழ் உயிரினங்கள் தண்ணீரில் துடுப்புகளை முன்னும் பின்னுமாக நகர்த்துவதன் மூலம் குறிப்பிடத்தக்க உந்துதலைப் பெறுகின்றன. துடுப்புகள் காற்று அல்லது தண்ணீரில் சுழற்றப்பட்டால் உந்துதலையும் உருவாக்கலாம். விசையாழிகள் மற்றும் உந்திகள் (சில விசிறிகள் மற்றும் விசையியக்கக் குழாய்கள்) பல சுழலும் துடுப்புகளைப் பயன்படுத்துகின்றன. இவை படலங்கள், இறக்கைகள், கைகள் அல்லது கத்திகள் என பல பெயர்களைக் கொண்டு அழைக்கப்படுகின்றன. உந்திகள் துடுப்புகளைப் பயன்படுத்தி ஒரு வானூர்தி அல்லது கப்பலைச் செலுத்துகின்றன.[5] விசையாழிகள் துடுப்புகளின் ஏற்றதைப் பயன்படுத்தி இயக்க வாயுக்கள் அல்லது தண்ணீரிலிருந்து ஆற்றலை உருவாக்குகின்றன.[6]
இயக்கம் நிறுவப்பட்டதும், துடுப்புகளைப் பயன்படுத்தி இயக்கத்தை கட்டுப்படுத்தலாம்.[3][7][8] படகுகள் மற்றும் வானூர்திகள் பல துடுப்புகளைப் பயன்படுத்தி திசை, நிலை மற்றும் உருட்டளைக் கட்டுப்படுத்துகின்றன.[7][8] துடுப்புகள் அம்பு, ஈட்டி, ஏவூர்தி மற்றும் ஏவுகணைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.[9][10][11] பொறியியலில் துடுப்புகள் வெப்ப பரிமாற்ற துடுப்புகளாக வெப்பநிலையைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.[12][13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Fin Oxford dictionary. Retrieved 24 November 2012.
- ↑ Fin பரணிடப்பட்டது 2020-11-26 at the வந்தவழி இயந்திரம் Merriam-Webster dictionary. Retrieved 24 November 2012.
- ↑ 3.0 3.1 Sfakiotakis, M; Lane, DM; Davies, JBC (1999). "Review of Fish Swimming Modes for Aquatic Locomotion". IEEE Journal of Oceanic Engineering 24 (2): 237–252. doi:10.1109/48.757275. Bibcode: 1999IJOE...24..237S. http://www.mor-fin.com/Science-related-links_files/http___www.ece.eps.hw.ac.uk_Research_oceans_people_Michael_Sfakiotakis_IEEEJOE_99.pdf.
- ↑ Helfman G, Collette BB, Facey DE and Bowen BW (2009) "Functional morphology of locomotion and feeding" பரணிடப்பட்டது 2015-06-02 at the வந்தவழி இயந்திரம் Chapter 8, pp. 101–116. In:The Diversity of Fishes: Biology, John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781444311907.
- ↑ Carlton, John (2007) Marine Propellers and Propulsion Pages 1–28, Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780750681506.
- ↑ Soares, Claire (2008) Gas Turbines: A Handbook of Air, Land, and Sea Applications பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Pages 1–23, Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780750679695.
- ↑ 7.0 7.1 Perez, Tristan (2005) Ship Motion Control: Course Keeping and Roll Stabilisation Using Rudder and Fins பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781852339593.
- ↑ 8.0 8.1 McClamroch, N Harris (2011) Steady Aircraft Flight and Performance பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Page 2–3, Princeton University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780691147192.
- ↑ Vujic, Dragan (2007) Bow Hunting Whitetails பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Page 17, iUniverse. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780595432073.
- ↑ Hobbs, Marvin (2010) Basics of Missile Guidance and Space Techniques Page 24, Wildside Press LLC. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781434421258.
- ↑ Compon-Hall, Richard (2004) Submarines at War 1939–1945 பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Page 50, Periscope Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781904381228.
- ↑ Siegel R and Howell JR (2002) Thermal Radiation Heat Transfer பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Chapter 9: Radiation combined with conduction and convection at boundaries, pp.335–370. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781560328391.
- ↑ Fin: Function in aircraft engines பரணிடப்பட்டது 2023-12-16 at the வந்தவழி இயந்திரம் Encyclopædia Britannica. Retrieved 22 November 2012.