தாரை வானூர்தி
தாரை வானூர்தி (jet aircraft, jet) என்பது தாரைப் பொறி மூலம் உந்தப்படும் நிலைத்த இறக்கை விமானம் ஆகும். பொதுவாக இது முன்னோக்கி செலுத்தப்படும் வானூர்தியைவிட வேகமானதும், அதி உயர்வாக 10,000–15,000 மீட்டர்கள் (33,000–49,000 ft) உயரத்தில் பறக்க வல்லது. இந்த உயரத்தில், தாரைப் பொறி நீண்ட தூரத்திற்கான அதிக பயனை அடையும். முன்னோக்கி செலுத்தப்படும் பொறிகள் மூலம் இயங்கும் வானூர்தி மிகக் குறைவாக உயரத்திலேயே அதிக பயனை அடைகின்றன. சில தாரை வானூர்திகள் ஒலியைவிட வேகமாகச் செல்லக்கூடியவை.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ Elert, Glenn. "Speed of a Commercial Jet Airplane - The Physics Factbook". hypertextbook.com.