ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்
வகை | பொது நிறுவனம் |
---|---|
முந்தியது | மிகோயன், சுகோய், இல்யூசின், இர்குட், துபோலேவ் மற்றும் யாகோவ்லேவ் |
நிறுவுகை | பெப்ரவரி 20, 2006 |
தலைமையகம் | மாஸ்கோ, உருசியா |
தொழில்துறை |
|
உற்பத்திகள் |
|
வருமானம் | ₽468 பில்லியன் US$6.365 பில்லியன்[1] |
பணியாளர் | 100,000[2] |
இணையத்தளம் | www.uacrussia.ru |
ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம் (United Aircraft Corporation) என்பது வானூர்தி தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு துறையில் ஈடுபட்டுள்ள ஒரு உருசிய (முன்னர் சோவியத்) தொழில்நுட்ப நிறுவனமாகும். மாஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த நிறுவனமானது மக்கள் போக்குவரத்து மற்றும் இராணுவ பயன்பாட்டிற்காக வானூர்திகளை வடிவமைக்கிறது. பிப்ரவரி 2006 இல், உருசிய அரசாங்கம் மிகோயன், சுகோய், இல்யூசின், இர்குட், துபோலேவ் மற்றும் யாகோவ்லேவ் ஆகிய நிறுவனங்களை இணைத்து யுனைடெட் ஏர்க்ராப்ட் கார்ப்பரேஷன் (ஒருங்கிணைந்த வானூர்தி நிறுவனம்) என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தை அமைத்தது.[3][4]
பிப்ரவரி 2007 இல், இந்த நிறுவனத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட முதல் சண்டை வானூர்தியான மிகோயன் மிக்-35 நான்காம் தலைமுறை போர் வானூர்தி உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[5][6] இந்நிறுவனத்தின் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் உருசியாவின் பல்வேறு பிராந்தியங்களில் அமைந்துள்ளன. இந்த நிறுவனம் இத்தாலி, இந்தியா மற்றும் சீனாவில் உள்ள நிறுவனங்களுடன் கூட்டு வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "UAC received record revenue in 2021". www.aex.ru.
- ↑ "Russia's United Aircraft reaches maturity". Flight International. 14 June 2010 இம் மூலத்தில் இருந்து 15 August 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090815192617/http://www.flightglobal.com/articles/2009/08/11/330688/russias-united-aircraft-reaches-maturity.html.
- ↑ "Russian Aircraft Industry Seeks Revival Through Merger பரணிடப்பட்டது 2015-11-07 at the வந்தவழி இயந்திரம்." The New York Times.
- ↑ "Contacts - UAC". United Aircraft Corporation.
- ↑ "MiG-35/MiG-35D." RAC MiG Corporation. Retrieved: 8 November 2012. பரணிடப்பட்டது 27 செப்டெம்பர் 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "MiG-35." Aviapedia. Retrieved: 8 November 2012. பரணிடப்பட்டது 17 மே 2007 at the வந்தவழி இயந்திரம்
- ↑ "History - UAC". United Aircraft Corporation.