நீசுனி நோவ்கோரத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நீசுனி நோவ்கோரத்
Нижний Новгород
நீசுனி நோவ்கோரத் is located in உருசியா
நீசுனி நோவ்கோரத்
நீசுனி நோவ்கோரத்
இரசியாவில் நீசுனி நோவ்கோரத் இன் அமைவிடம்
ஆள்கூறுகள்: 56°19′37″N 44°00′27″E / 56.32694°N 44.00750°E / 56.32694; 44.00750ஆள்கூறுகள்: 56°19′37″N 44°00′27″E / 56.32694°N 44.00750°E / 56.32694; 44.00750
Coat of Arms of Nizhny Novgorod.svg
சின்னம்
Flag of Nizhny Novgorod.svg
நகரம் நாள்June 12[1]
நிருவாக அமைப்பு (நவம்பர் 2011)
நாடு இரசியா
ஆட்சிப் பிரிவு நீசுனி நோவ்கோரத் மாகாணம்[2]
'மாநகரத் தரம்
Urban okrugநீசுனி நோவ்கோரத் நகர வட்டம்[3]
Administrative center ofநீசுனி நோவ்கோரத் நகர வட்டம்[3]
பிரதிநிதித்துவ அமைப்புநகட சபை (தூமா)[4]
Statistics
பரப்பளவு460 ச.கி.மீ (177.6 ச.மை)[5]
'1221[6]
Previous namesநீசுனி நோவ்கோரத் (until 1932),[7]Gorky (until 1990)[7]
Postal code(s)603000-603999
Dialing code(s)+7 831[8]
Official websitehttp://adm.nnov.ru/en/
வரலாற்று நகர மையம்

நீசுனி நோவ்கோரத் (Nizhny Novgorod, உருசியம்: Ни́жний Но́вгород), சுருக்கமாக நீசுனி, என்பது உருசியாவின் நகரமும், நீசுனி நோவ்கோரத் மாகாணத்தின் தலைநகரமும், வோல்கா நடுவண் மாவட்டத்தின் தலைநகரமும் (நிருவாக மையம்) ஆகும்.[9] 1932 முதல் 1990 வரை, இந்நகரம் கோர்க்கி (Gorky, Горький என வழங்கப்பட்டு வந்தது.[10] இந்நகரில் பிறந்த எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியின் நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. இந்நகரம் உருசியாவின் முக்கிய பொருளாதார, போக்குவரத்து, அறிவியல், மற்றும் கலாசார மையங்களில் ஒன்றாக இருக்கிறது. அத்துடன் உருசியாவின் ஆற்று-வழி சுற்றுலாவு மையமும் ஆகும். நகரின் வரலாற்றுப் புகழ் மிக்க பகுதிகளில் பல்கலைக்காகங்கள், நாடக அரங்குகள், அருங்காட்சியகங்கள், கிறித்தவக் கோவில்கள் ஆகியன அமைந்துள்ளன. இந்நகரம் மாஸ்கோவில் இருந்து 400 கிமீ கிழக்கே, ஓக்கா ஆறு வோல்கா ஆற்றில் கலக்கும் பகுதியில் அமைந்துள்ளது. 2010 தரவுகளின் படி, இதன் மக்கள்தொகை 1,250,619 ஆகும்.

இந்நகரம் 1221 பெப்ரவரி 4 இல் விளாதிமீரின் இளவரசர் இரண்டாம் யூரி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டது.[11] 1612 இல் போலந்து-மாஸ்கோ போரில் மாஸ்கோவை விடுவிப்பதற்காக குசுமா மினின், இளவரசர் திமீத்ரி பொசார்ஸ்கி ஆகியோர் இங்கிருந்து இராணுவத்தினரைத் திரட்டிச் சென்றனர். 1817 இல் நீசுனி நோவ்கோரத் உருசியப் பேரரசின் மிக முக்கியமான தொழிற்துறை மையமாக ஆக்கப்பட்டது. 1896 இல் இங்கு அனைத்து-உருசிய கண்காட்சி ஒன்று இடம்பெற்றது. சோவியத் ஆட்சியில் கோர்க்கி தானுந்துத் தொழிற்சாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில், இந்நகரம் கிழக்குப் போர்முனைக்கு மிக முக்கிய ஆயுதத் தளபாடங்கள் விநியோகிக்கும் தளமாக இருந்தது. இதன் காரணமாக, நாடி செருமனியின் குண்டு வீச்சுகளுக்கு இந்நகரம் பலமுறை உட்பட்டது.

போரின் பின்னர், இந்நகரம் ஒரு மூடிய நகரமாக ஆக்கப்பட்டது. 1990 இல் சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னரே இது மீண்டும் சுற்றுலாப்பயணிகளுக்குத் திறக்கப்பட்டது. இக்காலப் பகுதியில் நகரின் பெயர் மீண்டும் நீசுனி நோவ்கோரத் என மாற்றப்பட்டது. 1985 இல், சுரங்கத் தொடருந்து சேவை இங்கு ஆரம்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Nizhny Novgorod". calend.ru. 2016-08-15 அன்று பார்க்கப்பட்டது.
 2. Law #184-Z
 3. 3.0 3.1 Law #205-Z
 4. Charter of Nizhny Novgorod, Article 26.1.1
 5. Official website of Nizhny Novgorod. Overview of the city பரணிடப்பட்டது 2017-05-01 at the வந்தவழி இயந்திரம் (உருசிய மொழியில்)
 6. "Founding of Nizhny Novgorod". nizhnynovgorod.com. 2016-08-15 அன்று பார்க்கப்பட்டது.
 7. 7.0 7.1 "Orthographic dictionary". gramota.ru. August 21, 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-09-18 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Contacts". adm.nnov.ru. 2016-08-26 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-15 அன்று பார்க்கப்பட்டது.
 9. "Нижний Новгород – Столица Поволжья и "карман России" | www.Nischni-Nowgorod.ru". www.nischni-nowgorod.ru (ஜெர்மன்). 2018-06-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2017-07-31 அன்று பார்க்கப்பட்டது.
 10. Decree of October 22, 1990, Article 1
 11. Владимир Кучин (2018). Десять веков Нижегородского края. 1152—2018. 3. Издательские решения. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-5-4490-6270-3. 

மூலம்[தொகு]

 • Munro-Butler-Johnstone, Henry Alexander, A trip up the Volga to the fair of Nijni-Novgorod, Oxford: J. Parker and co., 1876.
 • Fitzpatrick, Anne Lincoln, The Great Russian Fair: Nizhnii Novgorod, 1840-90, Houndmills, Basingstoke, Hampshire: Macmillan, in association with St. Antony’s College, Oxford, 1990. ISBN 0-333-42437-9

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நீசுனி_நோவ்கோரத்&oldid=3663530" இருந்து மீள்விக்கப்பட்டது