நரசிம்மன் ராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
என். ராம்
பிறப்பு4 மே 1945 (1945-05-04) (அகவை 78)
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
கல்விஇலயோலாக் கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி, சென்னை கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிகஸ்தூரி & சன்சு தலைவர், தி இந்து வெளியீட்டாளர் (2013 – இன்று)[1]
நிறுவனப் பணிப்பாளர், தி இந்து குழுமம் (1977–2003)
ஆசிரியர், புரொண்ட்ட்லைன், ஸ்போர்ட்ஸ்டார் (1991–2003)
ஆசிரியர் தி இந்து குழுமம் (2003–2012)
அறியப்படுவதுஊடகவியலாளர்
இயக்குநராக உள்ள
நிறுவனங்கள்
தி இந்து குழுமம் (2012 – இன்று)
பெற்றோர்ஜி. நரசிம்மன்
பிள்ளைகள்1

நரசிம்மன் ராம், என். ராம் என்றும் அறியப்படுபவர், (பிறப்பு மே 4, 1945) ஓர் இந்திய இதழியலாளர். த இந்து ஆங்கில நாளிதழின் முதன்மை ஆசிரியராக சூன் 27,2003 முதல் இருந்து வருகிறார். இந்து குழுமத்தின் பிற வெளியீடுகளான பிரண்ட்லைன், த இந்து பிசினஸ்லைன், ஸ்போர்ட்ஸ்டார் இதழ்களையும் நிர்வகித்து வருகிறார். இந்திய அரசு அவருக்கு பத்ம பூசண் விருது வழங்கியுள்ளது. அவரது இடதுசாரி நோக்குகளுக்காகவும்[2][3] தமிழீழத்திற்கு எதிரான நிலை குறித்தும்[4] பெரிதும் விமரிசிக்கப்படுபவர்.இலங்கை அரசு அவருக்கு லங்காரத்னா என்ற உயரிய குடிமை விருது வழங்கியுள்ளது.

கல்வி[தொகு]

ராம் சென்னை, லயோலாக் கல்லூரியில் 1964ஆம் ஆண்டு இளங்கலைப் பட்டம் பெற்றார். 1966ஆம் ஆண்டு முதுகலைப்பட்டத்தை மாநிலக் கல்லூரியில் பெற்றார். பின்னர் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தின் இதழியல் பட்டமேற்படிப்புப் பள்ளியில் ஒப்பீடு இதழியலில் எம். எஸ் பட்டம் பெற்றார்.[5] மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார்.1970ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் இந்திய பொதுவுடமைக் கட்சியுடன் தொடர்புடைய மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டிணைப்பு(SFI) உருவானபோது அதன் துணைத்தலைவராக இருந்தார்.[6]

தனி வாழ்க்கை[தொகு]

இவரது முதல் மனைவி சூசன் ஆங்கிலப் பெண்மணி. இவர்களது மகள் வித்யா ராம் புலிட்சர் பரிசு பெற்றவர். முதல் மனைவியுடனான விவாகரத்திற்குப் பின்னர் ராம், மரியம் சாண்டி என்பவரை மணந்தார்.

இதழியல் பணிவாழ்வு[தொகு]

1977ஆம் ஆண்டு தமது குடும்ப நிறுவனமான இந்து குழுமத்தில் த இந்து நாளேட்டின் இணை தொகுப்பாசிரியராக தமது பணிவாழ்வைத் தொடங்கினார். 1980ஆம் ஆண்டு வாசிங்டன் செய்தியாளராகப் பணியாற்றினார். 1984ஆம் ஆண்டு பிரண்ட்லைன் வார இதழ் துவங்கப்பட்டப்போதிலிருந்து அதனுடன் இணைந்துள்ளார்.[5]. ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் போபர்ஸ் அவதூற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பெரிதும் பாராட்டப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Changes at the Helm: Editorial and Business". The Hindu (Chennai, India). 21 October 2013. http://www.thehindu.com/news/national/changes-at-the-helm-editorial-and-business/article5257829.ece?homepage=true. 
  2. BIG BROTHER FASCINATION - ராமசந்திர குகா
  3. The Commissar In His Labyrinth பரணிடப்பட்டது 2010-08-29 at the வந்தவழி இயந்திரம் - Tehelka
  4. வெப்துனியா தமிழ்ச்செய்தி
  5. 5.0 5.1 "Profile of N.Ram". Archived from the original on 2008-09-13. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-08-30. பார்க்கப்பட்ட நாள் 2010-04-23.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நரசிம்மன்_ராம்&oldid=3560107" இலிருந்து மீள்விக்கப்பட்டது