கண்ணாடி விரியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடி விரியன்
Daboia head.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணிகள்
துணைத்தொகுதி: முதுகெலும்பிகள்
வகுப்பு: ஊர்வன
வரிசை: Squamata
துணைவரிசை: பாம்புகள்
குடும்பம்: Viperidae
துணைக்குடும்பம்: Viperinae
பேரினம்: Daboia
ஜான் கிரே, 1842
இனம்: D. russelii
இருசொற் பெயரீடு
Daboia russelii
(ஜார்ஜ் ஷா, பிரெடெரிக் நொடர், 1797)
வேறு பெயர்கள்

Daboia - கிரே, 1840 (nomen nudum)

கண்ணாடி விரியன்

கண்ணாடி விரியன் (About this soundஒலிப்பு ) (Russel's Viper, Daboia russelii) என்பது நச்சுத் தன்மை கொண்ட பாம்பு. இவை ஆசியாவில் குறிப்பாக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும், தென்கிழக்காசியா, சீனாவின் தெற்குப் பகுதி, தாய்வான் ஆகிய நாடுகளில் காணப்படுகின்றன[1]. இது பெரும் நான்கு எனப்படும் நான்கு பாம்புகளில் ஒன்று. இந்தியாவில் பாம்புக்கடியினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ஏறக்குறைய இவை நான்கே காரணம்[2].

உடல் தோற்றம்[தொகு]

கண்ணாடி விரியன். இதன் தற்கால அறிவியற்பெயர் டபோயா ரசெல்லி (Daboia russelii)
  • தடித்த உடல்; கழுத்தைவிடப் பெரிய முக்கோண-வடிவ தலை.
  • தலையின் மேற்பகுதியிலுள்ள செதில்கள் சிறியனவாகவும் அதிக எண்ணிக்கையிலும் உள்ளன.
  • பெரிய மூக்குத்துளை உடையதாகவும், கண்மணி செங்குத்தாகவும் உள்ளன.

நிறம் மற்றும் குறிகள்[தொகு]

  • பழுப்பு அல்லது மஞ்சள் கலந்த பழுப்பு நிற உடலுடையது.
  • உடலின் நீளவாக்கில் மூன்று வரிசைகளில் தெளிவாகத் தெரியும் பெரிய பழுப்பு (அல்லது கருப்பு) வட்ட (அல்லது நீள்வட்ட) குறிகள் காணப்படுகின்றன. இந்தக்குறிகள் ஒன்றுடன் மற்றொன்று சங்கிலி போல் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ காணப்படுகின்றன.
  • உச்சந்தலைப்பகுதியில் முக்கோண வடிவ வெள்ளை நிறக்குறி உள்ளது. கண்ணுக்கு கீழேயும் பக்கவாட்டிலும் முக்கோண வடிவ கருங்குறிகள் உள்ளன.
  • உடலின் கீழ்ப்பகுதி வெண்மையாகவும் பிறை-வடிவக் குறிகளுடனும் காணப்படுகிறது.

நச்சு[தொகு]

விரியன் பாம்பின் நச்சு குருதிச் சிதைப்பானாகும். ஆகவே மருத்துவர்கள் இரத்தம் உறையும் நேரம் மற்றும் இரத்தம் வழியும் நேரம் ஆகியவற்றை மணிக்கொரு முறைச் சோதிப்பர். இது மிகவும் கொடிய விஷம் ஆகும். ஆறு மணி நேரத்தில் உயிரிழக்க நேரிடும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. McDiarmid RW, Campbell JA, Touré T. 1999. Snake Species of the World: A Taxonomic and Geographic Reference, vol. 1. Herpetologists' League. 511 pp. ISBN 1-893777-00-6 (series). ISBN 1-893777-01-4 (volume)
  2. Whitaker Z. 1989. Snakeman: The Story of a Naturalist. The India Magazine Books. 184 pp. ASIN B0007BR65Y.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடி_விரியன்&oldid=2992182" இருந்து மீள்விக்கப்பட்டது