டைட்டானிக் பாக்டீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டைட்டானிக் பாக்டீரியா (Halomonas titanicae) எனும் ஒருவித பாக்டீரியா துருப்பிடித்த டைட்டானிக் கப்பலின் சிதைப்பகுதிகளில் இருந்து 2010ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இரும்பு ஒட்சட்டை உணவாகப் பயன்படுத்தும் பாக்டீரியாவாகும். பனிக்கட்டிகள் தொங்குவது போன்ற கூர்த்துருத்துகள்கள் (rusticles) என்றழைக்கப்படும் நுண் துளைகளைக் கொண்ட, எளிதில் உருக்குலைந்துவிடும் டைட்டானிக் கப்பலின் துருப்பிடித்த இரும்புப் பாகங்களில் இவை வசிக்கின்றன. இதன் காரணமாக இறுதியில் டைட்டானிக் கப்பலின் மீதிகள் முற்றிலும் மறைந்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. முன்னைய காலங்களில் ஆழ்கடலில் மூழ்கிப்போன கப்பல்கள் உருத்தெரியாமல் மறைந்து போனதுக்கு இவை காரணமாக இருக்கலாம்.

2010ம் ஆண்டு கூர்துருத்துகள்களின் மாதிரிகள் மீர்-2 எனும் தானியங்கி நீர்மூழ்கிக் கருவியின் உதவியுடன் எடுக்கப்பட்டன. கனடாவில் உள்ள பல்கலைக்கழகமும் எசுப்பானியப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நுண்ணுயிரியை மாதிரிகளில் இருந்து பிரித்தெடுத்தனர், இது உப்பை விரும்பும் அலோமொனஸ் பிரிவைச் சேர்ந்த இனமென்பது அறியப்பட்டது. இந்தப் பாக்டீரியா மூலம் கூர்த்துருத்துகள்கள் பற்றிய ஆய்வு பிற்காலத்தில் இலகுவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் நீருள் அமிழ்ந்துள்ள உலோகங்கள் நுண்ணங்கிகளால் மாற்றத்துக்கு உட்படுவது பற்றி ஆராய முடியும்.

இத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய பத்து சிறப்பு உயிரினங்களின் பட்டியலில் டைட்டானிக் பாக்டீரியா உள்ளடக்கப்பட்டுள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. http://www.bbc.co.uk/news/science-environment-11926932
  2. http://ijs.sgmjournals.org/cgi/rapidpdf/ijs.0.020628-0v2.pdf
  3. http://forum.palkalaikazhakam.com/viewtopic.php?f=159&t=110
  4. http://species.asu.edu/2011_species03