பில்லி பௌடன்
Jump to navigation
Jump to search
![]() | |
தனிப்பட்ட தகவல்கள் | |
---|---|
முழுப்பெயர் | பிரென்ட் ஃபிரேசர் பௌடன் |
பட்டப்பெயர் | பில்லி |
நடுவராக | |
தேர்வு நடுவராக | 61 (2000–நடப்பில்) |
ஒநாப நடுவராக | 143 (1995–நடப்பில்) |
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |
| |
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 4 2010 |
பிரென்ட் பிரேசர் "பில்லி" பௌடன் (Brent Fraser "Billy" Bowden, பிறப்பு ஏப்ரல் 11, 1963) நியூசிலாந்தைச் சேர்ந்த ஓர் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவரது சுவையான சைகைகளுக்காகப் புகழ்பெற்றவர். துடுப்பாட்டக்காரராக துவங்கிய பில்லி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் நடுவராகப் பணியாற்றத் தொடங்கினார். முடக்கு வாதத்தால் விரல்களை நேராக நீட்டுவது பெளடனுக்கு மிகுந்த வலியினை உண்டாக்குவதால், மட்டையாளர்களை வெளியேற்ற அவர் தனது நீட்டிய ஆள்காட்டி விரலை பயன்படுத்துவதில்லை. மாறாக குறுகலான விரலையே பயன்படுத்துகிறார். இச்சைகை பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.
வெளியிணைப்புகள்[தொகு]
- Billy Bowden at கிரிக்இன்ஃபோ.
- [1] - Podcast site of the Beige Brigade