கண்டிச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கண்டியச் சட்டம் இலங்கை கண்டி வாழ் மக்களுக்காக உருவக்கப்பட்டது. இது ஓர் இடம் சார் சட்டமாகும். கண்டி இராச்சியத்தின் காலத்தில் கண்டியில் வாழ்ந்த சிங்களவர் (மலை நாட்டுச் சிங்களவர்) மரபில் வழிவந்தவர்களுக்கு இது பொருந்துகிறது. இச்சட்டம் திருமணம், சாதி, வாரிசுரிமை போன்ற தனிநபர் விசயங்களுக்குப் பொருந்தும் தனிநபர் சட்டமாகும். இலங்கையின் பிற தனிநபர்ச்சட்டங்கள் தேசவழமைச் சட்டம், முஸ்லிம் தனிநபர்ச் சட்டம் போன்றவை ஆகும்.

கண்டிச் சிங்களவர் சட்டமானது ஒரு பெண் சகோதரர்களான பல ஆண்களை ஒரு சேரத் திருமணம் முடிப்பதை அனுமதிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்டிச்_சட்டம்&oldid=3396924" இருந்து மீள்விக்கப்பட்டது