பதநீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கள்ளு,பதனீர் சேகரித்தல், பிலிப்பீன்சு

தென்னை, பனை, கித்துல் முதலானவற்றின் பூம்பாளையிலிருந்து வடித்தெடுக்கப்படும் திரவம் பதனீர் எனப்படுகிறது. இது இனிப்புச் சுவையுடைய அல்ககோல் அற்ற பானமாகும். பதனீரிலிருந்து கள்ளு,கருப்பட்டி,வினாகிரி என்பன தயாரிக்கப்படுகின்றன.

சேகரிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே இயற்கையிலுள்ள வளிமண்டல மதுவத்தினால் நொதித்தலடைந்து கள்ளாக மாறும். இதனைத் தடுப்பதற்காக சேகரிக்கும் குடுவையில் சுண்ணாம்பு பூசப்பட்டு பதனீர் நொதிக்காமல் காக்கப்படும்.

பதனீரின் உள்ளடக்கம்[தொகு]

பதனீர் அதிகளவு மாப்பொருள் அடங்கிய நடுநிலையான காரகடித்தன்மை கொண்ட பானமாகும்.[1] இதன் உள்ளடக்கம் வருமாறு:[2]

Substance Concentration (g/100 mL)
சுக்குரோசு 12.3 - 17.4
பொட்டாசியம் 0.11 - 0.41
புரதம் 0.23 - 0.32
அஸ்கோபிக்கமிலம் 0.016 - 0.030
மொத்த திண்மக் கூறுகள் 15.2 - 19.7


மேலும் படிக்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பதநீர்&oldid=1641375" இருந்து மீள்விக்கப்பட்டது