கரக சதுர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கர்வா சௌத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கரக சதுர்த்தி
கடைபிடிப்போர்வட இந்திய, மேற்கு இந்திய இந்து மற்றும் சீக்கிய மகளிர்
வகைமழைக்கால பண்டிகை
கொண்டாட்டங்கள்1 நாள்
அனுசரிப்புகள்திருமணமான பெண்டிர் உண்ணாதிருத்தல்
தொடக்கம்வட இந்திய கார்த்திகை மாத்த்தின் (கார்த்திக்) தேய்பிறையின் (முழுநிலவிற்கு பின்பான) நான்காம் நாள்.
நாள்அக்டோபர்/நவம்பர்
தொடர்புடையனவிஜயதசமி மற்றும் தீபாவளி

கரக சதுர்த்தி அல்லது கர்வா சௌத் (Karva Chauth, இந்தி: करवा चौथ, பஞ்சாபி: ਕਰਵਾ ਚੌਥ, உருது: کروا چوتھ) வட இந்தியாவிலும், பாக்கிஸ்தானிலும் இந்து மற்றும் சீக்கிய சமயத்தைச் சேர்ந்த திருமணமான பெண்கள் கடைபிடிக்கும் ஓர் வருடாந்தர பண்டிகை ஆகும். இந்த நாளில் காலை (சூரிய உதயம்) முதல் மாலை (நிலவு உதயம்) வரை இப்பெண்கள் உண்ணாதிருந்து, தங்கள் கணவரின் உடல்நிலைக்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் நோன்பு மேற்கொள்வர்.[1][2] இந்த உண்ணாநோன்பு உத்தராகாண்ட், உத்தரப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், சம்மு காசுமீர், அரியானா, பஞ்சாப், இராசத்தான் மற்றும் குசராத் மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது.[1][3][4][5] வட இந்திய நாட்காட்டியில் கார்த்திகை மாதத்தில் (தமிழ் ஐப்பசி) முழு நிலவு கழிந்த நான்காம் நாள் கொண்டாடப்படுகிறது. அண்மைக்காலங்களில் இந்த விழா இந்தித் திரைப்படங்களின் தாக்கத்தால் திருமணமாகாத பெண்களும் தங்கள் காதலர்கள்/ கணவராக வரிந்தவர்களின் நலனுக்காக கடைபிடிக்கத் துவங்கியுள்ளனர்.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Kartar Singh Bhalla, Let's Know Festivals of India, Star Publications, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788176501651, ... 'Karwa Chauth' is a ritual of fasting observed by married Hindu women seeking the longevity, ... married women in the northern and western parts of India, especially, Haryana, Jammu and Kashmir, Punjab, Rajasthan, Uttar Pradesh and Gujarat ... eat a little food before sunrise and start the fast ... After the moon rises ... finally break their fast ...
  2. S. K. Rait, Sikh women in England: their religious and cultural beliefs and social practices, Trentham Books, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781858563534, ... karva chauth, a fast kept to secure the long life of husbands, was popular among Sikh women ...
  3. Kumar, Anu (2007-10-21). "A Hungry Heart". The Washington Post. http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2007/10/16/AR2007101601513.html. 
  4. Subhashini Aryan, Crafts of Himachal PradeshLiving traditions of India, Mapin, 1993, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780944142462, ... Karva Chauth, when a fast is universally observed by all married women, a small pot, karva, is required ...
  5. Anne Mackenzie Pearson, Because it gives me peace of mind: ritual fasts in the religious lives of Hindu women (McGill studies in the history of religions), SUNY Press, 1996, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791430385, ... Karva Cauth seems to be in western Uttar Pradesh ...
  6. Sohindar Singh Waṇajara Bedi, Folklore of the Punjab, National Book Trust, 1971, ... Sometimes even unmarried girls observe this fast and pray for their husbands-to-be ...

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரக_சதுர்த்தி&oldid=3876803" இலிருந்து மீள்விக்கப்பட்டது