உள்ளடக்கத்துக்குச் செல்

சிபாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Old Walled City of Shibam
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைCultural
ஒப்பளவுiii, iv, vi
உசாத்துணை192
UNESCO regionஅரேபியம்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1982 (6வது தொடர்)

சிபாம் (அரபு மொழி: شبام), கர்ராமாத், யெமனில் உள்ள ஒரு நகர். இவ் நகரம் அண்ணளவாக 7000 மக்கள் தொகை கொண்டதாக கணிக்கப்படுகின்றது. இந்நகர் முன்னொரு காலத்தில் கர்ராமாத் மன்னர் ஆட்சிக்குட்பட்ட பரப்பின் தலைநகராக விளங்கியது. சிபாம் நகரை பற்றி முதல் அறிந்த கல்வெட்டுக்கள் மூன்றாம் நூற்றாண்டை சார்ந்தவையாக இருப்பதால்.[1] இந்நகரம் குறைந்தது 1700 வருடங்கள் பழமை வாய்ந்ததாகும்.

கட்டிடக்கலை

[தொகு]

சிபாம் நகர் முற்றிலும் வேறான , தனிப்பட்ட , கட்டட நிர்மாணிப்புக்கு பெயர் போனதாகும் . 1982ம் ஆண்டு யுனெஸ்கோவினால் உலக பாரம்பரியக் இடமாக அறிவிக்கபட்டுள்ளது. இந்நகரில் உள்ள கட்டடங்கள் மண்ணால் ஆனவை 5 இருந்து 11மாடிகள் கொண்டவையாக உள்ளது. ஒவ்வொரு மாடியிலும் ஒரு, அல்லது இரு குடியிருப்புக்கள் உள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது. பல முறை புதிப்பித்து கட்டப்பட்டாலும், பல கட்டிடங்கள் 15ம் நூற்றாண்டை சார்ந்தவை. இவ்வகையான கட்டிடங்கள் அன் அளவாக 500 சிபாம் நகரில் உள்ளது இவற்றில் சில 30 மீ. உயரம் கொண்டது. சிபாம் உலகின் பழமையான வானளாவி நகர் என பல முறை அழைக்கபடுவதுண்டு, மற்றும் மிகச் சிறந்த முன் உதாரணம் கொண்ட செங்குத்து நகரமைப்பு கொண்ட பழைமையான நகர்களுக்குள் ஒன்றாக சிபாம் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Wadi Hadramowt and walled city of Shabam". ShibamOnline.net. Archived from the original on 2010-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-01-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிபாம்&oldid=3575258" இலிருந்து மீள்விக்கப்பட்டது