உள்ளடக்கத்துக்குச் செல்

கரோலின்ஸ்கா மையம்

ஆள்கூறுகள்: 59°20′56″N 18°01′36″E / 59.34889°N 18.02667°E / 59.34889; 18.02667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கரோலின்ஸ்கா மையம்
Karolinska Institutet
குறிக்கோளுரைAtt förbättra människors hälsa (மனித உடல் நலத்தை மேம்படுத்துதல்)
வகைமருத்துவ பல்கலைக்கழகம், (பொது)
உருவாக்கம்1810 (1810)
நிதிக் கொடை576,1 மில்லியன் யூரோ (2010)
நிதிநிலை6.67 பில்லியன் குரோனார்[1]
தலைமை ஆசிரியர்உல்லே பீட்டர் ஓட்டர்சன்
நிருவாகப் பணியாளர்
4,820 (2016)[1]
மாணவர்கள்5,973 (2016)[1]
2,267 (2016)[1]
அமைவிடம்
சோல்னா
, ,
59°20′56″N 18°01′36″E / 59.34889°N 18.02667°E / 59.34889; 18.02667
வளாகம்சோல்னா
நிறங்கள்    
இணையதளம்www.ki.se
கரோலின்ஸ்கா மையத்தின் கொடி
கரோலின்ஸ்கா மையம், சோல்னா
கரோலின்ஸ்கா மருத்துவமனை, சோல்னா
கரோலின்ஸ்கா அரங்கம், சோல்னா வளாகம்
பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
கரோலின்ஸ்கா மைய நூலகம் மற்றும் பெர்சீலியுஸ் ஆய்வகம், சோல்னா வளாகம்
பழையத் தோட்டம் (முற்றம்), சோல்னா வளாகம்
பூர்வீக கரோலின் மையக் கட்டிடங்கள், ஸ்டாக்ஹோம்
கரோலின்ஸ்கா மருத்துவமனை, ஹுட்டிங்கே வளாகம்
நோவம் ஆய்வுப் பூங்கா, ஹுட்டிங்கே வளாகம்

கரோலின்ஸ்கா மையம் (Karolinska Institutet) சுவீடன் நாட்டின் தலைநகரமான ஸ்டாக்ஹோமில் உள்ளது. இது ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய மருத்துவப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 1810ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்நிறுவனமானது, உப்சாலா பல்கலைக்கழகம் (1477) மற்றும் லுண்ட் பல்கலைக்கழகத்தினை (1666) அடுத்து மூன்றாவதாக சுவீடனில் உருவாக்கப்பட்ட பழமையான மருத்துவ நிறுவனம் ஆகும். 2010ஆம் ஆண்டு, 200ஆம் ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடியது. சோல்னா மற்றும் ஹுட்டிங்கேவில் உள்ள கரோலின்சுகா பல்கலைக்கழக மருத்துவமனையானது கரோலின்சுகா மையத்துடன் இணைந்த ஆய்வு மற்றும் கற்பித்தலை முதன்மையாகக் கொண்ட மருத்துவ வளாகம் ஆகும். சுவீடனில் நடக்கும் முப்பது சதவிகித (30%) மருத்துவப்பயிற்சியும், நாற்பது சதவிகித (40%) மருத்துவ ஆய்வும் இங்குதான் நடைபெறுகிறது[2]. இந்த ஆய்வு மையம் அமைக்கும் குழுமம், மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசு பெற்றவர்களை தேர்ந்தெடுக்கிறது. உலக அளவில் கரோலின்சுகா நிறுவனம் பதினாறாவது சிறந்த மருத்துவப் பல்கலைக்கழகமாக உள்ளது[3].

ஆய்வுத்துறைகள் மற்றும் பிரிவுகள்[தொகு]

சோல்னா வளாகம்[தொகு]

 1. செல் மற்றும் மூலக்கூறு உயிரியல் (CMB)
 2. சுற்றுசூழல் மருத்துவம் (IMM)
 3. கற்றல், தகவலியல், நிருவாகம் மற்றும் நெறிமுறைகள் (LIME)
 4. மருத்துவ உயிர்வேதியியல் மற்றும் உயிர்இயற்பியல் (MBB)
 • உயிர்இயற்பியல்
 • உயிர்வேதியியல்
 • உடலிரசாயனவியல் - I
 • உடலிரசாயனவியல் - II
 • இரசாயன உயிரியல்
 • திசுக்கூழ் உயிரியல்
 • மருத்துவ அழற்சி ஆய்வு
 • மூலக்கூற்று உயிர்நரம்பியல்
 • மூலக்கூற்று கட்டமைப்பு உயிரியல்
 • கட்டமைப்பு மரபணுத்தொகுதி கூட்டமைப்பு
 • இரத்தநாள உயிரியல்
5. மருத்துவ நோய்ப்பரவு இயல் மற்றும் உயிரியல் புள்ளிவிவரம் (MEB)
6. நுண்ணுயிரியல், கட்டி மற்றும் செல் உயிரியல் (MTC)
 • புற்று மற்றும் கழலை உயிரியல்
 • புற்று மற்றும் உயிரிமருத்துவ சூழலியல்
 • நோய்எதிர்ப்பியல்
 • நோய்த் தொற்று அறிவியல்
7. நரம்பு அறிவியல்
8. உடலியல் மற்றும் மருந்தியல் (FyFa)
9. பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம்

கரோலின்சுகா மருத்துவமனை வளாகம்[தொகு]

 1. பிணி சார்ந்த நரம்பு அறிவியல்
 2. பிணி சார்ந்த அறிவியல், இடையீடு மற்றும் தொழில்நுட்பம் (CLINTEC)
 3. மருத்துவம், சோல்னா
 4. மூலக்கூறு மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை
 5. கழலையியல்-நோயியல்
 6. பொதுநல அறிவியல்

ஹுட்டிங்கே வளாகம்[தொகு]

 1. உயிர்அறிவியல் மற்றும் ஊட்டச்சத்து (BioNut)
 2. அறுவை சிகிச்சை மற்றும் நடத்தை, ஹுட்டிங்கே
 3. பல் மருத்துவம் (Dentmed)
 4. ஆய்வு மருத்துவம்
 5. மருத்துவம், ஹுட்டிங்கே
 6. உயிர்நரம்பியல், பராமரிப்பு அறிவியல் மற்றும் சமூகம் (NVS)

கரோலின்ஸ்கா மையத்துடன் இணைந்த புகழ் பெற்றவர்கள்[தொகு]

சில படங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "KI in brief". Archived from the original on 2019-01-09. பார்க்கப்பட்ட நாள் 2018-10-05. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
 2. "Research at Karolinska Institutet".
 3. "QS World University Rankings by Subject 2014 - Medicine". Topuniversities.com. QS World University Rankings. பார்க்கப்பட்ட நாள் 08 December 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கரோலின்ஸ்கா_மையம்&oldid=3928629" இலிருந்து மீள்விக்கப்பட்டது