உமியோ பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமியோ பல்கலைக்கழகம்
Umeå universitet
வகைபொதுத்துறை பல்கலைக்கழகம்
உருவாக்கம்17 செப்டம்பர் 1965[1]
தலைமை ஆசிரியர்முனைவர். லேனா குஸ்தாஃப்சன் (Lena Gustafsson)
கல்வி பணியாளர்
4,200[2]
மாணவர்கள்34,200[2]
அமைவிடம்
உமியோ
,
வளாகம்நகர்ப்புறம்
சேர்ப்புEUA, UArctic
இணையதளம்www.umu.se/english
உமியோ பல்கலைக்கழக வரைபடம்
உமியோ பல்கலைக்கழக வளாகம்

உமியோ பல்கலைக்கழகம் (Umeå University; சுவீடிய: Umeå universitet) சுவீடன் நாட்டின் வட-மையப் பகுதியிலுள்ள உமியோ என்னும் நகரத்தில் உள்ளது. 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட உமியோ பல்கலைக்கழகம், சுவீடன் நாட்டின் ஐந்தாவது பழமையானப் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகம், 2013 ஆம் ஆண்டுக் கணக்கின்படி 32,000 பதிவு செய்யப்பட்ட மாணவர்களையும், நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களையும் கொண்டுள்ளது[3]. இவர்களில் 368 பேராசிரியர்கள் உட்பட, இதில் பாதிக்கும் மேலானோர் ஆய்வாளர்கள்/ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உமியோ பல்கலைக்கழகம், சில மர வகைகளின் மரபகராதி[4][5], தொழிலக வடிவமைப்பைப் பற்றிய ஆய்வுகளுக்கு உலகளவில் புகழ் பெற்றது[6].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உமியோ_பல்கலைக்கழகம்&oldid=3545114" இருந்து மீள்விக்கப்பட்டது