உள்ளடக்கத்துக்குச் செல்

அப்பல்லோ திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோ திட்டம்
திட்ட மேலோட்டம்
நாடுஐக்கிய அமெரிக்கா
பொறுப்பான நிறுவனம்தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் (ஐக்கிய அமெரிக்கா)
தற்போதைய நிலைcompleted
திட்ட வரலாறு
திட்டக் காலம்1961–1972
முதல் பறப்புAS-201, February 26, 1966
பணிக்குழுவுடனான முதலாவது பறப்புஅப்பல்லோ 7, அக்டோபர் 11–22, 1968
கடைசிப் பறப்புஅப்பல்லோ 17, திசம்பர் 7–19, 1972
வெற்றிகள்16
தோல்விகள்2: அப்பல்லோ 1, அப்பல்லோ 13 (விண்கலம்)
பகுதியளவிலான தோல்விகள்1: அப்பல்லோ 6
ஏவுதளம்(கள்)
ஊர்தித் தகவல்கள்
ஊர்தி வகைcapsule
பணிக்குழுவுடனான ஊர்தி(கள்)
பணிக்குழுக் கொள்ளளவு3
ஏவுகலம்(கள்)
Apollo 11, முதலில் மனிதன் நிலவில் கால்பதித்தத் திட்டம்,1969

அப்பல்லோ திட்டம் என்பது 1961–1972 வரை, ஐக்கிய அமெரிக்க நாட்டினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளிப்பறப்புத் திட்டமாகும். இது, தசாப்தம் 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கி, பாதுகாப்பாக பூமிக்குத் திருப்பிக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. 1969ல் அப்பல்லோ 11 திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் அடையப்பட்டது. சந்திரனில், ஆரம்ப ஆள்மூல அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, இத் திட்டம், 1970களின் முற்பகுதிவரை நீட்டிக்கப்பட்டது.

அறிமுகம்

[தொகு]

மேர்க்குரித் திட்டம், ஜெமினி திட்டம் ஆகியவற்றைத் தொடர்ந்து, அப்பல்லோ திட்டம் ஐக்கிய அமெரிக்காவின் மூன்றாவது ஆளேற்றிய விண்பறப்புத் திட்டமாகும். அப்பல்லோ, டுவைட் டி. ஐசனாவர் நிர்வாகத்தில், மேர்க்குரித் திட்டத்தின் தொடர்ச்சியாக, உயர்நிலை பூமிச்சுற்று ஆய்வுகளுக்காக, உருக்கொடுக்கப்பட்டது. பின்னர், மே 25, 1961ல், அமெரிக்கக் காங்கிரசின் விசேட கூட்டு அமர்வில், ஜனாதிபதி கெனடியால் அறிவிக்கப்பட்டபடி, தீவிர நிலவில் இறங்கும் நோக்கத்துக்காக மாற்றியமைக்கப்பட்டது.

ஒரு திட்ட முறையைத் தெரிவுசெய்தல்

[தொகு]
நாசாவில் கென்னடியின் பேச்சு, செப்டம்பர் 12, 1962

சந்திரனை இலக்காகத் தீர்மானித்ததன் பின்னர், மனித உயிருக்கான ஆபத்து, செலவு, தொழில்நுட்பம், விமானிகள் திறமை ஆகிய தேவைகளின் குறைந்த அளவு உபயோகத்துடன், கெனடி அறிவித்த நோக்கங்களை அடைவதற்காகப் பறப்புத் திட்டங்களை வடிவமைப்பதில், அப்பல்லோ திட்டத்தின் திட்டமிடலாளர்கள் பெரும் சவாலை எதிர்நோக்கினார்கள்.

மூன்று திட்டங்கள் கருத்திலெடுக்கப்பட்டன. முதலாவதாக, விண்கலத்தை நேரடியாகச் சந்திரனுக்கு ஏற்றுதல். இதற்குத் தற்போது திட்டமிடப்பட்டிருப்பனவற்றிலும் பார்க்கச் சக்தி கூடிய நோவா தூக்கி வேண்டியிருக்கும். இரண்டாவது, பூமிச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு (EOR) என அழைக்கப்பட்டது. இதன்படி, ஒன்றில் விண்கலத்தையும், மற்றதில் எரிபொருளையும் வைத்து, இரண்டு சனி 5 (Saturn V) ராக்கெட்டுகள் ஏவப்பட வேண்டும். விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையில் தரித்து நிற்க, நிலவுக்குச் சென்று திரும்பிவரப் போதுமான அளவு அதற்கு எரிபொருள் நிரப்பப்பட வேண்டும்.

சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு

[தொகு]
முதல்வடிவமைப்பு,LOR,1962

உண்மையாகக் கடைப் பிடிக்கப்பட்ட திட்டத்தின் உருவாக்குனர், ஜோன் ஹூபோல்ட் என்பவராவர். இத்திட்டம் 'சந்திரச் சுற்றுப்பாதை திட்டமிட்ட சந்திப்பு' (LOR) என்னும் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தியது. விண்கலம் கூறுகளாக உருவாக்கப் படும், இவற்றுள் ஒரு 'கட்டளை/சேவை கூறு' (CSM) மற்றும் ஒரு 'நிலா கூறு' (LM; சந்திரப் பயண கூறு என்ற அதன் ஆரம்ப ஆங்கிலப் பெயரையிட்டு, 'லெம்' என உச்சரிக்கப்படும்) என்பன அடங்கியிருக்கும். கட்டளை/சேவை கூறு மூன்று பேரடங்கிய குழுவுக்கு, 5 நாள் நிலவுக்குச் சென்று திரும்பும் பயணத்துக்குத் தேவையான, உயிர் காப்பு முறைமைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்கள் பூமியின் காற்றுமண்டலத்துள் நுழையும்போது தேவைப்படும், வெப்பத் தடுப்புகளையும் கொண்டிருக்கும். நிலா கூறு, சந்திரச் சுற்றுப்பாதையில், கட்டளை/சேவை கூறிலிருந்து பிரிந்து, இரண்டு விண்வெளிவீரர்களை நிலா மேற்பரப்பில் இறக்குவதற்காகக் கொண்டுசெல்லும்.

நிலா கூறு தன்னுள் இறங்கு மேடையொன்றையும், ஏறு மேடையொன்றையும் கொண்டுள்ளது. முன்னது, ஆய்வுப்பயணக் குழு, சந்திரனைவிட்டுப் புறப்பட்டுப் பூமிக்குச் திரும்புமுன், சுற்றுப்பாதையிலிருக்கும் கட்டளை/சேவை கூறு உடன் இணையச் செல்லும்போது, பின்னையதற்கு ஏவு தளமாகப் பயன்படும். இத் திட்டத்திலுள்ள ஒரு வசதி என்னவென்றால், நிலா கூறு கைவிடப்படவுள்ள காரணத்தால், அது மிகவும் பாரமற்றதாகச் செய்யப்படலாம் என்பதுடன், சந்திரப்பயணம் ஒற்றை சாடர்ன் V ஏவூர்தியால் ஏவப்படவும்கூடியதாக உள்ளது.


ஏவு வாகனங்கள்

[தொகு]
அப்பல்லோ திட்டத்திற்கான நான்கு ஏவூர்திகளும் ஒப்புமையில் வரையப்பட்டுள்ளன: லிட்டில் ஜோ II, சாடர்ன் I, சாடர்ன் IB, மற்றும் சாடர்ன் V

அப்பல்லோ திட்டம் தொடங்குவதற்கு முன்னர், வெர்னர் வான் பிரவுன் மற்றும் அவரது ராக்கெட் பொறியாளர்களின் குழுவினர் சாடர்ன் தொடர் மற்றும் நோவா தொடர் ஆகிய மிகப்பெரும் ஏவூர்திகளின் வடிவமைப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்த திட்டங்களின் நடுவில், வான் பிரவுன் இராணுவத்திலிருந்து நாசாவிற்கு மாற்றப்பட்டு மார்ஷல் விண் பறத்தல் மையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில், மூன்று விண்வெளி வீரர்களைச் சுமந்துசெல்லும் அப்பல்லோ கட்டளை / சேவைப் பெட்டகத்தை நேரடியாக சந்திர மேற்பரப்புக்கு அனுப்புவதாகத் திட்டமிடப்பட்டது; இதற்கு 180,000 pounds (82,000 kg) சுமையைச் சுமந்துசெல்லுமளவுக்கான திறன்கொண்ட நோவா வகை ஏவூர்திகள் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டது[1]. ஜூன் 11, 1962-ல் நிலவுச் சுற்றுப்பாதையில் பிரிந்து/இணையும் வண்ணம் கட்டளை / சேவைப் பெட்டக திட்டத்தை செயல்படுத்த முடிவெடுத்ததன்பின் சனி தொடர் ஏவூர்திகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை முடுக்கிவிடப்பட்டது.[2]

லிட்டில் ஜோ II

[தொகு]

மெர்க்குரித் திட்டத்தைப் போலவே, அப்பல்லோ திட்டத்திலும் ஏவுதலில் தோல்வியேதும் ஏறபடுமாயின் வீரர்கள் தப்பிப்பதற்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு (Launch Escape System) தேவையானதாகவிருந்தது; அதற்கு சிறிய அளவிலான ஏவூர்தி பறத்தல் சோதனைகளுக்குத் தேவையாக இருந்தது. மெர்க்குரித் திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட லிட்டில் ஜோ-வினை விட சற்றே திறன்மிகுந்த ஏவூர்தி அத்தேவையைப் பூர்த்தி செய்யும் எனக் கணக்கிடப்பட்டது. இதன்பிறகு, லிட்டில் ஜோ II ஏவூர்தியானது ஜெனரல் டைனமிக்ஸ் / கான்வெய்ர் நிறுவனங்களால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. ஆகஸ்டு 1963-இல் நிகழ்த்தப்பட்ட தேர்வுநிலை சோதனைப் பறத்தலின் பிறகு[3], மே 1964-க்கும் சனவரி 1966-க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் நான்கு ஏவுநிலை விடுபடு அமைப்பு சோதனை பறத்தல்கள் நிகழ்த்தி சோதிக்கப்பட்டது.[4]

பறப்புகள்

[தொகு]

அப்பல்லோத் திட்டம் அப்பல்லோ 7 முதல் அப்பல்லோ 17 வரையான, 11 ஆளேற்றிய பறப்புக்களை உள்ளடக்கியிருந்தது. இவையனைத்தும், புளோரிடாவிலுள்ள கெனடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டன. அப்பல்லோ 2 இலிருந்து அப்பல்லோ 6 வரை, ஆளில்லா சோதனைப் பறப்புகள். முதல் ஆளேற்றிய பறப்பாகத் திட்டமிடப்பட்டிருந்த அப்பல்லோ 1, ஏவுதளச் சோதனையொன்றின்போது தீப் பிடித்து, மூன்று விண்வெளிவீரர்களும் இறந்துபோயினர். முதல் ஆளேற்றிய பறப்பில் சற்றேர்ண் 1-B ஏவுவாகனம் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து வந்த பறப்புகள் அனைத்தும், கூடிய சக்தி வாய்ந்த சாடர்ன் V-ஐப் பயன்படுத்தின. இவற்றில் இரண்டு (அப்பல்லோ 7 உம் அப்பல்லோ 9 உம்) பூமிச் சுற்றுப் பாதைப் பயணங்கள். அப்பல்லோ 8 உம் அப்பல்லோ 10 உம் நிலாச் சுற்றுப்பாதைப் பயணங்கள். ஏனைய 7 பயணங்களும், சந்திரனில் இறங்கும் பயணங்களாகும். (இவற்றுள் அப்பல்லோ 13 தோல்வியடைந்தது.)

சுருக்கமாக, அப்பல்லோ 7, அப்பல்லோ கட்டளை மற்றும் சேவைக் கூறைப் (CSM) புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 8 CSM ஐச் சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 9, லூனார் கூறை (LM), புவியின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 10, லூனார் கூறை (LM), சந்திரனின் சுற்றுப்பாதையில் பரிசோதித்தது. அப்பல்லோ 11, ஆளேற்றிக்கொண்டு நிலவிலிறங்கிய முதற் பயணமாகும். அப்பல்லோ 12, சந்திரனில், குறித்த இடத்தில் சரியாக இறங்கிய முதற் பயணம் என்ற பெயரைப் பெற்றது. அப்பல்லோ 13, சந்திரனில் இறங்கும் முயற்சியில் தோல்வியுற்றதெனினும், பேரழிவாக முடிந்திருக்கக்கூடிய பறப்பினுள் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து, பாதுகாப்பாகப் பயணக்குழுவைப் பூமியிலிறக்கி வெற்றிகண்டது. அப்பல்லோ 14, சந்திர ஆய்வுப் பயணத் திட்டத்தை மீண்டும் துவக்கியது. அப்பல்லோ 15, சந்திர ஆய்வுப்பயண வல்லமையில், நீண்ட தங்கு நேரம் கொண்ட LM, மற்றும் நிலவில் திரியும் வாகனம் மூலம், புதிய மட்டத்தை அறிமுகம் செய்தது. அப்பல்லோ 16 தான் சந்திரனின் உயர் நிலத்திலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும். அப்பல்லோ 17, அறிவியலாளரான, விண்வெளி வீரரைக் கொண்ட முதற் பயணமும், திட்டத்தின் இறுதிப் பயணமுமாகும்.

திட்ட நிறைவு

[தொகு]

தொடக்கத்தில், அப்பல்லோ 18 தொடக்கம் அப்பல்லோ 20 வரை மூன்று மேலதிக பயணங்களுக்குத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தப் பயணங்கள், விண்வெளி விமான உருவாக்கத்தின் நிதித் தேவைகளுக்காகவும், அப்பல்லோ விண்கலத்தையும், சாடர்ன் V ஏவு வாகனங்களையும், ஸ்கைலேப் திட்டத்துக்குக் கொடுக்கும் பொருட்டும், கைவிடப்பட்டது. ஒரு சற்றேர்ண் V மட்டுமே உண்மையில் பயன்படுத்தப்பட்டது; ஏனையவை நூதனசாலைக் காட்சிப்பொருள்களாயின.

அப்பல்லோவுக்கான காரணங்கள்

[தொகு]

அப்பல்லோ திட்டமானது, சோவியத் யூனியனுடனான கெடுபிடிப் போர்ச் சூழலில், விண்வெளித்தொழில் நுட்பத்தில், அமெரிக்கா, சோவியத் யூனியனிலும் தாழ்ந்த நிலையிலிருந்ததற்குப் பதிலளிக்குமுகமாகவே, ஓரளவுக்கு ஒரு உளவியல்சார்-அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில் தூண்டப்பட்டது. இதில் அது மிகத் திறமையான முறையில் வெற்றிபெற்றது. உண்மையில் ஆளேற்றிய விண்பறப்புக்களில் அமெரிக்காவின் மேலாண்மை, முதலாவது அப்பல்லோ பறப்புக்கு முன்னரே, ஜெமினி திட்டம் மூலம் பெறப்பட்டது. தங்களுடைய N-1 ராக்கெட்டுகளை முழுமை நிலைக்குக் கொண்டுவர இயலாமை காரணமாக சோவியத் சந்திரனுக்குச் செல்வது தடைப்பட்டதுடன், 1990 கள் வரை அவர்கள் ஒரு நிலவுத் திட்டத்தைக் கொண்டிருப்பதையும் தடுத்துவந்தது.

அப்பல்லோத் திட்டம் தொழில்நுட்பத்தின் பல துறைகளுக்குத் தூண்டுதலாக அமைந்தது. லூனாரிலும், கட்டளை கூறிலும் பயன்படுத்தப்பட்ட, ஒரேமாதிரியான, பறப்புக் கணனியே ஒருங்கணைந்த சர்க்கியூட்டுகளையும், காந்த முதன்மை நினைவகம் ஐயும் பயன் படுத்திய முதற் சந்தர்ப்பமாகும். இக் கணினிகள் அப்பல்லோ வழிகாட்டுக் கணினிகள்

நானாவித தகவல்கள்

[தொகு]

அப்பல்லோ திட்டத்துக்கான செலவு: $25.4 பில்லியன்

சந்திரனிலிருந்து கொண்டுவரப்பட்ட சந்திரப் பொருட்களின் அளவு: 381.7 கிகி

அப்பல்லோ என்ற பெயர் கிரேக்கக் கடவுளைக் குறிக்கும்.

பயணங்கள்

[தொகு]

அப்பல்லோ பறப்புகளில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விடயம், சற்றேர்ண் ராக்கெட்டுகளை வடிவமைத்த மார்ஷல் விண்வெளிப் பறப்பு மையம், பறப்புகளை, சற்றேர்ண் - அப்பல்லோ (SA) என்று குறிப்பிட, கெனடி விண்வெளி மையம் அப்பல்லோ - சற்றேர்ண் (AS) என்று குறிப்பிடுகிறது.

ஆளில்லா சற்றேர்ண் 1

[தொகு]
  • SA-1 – S-1 ராக்கெட்டின் சோதனை
  • SA-2 – S-1 ராக்கெட்டின் சோதனை மற்றும், வானொலி ஒலிபரப்பு, காலநிலை என்பவற்றின் தாக்கங்களைப் பரிசோதிக்க, 109,000 லீற்றர்களை ஏற்றிச் செல்லல்.
  • SA-3 – SA-2 போல
  • SA-4 - நிறைவுக்கு முந்திய இயந்திர நிறுத்தத்தின் தாக்கம் பற்றிய சோதனைகள்.
  • SA-5நேரடி முதற் பறப்பு, இரண்டாம் கட்டம்.
  • A-101 - அப்பல்லோ கட்டளை/சேவை கூறின் வெப்பக்கலன் தகட்டின் அமைப்புத்திறனை சோதித்தது
  • A-102 - சற்றேர்ண் 1 தூக்கியின் முதல் நிரல்தகு கணனியை எடுத்துச் சென்றது; கடைசி சோதனை பறப்பு
  • A-103 - புவியின் சுற்றுப்பாதையில் சின்னஞ்சிறு விண்கற்களின் தாக்கத்தை ஆய்வு செய்த பிகாசசு விண்மதியை எடுத்துச் சென்றது.
  • A-104 – A-102 போல
  • A-105 – A-102 போல

ஆளில்லா ஏற்றுமேடை இடைச்சிதை சோதனைகள்

[தொகு]

ஆளில்லா லிட்டில் ஜோ II

[தொகு]
  • A-001 - ஏற்றுகைக்குப்பின் ஏற்றுகை தப்புதல் அமைப்பை சோதித்தல்
  • A-002 – A-001 போல
  • A-003 – A-001 போல
  • A-004 – A-001 போல

ஆளில்லா அப்பல்லோ-சற்றேண்

[தொகு]

ஆளியக்கியவை

[தொகு]

பின் தொடர்ந்த திட்டங்கள்

[தொகு]

மேலும் பார்க்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_திட்டம்&oldid=3524000" இலிருந்து மீள்விக்கப்பட்டது