அப்பல்லோ 16

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Apollo 16
திட்டச் சின்னம்
திட்ட விபரம்[1]
திட்டப்பெயர்: Apollo 16
விண்கலப் பெயர்:CSM: Casper
LM: Orion
கட்டளைக் கலம்:CM-113
mass 12,874 pounds (5,840 kg)
சேவைக் கலம்:SM-113
mass 54,044 pounds (24,514 kg)
நிலவுக் கலம்:LM-11
mass 36,729 pounds (16,660 kg)
உந்துகலன்:Saturn V SA-511
ஏவுதளம்:LC 39A
கென்னடி விண்வெளி மையம்
புளோரிடா, ஐக்கிய அமெரிக்க நாடு
ஏவுதல்: {{{launch}}}
சந்திரனில் இறக்கம்:April 21, 1972
02:23:35 UTC
Descartes Highlands
8°58′22.84″S 15°30′0.68″E / 8.9730111°S 15.5001889°E / -8.9730111; 15.5001889
(based on the IAU
Mean Earth Polar Axis ஆள்கூற்று முறைமை)
சந்திரனில் இருந்த நேரம்:2 d 23 h 02 m 13 s
நிலவு மாதிரி நிறை:95.71 kg (211 lb)
இறக்கம்: April 27, 1972
19:45:05 UTC
South Pacific Ocean
0°43′S 156°13′W / 0.717°S 156.217°W / -0.717; -156.217 (Apollo 16 splashdown)
கால அளவு: {{{duration}}}
சந்திரனைச் சுற்றிய நேரம்:5 d 05 h 49 m 32 s
பயணக்குழுப் படம்
Left to right: Mattingly, Young, Duke
Left to right: Mattingly, Young, Duke

அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும். ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக நிலவில் இறங்கும் திட்டத்தோடு ஏவப்பட்டதாகும். நிலவின் ஒளிமிகுந்த தரைப்பகுதியில் இறங்கிய முதல் விண்கலமாகும். செ-திட்டங்களில் இது இரண்டாவதாகும். இத்திட்டத்தின் ஆணையாளர் சான் யங், நிலவுப் பெட்டக விமானி சார்லசு டூக், கட்டளைப் பெட்டகத்தின் விமானி கென் மாட்டிங்லி ஆவர். ஃபுளோரிடாவிலுள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏப்ரல் 16, 1972 அன்று 12 : 54 PM EST-ல் ஏவப்பட்டது. பதினோரு நாட்கள், ஒரு மணி மற்றும் ஐம்பத்தோரு நிமிடங்கள் நீடித்த இத்திட்டம் ஏப்ரல் 27 அன்று 2 : 45 PM EST-ல் முடிவடைந்தது.

சான் யங் மற்றும் சார்லசு டூக் நிலவில் 71 மணி நேரம், ஏறக்குறைய மூன்று நாட்கள், தங்கி ஆய்வுகள் மேற்கொண்டனர். அப்போது மூன்று முறை நிலவில் இறங்கி நடந்தனர், மொத்தமாக 20 மணி நேரம் 14 நிமிடங்கள் பெட்டகத்துக்கு வெளியே ஆய்வுகள் செய்தனர். இரண்டாவது முறையாக கொண்டுசெல்லப்பட்டிருந்த நிலவு உலவு வாகனத்தைப் பயன்படுத்தி இருவரும் 26.7 கிலோமீட்டர்கள் நிலவில் பயணம் செய்தனர். மேலும் இருவரும் 95.8 கிலோகிராம் நிலவு கற்கள் மற்றும் மண்ணை பூமிக்கு எடுத்து வந்தனர். அவர்கள் இருவரும் நிலவில் ஆய்வுகள் மேற்கொண்டிருந்த போது, கட்டளைப் பெட்டக விமானி கென் மாட்டிங்லி நிலவைச் சுற்றி வந்து அவதானிப்பிலிருந்தார். அவர் மொத்தமாக 126 மணி நேரங்கள் பயணித்து 64 முறை நிலவைச் சுற்றி வந்தார். யங்கும் மாட்டிங்லியும் கட்டளைப்பெட்டகத்தோடு இணைந்தபிறகு சேவைக் கலனிருந்து துணை-செயற்கைக்கோள் ஒன்றை விடுவித்தனர். பூமிக்குத் திரும்பி வரும் வழியில் சேவைப் பெட்டகத்தின் வெளிப்புறத்திலிருந்து காணொளி நாடாப் பெட்டியை எடுக்க கென் மாட்டிங்லி விண்வெளி நடை மேற்கொண்டார்.

உசாத்துணைகள்[தொகு]

  1. Richard W. Orloff. "Apollo by the Numbers: A Statistical Reference (SP-4029)". NASA. Archived from the original on 2011-03-16. Retrieved 2012-05-18.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_16&oldid=3671461" இலிருந்து மீள்விக்கப்பட்டது