அப்பல்லோ 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்பல்லோ 1
கிரிசம், உவைட், சாபி
திட்ட வகைகுழு விண்கல சரிபார்ப்பு சோதனை
இயக்குபவர்நாசா
திட்டக் காலம்14 நாட்கள் வரை (திட்டம்)
விண்கலத்தின் பண்புகள்
விண்கலம்சிஎசுஎம்-012
CSM-012
விண்கல வகைஅப்பல்லோ கட்டளை, சேவைத் தொகுதி, தொகுதி I
தயாரிப்புநோர்த் அமெரிக்கன் ஏவியேசன்
ஏவல் திணிவு20,000 கிகி (45,000 இறா)
உறுப்பினர்கள்
உறுப்பினர்களின் எண்ணிக்கை3
உறுப்பினர்கள்
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்பெப்ரவரி 21, 1967 (திட்டமிடப்பட்டது)
ஏவுகலன்சட்டர்ன் ஐபி AS-204
ஏவலிடம்கேப் கென்னடி எல்சி-34
திட்ட முடிவு
அழிப்புசனவரி 27, 1967
23:31:19 UTC
சுற்றுப்பாதை அளபுருக்கள்
Reference systemபுவிமையம்
சுற்றுவெளிபூமியின் தாழ் வட்டப்பாதை
அண்மைgee220 கிமீ (திட்டம்)
கவர்ச்சிgee300 கிமீ (திட்டம்)
சாய்வு31 பாகை (திட்டம்)
சுற்றுக்காலம்89.7 நிமி (திட்டம்)
Apollo 1 Patch

அப்பல்லோ 1 முதன்மை வீரர்கள்
இடமிருந்து: வைட், கிரிசம், சாஃபி


அப்பல்லோ திட்டம்
← ஏசு-202 அப்பல்லோ 4

அப்பல்லோ 1 (Apollo 1, ஆரம்பப் பெயர்: ஏஎசு-204 (AS-204) என்பது அமெரிக்காவின் நிலாவில் மனிதரைத் தரையிறக்கும்[1] அப்பல்லோ விண்வெளித் திட்டத்தின் முதலாவது மனிதப் பறப்புத் திட்டமாகும்.[2] இப்பறப்பு அப்பல்லோ கட்டளை, மற்றும் சேவைத் தொகுதியின் முதலாவது பூமியின் தாழ் வட்டப்பாதையில் செலுத்தும் சோதனைத் திட்டமாக 1967, பெப்ரவரி 21 இல் விண்ணுக்கு ஏவப்படவிருந்தது.[3] ஆனாலும், இத்திட்டம் கைகூடவில்லை. 1967 சனவரி 27 இல் ஏவல் ஒத்திகை சோதனை கேப் கென்னடி வான்படைத் தளத்தில் இடம்பெற்ற போது, விண்வெளி வீரர்கள் இருந்த விண்கூடத்தில் தீப் பற்றியதால், அதில் இருந்த கசு கிரிசம், எட்வேர்ட் வைட், ராஜர் சாஃபி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் இறந்தார்கள். இந்தத் தீ விபத்தை நினைவு கூரும் முகமாக நாசா நிறுவனம் இதற்கு அப்பல்லோ 1 எனப் பெயர் சூட்டியது.

நாசா இவ்விபத்து பற்றி ஆராய்வதற்காக குழு ஒன்றை நியமித்தது. இக்குழுவின் விசாரணைகளை மேற்பார்வையிட அமெரிக்க சட்டமன்றத்தின் இரு அவைகளும் தமது குழுக்களை நியமித்திருந்தன. மின்சார ஒழுக்கே நெருப்பு பரவியதன் மூலமாக தீர்மானிக்கப்பட்டது. எரியக்கூடிய நைலான் பொருள் காரணமாக தீ வேகமாக பரவியது. ஆட்கள் தங்கியிருந்த அறை அதிக அழுத்தத்தையும், தூய ஆக்சிசனைக் கொண்டிருந்தமையும் தீ பரவக் காரணமாக அறியப்பட்டது. அறையின் கதவும் உள் அழுத்தம் காரணமாகத் திறக்கப்பட முடியவில்லை. ராக்கெட்டில் எரிபொருட்கள் இல்லாததால், சோதனை அபாயகரமானதாகக் கருதப்படவில்லை, அதற்கான அவசரகாலத் தயாரிப்பில் போதியளவு கவனம் செலுத்தப்படவில்லை.

சட்டமன்ற விசாரணையின் போது, முதன்மை அப்பல்லோ ஒப்பந்தக்காரர் வட அமெரிக்கன் ஏவியேசனுடனான சிக்கல்களை மேற்கோள் காட்டிய நாசாவின் உள் ஆவணத்தை மேலவை உறுப்பினர் வால்ட்டர் மொண்டேல் பகிரங்கமாக வெளியிட்டார், இது "பிலிப்சு அறிக்கை" என்று பிரபலமாக அறியப்பட்டது. இந்த ஆவணத்தைப் பற்றி அறியாமல் இருந்த நாசாவின் நிர்வாகி ஜேம்ஸ் ஈ. வெப் இதன் மூலம் சங்கடத்துக்குள்ளானார். நாசாவின் திறந்த தன்மை இல்லாமை குறித்து அமெரிக்க சட்டமன்றம் அதிருப்தி கொண்டிருந்த போதிலும், சட்டமன்றத்தின் இரு அவைகளும் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் விபத்துக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்று தீர்ப்பளித்தன.

இந்த விபத்தை அடுத்து, மனிதப் பறப்புப் பயணங்கள் 20 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன. இக்காலப் பகுதியில், கட்டளைத் தொகுதியின் அபாயகரமான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டன. இருப்பினும், நிலவுக் கலம் (எல்எம்), சாடர்ன் 5 நிலவு ஏவுகலம் ஆகியன வளர்த்தெடுக்கப்பட்டு தோதிக்கப்பட்டன. அப்பல்லோ 1 இன் ஏவுபொறி சாடர்ன் ஐபி முதலாவது நிலவுக்கலத்தின் சோதனை பறப்பான "அப்பல்லோ 5" இற்குப் பயன்படுத்தப்பட்டது. அப்பல்லோ திட்டத்தின் முதலாவது வெற்றிகரமான மனிதப்பறப்பு அப்பல்லோ 7 1968 அக்டோபரில் செலுத்தப்பட்டது.

விண்வெளி வீரர்கள்[தொகு]

பதவி விண்வெளி வீரர்
திட்டமிடல் விமானி கசு கிரிசம்
இது இவரது மூன்றாவது பறப்பாக இருந்திருக்கும்.
மூத்த விமானி எட்வேர்ட் வைட்
இது இவரது இரண்டாவது பறப்பாக இருந்திருக்கும்.
விமானி ரொஜர் சஃபி
இது இவரது முதலாவது பறப்பாக இருந்திருக்கும்.

திட்டப் பின்புலம்[தொகு]

அப்பல்லோ ஒன்று எனப் பெயரிடப்பட்ட திட்டக்கலம் 012 1966 ஆகத்து 26 இல் கென்னடி மையத்திற்கு வருகிறது.
தீப்பிடிப்பினால் கருகிய நிலையில் கட்டளை தொகுதியின் வெளிப்புறம்

1966 அக்டோபரில், கட்டளை தொகுதியிலிருந்து நேரடியாக ஒளிபரப்ப விமானம் ஒரு சிறிய தொலைக்காட்சி ஒளிப்படக்கருவியைக் கொண்டு செல்லும் என்று நாசா அறிவித்தது. இந்த ஒளிப்படக்கருவி விண்கலத்தின் கருவிகளைக் குழுவை கண்காணிக்க விமான கட்டுப்பாட்டாளர்களை அனுமதிக்கவும் பயன்படுத்தப்படும்.[4] இந்தத் தொலைக்காட்சி ஒளிப்படக்கருவிகள் அனைத்து அப்பல்லோ மனிதப் பயணங்களில் கொண்டு செல்லப்பட்டன.[5]

விபத்து[தொகு]

சனவரி 27, கிஅநே (1800 கிநே) பிப 1:00 மணிக்கு முதலில் கிரிசமும், பின்னர் சாஃபி, வைட் ஆகியோரும் திட்டக்கலத்தினுள் நுழைந்தனர். முழுமையான அழுத்த நிலையில், தமது இருக்கைகளில் அமர்ந்து விண்கலத்தின் ஆக்சிசனையும், தொடர்புத் தொகுதிகளையும் தம்முடன் இணைத்தார்கள். கிரிசம் தனது உடைகளினூடே ஒரு வித்தியாசமான மணம் வருவதை உணர்ந்தார். இதனை அடுத்து உட்பகுதியின் காற்றின் மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஆனாலும், எந்த மணமும் அறியப்படவில்லை. பின்னர் இறங்குமுகக் கணிப்பு பிப 2:42 மணிக்கு தொடங்கப்பட்டது. குறிப்பிட்ட மணம் இந்த விபத்துக்கான காரணமாக விசாரணைகளில் இருந்து தெரியவில்லை.[6]

6:31:04.7 மணிக்கு, விண்வெளிவீரர்களில் ஒருவர் (கிரிசமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது) "ஏய்!", "நெருப்பு!", அல்லது "புகை!" எனக் கூச்சலிட்டார்.[7] தொடர்ந்து கிரிசமின் திறந்த ஒலிவாங்கி மூலம் இரண்டு விநாடிகள் சத்தம் கேட்டது. உடனடியாகவே, 6:31:06.2 (23:31:06.2 GMT) நேரத்தில் இன்னும் ஒருவர் (சாஃபி ஆக இருக்கலாம்) "விமானியறையில் நெருப்பு பரவியுள்ளது" எனக் கூறினார். 6.8 வினாடிகள் மௌனத்தின் பின்னர், ஒரு வினாடி நேரம், குழப்பமான கூக்குரல்கள் கேட்டன. 5.0 வினாடிகளின் பின்னர் அனைத்தும் ஓய்ந்தன.:5–8,5–9

நினைவுகள்[தொகு]

  • அப்பல்லோ 1 விபத்தும் அதன் பின்னரான நிகழ்வுகளும் 1998 எச்பிஓவின் பூமியில் இருந்து நிலா வரை என்ற குறுந்தொடர்களின் இரண்டாம் பகுதியான அப்பல்லோ ஒன்று இல் கூறப்பட்டது.[8]
  • திட்டமும் விபத்தும் "விண்வெளி வீரர்களின் மனைவிகளின் சங்கம் என்ற 2015 ஏபிசி தொலைக்காட்சி தொடரில் விரிவாகக் கூறப்பட்டது.[9]
  • 1995 அப்பல்லோ 13 திரைப்படத்தின் ஆரம்பத்தில் இந்நிகழ்வு காண்பிக்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Courtney G. Brooks; James M. Grimwood; Loyd S. Swenson (1979). "Command Modules and Program Changes". Chariots for Apollo: A History of Manned Lunar Spacecraft. NASA. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-486-46756-2 இம் மூலத்தில் இருந்து February 9, 2008 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hq.nasa.gov/office/pao/History/SP-4205/ch5-1.html. பார்த்த நாள்: 2016-04-22. 
  2. Ertel, Ivan D.; Newkirk, Roland W. et al. (1969–1978). "Part 1 (H): Preparation for Flight, the Accident, and Investigation: March 25 – April 24, 1967". The Apollo Spacecraft: A Chronology. IV. Washington, D.C.: நாசா. NASA SP-4009. இணையக் கணினி நூலக மையம்:23818 இம் மூலத்தில் இருந்து பிப்ரவரி 5, 2008 அன்று. பரணிடப்பட்டது.. http://www.hq.nasa.gov/office/pao/History/SP-4009/v4p1h.htm. பார்த்த நாள்: March 3, 2011. 
  3. Benson, Charles D.; Faherty, William Barnaby (1978). Moonport: A History of Apollo Launch Facilities and Operations. NASA History Series. NASA. NASA SP-4204. http://www.hq.nasa.gov/office/pao/History/SP-4204/contents.html. பார்த்த நாள்: July 12, 2013. 
  4. "Apollo To Provide Live Space Shots". Sarasota Herald-Tribune. United Press International (Sarasota, FL): p. 1. October 13, 1966. https://news.google.com/newspapers?id=lescAAAAIBAJ&sjid=z2UEAAAAIBAJ&dq=apollo%20television%20camera&pg=3988%2C2557539. பார்த்த நாள்: July 12, 2013. 
  5. Wood, Bill (2005), "Apollo Television", in Jones, Eric M.; Glover, Ken (eds.), Apollo Lunar Surface Journal (PDF), Washington, DC: NASA (published 1996–2013) {{citation}}: Invalid |ref=harv (help)
  6. Orloff, Richard W. (September 2004) [First published 2000]. "Apollo 1 – The Fire: 27 January 1967". Apollo by the Numbers: A Statistical Reference. NASA History Series. Washington, D.C.: NASA. NASA SP-2000-4029. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-16-050631-X. https://history.nasa.gov/SP-4029/Apollo_01a_Summary.htm. பார்த்த நாள்: July 12, 2013. 
  7. Slade, Suzanne (2018). Countdown: 2979 Days to the Moon. Illustrated by Thomas Gonzalez. Atlanta: Peachtree. பக். 18. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-68263-013-6. 
  8. Malik, Tariq (September 23, 2005). "DVD Review: From the Earth to the Moon". Space.com. பார்க்கப்பட்ட நாள் 2018-01-25.
  9. Falcone, Dana Rose (July 31, 2015). "'The Astronaut Wives Club' recap: The Space Race takes a solemn turn" (in en-US). Entertainment Weekly. http://ew.com/recap/the-astronaut-wives-club-season-1-episode-7/. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பல்லோ_1&oldid=3671454" இலிருந்து மீள்விக்கப்பட்டது