பூமியின் தாழ் வட்டப்பாதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாழ் புவி வட்டணை (Low Earth orbit) என்பது புவி மேற்பரப்பில் இருந்து மேலே 160 கிலோமீட்டர்கள் முதல் 2,000 கிலோமீட்டர்கள் வரை உள்ள வெளி அமையும் விண்கல வட்டண் ஆகும். இதன் வட்டணை நேரம் சராசரியாக 88 நிமிடங்களிலிருந்து 127 நிமிடங்கள் வரை ஆகும். எல்லா செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி நிலையங்கள் அனைத்தும் இந்தப் பரப்பிலேயே நிலைநிறுத்தப்படுகின்றன. 160 கிலோமீட்டர்களுக்கும் கீழான பரப்பில் நிலை நிறுத்தப்படும் செயற்கைக்கோள்கள் அடிக்கடி வட்டனை மாறும் வாய்ப்புகள் உள்ளன வளிமண்டலத்தின் வ்ளிமங்களால் அதன் இயக்கத்தில் தாக்கம் எற்படும்.[1][2] செமினி 11 எனும் செயற்கைக்கோள் பேரளவு உயரமாக 1,374.1 கிலோமீட்டர்கள் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]