உள்ளடக்கத்துக்குச் செல்

விண்வெளி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விண்வெளி நிலையம் (Space station) என்பது விண்ணில் மனிதர் வாழ்வதற்கென வடிவமைக்கப்பட்டு, மனிதனால் செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். விண்வெளி நிலையம், பெரிய அளவில் உந்தல் அல்லது இறங்கல் வசதிகளைக் கொண்டிராமையை வைத்து, ஏனைய ஆளேற்றிய விண்கலங்களிலிருந்து வேறுபடுத்தப்படுகிறது - பதிலாக, விண்வெளி நிலையத்திலிருந்து போக்குவரத்துக்கு ஏனைய வாகனங்கள் பயன்படுகின்றன. விண்வெளி நிலையங்கள், சுற்றுப்பாதையில், சில மாதங்களைக்கொண்ட இடைத்தரக் கால அளவு வாழ்க்கைக்காக வடிவமைப்புச் செய்யப்படுகின்றன.

கடந்தகால, நிகழ்கால விண்வெளி நிலையங்கள்:

சில விண்வெளி நிலைய வடிவமைப்புகள், கூடிய அளவு மக்களுக்காக, நீண்ட கால விண்வெளி வாழிட நோக்கங்களைக் கருத்திற்கொண்டு முன்மொழியப் பட்டுள்ளன. முக்கியமாக இவை, மக்கள் வீடுகள் கட்டிக்கொள்ளக் கூடிய "விண்வெளி நகரங்களாகும்". இம் முன்மொழிவுகள், செயல்படுத்தும் நோக்கத்துக்காகத் தீவிர கவனத்துக்கு உட்படவில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=விண்வெளி_நிலையம்&oldid=2828341" இலிருந்து மீள்விக்கப்பட்டது