கிழக்கு நேர வலயம் (வட அமெரிக்கா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு நேர வலயம்
   (வலதுகோடி மஞ்சள்)
ஒ.அ.நே தள்ளிவைப்பு
ESTUTC−5:00
EDTUTC−4:00
தற்போதைய நேரம் (Refresh the clock.)
EDT7:10 am on செப் 27, 2023
பகல்சேமிப்பு நேரப் பயன்பாடு
பகல்சேமிப்பு நேரம் இந்த நேரவலயத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மார்ச்சு மாத இரண்டாம் ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை பாவிக்கப்படுகிறது.
பசேநே துவக்கம்மார்ச்சு 12, 2023
பசேநே முடிவுநவம்பர் 5, 2023

கிழக்கு நேர வலயம் (ET) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் தொடர்ச்சியாக உள்ள 17 மாநிலங்களிலும் கனடாவின் கிழக்குப் பகுதியின் சில இடங்களிலும் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளிலும் கடைபிடிக்கப்படும் நேர வலயம் ஆகும்.

எங்கெல்லாம் கிழக்கு சீர்தர நேரம் (EST) பயன்படுத்தப்படுகிறதோ அங்கெல்லாம் சீர்தர நேரம் (இலையுதிர்/குளிர்காலம்) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே - 05:00). (இளவேனில்/கோடைக் காலத்தில்) பகலொளி சேமிப்பு நேரம் கடைபிடிக்கப்படும்போது கிழக்கு பகலொளி நேரம் (EDT) ஒருங்கிணைந்த அனைத்துலக நேரத்திலிருந்து 5 மணி நேரம் பின்தங்கியுள்ளது (ஒ.ச.நே−04:00).

நேர வலயத்தின் வடக்குப் பகுதிகளில், மார்ச்சு மாதத்தில் இரண்டாவது ஞாயிறு அன்று, அதிகாலை 2:00 மணி கிழக்கு சீர்தர நேரம் போது, கடிகாரங்கள் அதிகாலை 3:00 மணிக்கு நகர்த்தப்படுகின்றன. நவம்பர் மாதம் முதல் ஞாயிறன்று அதிகாலை 2:00 மணி கிழக்கு பகலொளி நேரம் போது கடிகாரங்கள் அதிகாலை 1:00 மணிக்கு பின்னால் நகர்த்தப்படுகின்றன. தெற்குப் பகுதிகளிலுள்ள பனமா, கரிபீயனில் பகலொளி சேமிப்பு நேரம் அனுசரிக்கப்படுவதில்லை.[1][1] ஐக்கிய அமெரிக்காவில் நேர்வது போலவே, கனடாவிலும் நேரம் மாறுகிறது.[2][3]

மேற்சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Prerau, David (2006). "Early adoption and U.S. Law". Daylight Saving Time (Web Exhibit). http://webexhibits.org/daylightsaving/e.html. பார்த்த நாள்: 2007-04-23. 
  2. Law, Gwillim (2007-09-21). "United States Time Zones". http://www.statoids.com/tus.html. 
  3. "Daylight Saving Time Starts Sunday". Government of Ontario. 2008-03-07. http://www.attorneygeneral.jus.gov.on.ca/english/news/2008/20080307-dst-nr.asp. பார்த்த நாள்: 2010-09-21.