தாளிப் பனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தாலிபோட் பனை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தாளிப் பனை
Corypha umbraculifera-flowering.JPG
தாளிப் பனை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: ஆஞ்சியோஸ்பெர்ம்
தரப்படுத்தப்படாத: மோனோகாட்டுகள்
தரப்படுத்தப்படாத: கமெலினிடுகள்
வரிசை: ஆர்கேல்ஸ்
குடும்பம்: ஆர்கேசியே
பேரினம்: காரிஃபா
இனம்: C. அம்ப்ராகுலிஃபெரா
இருசொற் பெயரீடு
காரிஃபா அம்ப்ராகுலிஃபெரா
L.

தாளிப் பனை (Talipot palm, Corypha umbraculifera) இந்தியாவின் மலபார் கடற்கரையிலும் இலங்கையிலும் வளரும் பனை மர வகையாகும்.

உலகிலேயே மிகவும் பெரிய பனைமர வகை இதுவாகும். வளர்ந்த ஒரு மரம் 25 மீ உயரமும் 1.3 மீ அகலமும் கொண்டதாக இருக்கும்.[1]இது ஒரு விசிறி வகை பனையாகும். இதன் இலைகள் 5 மீ விட்டமும் கிட்டத்தட்ட 130 சிற்றிலைகளையும் கொண்டிருக்கும். இப்பனை மிகப்பெரிய பூவை மலரச் செய்கிறது. இப்பூக்கள் 6 – 8 மீ உயரத்தில் பல இலட்சக்கணக்கான தனி மலர்களைக் கொண்டிருக்கும். இப்பனை ஒரு முறை மட்டுமே பூக்கும் தாவர வகையைச் சேர்ந்தது. இதன் மலர்கள் இம்மரம் 30 முதல் 80 ஆண்டுகள் வயதான பின்தான் பூக்கின்றன. மேலும் இது காய்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஓராண்டு ஆகும். அதன் பின்னர் சிறு சிறு ஒற்றை விதை கொண்ட பழங்களைக் கொடுத்துவிட்டு இம்மரம் இறந்து விடும்.

பயன்கள்[தொகு]

இம்மரத்தின் இலைகள் பனையோலை எழுது முறையில் பயன்பட்டன. மேலும் இம்மரத்திலிருந்து பனங்கள் எடுக்கப்பட்டது. இம்மரத்தின் இலைகள் குடையாகவும் விசிறியாகவும் பயன்படுகின்றன. கேரளத்தில் இது குடை பனை என்றும் அழைக்கப்படுகிறது.

படக் காட்சியகம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளிப்_பனை&oldid=1892635" இருந்து மீள்விக்கப்பட்டது