இயக்கு தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இயக்குதளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
இயக்கு தளம் செயல்படும் விதம்

இயக்கு தளம்(English: Operating System) என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்கத்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருக்கும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கு தள மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கு தளமானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கட்டுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளீடு கருவிகளையும், தரவு வெளியீடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என கணினியின் பல்வேறு அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கு தளம் என்னும் கருவான மென்பொருளாகும்.

பொருளடக்கம்

வகைகள்[தொகு]

நிகழ்நேர இயக்கு தளம்[தொகு]

நிகழ்நேர நிகழ்வுகளை உள்வாங்கி, அதற்கேற்பக் கணினியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தும் இயக்கு தளம், நிகழ்நேர இயக்கு தளம் எனப்படுகிறது. நிகழ்நேர இயக்கு தளங்களில் கணினியின் நிரல்களை அட்டவணைப்படுத்த மேம்பட்ட வினைச்சரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த வகை இயக்கு தளங்களில் சரியான விடையை விட சரியான நேரத்தில் பெறுவதே அவசியமாகும்.

பற்பயனர் இயக்கு தளம் மற்றும் ஒரு பயனர் இயக்கு தளம்[தொகு]

பற்பயனர் இயக்கு தளம், பல பயனர்களை ஒரே நேரத்தில் கணினியை இயக்க வழி வகுக்கிறது. இந்த வகை இயக்கு தளம் நேரப் பகிர்தல் முறைப்படி, ஒவ்வொரு பயனரின் கட்டளைகளையும் நிறைவேற்றுகிறது. ஒரு பயனர் இயக்கு தளம் ஒரு நேரத்தில் ஒரு பயனரை மட்டுமே கணினியை இயக்க அனுமதிக்கிறது. வின்டோஸ் போன்ற இயக்கு தளங்கள் பல பயனர் கணக்குகள் உருவாக்க அனுமதித்தாலும் அவை ஒரு பயனர் இயக்கு தளங்களே. யுனிக்ஸ் சார்ந்த இயக்கு தளங்கள் பல பயனர்களை ஒரே நேரத்தில் கணினியை இயக்க வழி வகுக்கிறதால் அவை பல பயனர் இயக்கு தளங்கள் ஆகும்.

பற்பணி இயக்கு தளம் மற்றும் ஒரு பணி இயக்கு தளம்[தொகு]

பல்வேறு நிரல்களை ஒரே நேரத்தில் இயக்கும் இயக்கு தளம் பற்பணி இயக்கு தளம் ஆகும். தற்போது உபயோகப்படுத்தப்படும் அனைத்து வகை இயக்கு தளங்களும் இவ்வகையைச் சார்ந்தனவே. ஒரு நேரத்தில் ஒரேயொரு நிரலை மட்டுமே இயக்கவல்ல இயக்கு தளம் ஒரு பணி இயக்கு தளம் ஆகும்.

பதிவேற்றப்பட்ட இயக்கு தளம்[தொகு]

இவ்வகை இயக்கு தளங்கள் பதிகணினியில் இயங்கவல்லன. இவை சிறிய வகை கணினிகளில் இயங்குவதற்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. குறைந்த ஆற்றல் மற்றும் குறைந்த வளங்களைக் கொண்டு பதிகணினியை இயக்குவதே இவற்றின் முதண்மைப் பணியாகும்.

வரலாறு[தொகு]

முதன்முதல் உருவாக்கப்பட்ட கணினிகள் இயங்கு தளம் இன்றியே இருந்தன. 1950 களின் துவக்கத்தில் கணினி ஒரு நேரத்தில் ஒரே ஒரு நிரலை மட்டுமே செயல்படுத்தும். பின்னர் தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இது படிப்படியாக வளர்ந்தது.

பரவலாக பயன்படும் இயக்கு தளங்கள்[தொகு]

இயக்க முறைமை என்பது (பொதுவாக OS அல்லது O/S என சுருக்கமாக அழைக்கப்படுகிறது) வன்பொருளுக்கும் பயனருக்கும் இடையேயான ஒரு இடைமுகமாகும்; கணினியின் செயல்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மேலாண்மைக்கும் கணினியின் வளங்களைப் பகிர்தலுக்கும் OS பொறுப்பாக உள்ளது. இயக்க முறைமையானது, கணிப்பொறிகளில் இயங்கும் பயன்பாட்டு நிரல்களுக்கு புரவனாகச் செயல்படுகிறது. ஒரு புரவனாக இருந்து, வன்பொருளின் செயல்பாட்டு விவரங்களைக் கையாளுவது இயக்க முறையின் செயல்பாடுகளில் ஒன்று. இது, பயன்பாட்டு நிரல்கள் இந்த விவரங்களைக் கையாளுவதில் இருந்து விடுவித்து, பயன்பாடுகளை எளிதில் எழுத உதவுகிறது. பெரும்பாலும் அனைத்துக் கணினிகளும் (கையடக்க கணினிகள், மேசைக் கணினிகள், மீக்கணிகள், வீடியோ கேம் முனையங்கள் உட்பட), அதேபோன்று ரோபோக்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் (பாத்திரம் கழுவும் இயந்திரங்கள், சலவை இயந்திரங்கள்) மற்றும் கையடக்க மீடியா பிளேயர்கள் என அனைத்தும் சில வகையான இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகின்றன.[1] இருப்பினும் சில பழைய வடிவ கணினிகள், குறுந்தகடு அல்லது பிற தரவு சேமிப்புச் சாதனத்தில் உள்ள உட்பொதிக்கப்பட்ட இயக்க முறைமையைப் பயன்படுத்தலாம்.

இயக்க முறைமைகள் பயன்பாட்டு நிரல்களுக்கும் பயனர்களுக்கும் பல சேவைகளை வழங்குகின்றன. பயன்பாடுகள், பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (APIகள்) அல்லது கணினி அழைப்புகள் மூலமாக இந்த சேவைகளை அணுகுகின்றன. பயன்பாடானது இந்த இடைமுகங்களை செயல்படுத்துவதன் மூலமாக இயக்க முறைமையிடமிருந்து ஒரு சேவைக்கான கோரிக்கையை அனுப்பலாம், அளவுருக்களை அனுப்பலாம் மற்றும் செயல்பாட்டின் முடிவுகளைப் பெறலாம். பயனர்கள், கட்டளை வரி இடைமுகத்தைப் (CLI) பயன்படுத்தி கட்டளைகளைத் தட்டச்சு செய்தல் அல்லது வரைவியல் பயனர் இடைமுகத்தை (GUI, பொதுவாக "கைய்" என்று உச்சரிக்கப்படுகிறது) பயன்படுத்துதல் போன்ற சில வகையான பயனர் இடைமுக மென்பொருளைக் கொண்டு இயக்க முறைமையுடன் தொடர்பு கொள்ளலாம். கையடக்க மற்றும் மேசைக் கணினிகளைப் பொறுத்தவரை, பொதுவாக பயனர் இடைமுகமானது இயக்க முறைமையின் பகுதியாகவே கருதப்படுகிறது. Unix மற்றும் Unix ஐ ஒத்த முறைமைகள், போன்ற மிகப்பெரிய பல-பயனர் முறைமைகளில் இந்த பயனர் இடைமுகமானது, பொதுவாக இயக்க முறைமைக்கு வெளியிலிருந்து இயங்கும் பயன்பாட்டு நிரலாகவே செயல்படுத்தப்படு்கிறது. (பயனர் இடைமுகத்தை இயக்க முறைமையின் ஒரு பகுதியாகச் சேர்க்க வேண்டுமா அல்லது கூடாதா என்பது ஒரு வாதமாகவே உள்ளது.)

பொதுவாக தற்போது பயன்படுத்தப்படும் இயக்க முறைமைக் குடும்பங்கள், பெர்க்லி மென்பொருள் பரவல், Darwin (Mac OS X), Linux, SunOS (Solaris/OpenSolaris), மற்றும் Windows NT (XP/Vista/7) ஆகியவை ஆகும். சேவையங்கள் பொதுவாக யுனிக்சு அல்லது Unix ஐ ஒத்த முறைமைகளிலேயே இயங்குகின்றன என்றாலும், உட்பொதிக்கப்பட்ட அமைப்பு சந்தைகளில் பல இயக்க முறைமைகள் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]

வரலாறு[தொகு]

தொடக்கத்தில்[தொகு]

முதலாம் தலைமுறைக் கணினிகள் இயக்க முறைமைகளைக் கொண்டிருக்கவில்லை, தனியே இயங்கும் நிரல்களின் மூலமே இயங்கின. 1960களின் மத்தியில், தொகுதி செயலாக்க கணினிகளில் வேலைகளின் உருவாக்கம், திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்த வணிக கணினி விற்பனையாளர்கள் பல பரவலான கருவிகளை வழங்கினர் - அவை "முதன்மைக் கட்டுப்பாட்டு நிரல்" அல்லது "நிறைவேற்றுனர்" அல்லது "மேற்பார்வையாளர்" என அழைக்கப்பட்டன. அவற்றுக்கு எடுத்துக்காட்டுகள் HKho இடமிருந்து UNIVAC மற்றும் பிற நிறுவனங்களில் கண்ட்ரோல் டேட்டா கார்ப்பரேசன் தயாரித்தவை ஆகியவை.

இயக்க முறைமைகள் முதலில் மெயின்பிரேம்களில் அமைக்கப்பட்டன, நீண்டகாலத்திற்குப் பின்னர், ஒரு நேரத்தில் ஒரு நிரலை மட்டுமே ஆதரிக்கும் மற்றும் மைக்ரோ கணினி இயக்க முறைகள் உருவாகின, அவற்றுக்கு மிகவும் அடிப்படை முறைப்படுத்தி மட்டுமே தேவைப்பட்டது. ஒவ்வொரு நிரலும், அது இயங்கும் போது கணினியின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. 1960களில் பல பணி (நேரப்பகிர்வு) அம்சம் கொண்ட இயக்க முறைமைகள் முதன் முதலில் மெயின்பிரேம்களில் பயன்படுத்தப்பட்டன. 1970 இல், அதிக குறுங்கணினிகள் இயக்க முறைமையுடன் வாங்கப்பட்டு இருக்கலாம் (அவற்றில் சில இயக்க முறைமைகளாக DEC PDP-11 க்கான RT-11 மற்றும் டேட்டா ஜெனரல் கணினிகளின் RDOS போன்ற ஒரே நேரத்தில் இயங்கும் பின்புல மற்றும் முன்புல நிரல்களை ஆதரித்தன), பத்து ஆண்டுகள் கழித்து பல மைக்ரோ கணினிகள் பேசிக் (நிரல் மொழி) உள்ளமைவுடன் மட்டுமே வந்துகொண்டிருந்தன, அவற்றில் வட்டு இயக்ககத்தைச் சேர்த்து மேம்படுத்தும்போது, ஆரம்பநிலை வட்டு இயக்க முறைமை (TRSDOS அல்லது NewDOS அல்லது CP/M போன்றவை) சேர்க்கப்பட்டது.

உரிமை பெற்ற இயக்க முறைமைகள், நிறுவனத்தின் வன்பொருட்களை விற்பனை செய்யவே தயாரிக்கப்பட்டன. ஒரு வளரும் வன்பொருள் டெவலப்பர் கணினி மென்பொருள் (தொகுப்பிகள் மற்றும் இயக்க முறைமைகள்) இல்லாமல் கணினியைத் தொடங்குவது மிகவும் கடினமாக இருந்தது; டிஜிட்டல் ரீசர்ச்சின், மைக்ரோ கணினிகளுக்கான CP/M மற்றும் பெரிய கணினிகளுக்கான Unix போன்று - இயக்கமுறைமைகள், ஒரு தனிப்பட்ட வன்பொருள் வழங்குநருக்கானவையாக இல்லை - இது கணினித் துறையையே உருமாற்றியது; இதனால் புதிதாகக் கண்டுபிடிக்கும் சிந்தனையுள்ளவர்கள் எளிதில் வன்பொருளைத் தயாரிக்கத் தொடங்கலாம், அதை வாங்குபவர்கள் எந்தத் தரத்திட்டத்திலான மென்பொருளையும் பயன்படுத்தலாம். 1969-70 இல், யுனிக்சு முதலில் PDP-7 இலும் அதன் பின்னர் PDP-11 இலும் தோன்றியது. அது முன்னமைக்கப்பட்ட பல பணித்திறன், மேம்படுத்தப்பட்ட நினைவக மேலாண்மை, நினைவகப் பாதுகாப்பு மற்றும் பிற மேம்பட்ட அம்சங்களுக்கான புரவன் ஆகியவற்றைப் பயன்படுத்தி வேறுபட்ட தளத்தில் நேரப்பகிர்வை வழங்கும் திறனை வெகுவிரைவில் பெற்றது. மெயின்பிரேம்கள் மற்றும் மைக்ரோ கணினிகள் ஆகியவற்றுக்கான இயக்க முறைமையாக UNIX விரைவில் பிரபலமானது. டேட்டா ஜெனரலின் AOS-VS மற்றும் ஐபிஎம் இன் PC DOS பதிப்பு 2.0 இல் துணைக்கோப்பகம் போன்ற கருத்தக்கள் சேர்க்கப்பட்டது, போன்ற அப்போதிருந்த பிற இயக்க முறைமைகளைப் போலவே Unix இயக்க முறைமையிலும் Multics இன் பாதிப்புகள் இருந்தன.

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஐபிஎம் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்தத்தின் படி IBM PC ஐ தொடங்குவதற்கு, PC DOS என்ற இயக்க முறைமையை உருவாக்க, சீத்தல் கம்ப்யூட்டர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்திடமிருந்து ஓரளவு CP/M ஐ போன்ற மிக எளிய வட்டு இயக்க முறைமையையான QDOS ஐ வாங்கியது, அந்த ஒப்பந்தத்தின்படி Microsoft நிறுவனம் IBM அல்லாத கணினிகளுக்கு அந்த இயக்க முறைமையை எம்எஸ்-டொஸ் ஆக விற்கவும் முடியும். Microsoft, குறியீட்டுத் தொகுப்பின் முக்கியமான ஒற்றை இலக்கப் பதிப்புகளைத் தயாரித்தது, மேலும் பதிப்பு 6 வரையில் இரட்டை இலக்க மறுபதிப்புகளுக்கும் (2.0, 2.1, 4.0, இன்னும் பல) IBM நிறுவனமே பொறுப்பாக இருந்தது. MS-DOS மற்றும் PC-DOS ஆகியவற்றுக்கு இடையே மிகச்சிறிய வேறுபாடே இருந்தது, MS-DOS இல் ஜிடபிள்யு-பேசிக் சேர்த்ததை ஒரு எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம் (ஏனெனில் IBM PC ROM களில் உள்ள சில BASIC குறியீட்டை IBM அல்லாத கணினிகளில் உள்ளிட சட்ட ரீதியாக அனுமதிக்கப்படாமல் இருந்தது). MS-DOS மற்றும் PC-DOS ஆகியவை நாளடைவில் சுருக்கமாக "DOS" என அறியப்பட்டன (இப்போது அந்தச் சொல்லானது DR-DOS மற்றும் FreeDOS போன்ற மற்ற "DOSகளுக்கும்" சேர்த்தே வழங்கப்படுகிறது, ஆனாலும் இச்சொல்லை, சில இயக்க முறைமைகளின் COMMAND.COM கட்டளை ப்ராம்ட் உடன் குழப்பிக்கொள்ளக் கூடாது). IBM இன் PC இலிருந்து மிகவும் வேறுபடும் வன்பொருளுக்கும் ஏற்றபடி MS-DOS ஐ மாற்றிக்கொள்ள முடிந்தாலும், வன்பொருள் விற்பனையாளர்கள் அவர்களின் உபகரணத்தை IBM PC மற்றும் அடுத்த வழித்தோன்றல்களுடன் (PC-XT மற்றும் பிந்தைய IBM PC-AT வகைகள்) மிகவும் இணக்கமாக இருக்கும்படி தயாரித்தனர். இதற்குக் காரணம், பல பிரபலமான DOS நிரல்கள், வேகத்திற்காக இயக்க முறைமையைத் தவிர்த்து வன்பொருளை நேரடியாக அணுகியதால், மற்ற தயாரிப்பாளர்கள் IBM வடிவமைப்பை கிட்டத்தட்ட அப்படியே அதன் வரம்புகள் உட்பட நகலாக உருவாக்க வேண்டியதானது. எம்எஸ்-டொஸ் கிடைத்ததால் கணினித் துறையில் இரண்டு முக்கிய விளைவுகள் ஏற்பட்டன; வேகத்தை அல்லது செயல்பாட்டை அல்லது நகல்-பாதுகாப்பைப் பெற "தந்திர முறைகளை" (ஆவணமாக்கப்பட்டது: எடுத்தக்காட்டாக, ரால்ஃப் ப்ரௌனின் இடையூறுகள் பட்டியலில் உள்ளவை) வணிக ரீதியில் ஏற்புடையதாக்கியது, அதிகப்படியான இணக்கத்தன்மையை எதிர்நோக்கும் சந்தையை உருவாக்கியது (வேகம் மற்றும் அழகியல் வேறுபாடுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளக்கூடியவையாக இருந்தன).

IBM PC க்கு இணக்கதன்மை கொண்டவை Microsoft இன் Xenix இலும், 1980களின் தொடக்கத்தில் வந்த UNIX ஐ ஒத்த இயக்க முறைமையிலும் கூட இயங்க முடிந்தது. Microsoft நிறுவனம் அதன் ஒற்றை பயனர் இயக்க முறைமையான எம்எஸ்-டொஸ் க்கு மாற்றான ஒரு பலபயனர் இயக்க முறைமையாக Xenix ஐ வலிமையாக சந்தைப்படுத்தியது. இந்தத் தனிநபர் கணினிகளின் மையச் செயற்பகுதிகள் கெர்னல் நினைவகப் பாதுகாப்புக்கு உதவவில்லை அல்லது இரட்டைப் பயன்முறைச் செயல்பாட்டை வழங்க முடியவில்லை, ஆகவே Xenix பல்பணி ஒருங்கிணைப்பை நம்பியதே தவிர்த்து பாதுகாக்கப்பட்ட நினைவகத்தை நம்பவில்லை.

80286-அடிப்படையிலான IBM PC AT கணினினியே, பாதுகாக்கப்பட்ட நினைவகப் பயன்முறைச் செயல்பாட்டை வழங்கும் திறனுடைய IBM இணக்கத்தன்மை கொண்ட, முதல் தனிநபர் கணினியாகும். இருப்பினும், இந்தப் பயன்முறையானது அதன் 286 செயலாக்கத்தில் கண்டறியப்பட்ட மென்பொருள் பிழைகளின் காரணத்தால் பின் தங்கியது, மேலும் Intel 80386 வெளியீடு வரை இது பரவலாக ஏற்கப்படவில்லை. 386 பயன்பாட்டின் மூலம், ஒரு PC க்கு BSD யுனிக்சு இயக்க முறைமை ஏற்புடையாதாக மாறியது, லினக்சு உள்ளிட்ட பல்வேறு Unix ஐ ஒத்த முறைமைகள் (அந்த நேரத்தில் "*nix" எனக் குறிக்கப்பட்டவை) உருவாயின, இருப்பினும் PS/2 இன் தொடக்கத்திற்குப் பின்னர் IBM நிறுவனம், OS/2 க்கு மாற்றாக PS/2 ஐ தேர்ந்தெடுத்துவிட்டது; Microsoft நிறுவனம் முதலில் DOS இன் மேற்பரப்பிலான வரைகலை பயனர் இடைமுகம் ஆகவும் பின்னர் அதை மைக்ரோசாப்ட் விண்டோசு எனும் முழுமையான இயக்க முறைமையாகவும் மாற்றி, அதன் பாணியில் சென்றுகொண்டிருந்தது.

பழமையான மாக் இயக்குதளம் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோசு 1.0-3.11 ஆகியவை ஒருங்கிணைந்த பல்பணியை மட்டுமே ஆதரித்தன (Windows 95, 98, & ME ஆகியவை 32-பிட் பயன்பாடுகள் இயங்கும் போது மட்டுமே முன்னொதுக்கப்பட்ட பல்பணியை ஆதரித்தன, ஆனால் மரபுவழி 16-பிட் பயன்பாடுகளின் போது ஒருங்கிணைந்த பல்பணியைப் பயன்படுத்தின), மேலும் அவை பாதுகாக்கப்பட்ட நினைவகத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் திறனில் மிகவும் வரம்புக்குட்பட்டவையாகவே இருந்தன. இந்த இயக்க முறைமைகளில் இயங்கும் பயன்பாட்டு நிரல்கள், இயல்பாகவோ அல்லது ஒரு சார்பை அழைப்பதன் மூலமாகவோ, அவை CPU நேரத்தைப் பயன்படுத்தாமலிருக்கும் போது முன்குறிப்பீட்டிக்கு வழங்க வேண்டும்.

வின்டோஸ் என்டி இன் அடிப்படை இயக்க முறைமை கெர்னலானது, அடிப்படையில் டிஜிட்டல் எக்யூப்மென்ட் கார்ப்பரேசனின் VMS ஐ வடிவமைத்த அதே குழுவால் வடிவமைக்கப்பட்டது, அது ஒரு UNIX ஐ ஒத்த இயக்க முறைமையாகும், மேலும் அது அனைத்துப் பயனர் நிரல்களுக்குமான பாதுகாக்கப்பட்ட பயன்முறை, கெர்னல் நினைவகப் பாதுகாப்பு, முன்னொதுக்கப்பட்ட பல்பணி, கற்பனைக் கோப்பு முறைமை ஆதரவு மற்றும் பிற அம்சங்களுக்கான புரவன் ஆகியவற்றை வழங்கியது.

பழைய AmigaOS மற்றும் Microsoft Windows இன் விண்டோஸ் 1.0 முதல் விண்டோஸ் மில்லேனியம் வரையிலான பதிப்புகள் நிகழ்நேரத்தில் செயலாக்கங்களால் ஒதுக்கப்பட்ட வளங்களை மிகச்சரியாகக் கண்காணிக்கவில்லை.[மேற்கோள் தேவை] ஒரு செயலாக்கம் முடிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டால், கணினியை மறுதொடக்கம் செய்யும் வரையில் புதிய நிரல்களுக்காக வளங்கள் விடுவிக்காமல் இருப்பதற்கு வாய்ப்பிருந்தது.

பல பெரிய ("மீக்குறும்") கணினிகளின் இயக்க முறைமைகளில் இருந்ததைப் போன்றே, AmigaOS இயக்க முறைமையும் முன்னொதுக்கப்பட்ட பல்பணியைக் கொண்டிருந்தது, மேலும் தொழில்நுட்ப ரீதியாக சிறந்ததாக இருந்தபோதிலும் மிக அதிக வேகத்திலான "தனிநபர்" கணினிகளின் தயாரிப்புகளின் காரணமாக அது விற்பனையில் கடும் போராட்டத்ததையே சந்தித்தது, மேலும் வாடிக்கையாளர்கள் எளிதில் கையாள முடியாத மென்பொருளில் (மரபுவழி மென்பொருள் மற்றும் உரிமை சார்ந்த அலுவலக ஆவணங்கள்) சிக்கிக்கொண்டனர்.

மெயின்பிரேம்கள்[தொகு]

1950களில், இயக்க முறைமைகள் துறையில் பல முக்கிய அம்சங்கள் தோன்றின. ஐபிஎம் System/360 இன் தயாரிப்பினால், பரவலான பல விலை மற்றும் திறன் கொண்ட மெயின்பிரேம் கணினிகள் கிடைத்தன, அவை அனைத்திற்கும் (ஒவ்வொரு தனிப்பட்ட வகைக்குமான ad-hoc நிரல்களை உருவாக்குவதற்குப் பதிலாக) OS/360 என்ற ஒற்றை இயக்க முறைமையே இணக்கமுள்ளதாக இருக்கும்படித் தயாரிக்கும் திட்டமிருந்தது. அனைத்து தயாரிப்பு வரிசைக்கும் ஓரே OS என்ற இந்தக் கொள்கையே System/360 இன் வெற்றிக்கு காரணமாக அமைந்தது, உண்மையில் ஐபிஎம் இன் தற்போதைய மெயின்பிரேம் இயக்க முறைமைகள் அதன் முந்தைய முறைமைகளின் தூரத்து உறவுகளே ஆகும்; OS/360 க்காக எழுதப்பட்ட பயன்பாடுகள் தற்கால கணினிகளிலும் இயங்கக்கூடியவை. 70களின் மத்தியில், OS/360 இன் வழித்தோன்றலான MVS இயக்க முறைமையே, வட்டில் சேமிக்கப்பட்ட தரவுக்கான ஒரு வெளிப்படையான தேக்ககமாக RAM ஐ பயன்படுத்துவதை முதன் முதலில் செயல்படுத்தியது[மேற்கோள் தேவை].

OS/360 பல புதிய கருத்துக்களை அறிமுகப் படுத்துவதில் முன்னோடியாக விளங்கியது, அவற்றில் சில இன்னமும் மெயின்பிரேம் சூழலுக்கு வெளியே காணப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, OS/360 இல் ஒரு நிரல் தொடங்கப்படும் போது, அது பயன்படுத்தும் சேமிப்பு, பூட்டுகள், தரவுக் கோப்புகள் போன்ற கணினி வளங்கள் அனைத்தையும் இயக்க முறைமையானது கண்காணிக்கிறது. ஏதேனும் காரணத்தால் அந்தச் செயலாக்கம் முடிக்கப்படும் போது, இந்த வளங்கள் அனைத்தும் இயக்க முறைமையினால் திரும்பப் பெறப்படுகின்றன. இதற்கு மாற்றான CP-67 முறைமையானது, கற்பனை இயந்திரங்கள் கருத்தை மையமாகக் கொண்ட முழுமையான இயக்க முறைமைகள் வெளிவரத் தொடக்கமாக இருந்தது.

1960களில் கண்ட்ரோல் டேட்டா கார்ப்பரேசன் நிறுவனம் தொகுப்புச் செயலாக்கத்திற்காக SCOPE இயக்க முறைமையை உருவாக்கியது. 1970களில் மின்னேசோட்டா பல்கலைக்கழகத்துடன் இணைந்து, ஒரே நேரத்தில் தொகுப்பு மற்றும் நேரப்பகிர்வுப் பயன்பாட்டிற்கு ஆதரவளிக்கும் KRONOS இயக்க முறைமையையும் அதன் பின்னர் NOS இயக்க முறைமையியும் உருவாக்கியது. பல வணிக ரீதியான நேரப்பகிர்வு முறைமைகளைப் போன்றே இதன் இடைமுகமும், Dartmouth BASIC இயக்க முறைமைகளின் நீட்டிப்பாகவே இருந்தது, அது நேரப்பகிர்வு மற்றும் நிரலாக்க மொழிகளுக்கான முன்னோடி முயற்சிகளில் ஒன்றாகும். 1970களின் பிற்பகுதியில், கண்ட்ரோல் டேட்டா நிறுவனமும் இல்லினோயிஸ் பல்கலைக்கழகமும் இணைந்து PLATO இயக்க முறைமையை உருவாக்கின, இது பிளாஸ்மா காட்சித்திரைப் பலகத்தையும் நீண்ட தொலைவு நேரப்பகிர்வு நெட்வொர்க்குகளையும் பயன்படுத்தியது. Plato, அந்நேரத்தில் நிகழ்நேர அரட்டை மற்றும் பல-பயனர் வரைவியல் கேம்கள் போன்ற அம்சங்களை வழங்கி புதிய கண்டுபிடிப்பாக விளங்கியது. 1961 இல் பர்ரோக்ஸ் கார்ப்பரேசன் நிறுவனம் MCP (முதன்மைக் கட்டுப்பாட்டு நிரல்) இயக்க முறைமையுடன் கூடிய B5000 கணினிகளை அறிமுகப்படுத்தியது. B5000, பொறி மொழி அல்லது பொறிமொழியாக்கி இல்லாமல் உயர்நிலை மொழிகளை பிரத்தியேகமாக ஆதரிப்பதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு அடுக்கு கணினியாக இருந்தது, உண்மையில் MCP மட்டுமே, உயர்நிலை மொழியான ESPOL ஐ பயன்படுத்தி பிரத்தியேகமாக எழுதப்பட்ட முதல் OS ஆகும் – ESPOL என்பது ALGOL இன் கிளைமொழியாகும். கற்பனை நினைவகத்தை முதலில் வணிக ரீதியாக செயலாக்கியது போன்ற அதுவரை இல்லாத புதுமைகளையும் MCP அறிமுகப்படுத்தியது. AS400 உருவாக்கத்தின் போது, ஐபிஎம் நிறுவனம் AS400 வன்பொருளில் MCP ஐ இயக்குவதற்கு உரிமம் பெற பர்ரோக்ஸ் நிறுவனத்தை அணுகியது. பர்ரோக்ஸ் நிர்வாகம், முன்பே உள்ள அதன் வன்பொருள் பாதுகாப்பை பாதுகாப்பதற்காக இந்தக் கோரிக்கையை நிராகரித்தது. Unisys ClearPath/MCP வரிசைக் கணினிகளில் இன்றும் MCP பயன்பாட்டில் உள்ளது.

முதல் வணிக ரீதியிலான கணினி தயாரிப்பாளர்களான UNIVAC நிறுவனம், EXEC இயக்க முறைமைகளைத் தயாரித்தது. முந்தைய அனைத்து மெயின்-பிரேம் முறைமைகளைப் போல், இது காந்த உருளைகள், வட்டுகள், கார்டு படிப்பான்கள் மற்றும் வரி அச்சுப்பொறிகள் ஆகியவற்றை நிர்வகிக்கும், தொகுப்பு அடிப்படையிலான முறைமையாக இருந்தது. 1970களில், UNIVAC நிறுவனம் பெரிய அளவிலான நேரப்பகிர்வை ஆதரிப்பதற்கு Real-Time Basic (RTB) முறைமையை தயாரித்தது, அது Dartmouth BASIC முறைமைக்குப் பிறகு காப்புரிமையும் பெற்றது.

ஜெனரல் எலெக்ட்ரிக் மற்றும் MIT நிறுவனங்கள் General Electric Comprehensive Operating Supervisor (GECOS) இயக்க முறைமைகளைத் தயாரித்தது, அது வளையப் பாதுகாப்பு முன்னுரிமை நிலைகள் கருத்தை அறிமுகப்படுத்தியது. ஹனிவெல்லின் கையகப்படுத்தலுக்குப் பின், அது General Comprehensive Operating System (GCOS) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன் நிறுவனம் அதன் வேறுபட்ட கணினி வரிசைகளுக்காக, TOPS-10 மற்றும் 36-பிட் PDP-10 வகைக் கணினிகளுக்காக TOPS-20 நேரப்பகிர்வு முறைமைகள் உட்பட பல இயக்க முறைமைகளைத் தயாரித்தது. UNIX பெரும்பான்மையாக பயன்பாட்டுக்கு வருவதற்கு முன்னர், பல்கலைக்கழகங்களிலும் பழைய ARPANET சமூகத்திலும் TOPS-10 குறிப்பிடும்படியான பிரபல முறைமையாக இருந்தது.

1960கள் பிற்பகுதியிலிருந்து 1970கள் பிற்பகுதிவரையிலான காலத்தில், ஒரே மாதிரியான அல்லது பொருந்தக்கூடிய மென்பொருள், ஒன்றுக்கு மேற்பட்ட கணினிகளில் இயங்க அனுமதிக்கும் பல வன்பொருள் திறன்கள் உருவாயின. முந்தைய கணிகள், வேறுபட்ட தோற்றமளிக்கும் அடிப்படை கட்டமைப்புகள் மற்றவற்றைப் போலவே தோன்றும் பொருட்டு அவற்றின் முறைமைகளில் சில அம்சங்களைச் செயல்படுத்த மைக்ரோநிரலாக்கத்தைப் பயன்படுத்தின. உண்மையில், 360/40 க்குப் பிந்தைய (360/165 மற்றும் 360/168 நீங்கலாக) பெரும்பாலான 360கள் மெக்ரோநிரலாக்கப்பட்ட செயல்பாடுகளாக இருந்தன. ஆனால் விரைவில், பயன்பாட்டு இணக்கத்தன்மையப் பெறுதலின் பிறவழிகளும் மிகவும் முக்கியமானவை என நிரூபிக்கப்பட்டது.

வன்பொருளுடன் இணக்கத்தன்மை கொண்ட இயக்க முறைமைகளை உருவாக்குவதைத் தொடர்வதற்கு பெரும்பாலான தயாரிப்பாளர்கள், 1960கள் முதல் முறைமைகளுக்கான மென்பொருள் உருவாக்கத்தில் மிகப்பெரிய முதலீடு செய்தனர். ஆதரிக்கப்பட்ட குறிப்பிடத்தகுந்த இயக்க முறைமைகளில் பின்வருவனவும் குறிப்பிடத்தக்கவை:

மைக்ரோ கணினிகள்[தொகு]

முதல் தலைமுறை மைக்ரோ கணினிகள், மெயின்பிரேம் மற்றும் குறுங்கணினிகளுக்காக உருவாக்கப்பட்ட பெரிய இயக்க முறைமைகளுக்கான திறனையோ அல்லது அவசியமோ பெற்றிருக்கவில்லை; சிறிய இயக்க முறைமைகளே உருவாக்கப்பட்டன, அவை பெரும்பாலும் ROMஇலிருந்து ஏற்றப்பட்டன, அவற்றை மானிட்டர்கள் என அழைக்கப்பட்டன. CP/M என்பது, குறிப்பிடத்தக்க ஒரு தொடக்ககால வட்டு சார்ந்த இயக்க முறைமையாகும், இது பல தொடக்ககால மைக்ரோ கணினிகளால் ஆதரிக்கப்பட்டது, மேலும் எம்எஸ்-டொஸ் இதைப் போலவே இருந்தது, இதுவே பின்னாளில் IBM PCகளுக்கு (இதன் IBM பதிப்பானது, IBM DOS அல்லது PC DOS எனப்பட்டது) தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபலமான இயக்க முறைமையாகியது, இதற்குப் பின்பு மைக்ரோசாப்ட் உருவானது. 80'களில் ஆப்பிள் கம்ப்யூட்டர் இங்க். (இப்பொழுது ஆப்பிள் இங்க்.) நிறுவனம் தனது பிரபலமான, மைக்ரோ கணினிகளின் Apple IIஐ கைவிட்டுவிட்டு, மக்கின்டொஷ் கணினியை புதுமையான, மாக் இயக்குதளம்க்கான வரைவியல் பயனர் இடைமுகத்துடன் (GUI) அறிமுகப்படுத்தியது.

32 இருமம் கட்டமைப்பு மற்றும் பக்கமாக்கல் திறன்களுடன் Intel 80386 மையச் செயற்பகுதி சில்லுவின் அறிமுகமானது, தொடக்ககால குறுங்கணினிகள் மற்றும் மெயின்பிரேம்களில் உள்ளதைப்போல, தனிநபர் கணினிகளுக்கும் பல்பணி இயக்க முறைமைகளைச் செயலாற்றும் திறனை வழங்கியது. Microsoft நிறுவனம் டேவ் கட்லரை பணியமர்த்தி, இந்த முன்னேற்றத்தைச் சமாளித்தது, அவர் டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசன் க்காக VMS இயக்க முறைமையை உருவாக்கினார். இவர் வின்டோஸ் என்டி இயக்க முறைமையின் உருவாக்கத்திற்குத் தலைமை வகித்தார், இதில் தொடர்ந்து, Microsoft இன் இயக்க முறைமைகள் வரிசைக்கு ஒரு அடித்தளமாக அமைந்தது. ஆப்பிள் இங்க்.இன் துணை நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ், NeXT கம்ப்யூட்டர் இங்க். நிறுவனத்தைத் தொடங்கினார், இது Unix-ஐ ஒத்த NEXTSTEP இயக்க முறைமையை உருவாக்கியது. பின்னாளில் ஆப்பிள் இங்க். நிறுவனம் NEXTSTEP ஐ கையகப்படுத்தி, Mac OS X இன் மையமாக FreeBSDஇன் குறியீட்டைப் பயன்படுத்தியது.

Minix என்பது ஒரு கல்வி சார்ந்த கற்பித்தல் கருவி, இது பழைய PC களில் இயங்கக்கூடியது, இது யுனிக்சுன், மற்றொரு மறுமேம்படுத்தலான Linux உருவாக்கத்திற்கு ஊக்கமளித்தது. கணினி மாணவர் லினஸ் டோர்வால்ட்ஸ் மற்றும் பல இணையத்தள தன்னார்வலர்களின் கூட்டுமுயற்சியில் தொடங்கப்பட்டு, குனூ திட்டம் இன் கருவிகள் கொண்டு ஓர் இயக்க முறைமை உருவாக்கப்பட்டது. BSD எனப்படும் Berkeley Software Distribution என்பது, 1970 களின் தொடக்கத்தில் பெர்க்கிலேயிலுள்ள, கலிபோர்னியா பல்கலைக்கழகத்தால் வினியோகிக்கப்பட்ட UNIX வழித்தோன்றிய இயக்க முறைமையாகும். அது இலவசமாக வழங்கப்பட்டது, மேலும் பல குறுங்கணினிகளில் பயன்படுத்தப்பட்டது, பின்னர் தொடர்ந்து PCகளில் இயங்கக்கூடிய துணைத் தயாரிப்புகளாக வெளிவந்தது, அவற்றில் FreeBSD, NetBSD மற்றும் OpenBSD ஆகியவை முக்கியமானவை.

அம்சங்கள்[தொகு]

நிரல் செயலாக்கம்[தொகு]

இயக்க முறைமையானது, பயன்பாட்டிற்கும் வன்பொருளுக்கும் இடையே ஓர் இடைமுகமாகச் செயல்படுகிறது. பயனர், "மற்றொரு பக்கத்திலிருந்து" வன்பொருளுடன் தொடர்புகொள்கிறார். இயக்க முறைமையானது, பயன்பாடுகளின் மேம்பாட்டினை எளிமைப்படுத்தும் சேவைகளின் தொகுப்பாகும். ஒரு நிரலைச் செயல்படுத்துவதென்பது, இயக்க முறைமை ஒரு செயலாக்கத்தை உருவாக்குவதிலுள்ளது. கெர்னல் ஆனது, நினைவகம் மற்றும் இதர வளங்களை ஒதுக்குதல், (பல்பணி முறைமைகளில்) செயலாக்கங்களுக்கான முன்னுரிமையை நிர்ணயிப்பது, நிரல் குறியீட்டினை நினைவகத்திற்குள் ஏற்றுதல் மற்றும் நிரலைச் செயல்படுத்துதல் ஆகியவற்றின் மூலமாக ஒரு செயல்முறையை உருவாக்குகிறது. பின்பு நிரலானது பயனர் மற்றும்/அல்லது பிற சாதனங்களுடன் தொடர்புகொண்டு அதற்கான செயலைச் செய்கிறது.

குறுக்கீடுகள்[தொகு]

குறுக்கீடுகளே இயக்க முறைமைகளுக்கு முக்கியமானவை, காரணம் குறுக்கீடுகளே இயக்க முறைமையின் சூழலுடன் தொடர்புகொள்ளவும் எதிர்வினை புரியவும் உள்ள செயல்திறன் மிக்க வழியாகும். மாற்றாக--இயக்க முறைமையை, செயலை விளைவிக்க வேண்டிய நிகழ்வுகளுக்கான (கோருதல்) உள்ளீடுகளின் பல்வேறு மூலங்களையும் "கவனிக்க" வைக்கலாம்—இதில் CPU வளங்கள் குறைவாகவே பயன்படுத்தப்படும். குறுக்கீடு அடிப்படையிலான நிரலாக்கத்தை பெரும்பாலான CPU கள் நேரடியாக ஆதரிக்கின்றன. குறுக்கீடுகள், நிகழ்வுகளின் வினைகளுக்கேற்ப குறிப்பிட்டக் குறியீடுகளைத் தானாகவே நிகழ்த்தும் திறனை, கணினிகளுக்கு வழங்குகின்றன. மிக அடிப்படைக் கணினிகள் கூட வன்பொருள் குறுக்கீடுகளை ஆதரிக்கின்றன, இவற்றில் ஒரு குறிப்பிட்ட நிகழ்வு நிகழும் போது நிகழ்த்தப்பட வேண்டிய குறியீட்டை, புரோக்கிராமர் குறிப்பிட முடிகிறது.

ஒரு குறுக்கீடு பெறப்படும்போது, கணினியுடைய வன்பொருளானது, அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்தவொரு நிரலையும் இடை நிறுத்திவைத்து, அதன் நிலையைச் சேமித்துவிட்டு, குறுக்கீட்டுடன் தொடர்புடைய கணினிக் குறியீட்டினை முதலில் செயல்படுத்துகிறது; இது புத்தகம் படித்துக்கொண்டிருக்கும்பொழுது தொலைபேசி அழைப்பினைக் கவனிப்பதற்காக புத்தகத்தில் குறியிடுவதைப் போன்றதே ஆகும். தற்கால இயக்க முறைமைகளில், குறுக்கீடுகள் அனைத்தும் இயக்க முறைமையின் கெர்னல் மூலம் கையாளப்படுகின்றன. குறுக்கீடுகள், கணினியின் வன்பொருளிலிருந்தோ அல்லது செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிரலிலிருந்தோ வரலாம்.

ஒரு வன்பொருள் சாதனம் ஒரு குறுக்கீட்டைத் தூண்டும் போது, இயக்க முறைமையின் கெர்னலானது, பொதுவாக சில செயல்முறைக் குறியீடுகளைச் செயல்படுத்துவதன் மூலமாக, இந்நிகழ்வை எவ்வாறு சமாளிப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. எவ்வளவு குறியீடுகள் இயக்கப்படும் என்பது குறுக்கீடுகளின் முன்னுரிமையைப் பொறுத்தது, (உதாரணமாக, ஒருவர் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கும் முன்பு புகைக் கண்டறியும் கருவியின் எச்சரிக்கை மணிக்கே பதிலளிப்பார்). வழக்கமாக வன்பொருள் குறுக்கீடுகளின் செயலாக்கமானது, மென்பொருள் அழைக்கும் சாதன இயக்கிகளுக்கு பிரித்தளிக்கப்படுகிறது, அது இயக்க முறைமையின் கெர்னலின் பகுதியாகவோ அல்லது மற்றொரு நிரலின் பகுதியாகவோ அல்லது இரண்டின் பகுதியுமாகவோ இருக்கலாம். பின்னர், சாதன இயக்கிகள் தகவல்களை இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிரலுக்கு, பல வழிகளில் அனுப்பலாம்.

ஒரு நிரலும் இயக்க முறைமையுடன் குறுக்கீட்டைத் தூண்டலாம். எடுத்துக்காட்டாக ஒரு நிரல் வட்டியக்ககத்தை அணுக விரும்பினால், அது இயக்க முறைமையின் கெர்னலைக் குறுக்கிடும், இதனால் கட்டுப்பாடு கெர்னலுக்குச் சென்றுவிடும். கெர்னலானது அந்தக் கோரிக்கையைச் செயல்படுத்தும். ஒரு நிரல், நினைவகம் போன்ற கூடுதல் வளங்களை அணுக விரும்பினால் (அல்லது வளங்களை விடுவிக்க விரும்பினால்), அது கெர்னலுடன் ஒரு குறுக்கீட்டைத் தூண்டும்.

பாதுக்காக்கப்பட்ட பயன்முறை மற்றும் மேற்பார்வையாளர் பயன்முறை[தொகு]

தற்கால CPUகள் இரட்டைப் பயன்முறைச் செயல்பாட்டை ஆதரிக்கின்றன. இந்தத் திறனுடைய மையச் செயற்பகுதிகள் இரு பயன்முறைகளைப் பயன்படுத்துகின்றன: பாதுக்காக்கப்பட்ட பயன்முறை மற்றும் மேற்பார்வையாளர் பயன்முறை ஆகியவை, இது குறிப்பிட்ட CPU செயல்பாடுகளை இயக்க முறைமையின் கெர்னல் மட்டுமே கட்டுப்படுத்த அனுமதிக்கின்றது. இங்கு, பாதுக்காக்கப்பட்ட பயன்முறையானது குறிப்பாக 80286 (Intel இன் x86 16-பிட் மைக்ரோசெயலி) CPU அம்சத்தைக் குறிக்கவில்லை, இருப்பினும் அதன் பாதுக்காக்கப்பட்ட பயன்முறை அதை மிகவும் ஒத்திருக்கிறது. மையச் செயற்பகுதிகள் 80286 பாதுக்காக்கப்பட்ட பயன்முறையை ஒத்தப் பயன்முறைகளையும் கொண்டிருக்கலாம் 80386 (Intel இன் x86 32-பிட் மைக்ரோசெயலி அல்லது i386) இன் கற்பனை 8086 பயன்முறையை இதற்கு எடுத்துக்காட்டாகும்.

இருப்பினும், இந்தச் சொல்லானது பொதுவாக இயக்க முறைமைகள் கொள்கையில் அந்தப் பயன்முறையில் இயங்கும் நிரல்களின் திறன்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து பயன்முறைகளையும் குறிக்கப் பயன்படுகிறது, கற்பனை நினைவக முகவரியாக்கம் மற்றும் மேற்பார்வையாளர் பயன்முறையில் இயங்குகின்ற நிரல் நிர்ணயித்த வகையில் வன்பொருளுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துதல் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது. இதே போன்ற பயன்முறைகள், UNIX ஐ ஒத்த பல பயனர் இயக்க முறைமைகளை முழுமையாக ஆதரிப்பதற்கு அவை அவசியமானதால், அவை மீக்கணினிகள், குறுங்கணிகள் மற்றும் மெயின்பிரேம்களில் இருந்தன.

ஒரு கணினி முதலில் தொடங்கப்படும் போது, அது தானாகவே மேற்பார்வையாளர் பயன்முறையில் இயங்குகின்றது. கணினியில் முதலில் இயங்கும் நிரல்களான பயாஸ், தொடக்க ஏற்றி இயக்க முறைமை ஆகியவவை வன்பொருளுக்கான வரம்பற்ற அணுகலைக் கொண்டுள்ளன - மேலும் வரையறையின்படி வெளியிலிருந்து மட்டுமே பாதுக்காக்கப்பட்ட சூழ்நிலையை தொடங்க முடியும் என்பதால் இது அவசியமாகிறது. இருப்பினும், இயக்க முறைமையானது வேறு நிரலுக்கு கட்டுப்பாட்டை வழங்கும் போது, CPU பாதுக்காக்கப்பட்ட பயன்முறைக்கு மாற்றப்படலாம்.

பாதுக்காக்கப்பட்ட பயன்முறையில், CPU இன் மிகவும் வரம்புக்குட்பட்ட வழிமுறைகளின் தொகுப்பை மட்டுமே நிரல்கள் அணுக முடியும். ஒரு குறிக்கீட்டுத் தூண்டலின் விளைவாக கட்டுப்பாடானது கெர்னலுக்கு திரும்ப வழங்கப்படுவதால் மட்டுமே ஒரு பயனர் நிரல் பாதுக்காக்கப்பட்ட பயன்முறையை விட்டு வெளியேறலாம். இந்த முறையில் இயக்க முறைமையானது, வன்பொருள் மற்றும் நினைவகத்துக்கான அணுகல் போன்றவற்றை தனிப்பட்ட முறையில் கட்டுப்படுத்த முடியும்.

"பாதுக்காக்கப்பட்ட பயன்முறை வளம்" என்ற சொல்லானது பொதுவாக, ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட CPU பதிவுகளைக் குறிக்கிறது, அவற்றில் உள்ள தகவல்களை மாற்றும் அனுமதி இயங்கும் நிரலுக்கு இல்லை. இந்த வளங்களை மாற்றும் முயற்சிகளின் விளைவாக பொதுவாக பயன்முறையானது மேற்பார்வையாளர் பயன்முறைக்கு மாற்றப்படுகிறது, இதில் இயக்க முறைமையானது அந்த நிரல் முயற்சித்த முறையற்ற செயல்பாட்டை (எடுத்துக்காட்டாக நிரலை முடித்தல்) நிர்வகிக்கும்.

நினைவக மேலாண்மை[தொகு]

ஒரு பல்நிரலியக்குத் திறனுள்ள இயக்க முறைமை கெர்னலானது, மற்ற எல்லாப் பணிகளிலும் முக்கியமாக, நடப்பு நிரல்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் மொத்த கணினி நினைவகத்திற்கும் பொறுப்பாகும். இதனால், ஒரு நிரலானது மற்றொரு நிரல் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நினைவத்துடன் எந்தக் குறுக்கீடும் செய்யாது என உறுதியாகிறது. நிரல்களின் நேரப் பங்களிப்பின் காரணமாக, கண்டிப்பாக ஒவ்வொரு நிரலுக்கும், நினைவகத்துக்கான தனித்தனி அணுகல் இருக்க வேண்டும்.

பல தொடக்க கால இயக்க முறைமைகள் பயன்படுத்திய ஒருங்கிணைந்த நினைவக மேலாண்மையானது, எல்லா நிரல்களும் கெர்னலின் நினைவக நிர்வாகியைத் தனிப்பட்ட முறையில் பயன்படுத்துகின்றன, மேலும் அவைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தை மீறுவதில்லை என்ற அனுமானத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. நிரல்களில் அடிக்கடி ஏற்படுகின்ற பிழைகள், அவற்றின் ஒதுக்கப்பட்டுள்ள நினைவகத்தை மீறச்செய்வதால், இத்தகைய நினைவக மேலாண்மை பின்னர் பெரும்பாலும் இல்லாமல் போனது. ஒரு நிரல் செயலிழந்தால், ஒன்று அல்லது அதற்கு மேற்ப்பட்ட மற்ற நிரல்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கும் நினைவகம் பாதிக்கப்படலாம் அல்லது மேலெழுதப்படலாம். தீங்கிழைக்கும் நிரல்கள், அல்லது வைரஸ்கள் வேண்டுமென்றே மற்றொரு நிரலின் நினைவகத்தை மாற்றலாம் அல்லது இயக்க முறைமையின் இயக்கத்தையே கூட பாதிக்கலாம். ஒருங்கிணைந்த நினைவக மேலாண்மையில், தவறான ஒரே ஒரு நிரல் மட்டுமே கணினியைச் செயலிழக்கச் செய்ய முடியும்.

நினைவகப் பாதுகாப்பின் உதவியால், செயலாக்கங்களின் கணினி நினைவக அணுகலைக் கெர்னலால் கட்டுப்படுத்த முடிகிறது. நினைவகத் துண்டாக்கல் மற்றும் பக்கமிடுதல் ஆகியன உள்ளிட்ட பல்வேறு நினைவகப் பாதுகாப்பு முறைகள் உள்ளன. அனைத்து முறைகளுக்கும் ஓரளவு (80286 MMU போன்ற) வன்பொருள் ஆதரவு தேவைப்படுகிறது, இவை எல்லாக் கணினிகளிலும் இருப்பதில்லை.

துண்டாக்கல் மற்றும் பக்கமிடுதல் ஆகிய இரண்டு முறைகளிலும், குறிப்பிட்ட பாதுகாக்கப்பட்ட பயன்முறைப் பதிவேடுகளே, இயங்கிக் கொண்டிருக்கும் நிரலிற்கு எந்த நினைவக முகவரிக்கான அணுகல் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதை CPU க்குக் கூறுகிறது. நிரல்கள், மற்ற முகவரிகளை அணுக முயற்சிக்கும்போது இடையூறுகள் தூண்டப்படுகின்றன, இதனால் CPU மேற்பார்வை பயன்முறைக்கு மீண்டும் மாறி, கெர்னல் இயங்க ஆரம்பித்து விடுகிறது. இதுவே துண்டாக்கல் மீறுதல் அல்லது Seg-V என்று சுருக்கமாக அழைக்கப்படுகிறது, மற்றும் இது போன்ற செயலுக்கு ஒரு சரியான முடிவை வழங்குவது கடினம் என்பதாலும் வழக்கமாக இது ஒரு தவறான நிரலின் செயல்பாட்டின் அறிகுறி என்பதாலும், கெர்னலானது பொதுவாக பாதிப்பு உண்டாக்குகின்ற நிரலினை நிறுத்த முயற்சித்து, அதைக் குறித்துப் புகாரளிக்கிறது.

Windows 3.1-Me இல் ஓரளவு நினைவகப் பாதுகாப்பு உள்ளது, ஆனால் அதைப் பயன்படுத்தும் நோக்கத்தையே நிரல்கள் தந்திரமாக வென்றுவிடக் கூடும். Windows 9x இல், அனைத்து MS-DOS பயன்பாடுகளும் மேற்பார்வை பயன்முறையில் இயங்கின, இதனால் அவை கணினியின் மீது அளவிலாக் கட்டுப்பாட்டைப் பெற்றிருந்தன. பொது பாதுகாப்புப் பிழை என்பது, துண்டாக்கல் மீறுதல் நடந்துள்ளதை தெரியப்படுத்துவதற்காக தோற்றுவிக்கப்பட்டது, இருப்பினும் கணினிச்செயலிழப்பு அடிக்கடி நிகழ்ந்துக்கொண்டேதான் இருந்தது.

பெரும்பாலான Linux இயக்க முறைமைகளில், இயக்க முறைமை கணினியில் நிறுவப்படும்போதே, வட்டியக்ககத்தின் ஒரு பகுதி கற்பனை நினைவகத்திற்காக ஒதுக்கிவைக்கப்படுகிறது. இந்தப்பகுதியே பறிமாற்றப் பகுதி எனப்படுகிறது. Windows இயக்க முறைமைகள் பகுதிப்பிரித்தலுக்குப் பதிலாக பறிமாற்றக் கோப்பைப் பயன்படுத்துகிறது.

கற்பனை நினைவகம் I virutual Memory )[தொகு]

கற்பனை நினைவக முகவரியாக்கலின் (அதாவது பக்கமாக்கல் அல்லது துண்டாக்கல்) பயன்பாட்டில், ஒவ்வொரு நிரலும் அதற்கென வழங்கப்பட்ட நேரத்தில் எந்த நினைவகத்தைப் பயன்படுத்தலாம் என்பதை கெர்னல் முடிவு செய்ய முடிகிறது, மேலும் இயக்க முறைமையானது, ஒரே நினைவகப் பகுதியை மற்ற பல செயல்களுக்கு பயன்படுத்தவும் அனுமதிக்கிறது.

ஒரு நிரலானது அதற்கென நினைவகம் ஒதுக்கப்படாதபட்சத்தில், அதன் பயன்படுத்தக்கூடிய நினைவக எல்லைக்குள் இல்லாத நினைவகத்தில் நுழைய முற்படும்போதும், ஒதுக்கப்பட்ட நினைவகத்தை ஒரு நிரல் மீறும்போது ஏற்படுவதைப் போலவே, கெர்னலுக்கு குறுக்கீடுகள் தூண்டப்படும். (நினைவக மேலாண்மைப் பகுதியில் காண்க) UNIX இல், இத்தகைய குறுக்கீடுகளை பக்கப் பிழை என்று குறிப்பிடப்படுகிறது.

பொதுவாக கெர்னலானது பக்கப் பிழையை கண்டறியும்பட்சத்தில், அதைத் தூண்டிய நிரலின் கற்பனை நினைவக வரம்பை மாற்றியமைத்து, அதற்கு வேண்டிய நினைவகத்திற்கான அணுகலை வழங்குகிறது. இதனால், குறிப்பிட்டப் பயன்பாட்டிற்கான நினைவகம் எங்கு சேமித்துவைக்கப்பட்டுள்ளது அல்லது அக்குறிப்பிட்ட நினைவகம் அந்த நிரலுக்கென ஒதுக்கப்பட்டதா இல்லையா என்பதை அறியும் அளவுக்கு கெர்னலுக்கு சிறப்புத் திறனுள்ளது.

தற்கால இயக்க முறைமைகளில், அடிக்கடிப் பயன்படுத்தப்படாத பயன்பாட்டு நினைவகத்தை, தற்காலிகமாக வட்டுகளிலோ அல்லது மற்ற ஊடகங்களிலோ சேமித்துவைத்து, அந்த இடத்தை மற்ற நிரல்களின் பயன்பாட்டிற்குக் கிடைக்குமாறு செய்ய முடிகிறது. ஒரு நினைவகப் பரப்பை, பல நிரல்கள் பயன்படுத்த முடிவதாலும் மற்றும் அந்த நினைவகப் பரப்பிலுள்ளதை தேவைப்படும் போது மாற்றவோ பரிமாற்றம் செய்துகொள்ள முடிவதாலும், இதனை பரிமாற்றம் என்கிறோம்.

மேலும் தகவல்களுக்கு: Page fault

பல்பணித் திறன்[தொகு]

பல்பணித் திறன் என்பது பல தனித்தனி கணினி நிரல்கள் ஒரே கணினியில் இயங்குவதைக் குறிக்கிறது, இது கணினியானது ஒரே நேரத்தில் பல பணிகளைச் செய்வது போன்ற தோற்றத்தைக் கொடுக்கிறது. பெரும்பாலான கணினிகள் ஒரே நேரத்தில் ஒன்று அல்லது இரண்டு செயல்களைச் செய்ய முடிவதால், இது பொதுவாக நேரப் பகிர்வின் மூலமே செய்யப்படுகின்றது, அதாவது ஒவ்வொறு நிரலும் தன் செயலை நிறைவேற்றுவதற்கு கணினியின் பகிரப்பட்ட நேரத்தைப் பயன்படுத்துகின்றன.

ஓர் இயக்க முறைமை கெர்னலானது, முன்குறிப்பீட்டி என்னும் மென்பொருள் கூறைக் கொண்டுள்ளது, இது ஒவ்வொரு நிரலும் தன் செயலைச் செய்ய எவ்வளவு நேரத்தை எடுத்துக்கொள்ளலாம் என்பதையும் செயல் கட்டுப்பாட்டை எந்த வரிசையில் நிரல்களுக்கு அனுப்ப வேண்டும் என்பதையும் நிர்ணயிக்கிறது. கட்டுப்பாடானது கெர்னலின் ஒரு செயலாக்கத்திற்கு அனுப்பப்படுகிறது, அந்தச் செயலாக்கத்தினால் நிரலானது, CPU மற்றும் நினைவகத்தை அணுக முடிகிறது. சிறிது நேரத்திற்குப் பின்னர், சில இயங்கமைவு மூலம் கட்டுப்பாடானது கெர்னலுக்கு திரும்பக் கிடைக்கிறது, இதனால் மற்றொரு நிரல் CPU ஐ பயன்படுத்த அனுமதிக்கப்படலாம். இவ்வாறு கட்டுப்பாடானது, கெர்னலுக்கும் பயன்பாட்டிற்கும் இடையே கட்டுப்பாட்டை அனுப்புவதையே சூழல் மாற்றம் என்று கூறுகிறோம்.

நிரல்களுக்கு ஒதுக்கப்படும் நேரத்தைக் கட்டுப்படுத்திய தொடக்ககால முறை, ஒருங்கிணைந்த பல்பணித் திறன் எனப்பட்டது. இந்த முறையில், கெர்னலானது கட்டுப்பாட்டை ஒரு நிரலுக்கு அனுப்பும் போது, இந்தக்கட்டுப்பாடு முழுவதுமாக கெர்னலுக்கு திரும்பி வழங்கப்படும் வரை அந்த நிரலே கட்டுப்பாட்டைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, தீங்கிழைக்கும் அல்லது தீங்குச் செயல் செய்யும் நிரலானது, மற்ற நிரல்கள் CPU வைப் பயன்படுத்துவதைத் தடுப்பது மட்டுமன்றி, ஒரு முடிவிலா சுழற்சியில் நுழையும் பட்சத்தில், கணினியை முழுவதுமாகவே பாதிக்கக் கூடும்.

முன்னொதுக்கப்பட்ட பல்பணித் திறனின் தத்துவம், எல்லா நிரல்களும் CPU இன் நேரத்தில் ஒழுங்கான இடைவெளிகளில் அனுப்பப்படுவதை உறுதி செய்வதாகும். இதிலிருந்து அனைத்து நிரல்களும், எந்த ஒரு குறுக்கீடுமின்றி எவ்வளவு நேரம் CPU இல் எடுத்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்பது கண்டிப்பாக வரம்புக்குட்பட்டிருக்க வேண்டும். இதனை நிறைவேற்ற, தற்கால இயக்க முறைமை கெர்னல்கள் ஒரு நேரக் குறுக்கீட்டைப் பயன்படுத்துகின்றன. கெர்னலானது ஒரு பாதுகாக்கப்பட்ட பயன்முறை நேரக் கண்காணிப்பை அமைத்து, ஒதுக்கப்பட்ட நேரம் கழிந்ததும் அது மேற்பார்வை பயன்முறைக்குத் திரும்பத் தூண்டுகிறது. (மேலேயுள்ள குறுக்கீடுகள் மற்றும் இரட்டைப் பயன்முறை செயலாக்கம் ஆகிய பகுதிகளைக் காண்க.)

உதாரணமாக, வீட்டில் பயன்படுத்தும் கணினிகள் நன்கு சோதிக்கப்பட்ட குறைவான எண்ணிக்கை நிரல்களை மட்டுமே பயன்படுத்துவதால், பல தனிப் பயனர் இயக்க முறைமைகளில் ஒருங்கிணைந்த பல்பணித் திறன் போதுமான அளவு உள்ளது. மைக்ரோசாப்ட் விண்டோசு இன் வின்டோஸ் என்டி இயக்க முறைமையே முன்னொதுக்கப்பட்ட பல்பணித் திறனைச் செயல்படுத்திய முதல் பதிப்பாகும், ஆனால் (வின்டோஸ் என்டி, தொழில் வல்லுனர்களையே இலக்காகக் கொண்டதால்) விண்டோசு எக்சு. பி. வெளியிடப்படும் வரை இது வீட்டில் கணினியைப் பயன்படுத்தும் பயனர்களை வெகுவாகச் சென்றடையவில்லை.

மேலும் தகவல்களுக்கு: Context switch
மேலும் தகவல்களுக்கு: Preemptive multitasking
மேலும் தகவல்களுக்கு: Cooperative multitasking

கெர்னல் முன்னொதுக்கம்[தொகு]

சில கெர்னல்களின் நீண்ட காலதாமதத்தினால் சமீபத்திய ஆண்டுகளில் அதைப் பற்றிய அக்கறை எழுந்துள்ளது, மோனோலித்திக் கெர்னல்களைக் கொண்டுள்ள கணினிகளில் சில நேரங்களில் 100மில்லி செகண்ட் அல்லது அதற்கு மேலும் கால தாமதம் காணப்பட்டது. இத்தகைய காலதாமதங்களால் மேசைக் கணினிகளில் அடிக்கடி குறிப்பிடத்தக்க அளவு மந்தத்தன்மையை ஏற்படுத்துகின்றன, மேலும் இது கால உணர்த்திறன் கொண்ட (அதாவது ஒலிப்பதிவு மற்றும் செய்தித்தொடர்புகள் போன்ற) செயல்பாடுகளைச் செய்ய முடியாமல் இயக்க முறைமைகளைத் தடுக்கவும் முடியும்.[19]

தற்கால இயக்க முறைமைகளானது, சாதன இயக்கிகளுக்கும் கெர்னல் குறியீடுகளுக்குமான பயன்பாட்டு முன்னொதுக்கல் கோட்பாடுகளை நீட்டிக்கின்றன, இதனால் இயக்க முறைமையானது உள்ளீடு நிகழ்நேரங்களுக்கான முன்னொதுக்கப்பட்ட கட்டுப்பாட்டையும் கொண்டிருக்கின்றது. விண்டோஸ் விஸ்டா இல், Windows காட்சி இயக்கி மாடல் (WDDM) அம்சத்தின் அறிமுகத்தில், இவ்வகை முன்னொதுக்கம் காட்சி இயக்கிகளில் செயல்படுத்தப்பட்டது, Linux இல் முன்னொதுக்கப்பட்ட கெர்னல் வகை, பதிப்பு 2.6 இல் அறிமுகப்படுத்தப்பட்டது, அதில் அனைத்து சாதன இயக்கிகள் மற்றும் கெர்னல் குறியீடின் மற்ற பகுதிகளும் முன்னொதுக்கப்பட்ட பல்பணித் திறனைப் பயன்படுத்த முடிந்தது.

Windows இன் விண்டோஸ் விஸ்டா க்கு முந்தைய இயக்க முறைமைகள் மற்றும் Linux இன் பதிப்பு 2.6 க்கு முந்தைய இயக்க முறைமைகளில் அனைத்து இயக்கி செயல்படுத்தலும் கூட்டியக்கமே, அதாவது ஓர் இயக்கியானது ஒரு முடிவிலா சுழற்சியில் நுழையும்பொழுது, அது கணினியைச் செயலிழக்கச் செய்கிறது.

வட்டு அணுகல் மற்றும் கோப்பமைப்புகள்[தொகு]

வட்டுகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தரவை அணுகுதல், எல்லா இயக்க முறைமைகளிலும் ஒரு முக்கிய அம்சமாகும். கணினிகள் தரவை, கோப்புகளைப் பயன்படுத்தி வட்டுகளில் சேமிக்கின்றன, இந்தக் கோப்புகள் வேகமான அணுகல், சிறந்த நம்பகத்தன்மை போன்ற தேவைகளுக்காகவும் வட்டின் இடத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளவும் அனுமதிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. கோப்புகள் வட்டுகளில் சேமித்து வைக்கப்படும் குறிப்பிட்ட முறையை கோப்பமைப்பு என்று அழைக்கிறோம், இந்த் அமைப்பே கோப்புகள் பெயர்களையும் கொண்டிருக்கச் செய்கிறது. மேலும், இது கோப்பக அமைப்புகளில் வரிசையில் அமைக்கப்பட்ட கோப்பகங்கள் அல்லது கோப்புறைகளின் வரிசைப்படி கோப்புகளை சேகரித்து வைக்க உதவுகின்றன.

தொடக்ககால இயக்க முறைமைகள் பொதுவாக ஒரே ஒரு வகையான வட்டு இயக்ககம் மற்றும் ஒரே ஒரு வகை கோப்பமைப்பினை மட்டுமே ஆதரித்தன. தொடக்ககால கோப்பமைப்புகள், அவற்றின் கொள்ளளவு, வேகம் மற்றும் கோப்புப் பெயர் வகைகள் மற்றும் அவற்றைப் பயன்படுத்தக் கூடிய கோப்பகக் கட்டமைப்புகள் ஆகிய பல அம்சங்களில் வரம்புக்குட்பட்டவையாகவே இருந்தன. இந்தக் குறைபாடுகள் அவற்றுக்காக வடிவமைக்கப்பட்ட இயக்க முறைமைகளையும் பாதித்தது, இதனால் ஓர் இயக்க முறைமையானது ஒன்றுக்கு மேற்ப்பட்ட கோப்பமைப்பை ஆதரிப்பது கடினமானது.

பல எளிய இயக்க முறைமைகள், சேமிப்பு அமைப்புகளை அணுகுவதற்கு மிகக் குறைவான வழிமுறைகளைக் கொண்டிருந்த வேளையில், யுனிக்சு மற்றும் Linux போன்ற இயக்க முறைமைகள் கற்பனைக் கோப்பமைப்பு அல்லது VFS என்னும் தொழில்நுட்பத்தை ஆதரிக்கின்றன. UNIX போன்ற இயக்க முறைமைகள் பெரும்பாலான சேமிப்பு சாதனங்களை ஆதரிக்கின்றன, அவற்றின் வடிவமைப்பு அல்லது பொதுவான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தின் (API) மூலம் அணுகக்கூடிய கோப்பு அமைப்புகளைப் பொருட்படுத்துவதில்லை. இதனால், நிரல்கள் அவை அணுகுகின்ற சாதனத்தைப் பற்றி அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. VFS கோப்பமைப்பு, நிரல்களுக்கு அவற்றில் நிறுவப்பட்டுள்ள எண்ணற்ற வகையான கோப்பமைப்புகளைச் சார்ந்த எண்ணற்ற சாதனங்களை, தனிப்பட்ட சாதன இயக்கிகள் மற்றும் கோப்பமைப்பு இயக்கிகள் மூலமாக அணுகக்கூடிய அணுகலை வழங்க இயக்க முறைமையை அனுமதிக்கிறது.

வட்டியக்ககம் போன்ற ஓர் இணைக்கப்பட்ட சேமிப்பு சாதனமானது, சாதன இயக்கி மூலம் அணுகப்படுகிறது. சாதன இயக்கியானது, இயக்ககத்தின் தனிப்பட்ட மொழியைப் புரிந்துக்கொள்கிறது, மேலும் இதனால் அந்த மொழியை, அனைத்து வட்டு இயக்ககத்தை அணுகுவதற்கு இயக்க முறைமையால் பயன்படுத்தப்படுகின்ற பொதுவான மொழிக்கு மொழிப்பெயர்க்கவும் முடியும். UNIX ல் இது தொகுப்பு சாதனங்களின் மொழி எனப்படுகிறது.

கெர்னலானது, அதனிடம் பொருத்தமானச் சாதன இயக்கியைக் கொண்டிருக்கும்பொழுது, அதனால் வட்டு இயக்ககத்திலுள்ள தகவல்களை மூல வடிவமைப்பிலேயே அணுக முடியும், ஒரு கோப்பமைப்பு இயக்கியானது, ஒவ்வொரு குறிப்பிட்ட கோப்பமைப்பினையும் அணுகுவதற்கு பயன்படும் கட்டளைகளை, இயக்க முறைமையால் அனைத்துக் கோப்பமைப்புகளோடும் பேசப் பயன்படுத்தக் கூடிய பொதுவான கட்டளைத் தொகுப்பாக மொழிப்பெயர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. பின்பு நிரல்கள் ஒரு வரிசைக் கட்டமைப்பிற்குள் அடங்கியுள்ள கோப்புப் பெயர்கள், தகவல் கோப்பகங்கள்/கோப்புறைகள் ஆகியவற்றைப் பொறுத்து, கோப்பமைப்புகளை அணுக முடியும். இவை கோப்புகளை உருவாக்கவும் நீக்கவும் திறக்கவும் மற்றும் மூடவும் முடியும், அதுமட்டுமன்றி அவற்றின் (அணுகல் அனுமதிகள், அளவு, காலியிடம் மற்றும் உருவாக்கம் மற்றும் மாற்றம் செய்த தேதி போன்ற) பல்வேறு தகவல்களைச் சேகரிக்கவும் முடியும்.

கோப்பமைப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகள், அனைத்துக் கோப்பமைப்புகளையும் ஆதரிப்பதைக் கடினமாக்குகின்றன. கோப்புப் பெயர்களில் அனுமதிக்கப்படும் எழுத்துக்குறிகள், பேரெழுத்துணர்த் தன்மை மற்றும் பல்வேறு வகையான கோப்புப் பண்புருக்கள் ஆகியவை, எல்லாக் கோப்பமைப்புகளுக்குமான ஒரே இடைமுகத்தை உருவாக்கும் பணியை மிகவும் கடுமையாக்கின. இயக்க முறைமைகள், அவற்றுக்கென்றே வடிவமைக்கப்பட்ட கோப்பமைப்புகளைப் பயன்படுத்துவதையே பரிந்துரைக்கின்றன (இயல்பாக ஆதரிக்கவும் செய்கின்றன); எடுத்துக்காட்டாக, Windows இல் என்.ரி.எப்.எசு மற்றும் Linux இல் ext3 மற்றும் ReiserFS ஆகிய கோப்பமைப்புகள். இருப்பினும், நடைமுறையில் பெரும்பாலும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் இயக்க முறைமைகளில், மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்ற கோப்பமைப்புகளை ஆதரிப்பதற்கான மூன்றாம் தரப்பு இயக்கிகள் கிடைக்கின்றன(எடுத்துக்காட்டுக்கு, Linux இல் NTFS-3g மூலமாக NTFS அமைப்பை அணுக முடியும் மற்றும் Windows இல் FS-driver மற்றும் rfstool ஆகியவற்றின் மூலம் ext2/3 மற்றும் ReiserFS ஆகிய அமைப்புகளை அணுக முடியும்).

சாதன இயக்கிகள்[தொகு]

ஒரு சாதன இயக்கி என்பது, வன்பொருள் சாதனங்களுடனான தொடர்புகளை அனுமதிப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வகை கணினி மென்பொருளாகும். குறிப்பாக இது, வன்பொருள் இணைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட கணினி பஸ் அல்லது தகவல்தொடர்புத் துணை முறைமை மூலம் சாதனத்துடன் தொடர்புகொள்வதற்கான ஓர் இடைமுகத்தை வழங்குகிறது, இது சாதனத்திற்கு தரவை அனுப்ப மற்றும்/அல்லது பெற கட்டளைகளை வழங்குகிறது, மேலும் இது இயக்க முறைமை மற்றும் மென்பொருள் பயன்பாடுகளுக்குத் தேவையான இடைமுகத்தையும் வழங்குகிறது. இது ஒரு சிறப்பான வன்பொருள் சார்ந்த மற்றும் இயக்க முறைமையைச் சார்ந்த கணினி நிரலும் ஆகும், இது மற்றொரு நிரலை, குறிப்பாக ஒரு இயக்க முறைமை அல்லது பயன்பாட்டு மென்பொருள் தொகுப்பு அல்லது இயக்க முறைமை கெர்னலின் கீழ் இயங்குகின்ற கணினி நிரலை வன்பொருள் சாதனத்துடன் வெளிப்படையாக தொடர்புகொள்ள உதவுகிறது, மேலும் இது ஏதேனும் தேவையான ஒத்திசைவற்ற நேரம் சார்ந்த வன்பொருள் இடைமுகத் தேவைகளுக்குத் தேவையான குறுக்கீட்டுக் கையாளுதல் அம்சத்தையும் வழங்குகிறது.

சாதன இயக்கிகளின் வடிவமைப்பின் உண்மையான நோக்கமானது பிரித்தெடுத்தலே ஆகும்.வன்பொருளின் ஒவ்வொரு வகையும் (ஒரே வகையைச் சேர்ந்த சாதனங்களில் கூட) வேறுபடுகின்றன. மேலும் நம்பகத்தன்மை வாய்ந்த அல்லது மேலும் சிறப்பு செயல்திறன் கொண்ட புதிய வகைகளையும் உற்பத்தியாளர்கள் வெளியிடுகின்றனர், அவையும் வெவ்வேறு வகையிலேயே கட்டுப்பட்டுத்தப்படுகின்றதற்போதும் சரி எதிர்காலத்திலும் சரி, கணினிகளும் அதன் இயக்க முறைமைகளும் ஒவ்வொரு சாதனத்தையும் எவ்வாறு கட்டுப்படுத்துவது என அறிந்திருக்கும் என எதிர்ப்பார்க்க முடியாது. இந்தச் சிக்கலை சரிசெய்வதற்காக, OSகள் எவ்வாறு ஒவ்வொரு வகையான சாதனத்தையும் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை முக்கியமாக எடுத்துரைக்கின்றது. பின்பு சாதன இயக்கியானது, இத்தகைய OS ஆணையிட்ட சார்பு அழைப்புகளை, குறிப்பிட்ட சாதன அழைப்புகளாக மொழிபெயர்க்கின்றன. கோட்பாட்டின்படி புதிய முறைகளால் கையாளப்படுகின்ற ஒரு புதிய சாதனம், சரியான இயக்கி இருக்கும் பட்சத்தில் சரியாகச் செயல்பட வேண்டும். இந்தப் புதிய இயக்கியானது, இந்தச் சாதனம் இயக்க முறைமையைப் பொறுத்தவரை வழக்கமான ஒன்றாகத் தோன்றும் மற்றும் செயல்படும் என உறுதியளிக்கிறது.

நெட்வொர்க்கிங்[தொகு]

தற்போது பெரும்பாலான இயக்க முறைமைகள் பல்வேறு வகையான நெட்வொர்க்கிங் நெறிமுறைகள், வன்பொருள் மற்றும் பயன்பாடுகளை ஆதரிக்கின்றன. அதாவது வெவ்வேறு வகையான இயக்க முறைமைகளில் இயங்கும் கணினிகளை, கம்ப்யூட்டிங், கோப்புகள், அச்சுப்பொறிகள் மற்றும் ஸ்கேனர்கள் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள, கம்பியுள்ள அல்லது கம்பியிலா இணைப்புகளின் மூலம் ஒரு பொதுவான நெட்வொர்க்கில் பயன்படுத்த முடியும். நெட்வொர்க்குகளைப் பயன்படுத்தும்போது, ஒரு கணினியின் இயக்க முறைமை அதற்குரிய கணினியில் உள்ளவற்றை அணுகும்போது பெற்றுள்ள அதே செயல்பாடுகளுடன் தொலைவிலுள்ள கணினியிலுள்ளவற்றையும் அணுக முடியும். எளிய தகவல்தொடர்பு முதல் நெட்வொர்க் கோப்பமைப்புகள் வரை இந்தப் பகிர்வில் உள்ளடங்கும், அதுமட்டுமன்றி மற்றொரு கணினியின் வரைவியல் அல்லது ஒலி வன்பொருளையும் பகிர்ந்துகொள்ள முடியும். பயனர்கள் ஒரு கணினியின் கட்டளை வரி இடைமுகத்தை நேரடியாக அணுக அனுமதிக்கும் SSH போன்ற சில நெட்வொர்க் சேவைகள், எந்தத் தடையுமின்றி பயனர்கள் ஒரு கணினியின் வளங்களை அணுக அனுமதிக்கின்றன.

கிளையண்ட்/சேவையக நெட்வொர்க்கிங் என்பது ஒரு கணினியின் ஒரு நிரல் சேவையகம் எனப்படும் கணினியிலுள்ள நெட்வொர்க்கைப் பயன்படுத்தி மற்றொரு கணினியுடன் இணைப்பது போன்ற அம்சங்கள் கொண்டது. யுனிக்சு அல்லது Linux ஐ இயக்கும் சேவையகங்கள், பிற நெட்வொர்க் கணினிகள் மற்றும் பயனர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகின்றன (அல்லது ஹோஸ்ட் செய்கின்றன). இவ்வகைச் சேவைகள் பொதுவாக சேவையகத்தின் நெட்வொர்க் முகவரிக்குப் பின்னுள்ள, போர்ட்டுகள் அல்லது எண்ணிடப்பட்ட அணுகல் புள்ளிகள் வழியாக வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு போர்ட் எண்ணும் பொதுவாக அந்தப் போர்ட்டுக்கான கோரிக்கைகளைக் கையாளும், அதிகபட்சம் ஒரு இயங்கும் நிரலுடன் இணைக்கப்பட்டிருக்கும். பயனர் நிரலான டீமனும் இயக்க முறைமை கெர்னலுக்கு கோரிக்கைகளை அனுப்பி கணினியின் வன்பொருள் வளங்களையும் அணுக முடியும்.

பல இயக்க முறைமைகள் ஒன்று அல்லது மேற்பட்ட விற்பனையாளரைப் பொறுத்த அல்லது ஓப்பன் நெட்வொர்க் நெறிமுறைகளை ஆதரிக்கின்றன. ஐபிஎம் கணினிகளில் SNA, டிஜிட்டல் எக்யூப்மெண்ட் கார்ப்பரேசனின் DECnet மற்றும் Windows இல் Microsoft ஐ சேர்ந்த நெறிமுறைகள் (SMB) ஆகியவை இதற்கான எடுத்துக்காட்டுகளாகும். குறிப்பிட்ட பணிக்கான குறிப்பிட்ட நெறிமுறைகளும் ஆதரிக்கப்படுகின்றன, எடுத்துக்காட்டுக்கு கோப்பு அணுகலுக்கான NFS நெறிமுறை. ESound போன்ற நெறிமுறைகள் அல்லது esd ஆகியவை, நெட்வொர்க்கைப் பயன்படுத்தி ஒரு கணினியிலுள்ள பயன்பாட்டிலிருந்து தொலைவிலுள்ள கணினியின் வன்பொருளில் இயங்கச்செய்ய ஒலியை அனுப்ப முடியும்.

பாதுகாப்பு[தொகு]

ஒரு கணினி, பாதுகாப்பாக இருப்பது என்பது சரியாக இயங்கும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பொறுத்துள்ளது. தற்கால இயக்க முறைமைகள் பல வளங்களுக்கு அணுகலை வழங்குகின்றன, அவற்றை இயங்கிக்கொண்டிருக்கும் மென்பொருளும், கெர்னெல் வழியாக நெட்வொர்க் போன்ற புறச் சாதனங்களும் பயன்படுத்திக்கொள்ள முடிகிறது.

தனக்கு வரும் கோரிக்கைகளில் எவற்றைச் செயல்படுத்த வேண்டும் மற்றும் எவற்றைச் செயல்படுத்தக் கூடாது என வேறுபடுத்தி அறியும் திறன் ஒரு இயக்க முறைமைக்கு இருக்க வேண்டும். பொதுவாக கணினிகள் பயனர் பெயர் போன்ற கோருபவர் அடையாளத்தைக் கொண்டுள்ளன, சில இயக்க முறைமைகள் எளிதாக "அனுமதிக்கப்பட்ட" மற்றும் "அனுமதிக்கப்படாத" என இரண்டு விதமாகப் பிரித்தறியும் திறன் கொண்டவை. அடையாளத்தை உறுதிப்படுத்த அங்கீகரிப்புச் செயலாக்கம் இருக்கலாம். பெரும்பாலும் ஒரு பயனர் பெயர் என்பது மேற்கோள் குறிக்குள் இருக்க வேண்டும் மற்றும் ஒவ்வொரு பயனர் பெயருக்கும் ஒரு கடவுச்சொல் இருக்க வேண்டும். மாறாக, காந்தக் கார்டுகள் அல்லது உடலியலளவுத் தரவு போன்ற அங்கீகரிப்பு முறைகளும் பயன்படுத்தப்படலாம். சிலவற்றில் குறிப்பாக நெட்வொர்க்கிலிருந்து இணைப்புகள் உள்ளபட்சத்தில், எந்த அங்கீகரிப்புமின்றி வளங்களை அணுக முடியும் (நெட்வொர்க் பகிர்விலுள்ள கோப்பைப் படிப்பது இதைப் போன்றதே). மேலும் இவை கோருபவர் அடையாளமும் அங்கீகரிப்பேயாகும் என்ற கருத்துப்படியும் செயல்படும்; ஒரு பயனர் கணினியில் உள்நுழைந்துவிட்டால் குறிப்பிட்ட சேவைகளும் வளங்களும் அவரால் அணுக முடியும் மேலும் அவை கோருபவரின் கணக்குடனோ அல்லது கோருபவர் சார்ந்துள்ள பல்வேறு உள்ளமைக்கப்பட்ட பயனர்களின் குழுக்களுடனோ இணைக்கப்பட்டுள்ளது.

உயர்மட்டப் பாதுகாப்புள்ள கணினிகள், அனுமதி/நிராகரி என்ற விதமான பாதுகாப்பு மாதிரிகள் மட்டுமின்றி தணிக்கை விருப்பங்களையும் வழங்குகின்றன. இவை வளங்களை அணுகுவதற்கான கோரிக்கைகளைக் ("இந்தக் கோப்பை யார் படித்துக்கொண்டிருந்தது?" என்பது போன்ற) கண்காணிக்கும் வசதியையும் கொண்டுள்ளன. தீங்கிழைக்கும் வாய்ப்புள்ள எல்லாக் கோரிக்கைகளும் குறுக்கீடுகள் வழியாக இயக்க முறைமையின் கெர்னலை அடைந்தால் மட்டுமே, அகப் பாதுகாப்பு அல்லது முன்பே இயங்கிக்கொண்டிருக்கும் ஒரு நிரலிடமிருந்து பாதுகாப்பு ஆகியவை சாத்தியம். வன்பொருளையும் வளங்களையும் நிரல்கள் நேரடியாக அணுக முடியும்பட்சத்தில் அவை பாதுகாப்பாக இருக்க முடியாது.

புறப்பாதுகாப்பு இணைக்கப்பட்ட கன்சோலிலிருந்து அல்லது நெட்வொர்க் இணைப்பு போன்றவற்றின் வழியே உள்நுழைதல் போன்ற கணினிக்கு வெளிப்புறமிருந்து வரும் கோரிக்கைகள் தொடர்பானது. பெரும்பாலும் புறக்கோரிக்கைகள் சாதன இயக்கிகள் மூலமாக இயக்க முறைமையின் கெர்னலுக்கு அனுப்பப்படுகின்றன, அங்கிருந்து அவை பயன்பாடுகளுக்கு அனுப்பப்படலாம் அல்லது நேரடியாக செயல்படுத்தப்படலாம். கணினிகளில் வணிக ரீதியான தகவல்கள் மற்றும் இராணுவம் தொடர்பான தகவல்கள் போன்ற முக்கியத் தரவு சேமிக்கப்படுவதால் இயக்க முறைமைகளின் பாதுகாப்பு குறித்து நீண்டகாலமாகவே அக்கறை செலுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்க அரசின் பாதுகாப்புத் துறை (DoD), நம்பத்தகுந்த கணினி அமைப்பு மதிப்பீட்டுத் தேர்வளவையை (TCSEC) உருவாக்கியது, இது பாதுகாப்பின் செயல்திறனை மதிப்பீடு செய்வதற்கான அடிப்படைத் தேவைகளை அமைக்கும் தரநிலையாகும். இயக்க முறைமை உருவாக்குபவர்களுக்கு இது மிக முக்கியமானது, ஏனெனில் செயலாக்கம், சேமிப்பு மற்றும் நுண்ணிய மற்றும் வகைப்படுத்தப்பட்ட தகவல் மீட்பு போன்ற தேவைகளின் அடிப்படையில் கணினிகளை மதிப்பீடு செய்யவும் வகைப்படுத்தவும் மற்றும் தேர்ந்தெடுக்கவும் TCSEC தரநிலையே பயன்படுத்தப்பட்டது.

கோப்புப் பகிர்தல், அச்சு சேவைகள், மின்னஞ்சல், வலைத்தளங்கள் மற்றும் கோப்புப் பரிமாற்ற நெறிமுறைகள் (FTP) போன்ற பல வசதிகளை நெட்வொர்க் சேவைகள் வழங்குகின்றன, இவற்றில் பெரும்பாலானவை முழுமையான பாதுகாப்பற்றவை. தீஞ்சுவர்கள் போன்ற வன்பொருள் அல்லது ஊடுருவல் கண்டறிதல்/தடுத்தல் முறைமைகள் ஆகியவையே பாதுகாப்பதில் முன்னிற்பவை. இயக்க முறைமையின் அளவில் பல தீஞ்சுவர் மென்பொருளும் அதேபோல ஊடுருவல் கண்டறிதல்/தடுத்தல் முறைமைகளும் கிடைக்கின்றன. தற்கால இயக்க முறைமைகளில் பெரும்பாலானவை மென்பொருள் தீஞ்சுவரைக் கொண்டுள்ளன, மேலும் அவை இயல்பாகவே செயல்படுத்தப்பட்டுள்ளன. ஓர் இயக்க முறைமையில் இயங்கும் குறிப்பிட்ட சேவை அல்லது பயன்பாட்டிலிருந்து வெளிச்செல்லும் அல்லது உள்வரும் நெட்வொர்க் போக்குவரத்தை அனுமதிக்கும்படியோ நிராகரிக்கும்படியோ ஒரு மென்பொருள் தீஞ்சுவரை உள்ளமைக்க முடியும். இதனால், பாதுகாப்பு குறித்த அச்சமேதும் இன்றி ஒருவர் Telnet அல்லது FTP போன்ற பாதுகாப்பற்ற சேவையை நிறுவி இயக்கலாம், ஏனெனில் அந்தப் போர்ட்டிலிருக்கும் சேவையுடன் இணைய முயற்சிக்கும் எல்லாப் போக்குவரத்தையும் தீஞ்சுவர் நிராகரித்துவிடும்.

போபெக் மற்றும் கோல்ட்பெர்க் நடைமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யாத கணினிகளில், இயக்க முறைமையானது பயனரின் நிரல்களை சொந்தக் குறியீடாக இயக்காமல் செயலியைப் போலப் பாவிக்கிறது அல்லது Java போன்ற p-குறியீடு அடிப்படையிலான முறைமைகளை ஹோஸ்ட் செய்கிறது. இதுவே அவற்றுக்கான மாற்று முறையும் சேண்ட்பாக்ஸ் உத்தியுமாகும்.

அகப்பாதுகாப்பு என்பது குறிப்பாக, பலர் பயன்படுத்தும் கணினிகளுக்கானது; அது ஒரு கணினியின் ஒவ்வொரு பயனரும் தனித்தனி கோப்புகளைக் கொண்டிருக்க அனுமதிக்கிறது, மேலும் ஒருவரின் கோப்புகளைப் பிற பயனர்கள் படிக்கவோ பாதிக்கவோ முடியாது. ஒரு நிரல் இயக்க முறைமையைப் புறக்கணித்துச் செயல்பட வாய்ப்புள்ளது என்றபட்சத்தில், தணிக்கையானது எந்த விதமான பயன்பாட்டுக்காகவும் இருக்கலாம் எனில், அகப்பாதுகாப்பும் மிக முக்கியம்.

எடுத்துக்காட்டு: Microsoft Windows[தொகு]

Windows 9x வரிசைத் தயாரிப்புகள், பல பயனர்கள் அவர்களுக்கென தனித்தனி பயன்வகைகளைக் கொண்டிருக்கும் வசதியை வழங்கின, ஆனால் அவற்றில் அணுகல் அனுமதிகள் என்ற கருத்து இல்லை, மேலும் அவை ஒரே நேரத்தில் பல அணுகல்களை அனுமதிக்கவில்லை; இதனால் அவற்றை உண்மையான பல பயனர் இயக்க முறைமைகள் என அழைக்க முடியாது. மேலும், அவற்றில் பகுதியளவு நினைவகப் பாதுகாப்பே செயல்படுத்தப்பட்டிருந்தது. அதனால் அவை பாதுகாப்பில் தரமற்றவை எனப் பரவலாக விமர்சிக்கப்பட்டன.

மாறாக, வின்டோஸ் என்டி வரிசை இயக்க முறைமைகள் உண்மையிலேயே பல பயனர் முறைமைகளாக விளங்கின, மேலும் சரியான நினைவகப் பாதுகாப்பையும் கொண்டிருந்தன. இருப்பினும், பல பயனர் இயக்க முறைமையாக விளங்கியதன் பல சிறப்புகளும் ஒரே உண்மையின் காரணமாக செல்லாததாகிவிட்டன, விண்டோஸ் விஸ்டா க்கு முன்பு வரை வெளிவந்த அனைத்திலும், அமைவுச் செயலின் போது உருவாக்கப்படும் முதல் பயனர் கணக்கு நிர்வாகிக் கணக்காகவே இருக்கும், அதுமட்டுமன்றி அதன் பின் உருவாக்கப்படும் அனைத்துக் கணக்குகளுமே இயல்பாக நிர்வாகிக் கணக்காகவே அமையும் என்பதே அது. விண்டோசு எக்சு. பி. இயக்க முறைமையில் வரம்புக்குட்பட்ட கணக்குகள் மட்டுமே இருந்தாலும், இல்லப் பயனர்களில் பெரும்பாலானோர் குறைவான உரிமைகள் கொண்ட வேறு கணக்கு வகைக்கு மாறவில்லை, பல நிரல்கள் தேவையின்றி நிர்வாகி உரிமைகளைக் கோரியதே இதற்கு ஒரு காரணம். இதனால் பெரும்பாலான இல்லப் பயனர்கள் தங்கள் கணினியை எப்போதும் நிர்வாகியாகவே இயக்கினர்.

பயனர் கணக்குக் கட்டுப்பாடு எனும் உரிமை வரிசை முறையை அறிமுகப்படுத்தி, விண்டோஸ் விஸ்டா இதை மாற்றியது[4]. ஒரு பொதுவான பயனராக உள்நுழையும் போது, ஒரு உள்நுழைவு அமர்வு உருவாக்கப்படுகிறது மேலும் மிகவும் அடிப்படை உரிமைகளைக் கொண்டுள்ள டோக்கன் ஒன்று ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு ஒரு புதிய உள்நுழைவு அமர்வு, முழுக் கணினியையும் பாதிக்கக்கூடிய மாற்றங்களைச் செய்யும் திறனற்றது. நிர்வாகிகள் குழுவிலுள்ள ஒரு பயனராக உள்நுழையும்போது, இரண்டு தனித்தனி டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. முதல் டோக்கனுக்கு, ஒரு நிர்வாகிக்கான அனைத்து உரிமைகளும் ஒதுக்கப்படும், ஆனால் இரண்டாம் டோக்கனுக்கு ஒரு பொதுவான பயனருக்கான உரிமைகளே ஒதுக்கப்படும். அதன் பின்னர் Windows Shell உள்ளிட்ட பயனர் பயன்பாடுகள் நிர்வாகிக் கணக்கின் கீழ் இயக்கப்பட்டாலும், கட்டுப்படுத்தப்பட்ட உரிமைகளுடனே இயங்கும். ஒரு பயன்பாட்டுக்கு உயர் உரிமைகள் தேவைப்படும்போது அல்லது "நிர்வாகியாக இயக்கு" என்பது கிளிக் செய்யப்படும்போது, UAC ஆனது உறுதிப்படுத்தக் கேட்டு, அனுமதி வழங்கப்பட்டால் (உயர் உரிமை கேட்கும் கணக்கானது நிர்வாகிகள் குழுவில் இல்லாதபட்சத்தில் நிர்வாகி நற்சான்றுகளும் இந்த அனுமதிகளில் அடங்கும்), கட்டுப்படுத்தப்படாத டோக்கனைப் பயன்படுத்தி அந்தச் செயலைச் செய்யத் தொடங்கும்.[5]

எடுத்துக்காட்டு: லினக்சு/யுனிக்சு[தொகு]

Linux மற்றும் UNIX ஆகிய இரண்டு முறைமைகளும் இரண்டு அடுக்குப் பாதுகாப்பைக் கொண்டுள்ளன, இது UNIX ஐ ஒத்த அனைத்து முறைமைகளிலும் உள்ள ஒரு சிறப்புப் பயனர் கணக்கான மூலப் பயனர் கணக்குக்கு மட்டுமே கணினி ரீதியான மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கும். ஒரு மூலப் பயனருக்கு பெரும்பாலும் கணினியைப் பாதிக்கும் வகையிலான அனுமதிகள் வரையிலான வரம்பிலா அனுமதிகள் உள்ளன, ஆனால் வழக்கமான பயனராக இயக்கப்படும் நிரல்கள், கொப்புகளைச் சேமிக்கும் இடங்கள், எந்த வன்பொருளை அணுக முடியும் போன்ற பல அம்சங்களில் வரம்புக்குட்பட்ட அனுமதியுடையவை. பல முறைமைகளில் ஒரு பயனரின் நினைவகப் பயன்பாடு, கிடைக்கக்கூடிய நிரல்களில் அவர் பயன்படுத்தக் கூடியவற்றின் எண்ணிக்கை, அவர்களின் மொத்த வட்டுப் பயன்பாடு அல்லது ஒதுக்கீடு, நிரல்களின் முன்னுரிமைகள் அமைப்புகளில் அவர்களுக்குக் கிடைக்கக் கூடிய அம்சங்கள் மற்றும் பிற செயல்பாடுகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியும். இதனால், கணினியின் எந்தப் பகுதியையும் ஆபத்தில் சிக்க வைக்காமலும் (கணினி அளவிலான பிழைகளைத் தற்செயலாகத் தொடங்குவதைத் தடுக்கிறது) அல்லது கணினியிலுள்ளவை அழியும் ஆபத்தின்றியும் கணினி அளவிலான மாற்றங்கள் நிகழாமலும், பயனருக்கு தான் விரும்பும் வகையிலான செயல்களைச் செய்வதற்கான பெரும் சுதந்திரம் கிடைக்கிறது. பயனரின் அமைப்புகள் பயனரின் முகப்புக் கோப்புறை எனப்படும், கணினியின் தனிப் பகுதியில் சேமிக்கப்பட்டுள்ளன, இந்தப் பகுதியில் பயனர்கள் தங்கள் கோப்புகளைச் சேமித்துக்கொள்ளலாம் என்ற கருத்தே பின்னாளில் Windows ஆல் 'மை டாக்குமெண்ட்ஸ்' கோப்புறை என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டது. பயனர் தனது சொந்த கோப்புறைக்கு வெளியே ஏதேனும் மென்பொருளை நிறுவ விரும்பினால் அல்லது கணினி அளவிலான மாற்றங்கள் செய்ய விரும்பினால், அவர் தற்காலிகமாக மூலப் பயனராக வேண்டும், வழக்கமாக இதற்கு சூ அல்லது சூடோ கட்டளைகள் பயன்படுத்தப்படும், கேட்கப்படும் போது கணினியின் மூலக் கடவுச்சொல்லை வழங்கி இது பதிலளிக்கப்படுகிறது. சில கணினிகள் (Ubuntu மற்றும் அதன் வ்ழித்தோன்றல்கள்) மூலக் கடவுச்சொல்லுக்குப் பதில் பயனரின் வழக்கமான கடவுச்சொல்லைக் கொண்டே அங்கீகரிப்பைப் பெற்று, சூடோ கட்டளைகளைப் பயன்படுத்தி, நிரல்களை மூலப் பயனராக இயக்கும் வசதியைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அனுமதிக்கும்படி இயல்பாகவே உள்ளமைக்கப்படுகின்றன. ஒருவர் மூல அணுகலைப் பெறும் போது, இக் கட்டளைகளில் ஒன்று சில நேரங்களில் "மூலத்திற்குச் செல்" அல்லது "மூலத்தை அடை" எனவும் அழைக்கப்படுகிறது.

Linux இன் சூ/சூடோ அணுகலுக்கும் Vista இன் பயனர் கணக்குக் கட்டுப்பாட்டுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி மேலும் தகவலறிய, அனுமதி அங்கீகரிப்பு அம்சங்களின் ஒப்பீட்டைக் காண்க.

தற்கால இயக்க முறைமைகளில் கோப்பமைப்பு ஆதரவு[தொகு]

தற்கால இயக்க முறைமைகள் கோப்பமைப்புகளுக்கான ஆதரவில் மிகவும் வேறுபடுகின்றன, எனினும் பெரும்பாலும் அனைத்து இயக்க முறைமைகளாலும் ஆதரிக்கப்படும் கோப்பமைப்புகள் பல உள்ளன, மேலும் அவை அவ்வகைக் கோப்பு முறைமைகளுக்கான இயக்கிகளையும் கொண்டுள்ளன.

Solaris[தொகு]

(பெரும்பாலான இயக்க முறைமைகளைப் போல திறந்தநிலை தரநிலைகள் மற்றும்/அல்லது ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான) Solaris இயக்க முறைமையானது, UFS முறைமையை அதன் முதன்மைக் கோப்பு முறைமையாக பயன்படுத்துகிறது. 1998 க்கு முன்பு, Solaris UFS முறைமையில் பதிவு/எழுதுதல் வசதிகள் இல்லை, ஆனால் விரைவில் இந்த OS அவை மட்டுமின்றி இன்னும் பல அம்சங்களையும் பெற்றது.

சன் மைக்ரோசிஸ்டம்ஸின் Veritas (பதிவு) VxFS, QFS, மல்டிடெராபைட் ஆதரவு மற்றும் UFS அளவு மேலாண்மை உள்ளிட்ட UFS இன் மேம்பாடுகள் ஆகியவனவும் இந்த இயக்க முறைமையின் பகுதியாக சேர்க்கப்பட்டன, மேலும் (ஓப்பன் சோர்ஸ், தொகுக்கக் கூடிய, 128-பிட், சுருக்கக் கூடிய மற்றும் பிழைத்திருத்தும் வசதியுள்ள முறைமையான) ZFS கோப்பு முறைமையும் இதில் அடங்கும்.

தொடக்கத் திறனுள்ள Veritas VxFS செயல்பாடுகளை அனுமதிக்க Solaris இல் கெர்னெல் நீட்டிப்புகளும் சேர்க்கப்பட்டன. Solaris 7 இல் UFS முறைமைக்கான பதிவு அல்லது எழுதுதல் அம்சமும் சேர்க்கப்பட்டது. Solaris இன் Solaris 10, Solaris Express, OpenSolaris மற்றும் பிற ஓப்பன் சோர்ஸ் பதிப்புகள் பின்னாளில் தொடக்கத்திறனுள்ள ZFS முறைமையை ஆதரித்தன.

நிரப்புத்தன்மை, திறன் மற்றும்/அல்லது வெளியீடு ஆகியவற்றைச் சேர்க்கும் நோக்கத்திற்காக, ஒரு கோப்பு முறைமை பல சாதனங்களில் பயன்படுத்தப்படுவதை தர்க்க ரீதியான அளவு மேலாண்மை அனுமதிக்கிறது. Solaris இயக்க முறைமையில் Solaris Volume Manager (முன்பு Solstice DiskSuite என அழைக்கப்பட்டது) தொகுப்பும் உள்ளடங்கியது. Veritas தொகுதி நிர்வாகி ஆதரிக்கும் பல இயக்க முறைமைகளில் Solaris இயக்க முறைமையும் ஒன்றாகும். Solaris அடிப்படையிலான தற்கால இயக்க முறைமைகள் ZFS இல் தற்காலிக சேமிப்பகங்களை ஆதரிப்பதன் மூலம் அளவு மேலாண்மையின் அவசியத்தை முக்கியமென உணர்த்துகின்றன.

Linux[தொகு]

லினக்சு இன் பெரும்பாலான தயாரிப்புகள் ext2, ext3, ext4, ReiserFS, Reiser4, JFS, XFS, GFS, GFS2, OCFS, OCFS2 மற்றும் NILFS ஆகியவற்றில் சில அல்லது அனைத்துக் கோப்பமைப்புகளையும் ஆதரிக்கின்றன. ext2, ext3 மற்றும் ext4 எனப்படும் ext கோப்பு முறைமைகள் அசல் Linux கோப்பு அமைப்பை அடிப்படையாகக் கொண்டவை. மற்றவை யாவும், நிறுவனங்கள் தங்கள் தேவைக்காக உருவாக்கியவை, பொழுதுபோக்காக சிலர் உருவாக்கியவை அல்லது UNIX, Microsoft Windows மற்றும் பிற இயக்க முறைமைகளிலிருந்து உருவானவை ஆகும். Linux இயக்க முறைமையானது, XFS மற்றும் JFS ஆகிய கோப்பமைப்புகளை ஆதரிக்கிறது, மேலும் FAT (எம்எஸ்-டொஸ் கோப்பு முறைமை) மற்றும் மக்கின்டொஷ் இன் முதன்மைக் கோப்பு முறைமையான HFS ஆகிய கோப்பமைப்புகளையும் ஆதரிக்கிறது.

சமீபத்திய ஆண்டுகளில், Microsoft வின்டோஸ் என்டி இன் என்.ரி.எப்.எசு கோப்பமைப்புக்கான ஆதரவு லினக்சு இல் வழங்கப்பட்டது, மேலும் இப்போது அது பிற பழமையான யுனிக்சு கோப்பு முறைமைகளுக்கான ஆதரவைப் போலவே சிறப்பாக உள்ளது. ISO 9660 மற்றும் Universal Disk Format (UDF) ஆகிய CDகள், DVDகள் மற்றும் BluRay வட்டுகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் வழக்கமான கோப்பமைப்புகளும் ஆதரிக்கப்படுகின்றன. இந்தக் கோப்பமைப்புகளில் பெரும்பாலானவற்றில் Linux ஐ நிறுவ முடியும். பிற இயக்க முறைமைகள் போலன்றி, Linux மற்றும் UNIX ஆகியவை, கோப்பு முறைமை எதுவாக இருப்பினும் மற்றும் அது எந்த மீடியாவில் சேமிக்கப்பட்டிருந்தாலும், அதாவது அவை வட்டியக்ககத்திலோ, வட்டிலோ (CD,DVD...), ஒரு USB உபகரணத்திலோ அல்லது மற்றொரு கோப்பமைப்பில் உள்ள கோப்பிலோ இருந்தாலும் அவற்றை இயக்க அனுமதிக்கின்றன.

Microsoft Windows[தொகு]

மைக்ரோசாப்ட் விண்டோசு தற்போது NTFS மற்றும் FAT கோப்பமைப்புகளுடன் பிற கணினிகளிலிருந்து பகிரப்பட்ட நெட்வொர்க் கோப்பு அமைப்புகளையும் CDகள், இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகள் மற்றும் ப்ளூ-ரே போன்ற பிற ஆப்டிக்கல் வட்டுகளுக்குப் பயன்படுத்தப்படும் ISO 9660 மற்றும் UDF போன்ற கோப்பமைப்புகளையும் ஆதரிக்கிறது. Windows இல் ஒவ்வொரு கோப்பமைப்பும் குறிப்பிட்ட மீடியாவின் பயன்பாட்டிற்கு மட்டுமே என வரையறுக்கப்பட்டுள்ளது, எடுத்துக்காட்டாக CDகள் கண்டிப்பாக ISO 9660 அல்லது UDF ஐப் பயன்படுத்த வேண்டும், மேலும் விண்டோஸ் விஸ்டா வில் என்.ரி.எப்.எசு கோப்பமைப்பில் மட்டுமே இயக்க முறைமையை நிறுவ முடியும். Windows Embedded CE 6.0, Windows Vista Service Pack 1 மற்றும் வின்டோஸ் சேவர் 2008 ஆகியவை ஃப்ளாஷ் இயக்ககங்களுக்கு மிகவும் ஏற்ற கோப்பமைப்பான ExFAT ஐ ஆதரிக்கின்றன.

Mac OS X[தொகு]

HFS+ கோப்பமைப்பை பதிவு செய்யும் அம்சத்துடன் Mac OS X அதன் முதன்மைக் கோப்பமைப்பாக ஆதரிக்கின்றது. இது, பழைய Mac OS இன் வரிசையமைப்புக் கோப்பமைப்பில் இருந்து தோன்றியது. மாக் இயக்குதளம் X இயக்க முறைமையானது FAT, NTFS (படிக்க மட்டுமே முடியும், இருப்பினும் NTFS 3G எனப்படும் ஒரு திறந்தநிலை வேறுபட்ட தள செயலாக்கமானது Mac OS X பயனர்களுக்கு Microsoft Windows NTFS கோப்பமைப்புக்கான எழுதும்-படிக்கும் ஆதரவை வழங்குகிறது.), UDF மற்றும் பிற கோப்பு அமைப்புகளை எழுதவும் படிக்கவுமான வசதிகளைக் கொண்டுள்ளது, ஆனால் அவற்றில் இதை நிறுவ முடியாது. Mac OS X அதன் UNIX மரபின் காரணமாக, இப்பொழுது UNIX VFS ஆதரித்த அனைத்து கோப்பமைப்புகளையும் பெரும்பாலும் ஆதரவை வழங்குகிறது. சமீபத்தில் ஆப்பில் இங்க். நிறுவனமானது சன் மைக்ரோசிஸ்டத்தின் ZFS கோப்பமைப்பை Mac OS X க்கு ஏற்றதாக்கும் பணியைத் தொடங்கியது, மேலும் Mac OS X 10.5 இல் முன்பே இதற்கான தொடக்கநிலை ஆதரவு கிடைக்கிறது, இது ப்ளூ-ரே வட்டுகளையும் ஆதரிக்கின்றது.

சிறப்புத் தேவைக்கான கோப்பமைப்புகள்[தொகு]

நெகிழ் வட்டுகள், ஃப்ளாஷ் நினைவக கார்டுகள், டிஜிட்டல் கேமராக்கள் மற்றும் பல பிற கையடக்க சாதனங்களில் FAT கோப்பமைப்புகளே பெரும்பாலும் காணப்படுகின்றன, ஒப்பீட்டில் அவற்றுக்குள்ள எளிமையே இதற்குக் காரணமாகும். பிற கோப்பமைப்புகளுடன் ஒப்பிடும்போது FAT இன் செயல்திறன் மிகவும் குறைவு, அது மிகவும் எளிதான தரவுக் கட்டமைப்புகளைப் பயன்படுத்துவதால் கோப்புச் செயல்பாடுகளுக்காக அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது, மேலும் பல சிறிய கோப்புகள் இருக்கும் நிலைகளில் மிகக் குறைவான வட்டிடத்தையே பயன்படுத்துகிறது. ISO 9660 மற்றும் யுனிவர்சல் வட்டு வடிவமைப்பு ஆகியவை, குறுந்தகடுகள் மற்றும் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுகளை இலக்காகக் கொண்ட இரு பொது வடிவமைப்புகள் ஆகும். Mount Rainier என்பது, நெகிழ்வட்டுக்களில் பயன்படுத்துகின்ற அதே நடைமுறையில் DVDகளில் மறுபடியும் எழுதும் வசதியை அளிக்கும், Linux 2.6 வரிசைகள் மற்றும் Windows Vista ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் UDF க்கான புதிய நீட்டிப்பாகும்.

குறிப்பேட்டு கோப்பமைப்புகள்[தொகு]

கோப்பமைப்புகள், கணினி செயலிழப்பு நிகழும் நேரங்களில் பாதுகாப்பான மீட்பை வழங்குகின்ற பதிவுசெய்தல் அம்சத்தை வழங்கலாம். ஒரு குறிபேட்டு கோப்பமைப்பு சில தகவலை இருமுறை எழுதுகிறது: முதலில் கோப்பமைப்பு செயல்பாடுகளின் பதிவான குறிப்பேட்டில் எழுதுகிறது, பின்னர் அதை கோப்பமைப்பின் சரியான இடத்தில் எழுதுகிறது. பதிவுசெய்தல் அம்சமானது கோப்பமைப்பு இயக்கியினால் கையாளப்படுகிறது, மேலும் ஒவ்வொரு செயல்பாட்டினால் வட்டின் உள்ளடக்கங்களில் ஏற்படும் மாற்றங்களையும் அது தொடர்ந்து கண்காணிக்கிறது. இது கணினி செயலிழப்பின் போது, குறிப்பேட்டின் ஒரு பகுதியை மீண்டும் இயக்குவதன் மூலம் சீரான நிலைக்கு மீட்டமைக்கும் திறனுள்ள கோப்பமைப்பாகும். ReiserFS, JFS மற்றும் Ext3 ஆகியவை உட்பட UNIX இன் பல கோப்பமைப்புகள், பதிவுசெய்தல் அம்சத்தைக் கொண்டுள்ளன.

மாறாக, குறிப்பேடற்ற கோப்பமைப்புகளில், பொதுவாக திடீர் இயக்க நிறுத்தத்திற்குப் பின்னர் ஏற்படக் கூடிய ஏதேனும் சீரற்ற தன்மைகளைக் கண்டறிய fsck அல்லது chkdsk போன்ற கருவியைப் பயன்படுத்தி அவற்றின் முழுமைத் தன்மையைச் சோதிக்க வேண்டியது அவசியமாகிறது. மென் புதுப்பிப்புகள் பதிவுசெய்தலுக்கான மாற்றாகும், அது புதுப்பிப்பு செயல்பாடுகளை கவனமாக வரிசைப்படுத்துவதன் மூலம் மிகையாக எழுதுவதைத் தவிர்க்கிறது. பதிவுக்கட்டமைப்பு கோப்பமைப்புகள் மற்றும் ZFS ஆகியவை எப்போதும் தரவின் புதிய நகல்களை எழுதும் இயல்பால் சீரற்றதன்மையைத் தவிர்ப்பதில் மரபான குறிப்பேடு கோப்பமைப்புகளிலிருந்து வேறுபடுகின்றன, அவை இயல்பான புதுப்பிப்புகளைத் தவிர்க்கின்றன.

வரைவியல் பயனர் இடைமுகங்கள்[தொகு]

தற்கால கணினிகளில் பெரும்பாலானவை வரைவியல் பயனர் இடைமுகங்களுக்கு (GUI) ஆதரவு வழங்கியும் அவற்றை உள்ளடக்கியும் வருகின்றன. மைக்ரோசாப்ட் விண்டோசு மற்றும் மாக் இயக்குதளம் ஆகியவற்றைச் செயல்படுத்தும் சில கணினிகளில், GUI ஆனது கெர்னல் உடன் ஒருங்கிணைந்தே இருக்கிறது.

தொழில்நுட்ப ரீதியில் ஒரு வரைவியல் பயனர் இடைமுகம் என்பது இயக்க முறைமை சேவையல்ல, இருப்பினும் அதற்கு இயக்க முறைமையின் கெர்னலில் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கினால், GUI அதன் வெளியீட்டு செயல்பாடுகளை நிகழ்த்துவதில் GUI க்குத் தேவையான சூழல் மாற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலமாக அதிக வினைத் திறனுடன் செயல்பட GUI ஐ அனுமதிக்கும். பிற இயக்க முறைமைகள் தொகுக்கப்பட்டவையாக உள்ளன, அவை வரைவியல் துணையமைப்பை கெர்னல் மற்றும் இயக்க முறைமை ஆகியவற்றிலிருந்து பிரிக்கின்றன. 1980 களில் இருந்த UNIX, VMS மற்றும் பல இயக்க முறைமைகள் இந்த முறையிலேயே கட்டமைக்கப்பட்டிருந்தன. Linux மற்றும் Mac OS X ஆகியவையும் இந்த முறையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. விண்டோஸ் விஸ்டா போன்ற Microsoft Windows இன் தற்கால வெளியீடுகள் பெரும்பாலும் பயனர் பகுதியிலுள்ள வரைவியல் துணையமைப்பைச் செயல்படுத்துகின்றன, இருப்பினும் விண்டோசு என். டி. 4.0 முதல் வின்டோஸ் செர்வர் 2003 வரையிலான பதிப்புகளின் வரைவியல் வரைகலை ஒழுங்குகள் பெரும்பாலும் கெர்னல் பகுதியிலே உள்ளன. Windows 9x இல், இடைமுகத்துக்கும் கெர்னலுக்கும் இடையே மிகச்சிறிய வேறுபாடே இருந்தது.

தாங்கள் விரும்பும் பயனர் இடைமுகத்தை நிறுவுவதற்கு அல்லது உருவாக்குவதற்கு பல கணினி இயக்க முறைமைகள் பயனரை அனுமதிக்கின்றன. குநோம் அல்லது கே டீ ஈ உடன் ஒருங்கிணந்த X Window System என்பது, பெரும்பாலும் Unix மற்றும் Unix ஐ ஒத்த (BSD, Linux, Minix) முறைமைகளில் பொதுவாகக் காணப்படும் அமைவு ஆகும். Microsoft Windows க்காக, அவற்றுடன் இணைக்கப்பட்ட Windows Shell க்கு மாற்றாக இருக்க, பல Windows Shell இடமாற்றங்கள் வெளியிடப்பட்டுள்ளன, ஆனால் கூட்டை Windows இலிருந்து தனியாகப் பிரிக்க இயலாது.

காலப்போக்கில் எண்ணற்ற Unix அடிபடையிலான GUIகள் தோன்றின, அவை பெரும்பாலும் X11 வழிவந்தவை. Unix இன் வெவ்வேறு விற்பனையாளர்களின் (HP, IBM, Sun) போட்டியானது அதன் சிதறலுக்கு வழிவகுத்தது, இருப்பினும் 1990களில் COSE மற்றும் CDE க்கான தரநிலையாக்கம் வெவ்வேறு காரணங்களால் பெரும்பகுதி தோல்வியடைந்தாலும், GNOME மற்றும் KDE ஆகியவை பரவலாக ஏற்கப்பட்டதால் இறுதியாக அது மேலோங்கியது. ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான கருவிப்பொதிகள் மற்றும் டெஸ்க்டாப் சூழல்களுக்கு முன்னர், Motif என்பது பொதுவான கருவிப்பொதி/டெஸ்க்டாப் இணையாக இருந்தது (CDE உருவாக்கப்பட்ட போது இதுவே அடிப்படையாக இருந்தது).

காலப்போக்கில் வரைவியல் பயனர் இடைமுகங்கள் பல உருவாயின. Windows இன் ஒவ்வொரு புதிய முக்கிய பதிப்புகள் வெளியிடப்படும் போதும் Windows அதன் பயனர் இடைமுகத்தை மாற்றம் செய்ததையும், 1999 இல் Mac OS X இன் அறிமுகத்துடன் Mac OS அதன் GUI ஐ மிகவும் கவரும்படியாக மாற்றியதையும் எடுத்துக்காட்டாகக் கூறலாம்.[6]

இயக்க முறைமைகளுக்கான எடுத்துக்காட்டுகள்[தொகு]

Microsoft Windows[தொகு]

Windows Vista சமீபத்திய நிலையான Windows இயக்க முறைமையாகும்.

மைக்ரோசாப்ட் விண்டோசு என்பது பழைய IBM PC க்கான இயக்க முறைமையான எம்எஸ்-டொஸ் இன் துணைப்பயன் சாதனமாக உருவாக்கப்பட்ட இயக்க முறைமைகளின் குடும்பமாகும். நவீன பதிப்புகள், OS/2 ஐ கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட புதிய வின்டோஸ் என்டி கெர்னலின் அடிப்படையில் அமைந்துள்ளவை. Windows இயக்க முறைமை x86, x86-64 மற்றும் Itanium செயலிகளில் இயங்கும். முந்தைய பதிப்புகள் DEC Alpha, MIPS, Fairchild (பின்னாளில் Intergraph எனப்பட்டது) Clipper மற்றும் PowerPC ஆகிய கட்டமைப்புகளிலும் இயங்கின (இதை SPARC கட்டமைப்பில் இயங்கும்படிச் செய்ய சில பணிகள் செய்ய வேண்டியிருந்தது).

ஜூன் 2008 இன் போது, உலகளாவிய டெஸ்க்டாப் சந்தைப் பங்கில் மிகப் பெரும் பகுதியை Microsoft Windows கைப்பற்றியது. சேவையகங்களிலும் Windows இயக்க முறைமை பயன்படுத்தப்படுகிறது, இது வலைச் சேவையகங்கள் மற்றும் தரவுத்தள சேவையகங்கள் போன்ற பயன்பாடுகளை ஆதரிக்கிறது. Microsoft நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில், Windows இயக்க முறைமையானது எந்த தொழில்துறைப் பயன்பாடுகளையும் இயக்கக்கூடிய திறனுள்ளது எனக் காட்ட, சந்தைப்படுத்தல் & ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்கென அதிக அளவு பணத்தைச் செலவிட்டுள்ளது, இதன் விளைவாக இசைவுள்ள விலை/செயல்திறன் பதிவுகள் (TPC ஐ காண்க) கிடைத்தன மற்றும் தொழிற்துறையில் குறிப்பிடுமளவு ஒப்புக்கொள்ளப்பட்டது.

Microsoft Windows குடும்பத்தின் பதிப்புகளில் அதிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது 2001 அக்டோபர் 25 இல் வெளியிடப்பட்ட விண்டோசு எக்சு. பி. ஆகும்.

ஐந்தாண்டுக்கும் அதிகமான காலத்தில் உருவாக்கப்பட்ட விண்டோஸ் விஸ்டா இயக்க முறைமையை Microsoft நிறுவனம் 2006 நவம்பரில் வெளியிட்டது, அது பல புதிய அம்சங்களையும் கட்டமைப்பு மாற்றங்களையும் கொண்டுள்ள Microsoft Windows குடும்பத்தின் புதிய பதிப்பாகும். Windows Aero எனப்படும் புதிய பயனர் இடைமுக வடிவம், பயனர் கணக்குக் கட்டுப்பாடு போன்ற பல பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் Windows DVD Maker போன்ற சில புதிய மல்டிமீடியா பயன்பாடுகள் ஆகியவை அதன் அம்சங்களில் முக்கியமானவையாகும். அதே உள்ளமைப்பை அடிப்படையாகக் கொண்ட சேவையகப் பதிப்பான வின்டோஸ் சேவர் 2008, 2008 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.

விண்டோசு 7 தற்போது உருவாகிக்கொண்டிருக்கிறது; அது உருவாக எப்படியும் மூன்று ஆண்டுகள் தேவைப்படும் என Microsoft கூறியுள்ளது; இந்த இயக்க முறைமை 2009 அக்டோபர் 22 இல் வெளியிடப்பட உள்ளது.

Unix மற்றும் Unix ஐ ஒத்த இயக்க முறைமைகள்[தொகு]

Debian என்பது (linux-அடிப்படையிலான) unix ஐ ஒத்த முறைமை

கென் தாம்சன், Unix ஐ எழுத அவர் பயன்படுத்திய BCPL மொழியை அடிப்படையாகக் கொண்டு B மொழியை உருவாக்கினார், இதில் அவருக்கு MULTICS பணித்திட்டத்தின் அனுபவம் உதவியாக இருந்தது. பின்னர் B ஐ C இடமாற்றம் செய்தது, மேலும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சிக்கலான இயக்க முறைமைகளின் ஒரு குடும்பமாக Unix உருப்பெற்றது, அதன் பாதிப்புகள் எல்லா நவீன இயக்க முறைமைகளிலும் இருந்தது (வரலாற்றைப் பார்க்கவும்). பல்வேறுபட்ட இயக்க முறைமைகளின் தொகுப்பையே Unix ஐ ஒத்த குடும்பம் என்கின்றனர், அதில் System V, BSD மற்றும் Linux போன்ற பெரும் துணை வகைகளும் உள்ளன. "யுனிக்சு" என்பது தி ஓப்பன் குரூப்பின் வர்த்தக முத்திரையாகும், தங்கள் வரையறைகளுக்கு இணக்கமாக உள்ள எந்த இயக்க முறைமைக்காகவும் அதைப் பயன்படுத்தலாம் என உரிமம் பெற்றிருந்தனர். "Unix ஐ ஒத்த" என்ற சொற்றொடர் உண்மையான Unix ஐ போல இருக்கும் பல இயக்க முறைமைகளின் தொகுப்புகளைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

Unix ஐ ஒத்த முறைமைகள் பல வகையான கணினி கட்டமைப்புகளில் இயங்கக்கூடியவை. வணிகத்தில் சேவையகங்களுக்கு அவை பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன, கல்வி மற்றும் பொறியியல் சூழல்களில் பணிநிலையங்களாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குனூ, லினக்சு மற்றும் BSD போன்ற இலவச Unix பதிப்புகள் இந்தச் சூழலில் பிரபலமானவை.

HP இன் HP-UX மற்றும் IBM இன் AIX போன்ற Unix பதிப்புகள், அந்தந்த விற்பனையாளர்களின் வன்பொருளில் மட்டுமே இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டவை. Solaris போன்ற பிற பதிப்புகள் x86 சேவையகங்கள் மற்றும் PCகள் உட்பட பல வன்பொருளில் இயங்கக்கூடியவை. NeXTSTEP, Mach, மற்றும் FreeBSD போன்றவற்றிலிருந்து உருவாக்கப்பட்ட Apple இன் Mac OS X என்ற கலப்பு கெர்னல்-அடிப்படையிலான BSD பதிப்பு Apple இன் முந்தைய (Unix அல்லாத) Mac OS ஐ இடமாற்றம் செய்தது.

POSIX தரநிலையை நிறுவுவதன் மூலம் Unix திறனின் மேம்படுத்தல் முயற்சிக்கப்பட்டது. POSIX தரநிலையானது பல்வேறு Unix பதிப்புகளுக்காகவே உருவாக்கப்பட்டது எனினும் அது எந்த இயக்க முறைமைக்கும் பயன்படுத்தப்படலாம்.

Mac OS X[தொகு]

Mac OS X என்பது ஆப்பிள் இங்க். நிறுவனம் உருவாக்கி, சந்தைப்படுத்தி விற்ற, அதற்கே உரிமைத்தகுதியுள்ள, ஒரு இயக்க முறைமையாகும், சமீபத்தில் இறக்குமதி செய்யப்படும் மக்கின்டொஷ் கணினிகள் அனைத்திலும் இது முன்பே ஏற்றப்பட்டுள்ளது. Mac OS X என்பது முதலில் வெளிவந்த மாக் இயக்குதளம் க்கு அடுத்த வெளியீடாகும், இது 1984 இலிருந்து Apple இன் முதன்மை இயக்க முறைமையாக விளங்கியது. அதற்கு முன்பிருந்தவற்றைப் போலன்றி, Mac OS X இயக்க முறைமையானது, நெக்ஸ்ட் நிறுவனத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு யுனிக்சு இயக்க முறைமையாகும் இத்தொழில்நுட்பம் 1980களின் இரண்டாம் பாதியிலிருந்து Apple நிறுவனம் நெக்ஸ்ட் நிறுவனத்தை வாங்கும் வரையில் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்க முறைமை, 1999 இல் Mac OS X Server 1.0 என்ற பெயரில் வெளியிடப்பட்டது, அதைத் தொடர்ந்து மார்ச் 2001 இல் இதன் டெஸ்க்டாப் சார்ந்த (Mac OS X v10.0) பதிப்பு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் Mac OS X இன் கூடுதல் ஐந்து தனித்தன்மை வாய்ந்த "இறுதிப் பயனர்" மற்றும் "சேவையகப்" பதிப்புகள் வெளியிடப்பட்டன, இதில் மிகவும் சமீபத்திய பதிப்பு Mac OS X v10.5 ஆகும், அது அக்டோபர் 2007 இல் வெளியிடப்பட்டது. Mac OS X இன் வெளியீடுகளுக்கு பூனை இனங்களின் அடிப்படையில் பெயரிடப்பட்டது; Mac OS X v10.5 பதிப்பு "Leopard" என்றழைக்கப்படுகிறது. "Snow Leopard" எனப் பெயரிடப்பட்ட OS X இன் அடுத்த பதிப்பு, செப்டம்பர் 2009 இல் வெளியிடப்படும்.

சேவையகப் பதிப்பான Mac OS X Server இயக்க முறைமை, கட்டமைப்பு ரீதியாக அதன் டெஸ்க்டாப் பதிப்பைப் போலவே இருந்தாலும் அது Apple இன் தயாரிப்பான Macintosh சேவையக வன்பொருளில் இயங்கக்கூடியது. Mac OS X Server இல் பணிக்குழு மேலாண்மை மற்றும் நிர்வாக மென்பொருள் கருவிகள் உள்ளன, அவை அஞ்சல் பரிமாற்ற ஏஜெண்ட், ஒரு சம்பா சேவையகம், ஒரு லைட்வெயிட் டைரக்டரி ஆக்சஸ் ப்ரோட்டோக்கால் சேவையகம், ஒரு களப் பெயர் சேவையகம் மற்றும் பிறவற்றையும் உள்ளடக்கிய முக்கிய நெட்வொர்க் சேவைகளுக்கான எளிமைப்படுத்தப்பட்ட அணுகலை வழங்குகின்றன.

Portals OS 1x[தொகு]

கோல்ட்சன் டெக்னாலஜிஸ், இங்க். நிறுவனம் தற்போது ஒரு புதிய இயக்க முறைமையை உருவாக்கி வருகிறது, அது எளிய பயனர் இடைமுகமும் அதோடு Mac OSX இன் பாதுகாப்பும், Windows இன் நெகிழ்த்தன்மையும் கொண்டது, மேலும் அது Linux அடிப்படையில் அமைந்தது. Portals OS 1x இயக்க முறைமை அமெரிக்க ஐக்கியநாடுகளில் 2010 அக்டோபர் 10 இல் (அல்லது 10.10.10 இல்) வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது, அதன் பீட்டா பதிப்பை மார்ச் 2010 இல் வெளியிடத் திட்டமுள்ளது மேலும் அதன் ரிலீஸ் கேண்டிடெட் (RC) ஆகஸ்டில் எதிர்பார்க்கப்படுகிறது.

Plan 9[தொகு]

கென் தாம்சன், டென்னிஸ் ரிச்சி மற்றும் டக்ளஸ் மேக்ள்ராய் ஆகியோர் Unix இயக்க முறைமையை உருவாக்குவதற்காக பெல் ஆய்வகத்தில் C நிரலாக்க மொழியை உருவாக்கினர். பெல் ஆய்வகத்திலிருந்த புரோகிராமர்கள் Plan 9 மற்றும் Inferno ஆகிய இயக்க முறைமைகளை உருவாக்க முனைந்தனர், அவை நவீன பல்வேறுபட்ட சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டவை. Plan 9 இயக்க முறைமையானது தொடக்கத்திலிருந்து நெட்வொர்க்குக்கு ஏற்ற ஒன்றாக இருக்கும்படியே வடிவமைக்கப்பட்டது, அது உள்ளமைக்கப்பட்ட கிராஃபிக்ஸைக் கொண்டிருந்தது ஆனால் Unix இயக்க முறைமையோ இவ்வம்சங்களை வடிவமைப்பின் பிற்காலத்தில் சேர்த்தது. Plan 9 இன்னும் Unix குடும்பத்தின் இயக்க முறைமைகளின் அளவுக்குப் பிரபலமாகவில்லை ஆனாலும் அதன் டெவலப்பர்கள் சமூகமானது விரிவடைந்துகொண்டுள்ளது. தற்போது லூசெண்ட் பொது உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது. Inferno இயக்க முறைமையானது வீட்டா நோவா ஹோல்டிங்ஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டு, GPL/MIT உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்டது.

நிகழ்நேர இயக்க முறைமைகள்[தொகு]

நிகழ்நேர இயக்க முறைமை (RTOS1) என்பது பல்பணி இயக்க முறைமையாகும், இவை குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டிய செயல்பாடுகளுக்கான (நிகழ்நேர கம்ப்யூட்டிங்) பயன்பாடுகளுக்கென உருவாக்கப்பட்டவை. சிறு உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள், தானியங்குப் பொறிக் கட்டுப்பாடுகள், தொழிற்துறை ரோபோக்கள், விண்வெளி ஓடங்கள், தொழிற்துறைக் கட்டுப்பாடுகள் மற்றும் சில பெரிய அளவிலான முறைமைகள் ஆகியவை இது போன்ற பயன்பாடுகளாகும்.

சேபர் ஏர்லைன் ரிசர்வேஷன் சிஸ்டெம்ஸ் நிறுவனத்திற்காக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் IBM இணைந்து உருவாக்கிய பரிமாற்ற செயலாக்க அம்சம் பெரிய அளவிலான நிகழ்நேர இயக்க முறைமைகளுக்கான ஒரு பழைய எடுத்துக்காட்டாகும்.

உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள்[தொகு]

உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் பல வகையான இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகின்றன. சில நேரங்களில், ஒட்டு மொத்த சிறப்புத் தேவை நிரலை உருவாக்குவதற்காக "இயக்க முறை" மென்பொருளானது பயன்பாட்டுடன் நேரடியாக இணைக்கப்படுவதுமுண்டு. மிக எளிய உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளில், OS மற்றும் பயன்பாடு ஆகிய இரண்டுக்குமிடையே வேறுபாடு எதுவும் இல்லை.

நிலையான காலக்கெடுக்களைக் கொண்ட உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் VxWorks, eCos, QNX, MontaVista Linux மற்றும் RTLinux போன்ற நிகழ்நேர இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகின்றன.

சில உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் சிம்பியன் இயங்குதளம், Palm OS, Windows CE, BSD மற்றும் Linux போன்ற இயக்க முறைமைகளைப் பயன்படுத்துகின்றன, இருப்பினும் இந்த இயக்க முறைமைகள் நிகழ்நேரக் கணிப்பை ஆதரிப்பதில்லை.

Windows CE ஒத்த APIகளை டெஸ்க்டாப் Windows க்குப் பகிர்கிறது, ஆனால் டெஸ்க்டாப் Windows இன் குறியீட்டுத்தளம் எதையும் பகிர்வதில்லை[மேற்கோள் தேவை].

உருவாக்கம் ஒரு பொழுதுபோக்கு[தொகு]

இயக்க முறைமை உருவாக்கம், அல்லது சுருக்கமாக OSDev என்பது பொழுதுபோக்காக, பலர் பின் தொடர்கின்றனர். இவ்வாறு, Linux போன்ற இயக்க முறைமைகள், பொழுதுபோக்காக உருவாக்கப்பட்ட இயக்க முறைமைப் பணித்திட்டங்களிலிருந்து உருவாக்கப்பட்டது. ஓர் இயக்க முறைமையை உருவாக்கி செயல்படுத்துவதற்கு மிகுந்த திறனும் தீர்மானத் திறனும் அவசியம், இந்தச் சொல் மிக அடிப்படையான "Hello World" தொடக்க ஏற்றியிலிருந்து பல அம்சங்கள் நிறைந்த முக்கிய அமைப்பு வரையிலான அனைத்தையும் குறிக்கும். இதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டு Minix இயக்க முறைமையாகும்— இது ஏ.எஸ். டானென்பம் என்பவரால் ஒரு கல்வி கற்பிக்கும் கருவியாக உருவாக்கப்பட்ட OS ஆகும், ஆனால் Linux பிரபலமாகும் முன்பு இது பொழுதுபோக்காக பலரால் பயன்படுத்தப்பட்டது.

மற்றவை[தொகு]

தற்போதும் குறிப்பிடுமளவு சந்தையில் பயன்படுத்தப்படும் பழைய இயக்க முறைமைகளும் உள்ளன, அவற்றில் IBM மற்றும் Microsoft நிறுவனங்களின் OS/2; Apple இன் Mac OS X க்கு முந்தைய Unix அல்லாத மாக் இயக்குதளம்; BeOS; XTS-300 ஆகியவை உள்ளடங்கும். இன்னும் சில, குறிப்பாக AmigaOS 4 மற்றும் RISC OS ஆகியவை, ஆர்வமிக்க சமூகங்கள் மற்றும் துறைசார்ந்த பயன்பாடுகளுக்காக தொடர்ந்து உருவாக்கப்பட்டன. முன்னர் DEC நிறுவனம் வழங்கிய OpenVMS, ஹெவ்லெட்-பேக்கர்ட் என்பவரால் இன்னும் மேம்பாட்டில் உள்ளது. 8 பிட் கணினிகளுக்கான இயக்க முறைமைகள் பல இருந்தன - Apple இன் Apple II, ProDOS, UCSD, CP/M ஆகியவற்றுக்கான DOS (டிஸ்க் ஆப்பரேட்டிங் சிஸ்டம்) 3.2 & 3.3 - பல்வேறுபட்ட 8 மற்றும் 16 பிட் சூழல்களுக்குக் கிடைத்தன.

புதிய இயக்க முறைமைகளுக்கான ஆராய்ச்சிகளும் உருவாக்கங்களும் தொடர்கின்றன. GNU Hurd இயக்க முறைமை Unix உடன் இணக்கமாக இருக்கும் வகையில் பின்னோக்கிய அம்சங்களுடனும் அதே நேரத்தில் மேம்படுத்தப்பட்ட செயல் அம்சங்கள் மற்றும் மைக்ரொகெர்னல் கட்டமைப்புடனும் உருவாக்கப்பட்டது. சிங்குலாரிட்டி என்பது மைக்ரோசாப்ட் ஆய்வு இன் ஒரு பணித்திட்டமாகும், இது சிறந்த நினைவகப் பாதுகாப்புடன் திகழக்கூடிய ஓர் இயக்க முறைமையை உருவாகுவதற்கானது. இது .Net நிர்வகிக்கும் குறியீட்டு மாடலின் அடிப்படையில் உருவாக்கப்படுவது. முறைமைகள் உருவாக்கத்திலும், பிற மென்பொருள் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் அதே முறையே பயன்படுத்தப்படுகிறது, இதிலும் பராமரிப்பான்கள், பதிப்புக் கட்டுப்பாட்டு "மரங்கள்",[7] கிளைகள், "ஒட்டுகள்" மற்றும் குறிப்புவிவரங்கள் ஆகிய அனைத்தும் பயன்படுத்தப்படுகின்றன. AT&T-பெர்க்லீ வழக்கிலிருந்து, சுமையற்ற முறைமைகள், Unix சண்டைகளுக்குப் பின்னர் தவறிய குறியீடுகளை இடமாற்றம் செய்வதற்கான FreeBSD மற்றும் NetBSD முயற்சிகளாக உருவான 4.4BSD இன் அடிப்படையில் இருந்தன. சமீபத்திய கிளைகளில் DragonFly BSD மற்றும் BSD Unix இன் Darwin ஆகியவை அடங்கும்.[8]

இயக்க முறைமைகளின் வேறுபாடும் எடுத்துச்செல்லத்தக்க தன்மையும்[தொகு]

பயன்பாட்டு மென்பொருளானது வழக்கமாக ஒரு குறிப்பிட்ட இயக்க முறைமையில் பயன்படுத்துவதற்கென உருவாக்கப்படுவது, சில நேரங்களில் குறிப்பிட்ட வன்பொருளுக்கெனவும் உருவாக்கப்படுகிறது. அது போன்ற பயன்பாட்டை மற்றொரு OS இல் பயன்படுத்தும்போது, அந்தப் பயன்பாட்டைப் பயன்படுத்துவதற்காக, அதற்குத் தேவையான செயல்பாடுகளை (சார்புகளின் பெயர்கள், பண்புருக்களின் பொருள்கள் போன்றவை) OS ஆனது வேறுவிதமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

வெவ்வேறு இயக்க முறைமைகளை ஆதரிக்கும் வகையில் மென்பொருளை உருவாக்குவதற்காகும் செலவை, Java, Qt போன்ற மென்பொருள் தளங்களிலோ அல்லது வலை உலாவிகளுக்காகவோ பயன்பாடுகளை உருவாக்குவதன் மூலமோ குறைக்கலாம். இந்தக் கருத்தியல்கள், குறிப்பிட்ட இயக்க முறைமைகள் மற்றும் அவற்றின் கணினி நூலகங்கள் ஆகியவற்றுடனான இணக்கத்திற்கான செலவையும் உள்ளடக்கியவையாகும்.

இயக்க முறைமைகள் விற்பனையாளர்கள் தரநிலைகளைப் பின்பற்றுவதென்பது மற்றொரு அணுகுமுறையாகும். எடுத்துக்காட்டாக, POSIX மற்றும் OS கருத்தியல் அடுக்குகள் ஆகியவை செலவுகளைக் குறைக்கும் சில பொதுத்தன்மைகளை வழங்குகின்றன.

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. Dishwasher இயக்க முறைமை
  2. Linux இன் பங்குச்சந்தை மதிப்பு போட்டியில் Win 98 ஐ விஞ்சுகிறது, OS X இன்னமும் Vista விட முன்னணியில் உள்ளது
  3. Linux சேவையகத்தின் பங்குச்சந்தை மதிப்பு வளர்ந்து கொண்டு இருக்கிறது
  4. TechNet அறிக்கை ஒன்றில், Microsoft நிறுவனம் இந்த சந்தை நிலவரத்தை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை விவரமாக விவரிக்கின்றது. http://technet.microsoft.com/en-us/windowsvista/aa905073.aspx
  5. Kenny Kerr (2006-09-29). "Windows Vista for Developers – Part 4 – User Account Control". பார்த்த நாள் 2007-03-15.
  6. பாய்ஸன், கென். "குரோனாலஜி ஆஃப் பெர்சனல் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர்". 2008-05-07 இல் பெறப்பட்டது. 2009-03-30 இல் கடைசியாக சரிபார்க்கப்பட்டது.
  7. மறுஆய்வு கட்டுப்பாட்டு மென்பொருளின் ஒப்பீடு
  8. BSD இயக்க முறைமைகளின் ஒப்பீடு

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயக்கு_தளம்&oldid=2656773" இருந்து மீள்விக்கப்பட்டது