பேச்சு:இயக்கு தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Operating System[தொகு]

Operating System என்பதற்கு [இயங்குதளம் எனும்] இச்சொல் பொருத்தமாகத் தெரியவில்லை. நேரடி மொழிபெயர்ப்பு போல் தெரிகின்றது. இயக்கி, இயக்குனி, பணிப்பி, மேற்பணிப்பி, பணிவகுப்பி என்று ஏதேனும் ஒரு சொல்லைத் தேர்வு செய்தல் வேண்டும் என நினைக்கிறேன். இயங்குதளம் என்பது குறிப்பாக சிறப்பாக ஏதும் தெரிவிப்பதாக இல்லை. இயக்கு என்பதன் அடிப்படையாக சொல் அமைந்திருந்தால் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.--செல்வா 03:54, 31 ஜனவரி 2007 (UTC)

இயக்கி பற்றி இப்படி முன் பத்தியில் எழுதலாமா?[தொகு]

இயக்கி என்பது கணினியின் உள் உறுப்புகளையும், கணினியில் உள்ள மென்பொருட்களையும் ஒழுங்குற ஒத்திணக்க்த்துடன் இயங்க உதவும் நடுவண் அமைப்பாக இருப்பது இயக்கி என்னும் அடிப்படை மென்பொருளாகும். எந்த ஒரு கணினியும் இயங்க ஒரு இயக்கி மென்பொருள் இருப்பது இன்றியமையாதது. இயக்கியானது கணினியின் நினைவகத்தின் இடங்களை முறைப்படி பகிர்ந்தளிப்பது, கோப்புகளை சீருறுத்தி பராமரிப்பது, பல்வேறு பணிகளை கடுப்படுத்துவது, வரிசைப்படுத்துவது, மற்றும் கணினியுடன் இணைக்கப்பட்ட தரவு உள்ளிடு கருவிகளையும், தரவு வெளியிடு கருவிகளையும் சீராக பணிப்பது, பிற மின்வலை தொடர்புகளை வழிப்படுத்துவது என பல்வேறு கணினியின் அடிப்படையான நிகழ்வுகளை நடுவாக இருந்து இயக்குவதே இயக்கி என்னும் கருமென்பொருளாகும். --செல்வா 04:12, 31 ஜனவரி 2007 (UTC)

செல்வா, எனக்கு நீண்ட நாட்களாக இந்த குழப்பம் இருக்கிறது. இயங்குதளம், இயக்குதளம் என இரு பிரயோகங்கள் உள்ளன.. இதில் இயங்குதளம் பரவலாக பயன்பாட்டிலிருக்கிறது. நிலைத்தும்விட்டது. "இயக்கி" என்பதை driver இற்கு பயன்படுத்துகிறோம். அப்படியானால் kernel இற்கு என்ன தமிழ்? நீங்கள் இயக்கி என்று சொல்வது kernel அயா? --மு.மயூரன் 12:21, 31 ஜனவரி 2007 (UTC)

மயூரன், இயக்குதளம் என்று இருந்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். எனினும்,ஆங்கிலத்தில் platform என்று விளக்கினாலும், தமிழில் இதனை தளம் என்று கூறுவது அவ்வளவாகப் பொருந்துவதாக இல்லை (முற்றிலும் பொருந்தாது என கூறமாட்டேன்). இயக்கம் என்ற சொல் பலவற்றையும் கட்டுப்படுத்தும், நடுவண் ஆட்சிநிலை செயற்பாட்டுக்களுக்கே பொருந்தும். Driver முதலான சிறு தொழில்கலுக்கு இடுவது பொருந்தாது. செலுத்தி, நடத்தி, ஓட்டுனி, முடுக்கி என்று வேறு ஏதாவது தேர்வது நல்லது. அப்படியே இயக்கி என்பது driver என்பதற்கு என்று விட்டாலும், OS என்பதற்கு மேலியக்கி, நடுவியக்கி, பொதுவியக்கி கருவியக்கி என்று ஏதேனும் சேர்த்துச் சொல்லலாம். Kernel என்பதும் ஏறத்தாழ OS போலத்தான், எனினும், OS க்கு கீழே அல்லது ஒரு முக்கியமான உறுப்பாக இயங்கும் நிலை எனவே kernel என்பதை கருனி எனலாம் (இயக்குதளம் அல்லது மேலியக்கி அல்லது கருவியக்கியின் கருவாக இயங்குவதால் கருனி எனப்படும்). மேலும் ஆங்கிலத்திலும் ஒருகாலத்தில் kernel என்பதை nucleus or core என்று அழைத்தனர். --செல்வா 13:47, 31 ஜனவரி 2007 (UTC)

இயக்குதளம் என்று பயன்படுத்தலாமா?

ஏனெனில் இது அடிக்கடி பயன்படுத்தப்படும் நிலைத்துவிட்ட சொல். ங்-க் மாற்றம் இலகு.

--மு.மயூரன் 20:06, 23 பெப்ரவரி 2007 (UTC)

நன்றி. மாற்றிவிட்டேன்.

--செல்வா 23:02, 23 பெப்ரவரி 2007 (UTC)

shell தமிழ் என்ன?[தொகு]

--Natkeeran 03:20, 12 ஏப்ரல் 2007 (UTC)

முனையம் என்று பயன்படுத்தி வருகிறோம். --மு.மயூரன் 06:35, 12 ஏப்ரல் 2007 (UTC)

இயங்கு தளமா அல்லது இயக்கு தளமா[தொகு]

இந்த இரண்டு சொற்களும் அனைத்து OSசார்ந்த கட்டுரைகளிலும் Interchangebleஆக பயன்படுதப்படுகிறது. இயங்கு தளம் என்றால் மற்ற நிரலிகள் இயங்கும்(Operating) தளம் எனவும் இயக்கு(Operate) தளம் என்றால் மற்ற நிரலிகளை இயக்கும் தளம் என்று பொறுள்படுகிறது. இதில் எது சரியா சொல் ?−முன்நிற்கும் கருத்து Vinodh.vinodh (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.

இயக்குதளம் கூடுதல் பொருத்தமாக உள்ளது. எப்படியே கணினியை இயக்குபவர்கள் நாம்தானே. --உமாபதி \பேச்சு 18:46, 27 ஏப்ரல் 2008 (UTC)

இயக்குதளம் என்பதை முன்னிலைப்படுத்தலாமா? -தமிழ்க்குரிசில் (பேச்சு) 11:41, 31 திசம்பர் 2012 (UTC)

//இயக்கு(Operate) தளம் என்றால் மற்ற நிரலிகளை இயக்கும் தளம் // அருமையான உரையாடல். உரையாடிய மயூரன், செல்வாவுக்கு மிக்க நன்றி. பல சொற்களின் நடுவப்பொருட்களை அறிந்தேன். இக்கருத்தை, பலகட்டுரைகளிலும் நடுவேன். வணக்கம்.--உழவன் (உரை) 02:35, 1 மே 2015 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இயக்கு_தளம்&oldid=1852563" இருந்து மீள்விக்கப்பட்டது