சிவகங்கை வரலாற்றுக் கும்மி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவகங்கை வரலாற்றுக் கும்மி எனும் கும்மிப் பாடல் முத்துசாமி என்பவரால் இயற்றப் பெற்றது. இந்நூலில் சிவகங்கை நகர்ச் சிறப்பு, இந்நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சசிவர்ணத்தேவர், முத்துவடுகநாதத் தேவர் வரலாறு, சிவகங்கை மீது நவாபு படையெடுப்பு, ஆங்கிலேயர் தலையீடு, மருது சகோதரர்களுக்கும், ஆங்கிலேயர்க்கும் இடையில் நடைபெற்ற போர், கவுரி வல்லப ராசனுக்கு சிவகங்கையை ஆளும் உரிமையை ஆங்கிலேயர் அளித்தவை போன்றவை இடம் பெற்றுள்ளன. 4341 அடிகளால் இயற்றப்பட்ட இக்கும்மிப் பாடல் எளிய நடையில் அமைந்துள்ளது. இதில் முதல் 124 அடிகள் அறிமுகப் பகுதியாகவும், 125 முதல் 4322 வரையுள்ள அடிகள் கதைப் பகுதியாகவும், 4323 முதல் 4341 வரையுள்ள அடிகள் வாழ்த்துப் பகுதியாகவும் அமைந்துள்ளன.

ஆதாரம்[தொகு]

மாமன்னர் மருது பாண்டியர்கள் திருவுருவச்சிலைகள் திறப்பு விழா மலர் (31-10-2007 மதுரை) - தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் முன்னாள் துணைவேந்தர் முனைவர் இ. சுந்தரமூர்த்தி எழுதிய வரலாற்று ஆவணம் கட்டுரை பக்கம்:135.