பீரங்கி வண்டி மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டேங்க் மேன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
1989இல் ஜூன் 5ஆம் தேதி, தியனன்மென் சதுக்கத்தில் "டேங்க் மேன்" சீனாவின் பீரங்கிகளை நிறுத்த முயல்கிறார்.

பீரங்கி வண்டி மனிதன் (Tank Man) என்பவர் 1989 ஆம் ஆண்டு சூன் 5ஆம் நாள், சீனாவின் தியனன்மென் சதுக்க எதிர்ப்புப் எதிர்ப்புப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த பீரங்கிகளை வழிமறித்த முகம் தெரியாத நபரைக் குறிக்கும் சொல். இவர் பீரங்கிகளை மறிக்கும் காட்சியடங்கிய புகைப்படம் மறுநாள் பத்திரிகைகளில் வெளியானதால் இவர் உலகப் புகழ் அடைந்தார். அவர் யார், அவர் பெயர், அவர் என்ன ஆனார் என்பது இன்றளவும் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவர் பீரங்கிகளை மறிக்கும் புகைப்படம் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படங்களில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரங்கி_வண்டி_மனிதன்&oldid=2485687" இருந்து மீள்விக்கப்பட்டது