உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் அவசரகாலச் சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடுதலை அடைந்த இலங்கையில் அவசரகாலச் சட்டம் (State of emergency in Sri Lanka) அமுல்படுத்தப்பட்ட காரணங்களும், அவை அமுலில் இருந்த காலங்களும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:

முதலாவது அவசரகாலச் சட்டம்

[தொகு]
  • ஆகத்து 12 1953, விடுதலை அடைந்த இலங்கையில் முதன் முதல் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. ஒரு கடையடைப்பை அடுத்து இது கொண்டுவரப்பட்டது. ஒரு கிலோ அரிசியின் விலை 25 சதத்திலிருந்து 70 சதத்துக்கு உயர்த்தப்பட்டதையடுத்து அதனை எதிர்த்து இடதுசாரியினரால் கடையடைப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த அவசரகாலச் சட்டம் செப்டம்பர் 11 1953ம் திகதி வரை 29 நாட்கள் அமுலில் இருந்தது.

கலவரங்கள்

[தொகு]
  • மே 27 1958 - சிங்களவருக்கும் தமிழருக்கும் இடையில் இனக்கலவரம் உருவானதையடுத்து அமுலுக்கு வந்து 10 மாதங்கள் நடைமுறையில் இருந்தது.
  • சனவரி 8 1966 - கொழும்பில் இடம்பெற்ற கலவரத்தையடுத்து அமுல் செய்யப்பட்டு டிசம்பர் 6. 1966 வரை நடைமுறையில் இருந்தது.
  • டிசம்பர் 18 1966 - அரிசி பங்கீட்டு முறையில் வழங்கப்பட்ட அரச தீர்மானத்தையடுத்து கலவரங்கள் ஏற்பட்டதால் அமுல் செய்யப்பட்டு சனவரி 11 1966 வரை அமுலில் இருந்தது.
  • ஆகத்து 17 1981 - சனவரி 16 1982 - இனக்கலவரம் காரணமாக இச்சட்டம் அமுலில் இருந்தது.

பிரதமர் கொலை

[தொகு]

சத்தியாக்கிரகம், வேலை நிறுத்தம்

[தொகு]

நாணயத் தாள்களை அழித்தல்

[தொகு]

ஜே.வி.பி. புரட்சி

[தொகு]

இயற்கை அனர்த்தம்

[தொகு]

யாழ்ப்பாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள்

[தொகு]
  • சூலை 11 1979 - திசம்பர் 27 1979 - யாழ்ப்பாணத்தில் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக 5 மாதம் 16 நாட்கள் அமுலில் இருந்தது.
  • சூன் 2 1981 - சூலை 7 1981 - யாழ்ப்பாணக் கலவரம் காரணமாக அமுலில் இருந்தது.

மூலம்

[தொகு]