செனடாப் சாலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செனடாப் சாலை (Cenotaph Road) சென்னையின் தேனாம்பேட்டையிலுள்ள முதன்மையானச் சாலைகளில் ஒன்றாகும். இச்சாலை அண்ணா சாலையை டர்ன்சு புல் சந்திப்புடன் இணைக்கின்றது. இச்சாலையின் துவக்கத்தில் ஐசிஐசிஐ வங்கியின் முக்கியக் கிளை உள்ளது. தமிழ்நாடு பெட்ரோபிராடக்சு நிறுவனத் தலைமையகம் (டிபிஎல் மாளிகை), சாசுக்கென் தொடர்பியல் தொழில்நுட்பம், எர்னசுட்டு & யங், உருசிய வணிகத்தூதரகம் ஆகியன இச்சாலையில் அமைந்துள்ள முதன்மை நிறுவனங்களாகும். கபே காபி டேயின் கிளை ஒன்றும் இங்குள்ளது. கட்டுமானத்துறையில் சென்னையின் முன்னணி நிறுவனமாக விளங்கும் அரிகந்த் நிறுவனத்தின் தலைமையகம் இச்சாலையில்தான் அமைந்துள்ளது.

செனடாப் சாலையில் முதல், இரண்டாம் தெருக்கள், முதல், இரண்டாம் சந்துகள் மற்றும் சித்தரஞ்சன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ள சாலைகளும் அடங்கும். தமிழ்த் திரைப்பட நடிகை திரிசா இரண்டாவது தெருவில் வசிக்கிறார்; யுனைட்டெடு புரூவரீசு தலைவர் விஜய் மல்லையா இரண்டாம் சந்தில் வசிக்கிறார். அரசியல் தலைவர் மு. க. ஸ்டாலின் சித்தரஞ்சன் தெருவில் வசிக்கின்றார். தவிரவும் முன்னணி இதயநோய் மருத்துவர் மரு.கே. பி. சம்சுதீன் முதல் சந்தில் வசிக்கின்றார். கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இச்சாலையில்தான் வசிக்கின்றார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செனடாப்_சாலை&oldid=2468057" இலிருந்து மீள்விக்கப்பட்டது