விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/மே
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 12:13 மணி வெள்ளி, அக்டோபர் 4, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
- 1707 – இங்கிலாந்தும், இசுக்கொட்லாந்தும் இணைந்து பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவாக்கும் ஒன்றிணைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது.
- 1753 – தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறையினால் தாவர வகைப்பாட்டியல் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1886 – ஐக்கிய அமெரிக்காவில் 8-மணிநேர வேலை நாளை அறிவிக்க வேண்டி வேலைநிறுத்தம் ஆரம்பமானது. இந்நாள் பின்னர் மே நாள் எனவும் தொழிலாளர் நாள் எனவும் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1893 – உலக கொலம்பியக் கண்காட்சி சிகாகோவில் ஆரம்பமானது.
- 1945 – நாட்சி பரப்புரை அமைச்சர் யோசப் கோயபெல்சு (படம்) அவரது மனைவியுடன் பியூரர் பதுங்கு அறைக்கு வெளியே தற்கொலை செய்து கொண்டார். இவர்களது பிள்ளைகளும் தாயினால் சயனைடு பருக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
- 1961 – கியூபாவை சோசலிச நாடாகவும் தேர்தல் முறையை ஒழித்தும் அதன் பிரதமர் பிடெல் காஸ்ட்ரோ அறிவித்தார்.
- 1993 – இலங்கை அரசுத்தலைவர் ஆர். பிரேமதாசா மே தினப் பேரணியில் வைத்து மனிதக் குண்டுத்தாக்குதலின் மூலம் கொல்லப்பட்டார்.
ஜி. என். பாலசுப்பிரமணியம் (இ. 1965) · ஷோபா (இ. 1980) · ந. சுப்பு ரெட்டியார் (இ. 2006)
அண்மைய நாட்கள்: ஏப்பிரல் 30 – மே 2 – மே 3
மே 2:
- 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின், முறைபிறழ்புணர்ச்சி, தகாப் பாலுறவு, மாந்திரீகம், தேசத்துரோகம் போன்ற குற்றச்சாட்டுகளுக்காகக் கைது செய்யப்பட்டார்.
- 1814 – முதலாவது மெதடிஸ்த ஆயர் தோமசு கோக் (படம்) மதப்பரப்புனராக கப்பலில் இங்கிலாந்தில் இருந்து இலங்கை வரும் வழியில் காலமானார்.
- 1889 – எத்தியோப்பியாவின் அரசர் இரண்டாம் மெனெலிக் இத்தாலியுடன் செய்துகொண்ட அமைதி உடன்படிக்கையின் படி எரித்திரியாவின் முழுப் பகுதியும் இத்தாலிக்குத் தரப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பெர்லினைத் தாம் கைப்பற்றியதாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது.
- 2011 – செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குக் காரணமானவரும், சிஐஏ இனால் தேடப்பட்டு வந்தவருமான உசாமா பின் லாதின் பாக்கித்தானில் ஆப்டாபாத் நகரில் அமெரிக்க சிறப்புப் படையினரால் கொல்லப்பட்டார்.
- 2012 – நோர்வே ஓவியர் எட்வர்ட் மண்ச் வரைந்த அலறல் என்ற ஓவியம் நியூயார்க்கில் இடம்பெற்ற ஏலத்தில் $120 மில்லியன்களுக்கு விற்கப்பட்டது.
- 2018 – பாஸ்கு விடுதலைக்கான தீவிரவாத அமைப்பு எட்டா முழுமையாகக் கலைந்தது.
ந. சஞ்சீவி (பி. 1927) · தேவிகா (இ. 2002) · கே. பாலாஜி (இ. 2009)
அண்மைய நாட்கள்: மே 1 – மே 3 – மே 4
மே 3: உலக பத்திரிகை சுதந்திர நாள்
- 1715 – எட்மண்டு ஏலியினால் எதிர்வு கூறப்பட்ட முழுமையான வலய மறைப்பு வடக்கு ஐரோப்பா, வடக்கு ஆசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்கப்பட்டது.
- 1879 – யாழ்ப்பாணம், கரவெட்டியில் வெல்லனிற் பிள்ளையார் கோயில் திருவிழா ஒன்றின் போது இடம்பெற்ற தீ விபத்தில் 50 பேர் வரையில் தீயில் கருகி மாண்டனர். நூற்றுக் கணக்கானோர் உடல் ஊனமுற்றனர். கோயில் முழுவதும் எரிந்து சாம்பரானது.
- 1913 – இந்தியாவின் முதல் முழு நீளத் திரைப்படம் ராஜா ஹரிஸ்சந்திரா (படம்) வெளியானது.
- 1921 – வட அயர்லாந்து, தெற்கு அயர்லாந்து என அயர்லாந்து இரண்டாகப் பிரிந்தது.
- 1939 – சுபாஸ் சந்திர போஸ் அனைத்திந்திய பார்வார்டு பிளாக்கு கட்சியை ஆரம்பித்தார்.
- 1941 – பிபிசி தமிழோசை வானொலி சேவை ஆரம்பிக்கப்பட்டது.
- 1986 – கொழும்பு விமான நிலையத்தில் எயர்லங்கா 512 பயணிகள் விமானத்தில் குண்டு வெடித்ததில் 21 பேர் கொல்லப்பட்டு 41 பேர் காயமடைந்தனர்.
டி. எஸ். சொக்கலிங்கம் (பி. 1899) · ஆர். நடராஜ முதலியார் (இ. 1971) · பி. ராஜம் (இ. 2009)
அண்மைய நாட்கள்: மே 2 – மே 4 – மே 5
மே 4: பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்
- 1493 – திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் புதிய உலகை எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் பிரித்துக் கொடுத்தார்.
- 1799 – நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்: சீரங்கப்பட்டிண முற்றுகை (1799): திப்பு சுல்தான் (படம்) கொல்லப்பட்டதை அடுத்து ஸ்ரீரங்கப்பட்டணம் பிரித்தானியரின் கீழ் வந்தது.
- 1814 – எசுப்பானியா முழுமையான முடியாட்சிக்கு மாறியது.
- 1886 – ஹேமார்க்கெட் படுகொலை: சிகாகோவில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
- 1949 – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த எஸ். ஏ. கணபதி கோலாலம்பூர், புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
- 1994 – இசுரேல் பிரதமர் இட்சாக் ரபீனுக்கும், பலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசிர் அரஃபாத்துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி காசாக்கரை, மற்றும் எரிக்கோவில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
தியாகராஜர் (பி. 1767) · முத்து குமாரசுவாமி (இ. 1879) · கி. கஸ்தூரிரங்கன் (இ. 2011)
அண்மைய நாட்கள்: மே 3 – மே 5 – மே 6
மே 5:
- 1821 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் நாடு கடத்தப்பட்ட நிலையில் தெற்கு அத்திலாந்திக் பெருங்கடலில் செயிண்ட் எலனா தீவில் இறந்தார்.
- 1838 – இந்தியாவில் இருந்து முதல் தொகுதி தொழிலாளர்கள் கயானா வந்தடைந்தனர்.
- 1860 – கரிபால்டி ஆயிரக்கணக்கானோருடன் செனோவாவில் இருந்து சிசிலியைக் கைப்பற்றப் புறப்பட்டார். இத்தாலி இராச்சியம் உருவானது.
- 1865 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்பு அரசு கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- 1912 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை பிராவ்தா சென் பீட்டர்ஸ்பேர்க் இல் இருந்து முதன் முதலாக வெளியிடப்பட்டது.
- 1936 – எதியோப்பியாவின் அடிஸ் அபாபா நகரை இத்தாலியப் படைகள் கைப்பற்றின.
- 1981 – அயர்லாந்து புரட்சியாளர் பொபி சான்ட்சு (அவரது கல்லறை படத்தில்) சிறையில் 66 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம் இருந்து தனது 27வது அகவையில் காலமானார்.
தி. சு. அவிநாசிலிங்கம் (பி. 1903) · பி. யு. சின்னப்பா (பி. 1916) · தேவன் (இ. 1957)
அண்மைய நாட்கள்: மே 4 – மே 6 – மே 7
மே 6:
- 1527 – எசுப்பானிய, செருமனியப் படைகள் ரோம் நகரைச் சூறையாடினர். சுவீடனின் 147 படையினர் புனித ரோமப் பேரரசர் ஐந்தாம் சார்ல்சிற்கு எதிராகப் போரிட்டு இறந்தனர். இது ஐரோப்பாவின் மறுமலர்ச்சிக் கால முடிவு என சிலர் கருதுகின்றனர்.
- 1536 – இங்கிலாந்தின் அனைத்துக் கிறித்தவ ஆலயங்களிலும் ஆங்கில மொழியில் திருவிவிலியம் கட்டாயமாக வைத்திருக்கப்பட வேண்டும் என எட்டாம் என்றி மன்னர் கட்டளையிட்டார்.
- 1542 – பிரான்சிஸ் சவேரியார் போர்த்துகேய இந்தியாவின் அக்காலத்தையத் தலைநகரான பழைய கோவாவை அடைந்தார்.
- 1782 – சியாம் மன்னர் முதலாம் இராமாவின் அறிவுறுத்தலின் பேரில் பெரிய அரண்மனையின் (படம்) கட்டுமானப் பணிகள் பேங்காக் நகரில் ஆரம்பமாயின.
- 1882 – சீனத் தொழிலாளர்கள் அமெரிக்காவுக்கு வரத் தடை விதிக்கும் சட்டம் அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேறியது.
- 1889 – ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது.
- 1960 – வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் இருந்து முதல் தடவையாக அரச திருமணம் ஒன்று தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இளவரசி மார்கரெட், அந்தனி ஆர்ம்ஸ்ட்ரோங்-யோன்சு ஆகியோரின் திருமணத்தை 20 மில்லியன் பேர் கண்டுகளித்தனர்.
லட்சுமி ஹோம்ஸ்ட்ராம் (இ. 2016)
அண்மைய நாட்கள்: மே 5 – மே 7 – மே 8
மே 7:
- 1895 – உருசிய அறிவியலாளர் அலெக்சாண்டர் பப்போவ் உலகின் முதலாவது வானொலிக் கருவியை சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அறிமுகப்படுத்தினார். இந்நாள் உருசியாவில் வானொலி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- 1915 – முதலாம் உலகப் போர்: செருமனியின் யூ-20 நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியாவின் லூசித்தானியா என்ற ஆடம்பரக் கப்பலைத் தாக்கி மூழ்கடித்ததில் 1,198 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் 128 பேர் அமெரிக்கர் ஆவர்.
- 1930 – 7.1 அளவு நிலநடுக்கம் வடமேற்கு ஈரானையும், தென்கிழக்கு துருக்கியையும் தாக்கியதில் 3000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி ஜெர்மனியின் இராணுவத் தளபதி அல்பிரட் யோடில் செருமனியின் நிபந்தனையற்ற சரணடைதலுக்கு பிரான்சில் கையெழுத்திட்டார். அடுத்த நாள் இது அமுலுக்கு வந்தது.
- 1952 – நவீன கணினிகளுக்கான ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது.
- 2007 – உரோமைப் பேரரசர் முதலாம் ஏரோதின் கல்லறை எருசலேம் நகருக்கருகில் இசுரேலியத் தொல்லியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
இராபர்ட்டு கால்டுவெல் (பி. 1814) · வே. உமாமகேசுவரனார் (பி. 1883) · ப. கண்ணாம்பா (இ. 1964)
அண்மைய நாட்கள்: மே 6 – மே 8 – மே 9
- 1794 – பிரான்சிய வேதியியலாளர் அந்துவான் இலவாசியே பிரெஞ்சுப் புரட்சியின் பயங்கர ஆட்சியில் தேசத்துரோகக் குற்றங்களுக்காக பாரிசில் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனைக்குட்படுத்தப்பட்டார்.
- 1886 – ஜோன் பெம்பர்ட்டன் கொக்கா கோலா எனப் பின்னர் பெயரிடப்பட்ட மென்பானத்தை விற்பனைக்கு விட்டார்.
- 1902 – கரிபியன், மார்டீனிக் தீவில் பெலே எரிமலை வெடித்ததில் 30,000 பேர் உயிரிழந்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: கொக்கோசு தீவுகளில் ஓர்சுபரோ தீவில் நிலைகொண்டிருந்த பிரித்தானிய இலங்கை அரண்காவல் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கிளர்ச்சி முறியடிக்கப்பட்டு மூன்று இலங்கையர் தூக்கிலிடப்பட்டனர். மேலும் எட்டு பேருக்கு 3-7 ஆண்டு கால கடூழியச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் மேற்குப் பகுதிப் படையினர் நிபந்தனையின்றி சரணடைந்தனர் (படம்).
- 1980 – பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சு. வித்தியானந்தன் (பி. 1924) · மு. நல்லதம்பி (இ. 1951) · வலம்புரி ஜான் (இ. 2005)
அண்மைய நாட்கள்: மே 7 – மே 9 – மே 10
மே 9: வெற்றி நாள் – கிழக்கு ஐரோப்பிய நாடுகள்
- 1612 – கண்டி மன்னர் செனரத்துடன் மார்செலசு டி பொசோடர் தலைமையிலான இடச்சுத் தூதுக்குழு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
- 1874 – குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதலாவது பயணிகள் வண்டி பம்பாய் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1919 – இலங்கையில் முதன் முதலாக உணவுக் கட்டுப்பாடு அமுலுக்கு வந்தது.
- 1936 – அடிஸ் அபாபா நகரை மே 5 இல் கைப்பற்றிய பின்னர் எரித்திரியா, எத்தியோப்பியா, இத்தாலிய சோமாலிலாந்து ஆகிய நாடுகளை இணைத்து இத்தாலிய கிழக்கு ஆபிரிக்கா என்ற நாட்டை இத்தாலி உருவாகியது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: இறுதி செருமன் சரணடைவு பெர்லினில் சோவியத் தலைமையகத்தில் இடம்பெற்றது (படம்). சோவியத் ஒன்றியம் வெற்றி நாளைக் கொண்டாடியது.
- 2001 – கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.
வே. உமாமகேசுவரனார் (இ. 1941) · சாரல்நாடன் (பி. 1944) · ஆதி நாகப்பன் (இ. 1976)
அண்மைய நாட்கள்: மே 8 – மே 10 – மே 11
- 1773 – வட அமெரிக்க தேயிலை வணிகத்தில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு ஏகபோக உரிமை அளிக்கும் தேயிலை சட்டத்தை பெரிய பிரித்தானியாவின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
- 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி (படம்): இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
- 1940 – நெவில் சேம்பர்லேன் பதவி துறந்ததை அடுத்து, வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
- 1946 – சவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
- 1994 – நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 1997 – ஈரானில் இடம்பெற்ற 7.3 அளவு நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
கார்த்திகேசு சிவத்தம்பி (பி. 1932) · தோப்பில் முகமது மீரான் (இ. 2019)
அண்மைய நாட்கள்: மே 9 – மே 11 – மே 12
- 1812 – இலண்டனில் நாடாளுமன்றத்தில் வைத்து பிரதமர் இசுப்பென்சர் பெர்சிவல் (படம்) கொல்லப்பட்டார்.
- 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி, 1857: இந்தியப் புரட்சியாளர்கள் தில்லியை பிரித்தானியர்களிடம் இருந்து கைப்பற்றினர்.
- 1891 – சப்பானில் பயணம் மேற்கொண்டிருந்த உருசிய இளவரசர் நிக்கொலாசு சப்பானியக் காவல்துறையினனின் வாள் வீச்சில் இருந்து தப்பினார். இவர் கிரேக்க, டென்மார்க் இளவரசர்களினால் காப்பாற்றப்பட்டார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: ஒக்கினாவா கரையில் அமெரிக்க வானூர்தித் தாங்கிக் கப்பல் மீது சப்பானிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 346 பேர் கொல்லப்பட்டனர்.
- 1997 – ஐபிஎம் இன் ஆழ் நீலக் கணினி முதன் முதலாக காரி காஸ்பரவை சதுரங்க ஆட்டத்தில் தோற்கடித்தது.
- 1998 – 24 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய சிரிக்கும் புத்தர் சோதனைக்குப் பின்னர் முதல்தடவையாக இந்தியா மூன்று அணுகுண்டு சோதனைகளை நடத்தியது.
சுத்தானந்த பாரதியார் (பி. 1897) · எல்லிஸ் ஆர். டங்கன் (பி. 1909) · பி. வி. நரசிம்மபாரதி (இ. 1978)
அண்மைய நாட்கள்: மே 10 – மே 12 – மே 13
- 1784 – பாரிசு உடன்படிக்கை அமுலுக்கு வந்தது.
- 1888 – தென்கிழக்காசியாவில், வடக்கு போர்னியோ பிரித்தானியாவின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது.
- 1937 – ஆறாம் ஜோர்ஜ் (படம்), எலிசபெத் மகாராணி பிரித்தானியாவின் ஆட்சியாளர்களாக முடிசூடினர்.
- 1941 – உலகின் முதலாவது நிரலொழுங்கு, தானியங்கிக் கணினி Z3 அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1965 – சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது.
- 1982 – போர்த்துகலில் திருத்தந்தை இரண்டாவது ஜோன் போலைக் கொலை செய்ய எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியடைந்தது.
- 2008 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் 8.0 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 69,000 பேர் உயிரிழந்தனர்.
வெ. துரையனார் (பி. 1891) · மாயவரம் வி. ஆர். கோவிந்தராஜர் (பி. 1912) · சேக் சின்ன மௌலானா (பி. 1924)
அண்மைய நாட்கள்: மே 11 – மே 13 – மே 14
- 1648 – தில்லியில் செங்கோட்டை (படம்) கட்டி முடிக்கப்பட்டது.
- 1656 – ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து கொழும்பைக் கைப்பற்றினர்.
- 1787 – ஆத்திரேலியாவில் குடியேற்றத்தை ஆரம்பிப்பதற்கென 11 கப்பல்களில் 772 சிறைக்கைதிகளையும் குற்றவாளிகளையும் ஏற்றிக் கொண்டு ஆர்தர் பிலிப் இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டார்.
- 1939 – முதலாவது எஃப்எம் வானொலி நிலையம் ஐக்கிய அமெரிக்காவில் கனெடிகட் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1952 – இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையின் முதலாவது அமர்வு இடம்பெற்றது.
- 1969 – மலேசியாவில் கோலாலம்பூரில் சீன மலேசியர்களுக்கும் மலே இனத்தவர்களுக்கும் இடையில் இனக்கலவரம் மூண்டது. 190 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – அல்லைப்பிட்டிப் படுகொலைகள்: யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டியில் 13 பொதுமக்களை இலங்கைக் கடற்படையினர் படுகொலை செய்தனர்.
பி. ஆர். ராஜமய்யர் (இ. 1898) · கு. மா. பாலசுப்பிரமணியம் (பி. 1920) · வி. தெட்சணாமூர்த்தி (இ. 1975)
அண்மைய நாட்கள்: மே 12 – மே 14 – மே 15
- 1796 – பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார்.
- 1879 – 463 இந்தியத் தொழிலாளர்களைக் கொண்ட முதலாவது தொகுதியினர் லியோனிடாசு கப்பலில் பிஜியை அடைந்தனர்.
- 1948 – இசுரேல் தன்னைத் தனிநாடாகப் பிரகடனப்படுத்தி தற்காலிக அரசையும் அறிவித்தது. அரபு நாடுகள் இசுரேலைத் தாக்கத் தொடங்கின. அரபு - இசுரேல் போர் ஆரம்பமானது.
- 1955 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் உட்பட எட்டு கம்யூனிச நாடுகள் இணைந்து வார்சா உடன்பாடு எனப்படும் தற்காப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
- 1973 – ஸ்கைலேப் என்ற ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி நிலையம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
- 1976 – யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையில் நடந்த தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் வட்டுக்கோட்டைத் தீர்மானம் வெளியிடப்பட்டது.
- 1980 – எல் சல்வடோர் உள்நாட்டுப் போர்: சும்புல் ஆற்றுப் பகுதியில் 600 வரையான பொதுமக்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் (பி. 1883) · க. சண்முகம்பிள்ளை (இ. 2010) · சித்ரூபானந்தர் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மே 13 – மே 15 – மே 16
மே 15: பன்னாட்டுக் குடும்ப நாள்
- 1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
- 1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
- 1940 – இரண்டாம் உலகப் போர்: இடச்சுப் படைகள் செருமனியிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.
- 1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தைக் கலைத்தார்.
- 1985 – குமுதினி படகுப் படுகொலைகள்: நெடுந்தீவு மாவலித்துறையில் (படம்) இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
- 1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
புளிமூட்டை ராமசாமி (பி. 1912) · டி. கே. ராமமூர்த்தி (பி. 1922) · காசிவாசி செந்திநாதையர் (இ. 1924)
அண்மைய நாட்கள்: மே 14 – மே 16 – மே 17
- 1667 – யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வாக்கிய பஞ்சாங்கம் இராமலிங்க முனிவரால் வெளியிடப்பட்டது.
- 1888 – நிக்கோலா தெஸ்லா நீண்ட தூரத்திற்கு மாறுதிசை மின்னோட்டம் மூலம் மின்திறன் செலுத்தும் உபகரணம் பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார்.
- 1960 – கலிபோர்னியாவில் தியோடோர் மைமான் முதலாவது லேசர் (படம்) ஒளிக்கதிரை இயக்கினார்.
- 1966 – சீனாவில் கலாச்சாரப் புரட்சியின் ஆரம்பத்தை சீனப் பொதுவுடமைக் கட்சி அறிவித்தது.
- 1969 – சோவியத்தின் வெனேரா 5 விண்ணுளவி வெள்ளிக் கோளில் இறங்கியது.
- 1975 – பொது வாக்கெடுப்பின் அடிப்படையில் சிக்கிம் இந்தியாவின் ஒரு மாநிலமாக இணைக்கப்பட்டது.
- 1985 – தம்பிலுவில் படுகொலைகள்: இலங்கையின் தம்பிலுவில் கிராமத்தில் அடுத்த மூன்று நாட்களில் 63 வரையான தமிழ் இளைஞர்கள் சிறப்பு அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டனர்.
மதுரை வைத்தியநாத ஐயர் (பி. 1890) · கு. கலியபெருமாள் (இ. 2007) · அனுராதா ரமணன் (இ. 2010)
அண்மைய நாட்கள்: மே 15 – மே 17 – மே 18
- 1498 – வாஸ்கோ ட காமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்.
- 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றி மன்னர், ஆன் பொலின் ஆகியோரின் திருமணம் செல்லுபடியற்றதாக்கப்பட்டது.
- 1902 – கிரேக்க தொல்லியலாளர் வலேரியோசு ஸ்தாயிசு பண்டைய தொடர்முறைக் கணினி ஆன்ட்டிகித்தீரா பொறிமுறையைக் கண்டுபிடித்தார்.
- 1969 – சோவியத்தின் வெனேரா 6 விண்கலம் வெள்ளிக் கோளின் வளிமண்டலத்துள் சென்று அதனுடன் மோத முன்னர் வளிமண்டலத் தரவுகளை பூமிக்கு அனுப்பியது.
- 1983 – லெபனானில் இருந்து இசுரேல் வெளியேறுவதற்கான உடன்பாடு லெபனான், இசுரேல், அமெரிக்கா ஆகியவற்றுக்கிடையில் எட்டப்பட்டது.
- 1990 – உலக சுகாதார அமைப்பின் பொதுச்சபை தற்பால்சேர்க்கையை உளநோய்களின் பட்டியலில் இருந்து நீக்கியது.
- 2009 – தமிழினப் படுகொலை நாள். வன்னிப் போரில் பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் இலங்கை அரசபடைகளால் படுகொலை செய்யப்பட்டனர். நான்காம் கட்ட ஈழப்போர் முடிவுக்கு வந்தது (படம்).
ஞானியாரடிகள் (பி. 1873) · நகுலன் (இ. 2007) · சி. கோவிந்தன் (இ. 2014)
அண்மைய நாட்கள்: மே 16 – மே 18 – மே 19
மே 18: முள்ளிவாய்க்கால் நினைவு நாள், பன்னாட்டு அருங்காட்சியக நாள்
- 1652 – வட அமெரிக்காவிலேயே முதன் முதலில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டத்தை ரோட் தீவு கொணர்ந்தது.
- 1896 – உருசியப் பேரரசர் இரண்டாம் நிக்கலாசின் முடிசூட்டு விழாக் கொண்டாட்டத்தின் போது "கோதிங்கா" என்ற இடத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 1,389 பேர் இறந்தனர்.
- 1974 – அணுகுண்டு சோதனை: சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது.
- 1994 – இசுரேலியப் படைகள் காசாக்கரையில் இருந்து முற்றாக விலகியது. பாலத்தீனர்கள் ஆளும் உரிமையைப் பெற்றனர்.
- 2006 – நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது.
- 2009 – 26 ஆண்டுகள் நீடித்த ஈழப்போர் முடிவுக்கு வந்ததாக இலங்கை அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. இலங்கையும் அதன் நட்பு நாடுகளும் ஒருசேர 53,000 இற்கும் மேற்பட்ட பூர்வகுடி தமிழ் மக்களை கொன்ற நாள் எனத் தமிழர்கள் குற்றம் சாட்டிய நாள் (படம்)
எம். வி. வெங்கட்ராம் (பி. 1920) · ஆர். பிச்சுமணி ஐயர் (பி. 1920) · பி. எஸ். இராமையா (இ. 1983)
அண்மைய நாட்கள்: மே 17 – மே 19 – மே 20
- 1536 – இங்கிலாந்தின் எட்டாம் என்றியின் இரண்டாம் மனைவி ஆன் பொலின் (படம்) தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குட்படுத்தப்பட்டாள்.
- 1649 – இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது.
- 1743 – சான்-பியேர் கிறிஸ்தீன் செல்சியசு வெப்பநிலை அலகைக் கண்டுபிடித்தார்.
- 1802 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் செவாலியே விருதை அறிமுகப்படுத்தினார்.
- 1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: கலிபோர்னியா, நெவாடா, யூட்டா மற்றும் பல பகுதிகளை ஐக்கிய அமெரிக்காவுக்கு $15 மில்லியன்களுக்க்குக் கொடுக்க மெக்சிக்கோ முன்வந்ததை அடுத்து போர் முடிவுக்கு வந்தது.
- 1961 – சோவியத்தின் வெனேரா 1 வெள்ளிக் கோளைக் கடந்தது. பூமியை விட வேறொரு கோளைக் கடந்த முதலாவது விண்ணூர்தி இதுவாகும்.
- 1978 – விடுதலைப் புலிகள் மீதான தடை ஜே. ஆர். ஜெயவர்த்தனா அரசினால் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
பி. லீலா (பி. 1934) · ஜானகி இராமச்சந்திரன் (இ. 1996) · ஆ. பு. வள்ளிநாயகம் (இ. 2007)
அண்மைய நாட்கள்: மே 18 – மே 20 – மே 21
- 1570 – உலகின் முதலாவது நவீன நிலவரைத் தொகுப்பை நிலப்படவரைவியலாளர் ஆபிரகாம் ஓர்ட்டேலியசு வரைந்தார்.
- 1605 – உரோமைச் சேர்ந்த கத்தோலிக்க குரு தத்துவ போதக சுவாமிகள் (படம்) மதப்பரப்புனராக கோவா வந்து சேர்ந்தார்.
- 1875 – அனைத்துலக முறை அலகுகள் முறைமையை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் 17 நாடுகள் கையெழுத்திட்டன.
- 1891 – திரைப்பட வரலாறு: தாமசு ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்.
- 1927 – மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசீசின் ஹெஜாஸ், நாச்து இராச்சியங்கள் மீதான இறைமையை ஐக்கிய இராச்சியம் அங்கீகரித்தது. இவை பின்னர் சவூதி அரேபியா இராச்சியமானது.
- 1983 – எயிட்சு நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி தீ நுண்மங்களைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன.
- 2002 – 23 ஆண்டுகால இந்தோனீசிய ஆட்சி, மற்றும் மூன்றாண்டு கால ஐநாவின் தற்காலிக ஆட்சி முடிவுக்கு வந்து கிழக்குத் திமோர் விடுதலை பெற்றது.
மகாராஜபுரம் சந்தானம் (பி. 1928) · பாலு மகேந்திரா (பி. 1939) · பி. சா. சுப்பிரமணிய சாத்திரி (இ. 1978)
அண்மைய நாட்கள்: மே 19 – மே 21 – மே 22
- 1937 – ஆர்க்டிக் பெருங்கடல் பனிப்பாறைகளில் முதன் முதலில் அறிவியல் ஆய்வுகூடம் ஒன்றை சோவியத் ஒன்றியம் அமைத்தது.
- 1972 – மைக்கலாஞ்சலோவின் பியேத்தா ஓவியம் உரோம் நகரில் புனித பேதுரு பேராலயத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட அங்கேரிய நிலவியலாளர் ஒருவரால் சேதப்படுத்தப்பட்டது.
- 1991 – முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி (படம்) சென்னைக்கருகில் மனிதக் குண்டுவெடிப்பொன்றில் கொல்லப்பட்டார்.
- 1991 – எதியோப்பியாவின் கம்யூனிச அரசுத் தலைவர் மெங்கிஸ்து ஹைலி மரியாம் நாட்டில் இருந்து தப்பி வெளியேறினார். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1998 – இந்தோனேசியாவில் ஒரு வாரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து அந்நாட்டை 32 ஆண்டுகள் ஆட்சி செய்த சுகார்த்தோ அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
- 2001 – பிரான்சில் அத்திலாந்திக் அடிமை வணிகம், மற்றும் அடிமைத் தொழில்கள் மானுடத்துக்கு எதிரான குற்றங்களாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
- 2006 – செர்பியா-மொண்டெனேகுரோவில் இருந்து விலகுவதற்காக மொண்டெனேகுரோ குடியரசில் நடந்த பொது வாக்கெடுப்பில் 55% மக்கள் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சு. நடேசபிள்ளை (பி. 1895)
அண்மைய நாட்கள்: மே 20 – மே 22 – மே 23
மே 22: பன்னாட்டு பல்லுயிர் பெருக்க நாள்
- 1834 – இலங்கை சட்டவாக்கப் பேரவையின் முதலாவது கூட்டம் கொழும்பில் ஆரம்பமானது.
- 1906 – ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் (படம்) பெற்றனர்.
- 1927 – சீனாவில் சினிங் அருகே 8.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
- 1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரங்களில் 300 இலங்கைத் தமிழர்கள் சிங்களவர்களால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1960 – தெற்கு சிலியில் நிகழ்ந்த 9.5 அளவு நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலையினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
- 1972 – இலங்கை குடியரசு ஆகியது. சிலோன், ஸ்ரீலங்கா எனப் பெயர் மாற்றம் பெற்று, பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கத்துவம் பெற்றது.
- 2018 – தூத்துக்குடி படுகொலைகள்: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
உமையாள்புரம் சுவாமிநாதர் (பி. 1867) · தமிழ்வாணன் (பி. 1926) · டி. ஆர். ராமண்ணா (இ. 1997)
அண்மைய நாட்கள்: மே 21 – மே 23 – மே 24
- 1633 – இலங்கை, மட்டக்களப்பு நகரை போர்த்துக்கீசரிடம் இருந்து ஒல்லாந்தர் கைப்பற்றினர்.
- 1844 – பாரசீக மதகுரு பாப் பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பகாய் சமயத்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது.
- 1911 – நியூயார்க் பொது நூலகம் (படம்) பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.
- 1949 – பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.
- 1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.
- 1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
- 2008 – அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.
கம்பதாசன் (இ. 1973) · டி. ஏ. மதுரம் (இ. 1974) · உடுமலை நாராயணகவி (இ. 1981)
அண்மைய நாட்கள்: மே 22 – மே 24 – மே 25
மே 24: எரித்திரியா - விடுதலை நாள் (1993)
- 1607 – 100 ஆங்கிலேயக் குடியேறிகள் ஜேம்சுடவுனில் குடியேறினர். இதுவே ஆங்கிலேயர்களின் முதலாவது அமெரிக்கக் குடியேற்றம் ஆகும்.
- 1738 – ஜோன் உவெசுலி மெதடிச இயக்கத்தை ஆரம்பித்தார்.
- 1844 – முதலாவது மின்னியல் தந்திச் செய்தியை சாமுவெல் மோர்சு (படம்) வாசிங்டனில் இருந்து பால்ட்டிமோருக்கு அனுப்பினார்.
- 1883 – நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது. அந்நாளில் இதுவே மிக நீளமான தொங்கு பாலமாகும்.
- 1993 – எதியோப்பியாவிடம் இருந்து எரித்திரியா விடுதலை அடைந்தது.
- 2000 – 22 வருட முற்றுகைக்குப் பின்னர் இசுரேலியப் படையினர் லெபனானில் இருந்து வெளியேறினர்.
- 2007 – ஈழப்போர்: யாழ்ப்பாணத்தின் நெடுந்தீவில் இலங்கைக் கடற்படைத்தளத்தைக் கடற்புலிகள் தாக்கியளித்தனர்.
கண. முத்தையா (இ. 1913) · எஸ். பொன்னுத்துரை (பி. 1932) · சி. பா. ஆதித்தனார் (இ. 1981)
அண்மைய நாட்கள்: மே 23 – மே 25 – மே 26
மே 25: சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம்
- 1521 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்.
- 1660 – ஆலிவர் கிராம்வெல்-தலைமையிலான பொதுநலவாய இங்கிலாந்து ஆட்சி முடிவுக்கு வந்து, மன்னராட்சி மீண்டும் ஆரம்பமானது.
- 1914 – அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
- 1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
- 1977 – வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
- 1985 – வங்காளதேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 2008 – நாசாவின் பீனிக்சு (படம்) விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
வி. கனகசபைப் பிள்ளை (பி. 1855) · மு. சி. பூரணலிங்கம் பிள்ளை (பி. 1866) · டி. எம். சௌந்தரராஜன் (இ. 2013)
அண்மைய நாட்கள்: மே 24 – மே 26 – மே 27
- 1830 – அமெரிக்கப் பழங்குடி மக்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்டமூலத்திற்கு அமெரிக்க சட்டமன்றம் ஒப்புதல் அளித்தது. இரண்டு நாட்களின் பின்னர் அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜாக்சன் இதனை சட்டமாக்கினார்.
- 1879 – ஆப்கானிஸ்தான் அரசை உருவாக்க முடிவான கண்டமாக் உடன்பாட்டில் உருசியப் பேரரசும் ஐக்கிய இராச்சியமும் கையெழுத்திட்டன.
- 1912 – இலங்கையில் இருந்து 7 பேரைக் கொண்ட முதலாவது தொகுதி சிறைக்கைதிகள் அந்தமான் தீவுக்கு அனுப்பப்பட்டனர்.
- 1958 – இலங்கை இனக்கலவரம் கொழும்புக்குப் பரவியது. தமிழரின் வீடுகள், கடைகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர்.
- 1970 – சோவியத் துப்போலெவ் டி.யு-144 மேக் 2 ஒலிவேகத்தைத் தாண்டிய முதலாவது போக்குவரத்து வானூர்தி என்ற பெயரைப் பெற்றது.
- 1987 – யாழ்ப்பாணம் வடமராட்சியில் இலங்கை ஆயுதப்படையினரின் ஒப்பரேசன் லிபரேசன் ராணுவ நடவடிக்கை இடம்பெற்றது.
- 1998 – ஆத்திரேலியப் பழங்குடிகளை முறைகேடாக நடத்தியமைக்காக மன்னிப்புக் கேட்கும் நாள் முதல் தடவையாக தேசிய மன்னிப்புக் கேட்கும் நாள் (படம்) என்ற பெயரில் ஆத்திரேலியாவில் நினைவுகூரப்பட்டது.
மனோரமா (பி. 1937) · மா. இராசமாணிக்கனார் (இ. 1967) · ஜெகசிற்பியன் (இ. 1978)
அண்மைய நாட்கள்: மே 25 – மே 27 – மே 28
- 1703 – உருசியப் பேரரசர் முதலாம் பீட்டர் சென் பீட்டர்ஸ்பேர்க் (படம்) நகரை அமைத்தார்.
- 1930 – உலகின் உயரமான கட்டடமாக அந்நேரத்தில் கருதப்பட்ட 1046 அடி உயர கிரைசுலர் கட்டடம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது.
- 1941 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின்யின் பிஸ்மார்க் போர்க் கப்பல் வட அத்திலாந்திக்கில் மூழ்கடிக்கப்பட்டதில் 2,100 பேர் கொல்லப்பட்டனர்.
- 1958 – இலங்கை இனக்கலவரம் 1958: இலங்கையின் மேற்கே பாணந்துறையில் சிங்களவர்களினால் இந்துக் கோவில் ஒன்று எரிக்கப்பட்டு, கோவில் பூசகர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, ஊடகத் தணிக்கை அறிவிக்கப்பட்டது.
- 1967 – ஆத்திரேலியாவில் நடந்த பொது வாக்கெடுப்பில் பழங்குடிகளை மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் சேர்க்கவும், அவர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்க மக்கள் அங்கீகாரம் அளித்தனர்.
- 1971 – கிழக்குப் பாக்கித்தானில் பக்பாத்தி நகரில் வங்காள இந்துக்கள் 200 பேரை பாக்கித்தானியப் படையினர் படுகொலை செய்தனர்.
அண்மைய நாட்கள்: மே 26 – மே 28 – மே 29
- 1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு: 30,000 பேர்களுடன் 130 எசுப்பானியக் கப்பல்கள், பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
- 1802 – குவாதலூப்பில், 400 அடிமைக் கிளர்ச்சியாளர்கள் நெப்போலியனின் படைகளிடம் சரணடைவதைத் தவிர்க்கும் பொருட்டு, தம்மைத் தாமே மாய்த்தனர்.
- 1915 – சிங்கள-முஸ்லிம் கலவரம், 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து சூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
- 1956 – பிரான்சுடன் இந்தியா கையொப்பமிட்ட ஆயநிலை அளிப்பு உடன்பாட்டின்படி, புதுச்சேரி ஒன்றியத்தில் பிரெஞ்சு மொழி சட்டப்படி ஆட்சிமொழியாகத் தொடர்ந்தது.
- 1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எத்தியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1999 – இத்தாலி, மிலன் நகரில், லியொனார்டோ டா வின்சியின் புகழ் பெற்ற இரவு இராவுணவு (படம்) என்ற புகழ்பெற்ற ஓவியம் 22 ஆண்டுகள் புனரமைப்பின் பின்னர் மீண்டும் காட்சிப்படுத்தப்பட்டது.
- 2008 – 240-ஆண்டுகள் மன்னராட்சியின் பின்னர், நேபாளம் குடியரசாக அறிவிக்கப்பட்டது.
சாமுவேல் பிஸ்க் கிறீன் (இ. 1884) · ப. சுந்தரேசனார் (பி. 1914) · டி. எம். தியாகராஜன் (பி. 1923)
அண்மைய நாட்கள்: மே 27 – மே 29 – மே 30
மே 29: பன்னாட்டு அமைதி காப்போர் நாள்
- 1453 – கான்சுடன்டினோப்பிளின் வீழ்ச்சி: உதுமானிய இராணுவம் சுல்தான் இரண்டாம் முகமது தலைமையில் கான்ஸ்டண்டினோபிலை 53-நாள் முற்றுகையின் பின்னர் கைப்பற்றியது. பைசாந்தியப் பேரரசு முடிவுக்கு வந்தது.
- 1886 – மருந்தியலாளர் ஜான் பெம்பர்ட்டன் முதற் தடவையாக கொக்கக் கோலாவுக்கான விளம்பரத்தை வெளியிட்டார்.
- 1914 – புனித லாரன்சு வளைகுடாவில் எம்ப்ரெஸ் ஒஃப் அயர்லாந்து என்ற அயர்லாந்து ஆடம்பரக் கப்பல் மூழ்கியதில் 1,012 பேர் உயிரிழந்தனர்.
- 1919 – ஐன்சுடைனின் பொதுச் சார்புக் கோட்பாடு ஆர்த்தர் எடிங்டன் என்பவரால் சோதிக்கப்பட்டது. பின்னர் இது உறுதிப்படுத்தப்பட்டது.
- 1953 – எட்மண்ட் இல்லரி, செர்ப்பா டென்சிங் (படம்) இருவரும் எவரெஸ்ட் சிகரத்தை முதன் முதலில் ஏறி சாதனை படைத்தனர்.
- 1990 – போரிஸ் யெல்ட்சின் சோவியத் உருசியாவின் அரசுத்தலைவராக நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டார்.
சிவயோக சுவாமி (பி. 1872) · தருமபுரம் ப. சுவாமிநாதன் (பி. 1923) · முக்தா சீனிவாசன் (இ. 2018)
அண்மைய நாட்கள்: மே 28 – மே 30 – மே 31
- 1431 – நூறாண்டுப் போர்: பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் (படம்) ரோவென் என்ற இடத்தில் ஆங்கிலேயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நீதிமன்றத்தினால் உயிருடன் தீ வைக்கப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டாள்.
- 1814 – நெப்போலியப் போர்கள்: பாரிசு உடன்பாடு எட்டப்பட்டது. பிரெஞ்சு எல்லைகள் 1792 இல் இருந்தவாறு மாற்றியமைக்கப்பட்டது. முதலாம் நெப்போலியன் எல்பாவிற்கு நாடு கடத்தப்பட்டான்.
- 1815 – இலங்கையிலிருந்து காயப்பட்ட போர்வீரர்களை ஏற்றி வந்த பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆர்னிஸ்டன் என்ற கப்பல் தென்னாபிரிக்காவுக்கு அருகில் அகுல்யாசு முனையில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த 378 பேரில் 372 பேர் உயிரிழந்தனர்.
- 1845 – திரினிடாட் டொபாகோவுக்கு முதல் தொகுதி இந்தியர்கள் பட்டேல் ரசாக் கப்பலில் வந்திறங்கினர்.
- 1966 – முன்னாள் கொங்கோ பிரதமர் எவரீஸ்டே கிம்பா மற்றும் பல அரசியல் தலைவர்கள் கின்சாசா நகரில் அரசுத்தலைவர் யோசப் மொபுட்டுவின் ஆணையின் படி பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டார்கள்.
- 1981 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் போது அரசுத்தலைவர் சியாவுர் ரகுமான் இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஒய். வி. ராவ் (பி. 1903) · பாம்பன் சுவாமிகள் (இ. 1929) · சுந்தர ராமசாமி (பி. 1931)
அண்மைய நாட்கள்: மே 29 – மே 31 – சூன் 1
மே 31: புகையிலை எதிர்ப்பு நாள்
- 1859 – வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் பிக் பென் (படம்) மணிக்கூண்டுக் கோபுரம் இயங்க ஆரம்பித்தது.
- 1902 – நான்கு குடியேற்ற நாடுகளை ஒன்றிணைத்து தென்னாபிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது. இதே நாளில் 1961 இல் இது பொதுநலவாய அமைப்பில் இருந்து விலகி தென்னாபிரிக்கக் குடியரசு ஆனது.
- 1970 – பெருவில் இடம்பெற்ற 7.9 அளவு நிலநடுக்கத்தில் யூங்கே என்ற நகர் முழுமையாகப் புதையுண்டதில் 70,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
- 1973 – சென்னையில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்சு விமானம் 440 பாலம் விமான நிலையத்தை அண்மித்த போது தீப்பற்றி எரிந்ததில் அதில் பயணம் செய்த 65 பேரில் 48 பேர் உயிரிழந்தனர்.
- 1981 – யாழ் நகரின் பல கட்டடங்கள், வாகனங்கள் நள்ளிரவில் இலங்கைக் காவல்துறையினரால் எரித்து அழிக்கப்பட்டன. யாழ் பொது நூலகம் அடுத்த நாள் தென்னிலங்கைக் குண்டர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
- 2004 – ஈழப்போர்: பத்திரிகையாளர் ஐயாத்துரை நடேசன் மட்டக்களப்பில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நீலாவணன் (பி. 1931) · அ. ஜெ. வில்சன் (இ. 2005) · எசு. எம். கமால் (இ. 2007)
அண்மைய நாட்கள்: மே 30 – சூன் 1 – சூன் 2