உள்ளடக்கத்துக்குச் செல்

எலிசபெத் போவ்சு-லயோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எலிசபெத் போவ்சு-லயோன்
1986இல் லிசபெத் போவ்சு-லயோன்
லிசபெத் போவ்சு-லயோன்
ஐக்கிய இராச்சியத்தினதும், ஏனைய மேலாட்சிகளின் உடனுறை துணைவி
ஆட்சிக்காலம்11 திசம்பர் 1936 –
6 பெப்பிரவரி 1952
முடிசூடல்12 மே 1937
இந்தியாவின் பேரரசி துணைவி
ஆட்சிக்காலம்11 திசம்பர் 1936 –
15 ஆகத்து 1947
பிறப்புஎலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன்
(1900-08-04)4 ஆகத்து 1900
ஹிட்சின் அல்லது இலண்டன் இங்கிலாந்து, ஐக்கிய இராச்சியம்
இறப்பு30 மார்ச்சு 2002(2002-03-30) (அகவை 101)
ராயல் லாட்ஜ், வின்சர், பெர்க்ஷயர், ஐக்கிய இராச்சியம்
புதைத்த இடம்9 ஏப்பிரல் 2002
கிங் ஜார்ஜ் VI மெமோரியல் சேப்பல்,புனித ஜார்ஜ் தேவாலயம்
துணைவர்
[[ஐக்கிய இராச்சியத்தின் ஆறாம் ஜோர்ஜ் |ஆறாம் ஜார்ஜ்]] (தி. 1923)
குழந்தைகளின்
பெயர்கள்
பெயர்கள்
எலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன்
மரபுபோவ்சு-லயோன் குடும்பம்
தந்தைக்ளாட் போவ்ஸ் - லயோன், லார்டு க்ளாமிஸ்
தாய்சிசிலியா கேவண்டிஷ் - பெண்டின்ங்
அரசர் ஜியார்ஜ் VI மற்றும் இராணி எலிஸபெத் , 1939

எலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன் (Elizabeth Angela Marguerite Bowes-Lyon) (4 ஆகத்து 1900 – 30 மார்ச்சு 2002) ஆறாம் ஜார்ஜ் மன்னரின் மனைவியாவார். மேலும் எலிஸபெத் அரசி மற்றும் இளவரசி மார்க்ரெட் ஆகியோரின் தாயும் ஆவார். இவர் ஐக்கிய ராச்சியத்தின் இராணியும் ஆவார். 1923 ஆம் ஆண்டில் ஜியார்ஜ் V அரசர் மேரி இராணியின் மகனை மணந்தார். 1936 ஆம் ஆண்டில் இவரது கணவரின் சகோதரர் எட்வர்ட்VIII அமெரிக்கவின் வாலிஸ் எட்வர்டை திருமணம் செய்ததால் இவரது கணவர் அரசரானார். எனவே இவர் ஐக்கிய ராச்சியத்தின் இராணியாக முடிசூட்டப்பட்டார்.

இளமைக்காலம்

[தொகு]

எலிஸபெத் ஏஞ்ஜெலா மார்க்ரெட் போவ்ஸ் லயோன் அவரது பெற்றோருக்குப் பிறந்த பத்துக் குழந்தைகளில் ஒன்பதாவது குழந்தை ஆவார். இவரது பெற்றோர் க்ளாட் போவ்ஸ் - லயோன், லார்டு க்ளாமிஸ் மற்றும் சிசிலியா கேவண்டிஷ் - பெண்டின்ங் ஆவர்.  இவர் பிறந்த இடம் பற்றிய தகவல் இதுவரை சரியாகத் தெரியவில்லை, இருந்தாலும் இவர் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் எனும் இடத்தில் அல்லது மருத்துவமனைக்கு அவரசர ஊர்தியில் செல்லும்போது  அல்லது இலண்டனின் போர்ப்ஸ் ஹவுஸ் அல்லது லூஸியா ஸ்காட்டில் பிறந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். கிட்சின் ஹெர்ட்போர்ஷ்யரில் இவரது பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. 1900 செப்டம்பர் 30 அன்று உள்ளூர் தேவாலயத்தில் ஞானஸ்தானம் செய்யப்பட்டது. இவரது 14 வது பிறந்தநாளில் இங்கிலாந்து ஜெர்மனியின் மீதான போரை அறிவித்தது. இவரது நான்கு சகோதரர்களும் போரில் பங்குபெற்றனர்.

கல்வி

[தொகு]

தன் இளவயது வாழ்க்கையில் பெரும்பகுதியை செயிண்ட் பால் வால்டன் எனும் கிராமத்தில் கழித்தார். அவரது எட்டாவது வயதுவரை வீட்டிலிருந்தே கல்வி கற்றார். பின்னர் இலண்டன் சென்று கல்வி பயின்றார். இவர் இலக்கியத்தினையும் விவிலியத்தையும் ஆர்வமுடன் கற்றார்.

திருமணம்

[தொகு]

ஜார்ஜ் V அரசரின் இரண்டாம் மகனான இளவரசர் ஆல்பட் இவரைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விருப்பத்தினைத் தெரிவித்த போது இவர் ஏற்க மறுத்துவிட்டார். 1922 பெப்ருவரி மாதம் நடந்த இளவரசர் ஆல்பட்டின் சகோதரியின் திருமணத்தின் போதும் இளவரசர் ஆல்பட் இவரிடம் தன் திருமண வேட்கையை வெளிப்படுத்தினார்.[1] பின்னர் இளவரசர் ஆல்பட் வேறு யாரையும் மணப்பதில்லை என அறிவித்ததும் அவரது தாயார் இராணி மேரி இவரைக் கண்டு பேசி திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார்.[2] அதன் பின்னர் 26 ஏப்ரல் 1923 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது.[3] திருமணத்தின் பின்னான விருந்தை புகழ்பெற்ற சமையல் நிபுணர் கேப்ரியல் ட்சுமி (Gabriel Tschumi) தயாரித்திருந்தார். 1984 ஆம் ஆண்டில் இவருக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வாழ்க்கை நிகழ்வுகள்

[தொகு]
பெயர் பிறப்பு இறப்பு திருமணம் அவர்களின் குழந்தைகள் அவர்களின் பேரக் குழந்தைகள்
தியதி வாழ்க்கைத் துணை
எலிஸெபெத் II 21 ஏப்ரல் 1926 20 மார்ச்சு 2002 20 நவம்பர் 1947 இளவரசர் பிலிப் - ஸ்காட்லாந்து வேல்ஸ் இளவரசர் சார்லஸ் இளவரசர் வில்லியம் - கேம்பிரிட்ஜ்
இளவரசர் ஹரி - வேல்ஸ்
இளவரசி அன்னி பீட்டர் பிலிப்ஸ்
ஸாரா டிண்டால்
இளவரசர் ஆண்ட்ரூ - யார்க் இளவரசி பீட்ரைஸ் - யார்க்
இளவரசி யூஜின் - யார்க்
இளவரசர் எட்வர்ட் - வெஸ்ஸெக்ஸ் லேடி லூயிஸ் விண்ஸார்
ஜேம்ஸ்
இளவரசி மார்கரெட் 21 ஆகஸ்ட் 1930 9 பிப்ரவரி 2002 6 மே 1960

விவாகரத்து 11 ஜூலை 1978

ஆண்டனி ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ், ஸ்னோடனின் முதல் ஏர்ல் டேவிட் ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ், ஸ்னோடனின் 2வது ஏர்ல் சார்லஸ் ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ், விஸ்கவுண்ட் லின்லி

லேடி மார்கரிட்டா ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ்

லேடி சாரா சாட்டோ சார்லஸ் ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ், விஸ்கவுண்ட் லின்லி

லேடி மார்கரிட்டா ஆம்ஸ்ட்ராங்-ஜோன்ஸ்

மரணம்

[தொகு]

30 மார்ச்சு 2002 ஆம் ஆண்டு மதியம் 3:15 மணியளவில் இவர் ராயல் லாட்ஜ், விண்ட்ஸார் பார்க்கில் மரணமடைந்தார். இறப்பதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பிருந்தே காய்சலால் பாதிக்கப்பட்டார். ஐக்கிய ராச்சியத்தில் மிக அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த இராணி இவராவார். 101 ஆண்டுகள் 238 நாட்கள் உயிர் வாழ்ந்தார். தூக்கத்திலேயே இவரது உயிர் பிரிந்தது. பத்து இலட்சத்திற்கும் அதிகமான ஐக்கிய ராச்சியத்து மக்கள் இவரது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட தொலைவான 37 கிலோமீட்டர்கள் சாலை ஓரங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Ezard, John (1 April 2002), "A life of legend, duty and devotion", The Guardian, p. 18
  2. Airlie, Mabell (1962), Thatched with Gold, London: Hutchinson, p. 167
  3. Rayment, Sean (1 May 2011), "Royal wedding: Kate Middleton's bridal bouquet placed at Grave of Unknown Warrior", The Telegraph, பார்க்கப்பட்ட நாள் 20 August 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=எலிசபெத்_போவ்சு-லயோன்&oldid=3712677" இலிருந்து மீள்விக்கப்பட்டது