உள்ளடக்கத்துக்குச் செல்

பிக் பென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிக் பென்

பிக் பென் (Big Ben) என்பது இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில் வடக்கு முனையில் அமைந்திருக்கும் ஒரு மணிக்கூடு[1]. நான்கு-பக்கங்கள் கொண்ட மணிக்கூடுகளில் இதுவே உலகின் மிகப் பெரியதும், உலகின் மூன்றாவது மிகப் பெரிய மணிக்கூண்டுக் கோபுரமும் ஆகும்[2]. இம்மணிக்கூடு 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது[3].

இங்கிலாந்தில் பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலி, ஒளிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சரியான கால அளவு ‘பிக் பென்’னின் மணியோசைதான். இரண்டாம் உலகப் போரின் போது, இதைக் குண்டு வீசித் தகர்க்க, செருமனி எவ்வளவோ முயன்றும், அது பலிக்கவில்லை.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Story of Big Ben". Whitechapel Bell Foundry. பார்க்கப்பட்ட நாள் 2008-10-19.
  2. "25 tallest clock towers/government structures/palaces" (PDF). Council on Tall Buildings and Urban Habitat. January 2008. Archived from the original (PDF) on 2008-10-30. பார்க்கப்பட்ட நாள் 2008-08-09.
  3. Join in the anniversary celebrations, United Kingdom Parliament, archived from the original on 2009-02-02, பார்க்கப்பட்ட நாள் 2011-03-25
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிக்_பென்&oldid=3563298" இலிருந்து மீள்விக்கப்பட்டது