நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை
Obama and Biden await updates on bin Laden.jpg
தாக்குதல் குறித்த தகவல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கும் அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக் ஒபாமா மற்றும் அவரது அமைச்சரவையின் உயரதிகாரிகள்
காலம் மே 1, 2011
இடம் அப்பாட்டாபாத்,பாக்கித்தான்
முடிவு பின்லாடன் கொலை
அணிகள்
அமெரிக்க அரசு அல் காயிதா அமைப்பு

நெப்டியூன் இசுப்பியர் நடவடிக்கை (நெப்டியூன் ஸ்பியர் நடவடிக்கை, Operation Neptune Spear) என்பது 2011 மே 1 இல் பாக்கித்தான் அப்பாட்டாபாத்த்தின் நகர்ப்பகுதியில் மறைந்திருந்த அல்கொய்தா அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லாடனை இலக்கு வைத்து அமெரிக்க இராணுவத்தால் நடத்தப்பட்ட நடவடிக்கை ஆகும். கண்காணிப்புக்குப் புலப்படாத அதிநவீன உலங்கு வானூர்திகள் மூலம் பில் லாடன் தங்கியிருந்த வீட்டைத் தாக்கிய அமெரிக்க ”நேவி சீல்” அதிரடிப்படையினர், பில் லாடனை சுட்டுக் கொன்றனர். அவரது உடல் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு கடலில் அடக்கம் செய்யப்பட்டது.

பின்னணி[தொகு]

செப்டெம்பர் 11, 2001 இல் அமெரிக்கவின் மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின் அதன் சூத்திரதாரியாகக் கருதப்பட்ட பின் லாடனையும் அல் கொய்தா இயக்கத்தையும் அழிப்பதற்கு அமெரிக்கா முனைப்பெடுத்தது. ஆப்கானித்தானின் டோரா போரா மலைத்தொகுதியில் பின் லாடன் மறைந்திருப்பதாகக் கருதி பாரிய புலனாய்வு மற்றும் தாக்குதல் நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டது. 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான காலித் சேக் முகம்மத் கைது செய்யப்பட்ட பின் பின் லாடனின் முக்கியத்தர்கள் பற்றிய தகவல்கள் கசிந்தன.[1] அல்கொய்தா அமைப்பின் முக்கியமான பின் லாடனின் நம்பிக்கைக்குரிய நபராக அல்-குவைதா பற்றி புலனாய்வுத் துறை அறிந்தது. அல்-குவைதியின் நடமாட்டம் அப்பாட்டாபாத்துக்கு அருகில் அவதானிக்கப்பட்டது.[1] இதுவே பாக்கித்தான் மீது அமெரிக்க புலனாய்வுத் துறையின் கண்காணிப்பைத் திசை திருப்பியது.

தாக்குதல்[தொகு]

அமெரிக்க சீல் படையினர் இரண்டு உலங்கு வானூர்திகளில் பின் லாடன் வசித்த கட்டிடத்தினுள் தரையிறங்கித் தாக்குதல் நடத்தப்பட்டது.

உதவி[தொகு]

பின்லேடனின் இருப்பிடம் பற்றிய தகவலை ஷாகில் அஃப்ரிதி என்பவர் கொடுத்ததாக சி.ஐ.ஏ தெரிவித்தது. தற்போது இவரின் வழக்கறிஞர் சமயுல்லா அஃப்ரிதி என்பவரை தாலிபான்கள் 2015ஆம் ஆண்டு 17ம் தேதி மார்ச் மாதம் பாகிஸ்தானின் பெஷாவார் நகரில் சுட்டுக்கொன்றனர். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ஒப்பரேசன் ஜேரொனிமோ, சமகால அரசியல், வீரகேசரி வாரவெளியீடு,08.05.2011,
  2. பின் லேடனை பிடிக்க அமெரிக்காவுக்கு உதவிய வழக்கறிஞர் சுட்டுக் கொலை