விக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஆகத்து
ஆண்டு நிறைவுகள்/இந்தநாளில் தொகுப்பு
சனவரி - பெப்பிரவரி - மார்ச் - ஏப்ரல் - மே - சூன் - சூலை - ஆகத்து - செப்டம்பர் - அக்டோபர் - நவம்பர் - திசம்பர்
இப்போது 10:23 மணி வெள்ளி, திசம்பர் 13, 2024 (UTC) - இப்பக்கத்தின் தேக்கத்தை நீக்க
ஆகத்து 1: விடுதலை நாள் - பெனின்
- 1774 – பிரித்தானிய அறிவியலாளர் சோசப்பு பிரீசிட்லி ஆக்சிசன் வளிமத்தைக் கண்டுபிடித்தார்.
- 1800 – பெரிய பிரித்தானிய இராச்சியம், அயர்லாந்து இராச்சியம் ஆகியன பெரிய பிரித்தானியா, அயர்லாந்து ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைந்தன.
- 1834 – பிரித்தானியப் பேரரசில் அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
- 1907 – சாரணிய இயக்கத்தின் முதல் பாசறையை பேடன் பவல் (படம்) இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆரம்பித்து வைத்தார்.
- 1952 – தொடருந்து நிலையங்களில் இந்தி அழிப்புப் போராட்டத்தை தந்தை பெரியார் துவக்கி வைத்தார்.
- 1974 – சைப்பிரசை இரண்டு வலயங்களாகப் பிரிக்க ஐநா அமைதிகாக்கும் படையினருக்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை அனுமதி வழங்கியது.
டைகர் வரதாச்சாரியார் (பி. 1876) · பால கங்காதர திலகர் (இ. 1920) · மு. இராமலிங்கம் (இ. 1974)
அண்மைய நாட்கள்: சூலை 31 – ஆகத்து 2 – ஆகத்து 3
- 1858 – இந்தியாவில் கம்பனி ஆட்சி முடிவுக்கு வந்து பிரித்தானிய அரச ஆட்சி நடைமுறைக்கு வந்தது.
- 1870 – உலகின் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
- 1934 – இட்லர் செருமனியின் அரசுத்தலைவரானார்.
- 1939 – அணுவாயுதத்தை தயாரிக்க உதவும் மன்காட்டன் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ சிலார்ட் ஆகியோர் அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டிற்குக் கடிதம் எழுதினார்கள் (படம்).
- 1989 – வல்வெட்டித்துறைப் படுகொலைகள்: யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இந்திய இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் உட்பட 63 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.
- 1990 – ஈராக் குவைத்தின் மீது படையெடுத்தது. வளைகுடாப் போர் ஆரம்பமானது.
ஆபிரகாம் பண்டிதர் (பி. 1859) · தனிநாயகம் அடிகள் (பி. 1913) · சக்தி அ. பாலஐயா (இ. 2013)
அண்மைய நாட்கள்: ஆகத்து 1 – ஆகத்து 3 – ஆகத்து 4
- 70 – எருசலேமில் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதை அடுத்துக் கிளம்பிய தீ (படம்) அணைக்கப்பட்டது.
- 1857 – சிப்பாய்க் கிளர்ச்சி: அரா என்ற இடத்தில் 10,000 இற்கும் அதிகமானோர் எட்டு நாட்களாக முற்றுகையிட்டிருந்த 68 பிரித்தானியப் படைகளுடனான ஒரு வலுவான கோட்டை விடுவிக்கப்பட்டது.
- 1858 – இலங்கை தொடருந்து சேவையை ஆளுநர் சேர் என்றி வார்டு ஆரம்பித்து வைத்தார்.
- 1936 – உருசியாவின் ரியாசன் மாகாணத்தில் தொழிற்துறைக் குடியிருப்பு ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 1,200 பேர் உயிரிழந்தனர்.
- 1990 – கிழக்கிலங்கையில் காத்தான்குடியில் முசுலிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் பெண்கள், குழந்தைகள் உட்பட 103 பேர் கொல்லப்பட்டனர்.
- 2006 – திருகோணமலை தோப்பூர் அல் நூராப் பாடசாலையில் தங்கியிருந்த பொதுமக்கள் 12 பேர் இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் கொல்லப்பட்டனர்.
- 2014 – சீனாவின் யுன்னான் மாகாணத்தில் இடம்பெற்ற 6.1 அளவு நிலநடுக்கத்தில் 617 பேர் உயிரிழந்தனர், 2,400 பேர் காயமடைந்தனர்.
அண்மைய நாட்கள்: ஆகத்து 2 – ஆகத்து 4 – ஆகத்து 5
- 1783 – சப்பானில் அசாமா எரிமலை வெடித்ததில் 1,400 பேர் உயிரிழந்தனர். பஞ்சம் காரணமாக மேலும் 20,000 இழப்புகள் ஏற்பட்டன.
- 1944 – பெரும் இன அழிப்பு: டச்சு உளவாளி ஒருவனால் காட்டிக் கொடுக்கப்பட்ட நிலையில், யூத நாட்காட்டிக் குறிப்பாளர் ஆன் பிராங்க் (படம்) மற்றும் அவரது குடும்பத்தினர் கைது செய்யப்பட்டனர்.
- 1972 – உகாண்டாவின் இராணுவத் தலைவர் இடி அமீன் அங்கு வாழும் ஆசிய நாட்டவர்கள் அனைவரையும் 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.
- 1972 – சிம்லா ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1987 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் யாழ்ப்பாணம் சுதுமலையில் முதன் முதலில் மக்கள் முன் தோன்றி உரையாற்றினார்.
- 2006 – திருகோணமலை நிவாரணப் பணியாளர்கள் படுகொலை: வறுமைக்கு எதிரான அமைப்பு என்ற பிரெஞ்சு அரச சார்பற்ற அமைப்பின் 17 தமிழ்ப் பணியாளர்கள் மூதூரில் இலங்கை இராணுவத்தினரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
பொன். கணேசமூர்த்தி (இ. 2006) · ச. அகத்தியலிங்கம் (இ. 2008)
அண்மைய நாட்கள்: ஆகத்து 3 – ஆகத்து 5 – ஆகத்து 6
ஆகத்து 5: புர்கினா பாசோ - விடுதலை நாள் (1960)
- 1305 – இங்கிலாந்துக்கு எதிராக இசுக்காட்லாந்துக் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்த வில்லியம் வேலசு கிளாஸ்கோ அருகில் கைது செய்யப்பட்டு லண்டனுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தூக்கிலிடப்பட்டார்.
- 1806 – பிரித்தானிய இலங்கையில் முகமதியர்களுக்கான திருமணச் சட்ட விதிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: ஆத்திரேலியாவில் 1,104 சப்பானியப் போர்க் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பிச் சென்றனர், இவர்களில் பலர் பின்னர் கொல்லப்பட்டோ, தற்கொலை செய்தோ மாண்டனர்.
- 1962 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: 17 மாதத் தேடுதலின் பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார். இவர் 1990 வரை விடுவிக்கப்படவில்லை.
- 1962 – அமெரிக்க நடிகை மரிலின் மன்றோ (படம்) லாசு ஏஞ்சலசில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.
- 1965 – பாக்கித்தானியப் படையினர் எல்லைக் கோட்டைத் தாண்டி உட்புகுந்ததை அடுத்து, இந்திய-பாக்கித்தான் போர் ஆரம்பமானது.
ராஜமாணிக்கம் பிள்ளை (பி. 1898) · சந்திரபாபு (பி. 1927) · கே. ஆர். ராமசாமி (இ. 1971)
அண்மைய நாட்கள்: ஆகத்து 4 – ஆகத்து 6 – ஆகத்து 7
ஆகத்து 6: பொலிவியா (1825), ஜமேக்கா (1962) - விடுதலை நாள்
- 1806 – கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
- 1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் இரோசிமா நகர் மீது அமெரிக்கா லிட்டில் பாய் (படம்) என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
- 1990 – திராய்க்கேணி படுகொலைகள்: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1991 – உலகளாவிய வலை தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
- 2001 – ஏர்வாடி தீ விபத்து: தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
ஆழிக்குமரன் ஆனந்தன் (இ. 1984) · வியட்நாம் வீடு சுந்தரம் (இ. 2016)
அண்மைய நாட்கள்: ஆகத்து 5 – ஆகத்து 7 – ஆகத்து 8
- 1906 – கல்கத்தாவில் வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது முதல் இந்திய தேசியக் கொடி (படம்) உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
- 1933 – ஈராக்கில் சிமேல் கிராமத்தில் 3,000 அசிரியர்கள் ஈராக்கிய அரசால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1944 – ஆர்வர்டு மார்க் I என்ற முதலாவது நிரல் மூலம் கட்டுப்படுத்தப்பட்ட கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது.
- 1955 – சோனி தனது முதலாவது டிரான்சிஸ்டர் வானொலிகளை சப்பானில் விற்பனைக்கு விட்டது.
- 1976 – வைக்கிங் 2 விண்கலம் செவ்வாயின் சுற்று வட்டத்துள் சென்றது.
- 1987 – லினி காக்சு பெரிங் நீரிணையைக் கடந்து, அமெரிக்காவில் இருந்து சோவியத் ஒன்றியம் வரை நீந்திய முதல் மனிதர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
உமறுப் புலவர் (பி. 1642) · வாணிதாசன் (இ. 1974) · மு. கருணாநிதி (இ. 2018)
அண்மைய நாட்கள்: ஆகத்து 6 – ஆகத்து 8 – ஆகத்து 9
- 1509 – விஜயநகரப் பேரரசராக கிருஷ்ணதேவராயன் (படம்) சித்தூரில் முடிசூடினார். இவரது ஆட்சிக் காலமே பேரரசின் மிக உயர்ந்த நிலை ஆகக் கருதப்படுகிறது.
- 1848 – மாத்தளை கிளர்ச்சி: இலங்கையில் பிரித்தானியருக்கு எதிராக கிளர்ச்சி செய்த வீரபுரன் அப்பு தூக்கிலிடப்பட்டான்.
- 1908 – வில்பர் ரைட் தனது முதலாவது வான்பயணத்தை பிரான்சில் மேற்கொண்டார். இதுவே ரைட் சகோதரர்களின் முதலாவது வான் பயணமாகும்.
- 1919 – ஆப்கானித்தானுக்கும், ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையே துராந்து எல்லைக்கோடு தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
- 1942 – இந்திய தேசிய காங்கிரசு பம்பாயில் கூட்டிய மாநாட்டில் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.
- 1990 – ஈராக் குவைத்தைக் கைப்பற்றி அதனைத் தன்னுடன் இணைத்துக் கொண்டது. சில நாட்களில் வளைகுடாப் போர் ஆரம்பமானது.
அழகசுந்தரம் (பி. 1873) · அ. ந. கந்தசாமி (பி. 1924) · உமையாள்புரம் சுவாமிநாதர் (இ. 1946)
அண்மைய நாட்கள்: ஆகத்து 7 – ஆகத்து 9 – ஆகத்து 10
ஆகத்து 9: பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் · சிங்கப்பூரின் தேசிய நாள்
- 1329 – இந்தியாவின் முதலாவது கிறித்தவ மறைமாவட்டம் கேரளத்தில் கொல்லம் நகரில் ஆரம்பிக்கப்பட்டது. யோர்தானுசு என்ற பிரான்சியர் முதலாவது பேராயராக நியமிக்கப்பட்டார்.
- 1892 – தாமசு ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானில் நாகசாகி நகர் மீது ஐக்கிய அமெரிக்கா கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டை வீசியதில் (படம்) 35,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு தனி நாடாக்கப்பட்டது.
- 1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அரசுத்தலைவர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார். அவரது துணைத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் அரசுத்தலைவரானார்.
- 1992 – மயிலந்தனைப் படுகொலைகள்: இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டம், மயிலந்தனை என்ற கிராமத்தில் 39 தமிழர் இலங்கைப் படைத்துறையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
ஈ. கிருஷ்ண ஐயர் (பி. 1897) · சிசு நாகேந்திரன் (பி. 1921) · பஞ்சு அருணாசலம் (இ. 2016)
அண்மைய நாட்கள்: ஆகத்து 8 – ஆகத்து 10 – ஆகத்து 11
ஆகத்து 10: எக்குவாடோர் - விடுதலை நாள்
- 1741 – குளச்சல் போர்: திருவிதாங்கூர் மன்னர் மார்த்தாண்ட வர்மர் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் படையினரைத் தோற்கடித்தார். (படம்).
- 1792 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டார். அவரது பாதுகாப்புப் படையினர் பாரிசு தீவிரவாதக் கும்பலால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1793 – உலகில் அதிகம் பேர் பார்வையிடும் இலூவா அருங்காட்சியகம் பாரிசில் திறந்து வைக்கப்பட்டது.
- 1948 – சவகர்லால் நேரு இந்திய அணுசக்திப் பேரவையைத் துவக்கி வைத்தார்.
- 1961 – வியட்நாம் போர்: அமெரிக்க இராணுவம் தென் வியட்நாமில் வியட்கொங் படைகளுக்கு உணவுப் பஞ்சத்தை ஏற்படுத்துவதற்காக 76,000 மீ3 இலையுதிர்ப்பிகளையும், களைக்கொல்லிகளையும் அங்கு வீசியது.
- 1990 – மகெலன் விண்கலம் வெள்ளிக் கோளை அடைந்தது.
பிலிப்பு தெ மெல்லோ (இ. 1790) · சாவி (பி. 1916) · க. துரைரத்தினம் (பி. 1930)
அண்மைய நாட்கள்: ஆகத்து 9 – ஆகத்து 11 – ஆகத்து 12
- கிமு 3114 – பல முன்-கொலம்பிய இடையமெரிக்கப் பண்பாடுகள், குறிப்பாக மாயா நாகரிகம் ஆகியன பயன்படுத்திய இடையமெரிக்க நீண்ட கணக்கீட்டு நாள்காட்டி ஆரம்பம்.
- 1786 – மலேசியாவில் பினாங்கில் கப்டன் பிரான்சிஸ் லையிட் பிரித்தானியக் குடியேற்றத்தை ஆரம்பித்தார்.
- 1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
- 1961 – இந்தியாவின் முன்னாள் போர்த்துக்கீசப் பகுதிகளான தாத்ரா, நகர் அவேலி ஆகியன இணைக்கப்பட்டு தாத்ரா மற்றும் நகர் அவேலி என்ற ஒன்றியப் பகுதி ஆக்கப்பட்டது.
- 1972 – வியட்நாம் போர்: அமெரிக்காவின் கடைசித் தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டு வெளியேறினர்.
- 2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை (படம்) மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர். 2009 இலேயே மீண்டும் திறக்கப்பட்டது.
ஜெ. எம். நல்லுசாமிப் பிள்ளை (இ. 1920) · கி. லோகநாதன் (பி. 1940)
அண்மைய நாட்கள்: ஆகத்து 10 – ஆகத்து 12 – ஆகத்து 13
ஆகத்து 12: அனைத்துலக இளையோர் நாள்
- 1765 – இந்தியத் துணைக்கண்டத்தில் கம்பனி ஆட்சியைக் காலூன்ற வழி வகுக்கப்பட்ட அலகாபாத் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
- 1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாப்பிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
- 1977 – இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்து ஒரு மாதத்திற்குள் தமிழர்கள் மீது இனப்படுகொலைகள் நடத்தப்பட்டதில் 300 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி (படம்) வெளியிடப்பட்டது.
- 1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2005 – இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
சீர்காழி இரா. அரங்கநாதன் (பி. 1892) · க. அ. நீலகண்ட சாத்திரி (பி. 1892) · ஏ. வி. மெய்யப்பன் (இ. 1979)
அண்மைய நாட்கள்: ஆகத்து 11 – ஆகத்து 13 – ஆகத்து 14
ஆகத்து 13: பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள்
- 1792 – பிரான்சின் பதினாறாம் லூயி மன்னர் கைது செய்யப்பட்டு மக்களின் எதிரி என அறிவிக்கப்பட்டார்.
- 1905 – சுவீடனில் இருந்து பிரிவதற்கு ஆதரவாக நோர்வே மக்கள் வாக்களித்தனர்.
- 1961 – பனிப்போர்: கிழக்கு செருமனி தனது குடிமக்கள் தப்பிச் செல்லாதவாறு பெர்லினின் கிழக்கு, மேற்கு எல்லையை மூடி பெர்லின் சுவரைக் கட்ட ஆரம்பித்தது. (படம்)
- 2004 – 156 கொங்கோ துட்சி அகதிகள் புருண்டியில் படுகொலை செய்யப்பட்டனர்.
- 2006 – புனித பிலிப் நேரி தேவாலயத் தாக்குதல்: யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டி தேவாலயத்தின் மீது இலங்கை இராணுவத்தினரின் எறிகணை வீச்சில் 18 பேர் கொல்லப்பட்டனர், 54 பேர் காயமடைந்தனர்.
- 2010 – 380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் என மொத்தம் 492 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் எம்வி சன் சீ என்ற தாய்லாந்து சரக்குக் கப்பல் கனடாவின் பிரிட்டிசு கொலம்பியா மாகாணத்தை வந்தடைந்தது.
எஸ். வரலட்சுமி (பி. 1927) · ஸ்ரீதேவி (பி. 1963)
அண்மைய நாட்கள்: ஆகத்து 12 – ஆகத்து 14 – ஆகத்து 15
- 1480 – இத்தாலியின் தெற்கே ஒத்ராந்தோ நகரில் இசுலாமுக்கு மதம் மாற மறுத்த 800 கிறித்தவர்கள் உதுமானியர்களால் கழுத்து துண்டிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் பின்னர் திருச்சபையினால் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.
- 1880 – 1248-இல் கட்ட ஆரம்பிக்கப்பட்ட கோல்ன் கதீட்ரல் (படம்) செருமனியின் கோல்ன் நகரில் கட்டி முடிக்கப்பட்டது.
- 1936 – ஐக்கிய அமெரிக்காவில் கடைசித் தடவையாக பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளின் நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டு சப்பான் சரணடைய ஒப்புக் கொண்டது. பசிபிக் போர் முடிவுக்கு வந்தது.
- 1947 – பாக்கித்தான் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
- 2006 – செஞ்சோலைக் குண்டுவீச்சுத் தாக்குதல், 2006: முல்லைத்தீவு செஞ்சோலை சிறார் இல்லம் மீது இலங்கை வான்படை நடத்திய விமானத் தாக்குதலில் 61 சிறுமிகள் கொல்லப்பட்டு 60 பேர் படுகாயமடைந்தனர்.
வெ. ப. சுப்பிரமணிய முதலியார் (பி. 1857) · வேதாத்திரி மகரிசி (பி. 1911) · நா. முத்துக்குமார் (இ. 2016)
அண்மைய நாட்கள்: ஆகத்து 13 – ஆகத்து 15 – ஆகத்து 16
ஆகத்து 15: இந்தியா (1947), காங்கோ (1960), தென் கொரியா (1948) - விடுதலை நாள்
- 1511 – போர்த்துகல்லின் அபோன்சோ டி அல்புகெர்க்கே மலாக்கா சுல்தானகத்தின் தலைநகர் மலாக்காவைக் கைப்பற்றினார்.
- 1534 – லொயோலா இஞ்ஞாசியும் அவரது ஆறு தோழர்களும் ஆரம்ப உறுதியை எடுத்தனர். இது 1540 செப்டம்பரில் இயேசு சபை உருவாகக் காரணமானது.
- 1947 – இந்தியா 190-ஆண்டு கால பிரித்தானிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று, பொதுநலவாயத்தில் இணைந்தது.
- 1945 – இரண்டாம் உலகப் போர்: பேரரசர் இறோகித்தோ சப்பான் சரணடைந்ததையும், கொரியா சப்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றதையும் அறிவித்தார்.
- 1975 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் முசிபுர் ரகுமான் (படம்) மற்றும் அவரது குடும்பத்தினர் (ஷேக் ஹசீனா தவிர) அனைவரும் கொல்லப்பட்டனர்.
- 2005 – இந்தோனேசிய அரசுக்கும் அச்சே விடுதலை இயக்கத்துக்கும் இடையே 30-ஆண்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு எல்சிங்கியில் அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டது.
வ. சு. செங்கல்வராயர் (பி. 1883) · தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (பி. 1892) · ந. பிச்சமூர்த்தி (பி. 1900)
அண்மைய நாட்கள்: ஆகத்து 14 – ஆகத்து 16 – ஆகத்து 17
- 1819 – இங்கிலாந்து, மான்செஸ்டரில் அரசுக்கெதிராகக் கிளர்ந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குதிரைப்படையால் அடக்கப்பட்டதில் 17 பேர் கொல்லப்பட்டு 600 பேர் காயமடைந்தனர்.
- 1858 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜேம்ஸ் புகேனன் ஐக்கிய இராச்சியத்தின் விக்டோரியா மகாராணிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஐரோப்பாவுடனான தந்திச் சேவையை ஆரம்பித்து வைத்தார். எனினும், பலவீனமான சமிக்ஞையினால் சில வாரங்களில் இச்சேவை நிறுத்தப்பட்டது.
- 1929 – பாலத்தீனத்தில் அரபுகளுக்கும் யூதர்களுக்கும் இடையே இனக்கலவரம் ஆரம்பமானது. இக்கலவரங்களில் 133 யூதர்களும், 116 அரபுக்களும் உயிரிழந்தனர்.
- 1930 – முதலாவது பிரித்தானியப் பொதுநலவாய விளையாட்டுகள் ஒண்டாரியோ, ஆமில்டன் நகரில் வெல்லிங்டன் பிரபுவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
- 1946 – கல்கத்தாவில் இந்து-முசுலிம் கலவரங்கள் (படம்) ஆரம்பமாயின. அடுத்த 72 மணி நேரத்தில் 4,000 பேர் உயிரிழந்தனர்.
- 1962 – பிரெஞ்சு இந்தியப் பகுதிகள் இந்தியாவுக்குத் திருப்பிக் கொடுத்து எட்டு ஆண்டுகளின் பின்னர், பிரெஞ்சு நாடாளுமன்றம் இவ்வுடன்பாட்டை அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொண்டது.
அ. மாதவையா (பி. 1872) · ஒரு விரல் கிருஷ்ணா ராவ் (இ. 2002) · ஜிக்கி (இ. 2004)
அண்மைய நாட்கள்: ஆகத்து 15 – ஆகத்து 17 – ஆகத்து 18
ஆகத்து 17: இந்தோனேசியா (1945), காபோன் (1960) – விடுதலை நாள்
- 1560 – இசுக்கொட்லாந்தில் கத்தோலிக்கத்துக்குப் பதிலாக சீர்திருத்த கிறித்தவம் தேசிய சமயமாக்கப்பட்டது.
- 1585 – எண்பதாண்டுப் போர்: ஆண்ட்வெர்ப் எசுப்பானியப் படையினரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து அங்கிருந்த சீர்திருத்தக் கிறித்தவர்கள் வெளியேறப் பணிக்கப்பட்டனர். இதனால் அங்கிருந்த 100,000 பேரில் அரைவாசி மக்கள் வடக்கு மாகாணங்களுக்கு சென்றனர்.
- 1947 – இந்தியாவையும் பாக்கித்தானையும் பிரிக்கும் ராட்கிளிஃப் கோடு (படம்) வெளியிடப்பட்டது.
- 1958 – அமெரிக்காவின் சந்திரனைச் சுற்றும் முதலாவது திட்டம் பயனியர் 0 விண்ணுக்கு ஏவப்பட்டு 77 செக்கன்களில் அழிந்தது.
- 1988 – பாக்கித்தான் அரசுத்தலைவர் சியா-உல்-ஹக் மற்றும் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
- 2005 – காசாக்கரையில் இருந்து இசுரேலியர்களின் கட்டாய வெளியேற்றம் ஆரம்பமானது.
முரசொலி மாறன் (பி. 1934) · கே. ஏ. மதியழகன் (இ. 1983) · எம். ஜி. சக்கரபாணி (இ. 1986)
அண்மைய நாட்கள்: ஆகத்து 16 – ஆகத்து 18 – ஆகத்து 19
- 1868 – பிரெஞ்சு வானியலாளர் பியேர் ஜான்சென் சூரிய கிரகணத்தை ஆராயும்போது ஈலியம் என்ற தனிமத்தைக் கண்டுபிடித்தார்.
- 1920 – பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டமூலம் ஐக்கிய அமெரிக்காவில் கொண்டு வரப்பட்டது.
- 1938 – அமெரிக்காவின் நியூயார்க்கையும் கனடாவின் ஒன்றாரியோவையும் இணைக்கும் சென் லாரன்சு ஆற்றின் மேலாக ஆயிரம் தீவுகள் பாலம் அமெரிக்க அரசுத்தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட்டினால் திறந்து வைக்கப்பட்டது.
- 1945 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் (படம்) தாய்வானில் விமான விபத்தில் இறந்ததாக நம்பப்படுகிறது.
- 1971 – வியட்நாம் போர்: ஆத்திரேலியா, நியூசிலாந்து ஆகியன தமது படைகளை வியட்நாமில் இருந்து திரும்ப அழைக்க முடிவு செய்தன.
- 1977 – ஸ்டீவ் பைக்கோ தென்னாப்பிரிக்கக் காவல்துறையினரால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் பின்னர் கடுங்காயங்களால் இறந்ததை அடுத்து தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல் கொள்கைகள் வெளிக்கொணரப்பட்டன.
ஆர். எஸ். சுபலட்சுமி (பி. 1886) · டி. எஸ். சௌந்தரம் (பி. 1904) · ரா. கி. ரங்கராஜன் (இ. 2012)
அண்மைய நாட்கள்: ஆகத்து 17 – ஆகத்து 19 – ஆகத்து 20
ஆகத்து 19: உலக மனிதநேய நாள் · உலகப் புகைப்பட நாள்
- 1839 – லூயி தாகர் கண்டுபிடித்த புகைப்பட செயல்முறையை "உலகத்துக்கு அன்பளிப்பாக வழங்குவதாக" பிரெஞ்சு அரசு அறிவித்தது.
- 1934 – செருமனியில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பியூரர் என்ற பெயருடன் இட்லரை அரசுத்தலைவராக்க 89.9% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
- 1942 – இரண்டாம் உலகப் போர்: தியப் தாக்குதல்: கனடாவின் தலைமையில் நேச நாடுகளின் படையினர் பிரான்சின் தியப் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தித் தோல்வியடைந்தனர். பெரும்பாலான கனடியப் படைகள் கொல்லப்பட்டனர் அல்லது கைது செய்யப்பட்டனர்.
- 1945 – ஹோ சி மின் (படம்) தலைமையில் வியட் மின் படையினர் வியட்நாமின் அனோய் நகரைக் கைப்பற்றினர்.
- 1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 5 விண்கலம் பெல்கா, ஸ்திரெல்கா என்ற இரு நாய்களையும், 40 சுண்டெலிகளையும், 2 எலிகளையும், பல வகைத் தாவரங்களையும் விண்ணுக்குக் கொண்டு சென்றது.
- 1991 – ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்றில் சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் கிரிமியாவில் ஓய்வெடுக்கும் போது கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
ஐசாக் தம்பையா (பி. 1869) · சத்தியமூர்த்தி (பி. 1887) · ச. அகத்தியலிங்கம் (பி. 1929)
அண்மைய நாட்கள்: ஆகத்து 18 – ஆகத்து 20 – ஆகத்து 21
- 1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.
- 1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி (படம்) படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.
- 1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.
- 1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.
- 1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
- 2006 – கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் யாழ்ப்பாணத்தில், அல்லைப்பிட்டியில் காணமால் போனார்கள்.
அண்மைய நாட்கள்: ஆகத்து 19 – ஆகத்து 21 – ஆகத்து 22
- 1770 – ஜேம்ஸ் குக் கிழக்கு ஆத்திரேலியாவை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார்.
- 1772 – சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் தான் மேற்கொண்ட இராணுவப் புரட்சியை முடித்துக் கொண்டு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தி, அரை நூற்றாண்டுக் கால நாடாளுமன்ற ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
- 1778 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படையினர் பிரெஞ்சுக் குடியேற்றமான பாண்டிச்சேரியை முற்றுகையிட்டனர்.
- 1888 – முதலாவது வெற்றிகரமான கூட்டல் கருவி (படம்) அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1911 – லியனார்டோ டா வின்சியின் மோனா லிசா ஓவியம் பாரிசின் இலூவா அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
- 1957 – சோவியத் ஒன்றியம் ஆர்-7 என்ற முதலாவது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது.
ப. ஜீவானந்தம் (பி. 1907) · சுப்பிரமணியன் சந்திரசேகர் (இ. 1995)
அண்மைய நாட்கள்: ஆகத்து 20 – ஆகத்து 22 – ஆகத்து 23
- 1485 – பொசுவர்த் பீல்டு என்ற இடத்தில் நடந்த போரில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் ரிச்சார்டு கொல்லப்பட்டார்.
- 1639 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் நாயக்கர்களிடம் இருந்து வாங்கிய நிலத்தில் மதராஸ் நகரத்தை (தற்போதைய சென்னையை) அமைத்தார்கள் (படத்தில் புனித ஜார்ஜ் கோட்டை).
- 1864 – 12 நாடுகள் இணைந்து ஜெனீவாவில் ஆயுத மோதல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பாதுகாப்பு விதிகளை உருவாக்கின.
- 1894 – தென்னாப்பிரிக்காவில் இந்திய வணிகர்களுக்கு எதிராக் காட்டப்படும் பாகுபாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மகாத்மா காந்தி நட்டால் மாகாணத்தில் நட்டால் இந்தியக் காங்கிரசு என்ற அமைப்பைத் தொடங்கினார்.
- 1910 – சப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடியும் வரையில் கொரியா சப்பானின் ஆட்சியின் கீழ் இருந்தது.
- 1978 – சண்டினீஸ்டா தேசிய விடுதலை முன்னணி போராளிகள் நிக்கராகுவாவின் தேசிய அரண்மனையைக் கைப்பற்றினர்.
கலாயோகி ஆனந்த குமாரசுவாமி (பி. 1877) · டி. ஜி. லிங்கப்பா (பி. 1927) · ந. சஞ்சீவி (இ. 1988)
அண்மைய நாட்கள்: ஆகத்து 21 – ஆகத்து 23 – ஆகத்து 24
ஆகத்து 23: அடிமை வணிக ஒழிப்பை நினைவூட்டும் பன்னாட்டு நாள்
- 1305 – இசுக்காட்லாந்தின் நாட்டுப்பற்றாளர் சேர் வில்லியம் வேலசு (படம்) இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டு மன்னரால் நாட்டுத்துரோத்துக்காகக் குற்றம் சாட்டப்பட்டு இலண்டனில் தூக்கிலிடப்பட்டார்.
- 1628 – முதலாம் பக்கிங்காம் கோமகன், ஜார்ஜ் வில்லியர்சு ஜோன் பெல்ட்டன் என்பவனால் படுகொலை செய்யப்பட்டார்.
- 1839 – கிங் சீனர்களுடன் போரிடுவதற்காக ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கைக் கைப்பற்றியது. இது பின்னர் முதலாம் அபினிப் போர் என அழைக்கப்பட்டது.
- 1939 – இரண்டாம் உலகப் போர்: நாட்சி செருமனியும் சோவியத் ஒன்றியமும் போர் தவிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பால்ட்டிக் நாடுகள், பின்லாந்து, உருமேனியா, போலந்து ஆகியவற்றை தமக்கிடையே பகிர்வது என்றும் இரகசிய முடிவெடுக்கப்பட்டது.
- 1948 – ஏ. கே. செட்டியார் தயாரித்த காந்தி பற்றிய முதல் ஆவணத் திரைப்படம் தமிழிலும் தெலுங்கிலும் வெளியிடப்பட்டன.
- 2011 – லிபிய உள்நாட்டுப் போர்: லிபியத் தலைவர் முஅம்மர் அல் கதாஃபி அரசுத்தலைவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார். தேசிய இடைக்காலப் பேரவை ஆட்சியைக் கைப்பற்றியது.
ம. இரா. சம்புநாதன் (பி. 1896) · டி. எஸ். பாலையா (பி. 1914) · வ. ரா. (இ. 1951)
அண்மைய நாட்கள்: ஆகத்து 22 – ஆகத்து 24 – ஆகத்து 25
ஆகத்து 24: உக்ரைன் - விடுதலை நாள் (1991)
- 1608 – இந்தியாவுக்கான முதலாவது அதிகாரபூர்வ பிரித்தானியப் பிரதிநிதி வில்லியம் ஆக்கின்சு சூரத்து நகரை வந்தடைந்தார்.
- 1690 – பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தைச் சேர்ந்த ஜொப் சார்னொக் கல்கத்தாவில் தொழிற்சாலை ஒன்றை ஆரம்பித்தார். இதுவே கல்கத்தாவின் நிறுவன நாளாகக் கருதப்படுகிறது.
- 1891 – தாமசு ஆல்வா எடிசன் அசையும் படக்கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1941 – உளப் பிறழ்ச்சி, மற்றும் வலது குறைந்தோருக்கான நாட்சி ஜெர்மனியின் டி4 கருணைக்கொலைத் திட்டத்தை இட்லர் இடை நிறுத்துவதற்கு உத்தரவிட்டார். ஆனாலும், இக்கொலைகள் போர் முடியும் வரை தொடர்ந்தன.
- 1994 – பாலத்தீனர்களுக்கு மேற்குக் கரையில் மட்டுப்படுத்தப்பட்ட சுயாட்சி வழங்கும் ஒப்பந்தத்தில் இசுரேலும் பலத்தீன விடுதலை இயக்கமும் கையெழுத்திட்டன.
- 2006 – புளூட்டோ (படம்) ஒரு கோள் அல்லவெனவும், அது குறுங்கோள் எனவும் உலகளாவிய வானியல் ஒன்றியம் அறிவித்தது.
தி. த. கனகசுந்தரம்பிள்ளை (பி. 1863) · நாரண துரைக்கண்ணன் (பி. 1906) · நாமக்கல் கவிஞர் (இ. 1972)
அண்மைய நாட்கள்: ஆகத்து 23 – ஆகத்து 25 – ஆகத்து 26
ஆகத்து 25: உருகுவை - விடுதலை நாள் (1825)
- 1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி (படம்) தனது முதலாவது தொலைநோக்கியை (படம்) வெனிசில் அறிமுகப்படுத்தினார்.
- 1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
- 1803 – யாழ்ப்பாணம் பனங்காமப் பற்று மன்னன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினான். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்செண்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.
- 1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
- 1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிசு விடுவிக்கப்பட்டது.
- 2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
கிருபானந்த வாரியார் (பி. 1906) · எஸ். ஜி. கிட்டப்பா (பி. 1906) · வ. சு. செங்கல்வராயர் (இ. 1971)
அண்மைய நாட்கள்: ஆகத்து 24 – ஆகத்து 26 – ஆகத்து 27
- 1768 – ஜேம்ஸ் குக் தனது முதலாவது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து என்டெவர் கப்பலில் ஆரம்பித்தார்.
- 1789 – பிரெஞ்சுப் புரட்சி: மனித உரிமைகள் குறித்த மனிதர்களின் மற்றும் குடிமக்களின் உரிமைகள் சாற்றுரையினை பிரெஞ்சு சட்டமன்றம் ஏற்றது.
- 1795 – திருகோணமலை, பிரெடரிக் கோட்டையை (படம்) ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படையினர் ஒல்லாந்தரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
- 1920 – ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கும் அரசியலமைப்பின் 19-வது திருத்தச்சட்டமூலம் அமுலுக்கு வந்தது.
- 1942 – உக்ரைனில் சோட்கிவ் என்ற இடத்தில் நாட்சி ஜெர்மனியர் காலை 2.30 மணிக்கு யூதர்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியகற்றி குழந்தைகள், நோயாளிகள் உட்பட 500 பேரை கொன்று குவித்தனர். இப்படுகொலைகள் இரண்டு நாட்களுக்குத் தொடர்ந்தன.
- 1970 – ஐக்கிய அமெரிக்காவில் புதிய பெண்ணிய இயக்கம் பெண்களுக்கான சமத்துவத்தை வலியுறுத்தி பணி நிறுத்தங்களில் ஈடுபட்டது.
திரு. வி. கலியாணசுந்தரனார் (பி. 1883) · அ. அமிர்தலிங்கம் (பி. 1927) · எஸ். எஸ். வாசன் (இ. 1969)
அண்மைய நாட்கள்: ஆகத்து 25 – ஆகத்து 27 – ஆகத்து 28
ஆகத்து 27: மல்தோவா - விடுதலை நாள் (1991)
- 1781 – பொள்ளிலூர் போர்: ஐதர் அலி தலைமையில் மைசூர் அரசுப் படைகளுக்கும் ஜெனரல் ஐயிர் கூட் தலைமையில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனப் படைகளுக்கும் இடையே காஞ்சிபுரம் அடுத்த பொள்ளிலூரில் போர் இடம்பெற்றது. 2,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
- 1859 – அமெரிக்காவில் பென்சில்வேனியா மாநிலத்தில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவே உலகில் வணிகத்துக்காக வெற்றிகரமாகத் தோண்டப்பட்ட முதலாவது எண்ணெய்க் கிணறு ஆகும்.
- 1883 – இந்தோனேசியாவில் கிரக்கத்தோவா எரிமலைத் தீவு வெடித்ததினால் உருவாகிய ஆழிப்பேரலையினால் ஜாவா, சுமாத்திரா தீவுகளில் பல இடங்கள் அழிந்தன. கிட்டத்தட்ட 36,400 பேர் உயிரிழந்தனர். சுற்றுச்சூழலில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
- 1939 – உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது.
- 1975 – போர்த்துக்கீசத் திமோரின் ஆளுநர் அதன் தலைநகர் டிலியைக் கிளர்ச்சியாளர்களிடம் கைவிட்டு அட்டாவுரோ தீவுக்குத் தப்பி ஓடினார்.
- 1979 – அயர்லாந்தில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த மவுண்ட்பேட்டன் பிரபு (படம்) ஐரியக் குடியரசுப் படையின் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
எம். எம். தண்டபாணி தேசிகர் (பி. 1908) · தெ. பொ. மீனாட்சிசுந்தரம் (இ. 1980) · அ. ச. ஞானசம்பந்தன் (இ. 2002)
அண்மைய நாட்கள்: ஆகத்து 26 – ஆகத்து 28 – ஆகத்து 29
- 1757 – முதலாவது ரூபாய் நாணயம் கல்கத்தாவில் வெளியிடப்பட்டது.
- 1789 – சனிக் கோளின் என்சலடசு என்ற புதிய சந்திரனை வில்லியம் எர்செல் (படம்) கண்டுபிடித்தார்.
- 1833 – ஐக்கிய இராச்சியத்தின் நான்காம் வில்லியம் மன்னர் அடிமை ஒழிப்புச் சட்டம் 1833 ஐ அங்கீகரித்தார். ஆனாலும், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இந்திய அடிமை ஒழிப்புச் சட்டம் 1843 அமுலுக்கு வரும் வரை அடிமை முறை சட்டபூர்வமாக இருந்தது.
- 1859 – 1859 சூரியப் புயல் பூமியைத் தாக்கிய அதிதீவிர புவிக்காந்தப் புயல் ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா முழுவதும் தொலைத்தந்திச் சேவைகள் பாதிப்படைந்தன.
- 1963 – மார்ட்டின் லூதர் கிங், என் கனவு யாதெனில்... என்ற புகழ்பெற்ற வார்த்தைகளுடன் சொற்பொழிவாற்றினார்.
- 1988 – செருமனியில் வான வேடிக்கை விழா ஒன்றின் போது மூன்று விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பார்வையாளர்கள் மீது வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டு 346 பேர் படுகாயமடைந்தனர்.
நாராயணகுரு (பி. 1855) · இராபர்ட் கால்டுவெல் (இ. 1891) · முகவை கண்ண முருகனார் (இ. 1973)
அண்மைய நாட்கள்: ஆகத்து 27 – ஆகத்து 29 – ஆகத்து 30
ஆகத்து 29: தேசிய விளையாட்டு நாள் (இந்தியா)
- 1658 – சீர்திருத்தத் திருச்சபை யாழ்ப்பாணத்தில் முதன் முதலாக ஒல்லாந்து மறைப்பரப்புனர் பிலிப்பசு பால்டேயசு (படம்) என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1782 – திருகோணமலை கோட்டையை பிரான்சியர் பிரித்தானியரிடம் இருந்து மீளக் கைப்பற்றினர்.
- 1831 – மைக்கேல் பரடே மின்காந்தத் தூண்டலைக் கண்டுபிடித்தார்.
- 1910 – யப்பான்-கொரியா இணைப்பு ஒப்பந்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து கொரியாவில் சப்பானியரின் ஆட்சி ஆரம்பமானது.
- 1949 – சோவியத் ஒன்றியம் முதலாவது அணுக்கரு ஆயுதத்தை கசக்ஸ்தானில் சோதித்தது.
- 1991 – சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் சோவியத் உயர்பீடம் தடை செய்தது.
- 2005 – அமெரிக்காவின் லூசியானா முதல் புளோரிடா வரையான கரையோரப் பகுதிகளை சூறாவளி கத்ரீனா தாக்கியதில் 1,836 பேர் கொல்லப்பட்டனர்.
எம். கே. ராதா (இ. 1985) · ஆர்வி (இ. 2008)
அண்மைய நாட்கள்: ஆகத்து 28 – ஆகத்து 30 – ஆகத்து 31
ஆகத்து 30: அனைத்துலக காணாமற்போனோர் நாள்
- 70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.
- 1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் (படம்) பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
- 1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
- 1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.
- 1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
- 1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1999 – கிழக்குத் திமோர் மக்கள் ஐநாவின் ஆதரவில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இந்தோனேசியாவிடம் இருந்து விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
சுவாமி ஞானப்பிரகாசர் (பி. 1875) · என். எஸ். கிருஷ்ணன் (இ. 1957) · டி. ஆர். சுந்தரம் (இ. 1963)
அண்மைய நாட்கள்: ஆகத்து 29 – ஆகத்து 31 – செப்டெம்பர் 1
- 1314 – நார்வே மன்னர் ஐந்தாம் ஆக்கோன் தலைநகரை பேர்கனில் இருந்து ஒசுலோவுக்கு மாற்றினார்.
- 1795 – திருகோணமலையை ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கைப்பற்றினர்.
- 1897 – தாமசு ஆல்வா எடிசன் கினெட்டஸ்கோப்பு என்ற முதலாவது திரைப்படம் காட்டும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றார்.
- 1957 – ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து மலாயா கூட்டமைப்பு (இன்றைய மலேசியா) விடுதலை பெற்றது.
- 1978 – இலங்கையில் சனாதிபதி ஆட்சிமுறையை அறிமுகப்படுத்திய புதிய அரசியல் யாப்பு வெளியிடப்பட்டது.
- 1986 – சோவியத் ஆட்மிரல் நகீமொவ் என்ற பயணிகள் கப்பல் கருங்கடலில் சரக்குக் கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதில் 423 பேர் உயிரிழந்தனர்.
- 1997 – வேல்சு இளவரசி டயானா (படம்) பாரிசில் வாகன விபத்தில் கொல்லப்பட்டார்.
மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை (பி. 1896) · ஆபிரகாம் பண்டிதர் (இ. 1919) · மங்கலங்கிழார் (இ. 1953)
அண்மைய நாட்கள்: ஆகத்து 30 – செப்டெம்பர் 1 – செப்டெம்பர் 2