பீனிக்ஸ் (விண்ணூர்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீனிக்ஸ் செவ்வாய் திட்டம்
Phoenix Mars Mission
ஓவியரின் கைவண்ணத்தில் பீனிக்ஸ் விண்கலம் செவ்வாய்க் கோளில் இறங்கும் காட்சி
இயக்குபவர்நாசா
முதன்மை ஒப்பந்தக்காரர்லொக்ஹீட் மார்ட்டின்
திட்ட வகைதரையிறங்கி
ஏவப்பட்ட நாள்ஆகஸ்ட் 4, 2007
ஏவுகலம்டெல்ட்டா II
திட்டக் காலம்92.46 நாட்கள்
Orbital decayமே 25, 2008
(செவ்வாயில் மெதுவாகத் தரையிறங்கல்
தே.வி.அ.த.மை எண்2007-034A
இணைய தளம்http://phoenix.lpl.arizona.edu/
நிறை350 கிகி
கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவுவதற்கு பீனிக்ஸ் கலம் தயாராக உள்ளது (நாசா)
டெல்டா விண்கப்பலில் பீனிக்ஸ் தளவுளவி விண்ணுக்கு ஏவப்படுகிறது

பீனிக்ஸ் (Phoenix) என்பது செவ்வாய் கோளில் ஆய்வுகள் மேற்கொள்ளுவதற்காக விண்ணுக்கு ஏவப்பட்ட ஆளில்லா தானியங்கி தரையுளவி ஆகும். செவ்வாய்க் கிரகத்தில் ஆய்வுகள் நடத்த தேவையான பல கருவிகள் இக்கலத்தில் உள்ளன. இவற்றைக் கொண்டு செவ்வாயில் உயிரினங்கள் மற்றும் நீர் போன்றவற்றின் வரலாறுகள் பற்றியும் இவற்றைக் கொண்டு ஆய்வுகள் நடத்த அறிவியலாளர்கள் திட்டமிட்டுள்ளனர். நாசா ஆய்வு மையத்தின் ஆதரவுடன் அரிசோனா பல்கலைக்கழகத்தினால் ஆகஸ்ட் 4, 2007 05:26:34 EDT (UTC-4)[1] நேரத்திற்கு டெல்டா II ராக்கெட் மூலம் அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் கேப்கெனரவல் விமானப்படைத் தளத்தில் இருந்து விண்ணுக்கு வெற்றிகரமாக ஏவப்பட்ட பீனிக்ஸ் தளவுளவி மே 25, 2008இல் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐக்கிய அமெரிக்கா, கனடா, சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனி பல்கலைக்கழகங்கள், நாசா, கனடா விண்வெளி ஆய்வு மையம் ஆகியவற்றின் ஒரு கூட்டுத் திட்டமாகும். செவ்வாய்க் கிரகத்தின் உறைபனி அதிகம் உள்ள வடமுனையில் இக்கலம் தரையிறங்கி தானியங்கி (ரோபோ) கரங்கள் மூலம் மண்ணைத் துளைத்து மண்மாதிரிகளை எடுத்து வரும்.[2]

பீனிக்ஸ் விண்கலம் 18 அடி நீளமும் 5 அடி அகலமும் கொண்டது.

நோக்கம்[தொகு]

பீனிக்ஸ் இருவகையான நோக்கங்களைக் கொண்டு ஆய்வுகளை மேற்கொள்ளும். முதலில் செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆய்வு செய்து அவற்றைக் கொண்டு செவ்வாயில் நீரின் வரலாறு மற்றும் காலநிலை மாற்றம் போன்றவற்றை ஆய்வு செய்யும். மற்றையது நிலத்தின் அடியில் பனி-மண் எல்லையில் உயிரினங்கள் வாழ்வதற்கேற்ற பகுதியைக் கண்டறிவதும் ஒரு நோக்கம் ஆகும்.

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Phoenix mission
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "NASA Phoenix Mission". NASA. பார்க்கப்பட்ட நாள் ஆகஸ்ட் 4, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. ஆங்கில விக்கிமூலம்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீனிக்ஸ்_(விண்ணூர்தி)&oldid=3221575" இலிருந்து மீள்விக்கப்பட்டது