ஜான் ஸ்டைத் பெம்பர்டென்
Appearance
ஜான் ஸ்டைத் பெம்பர்டென் (சூலை 8, 1831 - ஆக்சுடு 1888) என்பவர் அமெரிக்க மருந்தியலாளர் ஆவார். கொக்கக் கோலா என்னும் குளிர் பானத்தை முதன் முதலாகச் செய்தவர் ஆவார். பெம்பர்டென் இறப்பதற்கு முன் கொக்கக் கோலா தயாரிக்கும் உரிமையை விற்றுவிட்டார்.
பிறப்பும் படிப்பும்
[தொகு]சியார்சியாவில் பிறந்த பெம்பர்டென் ரோமிலும் சியார்சியாவிலும் வளர்ந்தார். சியார்சியாவில் உள்ள ரீபாம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்தார். வேதியலை அவர் விரும்பியிருந்தாலும் மருந்தியலைப் படித்துப் பட்டம் பெற்றார்.[1] மருந்துகள் தயாரிக்கும் உரிமத்தைப் பெற்றார். அமெரிக்காவில் சிவில் போர் நடந்தபோது அமெரிக்கப் படையில் சேர்ந்தார். மார்பில் அடிபட்டுக் காயமுற்றார். வலியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் வலி போக்கும் மருந்துகளைச் சாப்பிடத் தொடங்கி, அதற்கு அடிமை ஆனார்.
மேற்கோள்
[தொகு]- ↑ King, Monroe M. "John Stith Pemberton (1831-1888)." New Georgia Encyclopedia. 13 June 2017. Web. 11 September 2017.