உள்ளடக்கத்துக்குச் செல்

சுத்தானந்த பாரதியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுத்தானந்த பாரதி
Shuddhananda Bharati
80-ஆவது அகவையில் சுத்தானந்தர்
பிறப்பு(1897-05-11)11 மே 1897
சிவகங்கை, தமிழ்நாடு
இறப்பு7 மார்ச்சு 1990(1990-03-07) (அகவை 92)
சோழபுரம், சிவகங்கை அருகில்

சுத்தானந்த பாரதியார் (மே 11, 1897மார்ச் 7, 1990) கவியோகி, மகரிஷி என்று போற்றப்பட்டவர் ஆவார். இவர் கவிதைகள், தமிழிசைப் பாடல்கள், உரைநடை நூல்கள், மேடை நாடகங்கள் எனப் பல நூல்களை இயற்றியவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

சுத்தானந்த பாரதியார் எனப் பின்னாளில் அழைக்கப்பட்ட வேங்கட சுப்பிரமணியன் பனையூரைச் சொந்த ஊராகக்கொண்ட சிவிகுல ஜடாதரய்யர் காமாட்சி அம்மையார் இணையரின் நான்காவது குழந்தையாக 1897 மே 11-இல் தமிழ்நாடு சிவகங்கையில் பிறந்தார். ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் 'பாரத சக்தி' எனும் மகா காவியத்தைப் பாடத் தொடங்கினார். இவர் இயற்றிய நூல்களில் யோகசித்தி, கீர்த்தனாஞ்சலி, மேளராகமாலை ஆகிய கவிதை நூல்கள் பிரபலமானவை. தமிழின் வரலாற்றில் சிறப்பாகத் தொண்டாற்றிய இவர், தமது தொண்ணூற்று இரண்டாம் அகவையில் காலமானார்.

திருக்குறள் மொழிபெயர்ப்பு

[தொகு]

திருக்குறளை அதே ஈரடிகளில், அதே நடை, சந்தத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் சுத்தானந்த பாரதியார், 1968-ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டில், அப்புத்தகம் திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த பதிப்பு கழகத்தாரால் வெளியிடப்பட்டது.

விருதுகள்

[தொகு]

எழுதிய நூல்கள்

[தொகு]
வ.எண்வெளியான ஆண்டுநூலின் பெயர்பதிப்பகம்பக்கம்குறிப்பு
011938ஸ்ரீ அரவிந்த யோக தீபிகைஅன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், சிங்கப்பூர்66மொழிபெயர்ப்பு
021940பேரின்பம்அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், புதுக்கோட்டை சமஸ்தானம்64கவிதைகள்
031942ஞானி எமர்ஸன்அன்பு நிலையம், இராமச்சந்திரபுரம், திருச்சி ஜில்லா36வாழ்க்கை வரலாறு
041948 மேநாவலர் பெருமான்தமிழ்நாடு: புதுயுக நிலையம், புதுச்சேரி234
05உடலுறுதியோக சமாஜம், வடலூர்140ஐந்தாம் பதிப்பு
061962 அக்டோபர்விஞ்ஞான மணிகள்சிவகங்கை வெளியீடு, சிவகங்கை106வாழ்க்கை வரலாறு
07பாரத சக்தி மகா காவியம்
08யோக சித்தி
09அருட்செல்வம்
10கவிக் கனவுகள்
11கீர்த்தனாஞ்சலி
12நவரஸ நடனாஞ்சலி
13பாரத கீதம்
14தமிழ்க் கனல்
15ஆத்ம சோதனை
16ஏழைபடும் பாடு
17இளிச்சவாயன்
18அன்னை
19இவளும் அவளும்
20நாகரிகப் பண்ணை
21பகவத் கீதை
22இல்லற ஒழுக்கம்
23பெரியவாள் கதை
24அருட்பெருமான்
25சிவானந்த ஜோதி
26இதுதான் உலகம்
27தயானந்த ஜோதி
28பாப்பா பாட்டு
29கலிமாவின் காதல்
30Sri Aurobindo
31Integral Yoga
32The Gospel of Perfect Life
33Yogi Shuddhananda
342005பொது நெறி
35கல்விக்கதிர்
361967தியான சாதனம்சுத்தானந்த யோக சமாஜம், யாழ்ப்பாணம்48
371948நாவலர் பெருமான்புதுயுக நிலையம், புதுச்சேரி236
38பாட்டாளி பாட்டுஆத்மஜோதி நிலையம்100கவிதைகள்
391975சோதனையும் சாதனையும்சுத்தானந்த நூலகம், திருவான்மியூர், சென்னை434தன்வரலாறு, சுய வாழ்க்கை வரலாறு
401937திருக்குறளின்பம்அன்புமலர்260
411946தேசியகீதம்பாரத சக்தி நிலையம், புதுவை140115 பாடல்கள்
421962ஆத்மநாதம்ஆத்மஜோதி நிலையம், நாவிலப்பட்டி, இலங்கை231பாடல்கள்

இயற்றிய தமிழிசைப் பாடல்களின் பட்டியல்

[தொகு]
  • 'எப்படிப் பாடினரோ …' - கர்நாடக தேவ காந்தாரி.[1]
  • 'தூக்கிய திருவடி துணை -(சங்கராபரணம்).

மேற்கோள்கள்

[தொகு]
  1. "'அடுத்த ஸ்லாட்டுக்கு தயார்!' எனும் தலைப்பில் 'தினமணி' நாளிதழில் ( டிசம்பர் 29, 2012 - சென்னைப் பதிப்பு) எழுதப்பட்ட கட்டுரை". Archived from the original on 2013-06-13. Retrieved 2012-12-29.

வெளி இணைப்புகள்

[தொகு]

நூலகம் திட்டத்தில் சுத்தானந்தர் இயற்றிய நூல்கள்

[தொகு]
தளத்தில்
சுத்தானந்த பாரதியார் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுத்தானந்த_பாரதியார்&oldid=4482291" இலிருந்து மீள்விக்கப்பட்டது