பெல்பாஸ்ட் உடன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய இராச்சியத்தில் (இளம் மஞ்சள்) வட அயர்லாந்து மாநிலம் (சிவப்பு)

பெல்பாஸ்ட் உடன்பாடு (Belfast Agreement) என்பது வட அயர்லாந்தின் உள்நாட்டுப் போரினை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு ஏற்பட்ட மிக முக்கியமான அரசியல் உடன்பாட்டைக் குறிக்கும். இது புனித வெள்ளி உடன்பாடு எனவும் பரவலாக அழைக்கப்படுகிறது. இவ்வுடன்பாடு பெல்பாஸ்ட் நகரில் ஏப்ரல் 10, 1998, புனித வேள்ளி தினத்தன்று ஐக்கிய இராச்சிய அரசுக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் இடையில் வட அயர்லாந்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது. இந்த உடன்படிக்கை சுயநிர்ணய கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருந்தது.

உடன்பாடு[தொகு]

கருத்துக் கணிப்பு[தொகு]

1998 மே 23 இல் இடம் பெற்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் வட அயர்லாந்து வாக்காளர்களும் அத்தோடு அயர்லாந்துக் குடியரசு மக்களும் அவ் உடன்படிக்கைக்கு பெருமளவில் அங்கீகாரம் வழங்கினர். டியுபி எனப்படும் மக்களாட்சி ஐக்கியக் கட்சி (Democratic Unionist Party) மட்டும் ஐரிய தேசியவாதத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடன்பாட்டுக்கு எதிராக வாக்களித்தனர். கருத்துக் கணிப்பு முடிவுகள் வாருமாறு:

ஆம் இல்லை மொத்தமாக வாக்களித்தோர்
வட அயர்லாந்து 676,966 (71%) 274,879 (29%) 81%
அயர்லாந்துக் குடியரசு 1,442,583 (94%) 85,748 (6%) 56%

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்பாஸ்ட்_உடன்பாடு&oldid=3679933" இலிருந்து மீள்விக்கப்பட்டது