உள்ளடக்கத்துக்குச் செல்

முழு நீளத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உலகின் முதல் முழு நீளத் திரைப்படமான த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங் (1906)படத்தில் ஒரு காட்சி.

முழு நீளத் திரைப்படம் (feature film) என்பது, ஒரு திரைப்பட நிகழ்வில் பெரும்பான்மை நேரத்தை அல்லது முழு நேரத்தையும் எடுக்கக்கூடிய அளவு நீளமான திரைப்படம் ஆகும். இந்த நேர அளவு எவ்வளவாக இருக்கவேண்டும் என்பது இடத்துக்கு இடமும், காலத்துக்குக் காலமும் வேறுபட்டு வந்துள்ளது. அசையும் படக் கலை அறிவியல் அக்கடமி,[1] அமெரிக்கத் திரைப்படக் கழகம்,[2] பிரித்தானியத் திரைப்படக் கழகம்[3] போன்றவை முழு நீளத் திரைப்படம் 40 நிமிடங்கள் அல்லது அதற்கு மேல் ஓடக்கூடியவையாக இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் திரைப்பட நடிகர் குழாம் அப்படம், 80 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடிய நீளம் கொண்டவையாக இருக்க வேண்டும் என்கிறது.

பெரும்பான்மையான முழு நீளத் திரைப்படங்கள் 70 தொடக்கம் 210 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய நீளம் கொண்டவை. "த இசுட்டோரி ஒஃப் த கெல்லி காங்" (The Story of the Kelly Gang) என்னும் திரைப்படமே நீள அடிப்படையில் உலகின் முதல் முழு நீளத் திரைப்படம். இது 1906 ஆம் ஆண்டு ஆசுத்திரேலியாவில் வெளியானது. பிற இலக்கிய அல்லது கலை வடிவங்களைத் திரைப்படம் ஆக்கியவற்றுள் முதல் வெளியான முழு நீளத் திரைப்படம் "லெ மிசெரபிள்சு" என்னும் பிரெஞ்சு மொழிப் படமாகும். இது 1909 ஆம் ஆண்டில் வெளியானது.

சிறுவருக்கான முழு நீளத் திரைப்படங்கள் பொதுவாக 70 தொடக்கம் 105 நிமிட நீளம் கொண்டவை. தொடக்க காலங்களில் வெளிவந்த முழு நீளத் திரைப்படங்களுள் ஒலிவர் டுவிஸ்ட் (1912), ரிச்சார்ட் III (1912), ஃபிரம் த மாங்கர் டு த குரொஸ் (1912) ஆகிய படங்களும் அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]

{{refl

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-09-06. பார்க்கப்பட்ட நாள் 2013-11-09.
  2. The American Film Institute Catalog of Motion Pictures
  3. Denis Gifford, en:The British Film Catalogue
"https://ta.wikipedia.org/w/index.php?title=முழு_நீளத்_திரைப்படம்&oldid=3568204" இலிருந்து மீள்விக்கப்பட்டது