உள்ளடக்கத்துக்குச் செல்

விளையாட்டுத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விளையாட்டுத் திரைப்படம் (Sports film) என்பது ஒரு திரைப்பட வகையாகும். இது விளையாட்டை கருப்பொருளாக பயன்படுத்தி எடுக்கப்படுகின்றது.[1] இதுபோன்ற விளையாட்டுத் திரைப்படங்கள் காதல், அதிரடி, உண்மை, வாழ்க்கை வரலாறு போன்ற துணை வகைத் திரைப்படங்களுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றது. அமெரிக்கா நாட்டில் மோட்டார் பந்தயம், அமெரிக்கக் கால்பந்தாட்டம், மற்போர், குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளையும், இந்தியாவில் துடுப்பாட்டம், சடுகுடு போன்ற விளையாட்டுகளை மையமாக வைத்தே பெரும்பாலான விளையாட்டுத் திரைப்படங்கள் எடுக்கப்படுகின்றன.

தமிழ்த் திரைப்படத்துறையில் விளையாட்டு சார்ந்த திரைப்படங்கள் எடுப்பது மிகவும் அரிதானது. ஆனாலும் எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, வெண்ணிலா கபடிகுழு, ஜீவா, சென்னை 600028, கென்னடி கிளப், வெண்ணிலா கபடிகுழு 2, தோனி, வல்லினம், சாம்பியன், பூலோகம், சென்னை 600028 II, இறுதிச்சுற்று, கனா, பிகில், போன்ற சில திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் கண்டுள்ளது. ஹாலிவுட் திரைப்படத்துறையில் ஃபாரஸ்ட் கம்ப், இசுபேசு யாம், ராக்கி, பாஸ்ட் அன்ட் பியூரியஸ் 6, மில்லியன் டாலர் பேபி போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெளியான பியூரியஸ் 7 என்ற திரைப்படம் அதிக வசூல் செய்த விளையாட்டுத் திரைப்படங்களில் ஒன்றாகும்.

மேலும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Crosson, Seán (2013). Sport and Film. Abingdon, Oxon: Routledge. pp. 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780415569934.