ஆபாசத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபாசத் திரைப்படம் அல்லது பாலியல் திரைப்படம் (Pornographic film) என்பது பாலியல் ரீதியான விசயங்களை முன்வைத்து பார்வையாளர்களை புணர்ச்சிப் பரவசநிலைக்கு தூண்டுவதற்காக உருவாக்கப்படும் ஒரு திரைப்பட வகை ஆகும்.[1] ஆபாசத் திரைப்படங்கள் பாலியல் கற்பனைகளை முன்வைக்கின்றன. பொதுவாக நிர்வாணம் மற்றும் பாலியல் பாலுறவு போன்ற சிற்றின்பத் தூண்டுதல்களை உள்ளடக்குகின்றன.[2]

ஒரு ஆபாச படப்பிடிப்பின்போது

இந்த வகைத் திரைப்படம் மிகவும் வெளிப்படையான பாலுணர்வைக் கொண்டுள்ளது. கதைசொல்லலைக் காட்டிலும் பாலியல் காட்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறது. ஆபாசப் படங்கள் இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டு, இணையம், கம்பி வடத் தொலைக்காட்சி போன்ற பல்வேறு ஊடகங்களில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன. தற்காலத்தில் ஆபாச படங்கள் டிவிடியில் விற்கப்படுகின்றன அல்லது வாடகைக்கு விடப்படுகின்றன. சிறப்பு அலைவரிசைகள், கம்பி வடத் தொலைக்காட்சி மற்றும் செயற்கைக்கோள் போன்றவற்றில் பார்வையாளர்கள் காட்சிக்கு-காசு. கட்டணமுறையில் பார்க்கலாம். அல்லது வயதுவந்த திரையரங்குகளில் பார்க்கப்படுகிறது. சட்டப்படி இந்தவகைத் திரைப்படம் பொதுவாக பிரதான திரையரங்குகளில் அல்லது இலவசமாக தொலைக்காட்சியில் காட்ட அனுமதிக்கப்படுவதில்லை.

சட்டரீதியான தகுதி[தொகு]

ஆபாசத் திரைப்படங்கள் பற்றிய சட்டம் ஒவ்வொரு நாட்டுக்கு ஏற்ற வேறுபடுகிறது. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் இந்த வகை திரைப்படங்கள் சட்டவிரோதமானது. ஆனாலும் பெரும்பாலான நாடுகள் இந்தத் துறைக்கு எதிராகத்தான் சட்டம் அமைத்துள்ளன.

1969 இல் ஐக்கிய அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஆபாசமான பொருட்களை தனிப்பட்ட முறையில் வைத்திருப்பதை குற்றமாக அறிவித்ததது.[3] 1970 களில் அமெரிக்காவில் ஆபாசத் தொழிலை மூடுவதற்கு மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆபாசத் தொழில்துறையில் இருப்பவர்களை விபச்சாரக் குற்றச்சாட்டில் வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

பல நாடுகளில் ஆபாசப் படங்கள் விநியோகிப்பதற்கும் உற்பத்தி செய்வதற்கும் சட்டபூர்வமானது, ஆனால் சில கட்டுப்பாடுகள் உள்ளன. சில நாடுகளில் குறிப்பாக முஸ்லீம் நாடுகளிலும், சீனாவிலும் ஆபாசப் படங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த நாடுகளில் சில இணைய வழியாக பார்க்க முடியும்.

இந்தியா[தொகு]

  • இந்தியாவில் ஆபாசப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோகம் செய்வது பிரிவு 292 இன் கீழ் சட்டவிரோதமானது.[4]
  • பிரிவு 293 மற்றும் ஐடி சட்டம் -67 பி ஆகியவற்றின் கீழ் ஆபாசப் பொருட்களின் விநியோகம், விற்பனை அல்லது 20 வயதிற்குட்பட்ட எந்தவொரு நபருக்கும் ஆபாச உள்ளடக்கங்களை விற்பனை செய்வது சட்டவிரோதமானது.[5]
  • தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 இன் பிரிவு 67 பி இன் கீழ் நாடு முழுவதும் சிறுவர் ஆபாசப் படங்கள் சட்டவிரோதமானது மற்றும் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளன.[6]
  • பிரிவு 292, 293 இன் கீழ் இந்தியாவில் ஆபாசத் திரைப்படங்களை தயாரித்தல், வெளியிடுதல் மற்றும் விநியோகித்தல் சட்டவிரோதமானது.[7]

சுகாதாரப் பிரச்சினைகள்[தொகு]

ஆபாசப் படங்களில் பாலியல் செயல்களில் நடிப்பவர்கள் பாதுகாப்பான முறையில் கருத்தடை உறை பயன்படுத்தாமல் செய்யப்படுகின்றன இதனால் நடிகர்களிடையே பால்வினை நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. 1986 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி தொற்று உருவாகி பல நடிகர்கள் மற்றும் நடிகைகளின் எயிட்சு மூலம் இறப்புகளுக்கு வழிவகுத்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபாசத்_திரைப்படம்&oldid=3824613" இருந்து மீள்விக்கப்பட்டது