குற்றவியல் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குற்றவியல் திரைப்படம் அல்லது குற்றத் திரைப்படம் (Crime film) என்பது ஒரு திரைப்பட வகையாகும். இது குற்றவியல் புனைகதை இலக்கிய வகையை ஒத்திருக்கிறது. இந்த வகை திரைப்படங்கள் பொதுவாக குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கதைக் களமாகக் கொண்டு குற்றத்தின் பல்வேறு அம்சங்களையும் அதைக் கண்டறியும் முறையையும் விபரிக்கின்றது.

இந்த வகை திரைப்படம் நாடகம் மற்றும் கேங்க்ஸ்டர் திரைப்பட வகைகளில் தான் பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது.[1] ஆனாலும் நகைச்சுவைத் திரைப்படம், மர்மம் மற்றும் பரபரப்பூட்டும் வகை திரைப்படங்களுடன் இணைத்து தயாரிக்கப்படுகின்றது.

துணை வகைகள்[தொகு]

அதிரடி குற்றம்[தொகு]

அதிரடி மற்றும் குற்றத் திரைப்படங்கள் அதிரடி திரைப்படங்களின் துணை வகை ஆகும். இந்த வகையான பெரும்பாலான திரைப்படங்கள் சிறைசாலை மற்றும் சில நேரங்களில் காவல் மற்றும் ரவுடிகள் வகை திரைப்படங்கள் என்ற பிரிவில் வருகின்றன. ஆரண்ய காண்டம், பகவதி, தனி ஒருவன், ராட்சசன் மற்றும் இமைக்கா நொடிகள் ஆகியவை இதற்கு உதாரணம்.

குற்ற நகைச்சுவை[தொகு]

இது நகைச்சுவைத் திரைப்படம் மற்றும் குற்றத் திரைப்படங்களின் கலப்பு வகை ஆகும். மாரி, சூது கவ்வும், கோலமாவு கோகிலா மற்றும் மாரி 2 ஆகியவை இதற்கு உதாரணம்.

குற்ற நாடகம்[தொகு]

இது நாடகம் மற்றும் குற்றத் திரைப்படங்களின் கலப்பு வகை ஆகும். அமரன், செக்கச்சிவந்த வானம், கபாலி மற்றும் நாயகன் ஆகியவை இதற்கு உதாரணம்.

குற்றவியல் திரில்லர்[தொகு]

இது பரபரப்பூட்டும் மற்றும் குற்றத் திரைப்படங்களின் கலப்பு வகை ஆகும். சின்னதுரை, பில்லா 2, கைதி கண்ணாயிரம் மற்றும் கணிதன் ஆகியவை இதற்கு உதாரணம்.

சட்ட நாடகம்[தொகு]

இது நீதிக்கு புறம்பாக உணமையான குற்றவாளிக்கு தண்டனை வழங்காமல் சதி மூலம் ஒரு அப்பாவியை தண்டிக்கும் வகை. பொன்மகள் வந்தாள், மற்றும் நேர்கொண்ட பார்வை ஆகியவை இதற்கு உதாரணம்.

பொலிஸ் நடைமுறை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]