பிணன் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிணன் திரைப்படம் (Zombie films) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும். இது ஒரு கற்பனையான உயிரினம். அவை பொதுவாக இறந்த சடலங்கள் மீண்டும் கிருமி பாதிக்கப்பட்ட மனிதர்களாக பிணன் போன்று புத்துயிர் பெறுவதாக சித்தரிக்கப்படுகின்றன. இவைகள் இயற்க்கைக்கு எதிராக நரமாமிசிகள் என்று சித்தரிக்கப்படுகின்றன.

பிணன் திரைப்படங்கள் பொதுவாக திகில் வகைக்குள் வந்தாலும், சில நகைச்சுவை, அறிபுனை, அதிரடி, பரபரப்பூட்டும் அல்லது காதல் போன்ற பிற வகைகளிலும் உருவாக்கப்படுகின்றது. முதல் பிணன் திரைப்படம் 1932 ஆம் ஆண்டு இயக்குனர் 'விக்டர் ஹால்பெரின்' என்பவரால் இயக்கப்பட்ட 'வைட் ஜாம்பி' என்ற திரைப்படம் ஆகும்.[1][2] அதன் பிறகு 1930 முதல் 1940 களில் 'ஐ வாக் வித் அ ஜாம்பி' (1943) உட்பட பல பிணன் திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன.

தமிழில்[தொகு]

முதல் தமிழ் மொழி பிணன் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியான 'வேற வழி இல்லை' என்ற மலேசிய நாட்டுத் தமிழ் மொழித் திரைப்படம் ஆகும்.[3][4][5][6] அதன் பிறகு 2016 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் நடிகர் ஜெயம் ரவி[7] நடிப்பில் இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கத்தில் மிருதன்[8] என்ற திரைப்படம் வெளியானது. இதுவே இந்திய நாட்டின் முதல் பிணன் திரைப்படமும் ஆகும். 2019 ஆம் ஆண்டில் யோகி பாபு நடிப்பில் 'ஜாம்பி'[9] என்ற நகைச்சுவை திகில் திரைப்படம் வெளியானது.[10]

நேரடி தமிழ் பிணன் திரைப்படங்கள் வருவதற்கு முன்பு ரெசிடென்ட் ஈவில் போன்ற ஆங்கிலத் திரைப்படங்கள் தமிழ் மொழியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Roberts, Lee (ஆகத்து 6, 2012). "White Zombie (1932) Review". best-horror-movies.com. Archived from the original on சூலை 30, 2012. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 5, 2012.
  2. Haddon, Cole (May 10, 2007). "Daze of the Dead 75 years of flesh-eating fun". Orlando Weekly. http://www.orlandoweekly.com/features/story.asp?id=11537. பார்த்த நாள்: November 5, 2012. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-11-17. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  4. "Vere Vazhi Ille". Malaysia: Cinema Online. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2020-11-08.
  6. http://www.finas.gov.my/index.php?mod=industry&sub=cereka&p=Filem2015
  7. "Jayam Ravi on a signing spree". சிஃபி. 21 March 2015. Archived from the original on 21 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. "Miruthan Will Be A Different Zombie Film, Says Jayam Ravi". Silverscreen.in. 8 February 2016. Archived from the original on 1 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 8 நவம்பர் 2020.
  9. "Events - Yogi Babu's 'Zombie' Movie Launch Movie Launch and Press Meet photos, images, gallery, clips and actors actress stills". IndiaGlitz.com. பார்க்கப்பட்ட நாள் 2018-12-19.
  10. ""Zombie" Official Teaser - Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar - Bhuvan Nullan R". YouTube. Lahari Music. 7 June 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிணன்_திரைப்படம்&oldid=3633346" இலிருந்து மீள்விக்கப்பட்டது