கருப்புத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கருப்புத் திரைப்படம் அல்லது கறுப்பினத் திரைப்படம் (Black film) என்பது ஹாலிவுட் திரைப்படத்தின் வகைப்பாடு ஆகும். இது ஹாலிவுட் திரைப்படத்துறையில் கறுப்பின மக்களின் பங்கேற்பு மற்றும் பிரதிநிதித்துவம் சம்பந்தப்பட்ட திரைப்பட ஆளுமையை கொண்டுள்ளது. இந்த வகைத் திரைப்படம் கறுப்பின பார்வையாளர்களுக்காக கறுப்பின கதையை மையமாக கொண்டு கறுப்பின நடிகர்கள், இயக்குநர், மற்றும் கறுப்பின குழுக்களால் தயாரிக்கப்படலாம்.

கல்வியாளர் 'ரோமி கிராஃபோர்ட்' கூறுகையில், 'ஒரு கருப்பு படம் என்பது ஒரு திரைப்பட வேலை என்று நான் நினைக்கிறேன், இது ஆப்பிரிக்க-அமெரிக்கர்கள் அல்லது ஆப்பிரிக்காவில் இருந்து புலம்பெயர்ந்த கறுப்பினத்தவர்கள் திரைப்படத் தயாரிப்பு நடைமுறை மற்றும் தொழில் ஆகியவற்றுக்கு உள்ள உறவை ஒருவிதத்தில் கணக்கில் எடுத்துக்கொள்ளும் ஒரு திரைப்பட வேலை என்று நான் நினைக்கிறேன்' என்றார் .[1]

மேற்கோள்கள்[தொகு]