கறுப்பின மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கறுப்பின மக்கள்

அடர்நிறத் தோல் அல்லது அடர்பழுப்பு நிறத்தோல் கொண்ட மக்கள் இன அடிப்படையில் கறுப்பின மக்கள் என்று அடையாளப் படுத்தப்படுகின்றனர். நிறத்தின் அடிப்படையில் ஒரு இனத்திற்கு பெயர் சூட்டுவது மேற்கத்திய நாடுகளில் விவாதிக்கப்படும் ஒரு விஷயமாகும். பொதுவாக, ஆப்பிரிக்க கண்டத்தில் தோன்றி உலகின் பிறப்பகுதிகளில் குடியேறிய மக்களும் அவர்களது வம்சத்தினருமே கறுப்பின மக்கள் என்று மேற்கத்திய நாடுகளில் அழைக்ககின்றனர். இவர்களை ப்ளாக்ஸ் அதாவது கறுப்பர் என்று சுருக்கமாக அழைக்கபடுகின்றனர்.[1][2]

ஆப்பிரிக்கா[தொகு]

வட ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலானோர் அடர்நிறத் தோல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். [3] ஏழாம் நூற்றாண்டில் முதன்முதலாக அரபியர் போர்த்தொடுப்புகளின் போது, இம்மக்கள் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டதாக வரலாறு கூறுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டில் கூட மொராக்கன் சுல்தான் மௌலே இசுமாயில் என்ற அரபரசன் 1,50,000 கறுப்பினத்தவரைக் கொண்ட காலாற்படையை வைத்திருந்து அப்படைக்கு கறுப்பு படை என்று பெயர் சூட்டி இருந்ததாகத் தெரிகிறது.[4]

ஆணாதிக்க மனப்பான்மை கொண்டிருந்த அரபு சமூகத்தார் ஆண்களைக் காட்டிலும் மிகுதியான பெண்களையே அடிமைகளாகக் கொண்டிருந்ததும் அப்பெண்களுடன் களவில் ஈடுபட்டு வந்ததுமின் விளைவாக கலப்பின குழந்தைகள் பிறந்ததாக அறியமுடிகிறது. அப்படி பிறந்த ஆண் பிள்ளைகளுக்கு தந்தையின் சொத்தில் பங்கும் உரிமைகளும் அரபிய சட்டப்படி வழங்கப்பட்டன. கலப்பின குழந்தைகள் அடிமைகள் அல்லாதவர்களாக அறியப்பட்டார்கள்.[5] மொரோக்கோவை 1578 ஆம் ஆண்டிலிருந்து 1608 ஆம் ஆண்டுவரை ஆண்ட அகமது அல் மன்சூர் என்கிற சுல்தானும் கலப்பினத்தவரே.

சகாராவில் இருந்து பழங்குடிகள் வரலாறு முழுவதும் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்திக் கொண்டு வந்ததைக் காண முடிகிறது. இது நிற அடிப்படையில் அமையாத போதிலும் அடிமைப் பண்பாடு கறுப்பினத்தவர் நடுவணிலும் திகழ்ந்திருந்ததைக் காட்டுகிறது.[6] எத்தியோப்பியாவிலும் சோமாலியாவிலும் கூட சூடானிய கென்ய நாட்டவர் அடிமைகளாக இருந்தததற்கான குறிப்புகள் உள்ளன. போரெடுப்புகளின் போது கைப்பற்றப்படும் மாந்தர் பொதுவாக அடிமைச் சந்தைகளில் விற்பிக்கப்படுவது வழக்கமாக இருந்திருக்கிறது.[7]

தென்னாப்பிரிக்காவைப் பொறுத்த வரையில் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் போது மிகுதியான கலப்புத் திருமணங்கள் நடந்தன. மேலும் பணிநிமித்தம் வந்த இந்தியர்களும் மக்கள் தொகையில் கலந்திருந்தனர். அப்போது அவ்வரசாங்கம் மக்களை நிற அடிப்படையில் நான்காக பிரித்தாண்டது. அதாவது வெள்ளையர், கறுப்பர், ஆசியர் மற்றும் பிறர் என்று பிரித்தார்கள். இப்பிரிவினைக்கேற்ப வெள்ளையர்களுக்கே முக்கியத்துவம் வழங்கினார்கள். விடுதலைக்கு பின்னரே தென்னாப்பிரிக்கா ஒரு இனம்சாராத மக்களாட்சியாக அறிவிக்கப்பட்டது.[8][9]

ஆசியா[தொகு]

ஆப்பிரிக்க ஆசியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஆசியர்களுக்கும் ஆப்பிரிக்கர்களுக்கும் பிறந்த கலப்பின பிள்ளைகளாவர். [10] கி.பி 650 வாக்கில் இசுலாமிய போர்த்தொடுப்புகளின் போது தோராயமாக இரண்டு இலட்சம் வரை கறுப்பின மக்கள் அரபு நாடுகளுக்கும் அவற்றைச் சுற்றியுள்ள நாடுகளுக்கும் அடிமைகளாக விற்கப்பட்டனர். அவர்களுள் பெரும்பாலோனோர் கொடும்பணி காரணமாக மாண்டு போயினும் கலப்பினப் பிள்ளைகள் அரபு நாட்டினர் சட்டத்தால் பிழைத்துக் கொண்டதாகத் தெரிகிறது.[11]

ஈரான் நாட்டின் கஜார் இராச்சியத்தைச் சேர்ந்தவர்களும் துருக்கி நாட்டின் ஓட்டமான் இராச்சியத்தைச் சேர்ந்தவர்களும் அடிமைப் பண்பாட்டைப் பின்பற்றி உள்ளனர். இசுரேலில் இன்றளவும் 1,50,000 கறுப்பின மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் சமீபத்திய குடியேறிகளாக இருப்பினும் தொன்று தொட்டே இருப்பவர்களும் உளர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.[12][13][14]

சித்தி என்று அழைக்கப்படும் கறுப்பின வகையினர் இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் காணப்படுகின்றனர். தோராயாமாக மூன்று இலட்சம் பேர் இருப்பர் என்று கணக்கிடப்படும் இவர்களின் மக்கள் தொகையானது இந்தியாவின் கருநாடகா, குஜராத் மற்றும் ஐதராபாத்திலும் பாகிஸ்தானின் மக்ரன் மற்றும் கராச்சியிலும் பரவி இருக்கிறது. தாய்வான், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா மற்றும் பிலிப்பைன்சிலும் கறுப்பின மக்கள் இருக்கின்றனர். இவர்களை நீக்கிரிட்டோக்கள் என்று அழைக்கிறார்கள்.[15][16][17][18]

மேற்கத்திய நாடுகள்[தொகு]

மேற்கத்திய நாடுகளில் நிற அடைப்படையிலான கணக்கெடுப்புகள் கூட சட்டவிரோதமாகக் கருதப்படுகின்றன. கறுப்பர் என்ற சொல்கூட பயன்படுத்தக்கூடாத ஒன்றாக மனதைப் புண்படுத்தக்கூடிய சொல்லாகப் பார்க்கப்படுகிறது. தோராயமாக ஃப்ரான்சில் முப்பது இலட்சமும் ஜெர்மனியில் பத்து இலட்சமும் எசுபானியத்தில் ஏழு இலட்சமும் ஐக்கிய இராச்சியத்தின் மக்கட்டொகையில் இரண்டு விழுக்காடுமாய் கறுப்பின மக்கள் பரவி இருக்கின்றனர். கனடா நாட்டு எவரும் குடியுரிமைப் பெற எளிதான நாடாக இருப்பதால் அங்கு நிறைய கறுப்பின மக்கள் உள்ளனர். அந்நாட்டின் சட்டமும் இனத்தின் அடிப்படையிலான வன்முறைகளைக் கடுமையாகத் தண்டிக்கும் வகையில் இயற்றபட்டுள்ளது.[19][20][21][22][23][24]

ஐக்கிய அமெரிக்காவைப் பொருத்த மட்டில் 1650 ஆம் ஆண்டு முதலே கறுப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டு வந்துள்ளனர். சமூகத்தில் எந்த பங்கீடும் உரிமையும் இல்லாத வகையில் அவர்கள் ஒதுக்கவும் ஒடுக்கவும் பட்டனர். செனகல், கினியா, லிபேரியா, நைஜீரியா, காங்கோ, கேமரூண், அங்கோலா, மடகாஸ்கர், முசாம்பிக் உள்ளிட ஆப்பிரிக்காவின் பல இடங்களில் அடிமைச்சந்தைகள் அமைக்கப்பட்டு ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவிற்கு ஆட்கள் கடத்தப்பட்டனர். இவர்களைக் குறிக்க நிக்கர் அல்லது நீக்ரோ என்ற சொல் பரவலாக பயன்பட்டு வந்தது. எனினும் தற்போதைய காலக்கட்டத்தில் அத்தகைய சொல் பயன்படுத்துவது மேற்கத்திய நாடுகளில் குற்றமாகவே கருதப்படுகிறது.[25][26][27][28][29]

புண்படுத்தப்படக் கூடிய அச்சொல்லுக்கு மாற்றாக தற்போது ஆப்பிரிக்க அமெரிக்கர் என்ற சொல் பயன்படுகிறது. குடியுரிமை மற்றும் அரசியல் சட்டத்தின் கீழ் இம்மாற்றங்கள் இயற்றப்பட்டன. மாற்றங்களுக்கு முன்னர் கறுப்பின மக்களே தங்களை அச்சொல் பயன்படுத்தி குறிப்பிட்டிருக்கிறார்கள். சான்றாக, பெருமதிப்புள்ள மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் 1963 கொடுத்த 'ஐ ஹேவ் ஏ ட்ரீம்' (எனக்கொரு கனவிருக்கிறது) என்ற பேச்சுரையில் தன்னினத்தை அவர் அச்சொல் பயன்படுத்தியே குறிப்பிட்டார்.[30][31]

அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு பின் தற்போது அனைத்து நிறத்தவரும் அமெரிக்காவில் சமம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. கறுப்பின மக்களும் நீதிபதிகள், மருத்துவர்கள், ஆசிரியர்கள் என நன்கு மதிக்கப்படும் பணிகள் புரிந்து வருகிறார்கள். பாரக் ஒபாமா ஒரு கறுப்பினத்தவராக முதன்முறையாக 2009 ஆம் ஆண்டில் அமெரிக்க நாட்டின் நாற்பத்து நான்காவது குடியரசுத் தலைவரானார்.[32][33]

மேற்கோள்கள்[தொகு]

 1. "கறுப்பின மக்களின் குரல் - ப்ளாக் வாய்ஸ் நியூஸ் ஆங்கில வலைத்தளக் கட்டுரை".
 2. "கறுப்பின மக்கள் - ஏ.பி.நியூஸ் ஆங்கில வலைத்தளக்கட்டுரை".
 3. "மனித பையாலஜி ஜர்னல் - ஆப்பிரிக்காவில் கறுப்பு நிறத்தவர் - ஆங்கிலக் கட்டுரை".
 4. "மத்தியகிழக்கு நாடுகளில் இனமும் அடிமைப் பண்பாடும் - ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பத்திரிக்கை - ஆங்கில வெளியீடு".
 5. "அடிமைப் பண்பாட்டைப் பற்றிய அரபிய பார்வை - ஆங்கில ஆய்வறிக்கை" (PDF).
 6. "ஆப்பிரிக்க பழங்குடிகளின் பண்பாடு - கூகுள் புக்ஸ்".
 7. "ராபர்ட் ஹாய்லாந்தின் சப்பாட்டிக்கல் நோட்ஸ் - ஆங்கில ஆய்வுக் கட்டுரை".
 8. "நாட் ப்ளாக் இனஃப் - ஆங்கில வலைத்தளக்கட்டுரை".
 9. "நாட் வைட் இன்ஃப் - நியூ ஆர்க் டைம்ஸ் ஆங்கில வலைத்தளச் செய்தி".
 10. "ப்ளேசியர் - வெப் ஆர்ச்சிவ் - ஆங்கிலக் கட்டுரை".
 11. "அடிமைவாதத்தின் வரலாறு - கூகுள் புக்ஸ் ஆங்கில நூல்".
 12. "ஆப்பிரிக்க துருக்கியர்கள் - துருக்கிய வலைத்தளச் செய்தி".
 13. "யூதர்களும் இனவெறியும் - சி.எஸ். மானிட்டர் ஆங்கில வலைத்தளத் தகவல்".
 14. "இசுரேலில் கறுப்பினத்தவர் - ஆங்கில வலைத்தளச்செய்தி" (PDF).
 15. "ஆசியாவில் இனவெறி - ஜி.எம்.ஏ நெட்வர்க் செய்தி - ஆங்கிலம்".
 16. "நீக்ரிட்டோஸ் - வியட்நாமிய நூல் - கூகுள் புக்ஸ்".
 17. "சித்திகள் ஒரு பார்வை - தி டான் ஆங்கிலக்கட்டுரை".
 18. "எம்ப்பையர் ஆஃப் தி இந்தஸ் - கூகுள் புக்ஸ்".
 19. "தேசிய கணக்கெடுப்பு - ஐக்கிய இராச்சியம் - ஆங்கிலம்".
 20. "எசுப்பானியத்தில் கறுப்பினத்தவர் - ஆங்கிலக்கட்டுரை" (PDF).
 21. "செருமனிய கணக்கீடு - செருமன் மொழிக் கட்டுரை".
 22. "பிரான்சின் கொள்கை - வாஷிங்கடன் போஸ்ட் ஆங்கிலம்".
 23. "கனடாவில் கறுப்பர்கள் - ஒரு வரலாறு - ஆங்கிலம்" (PDF). 2020-08-19 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-03-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 24. "கனடா கணக்கீடு - ஆங்கிலம்".
 25. "அமெரிக்காவில் கறுப்பினத்தவர் - ஒரு பார்வை - ஆங்கிலம்".
 26. "கறுப்பினத்தவன் - ஆங்கில வலைத்தளக்கட்டுரை - மான்ஹாட்டன் பல்கலைக்கழகம்".
 27. "ஆப்பிரிக்க ஆமெரிக்கர்களின் பயணம் - ஆமேசான் நூல்கள்".
 28. "ஆப்பிரிக்க அமெரிக்கர் ஒரு வரலாறு - ஆங்கிலம்" (PDF).
 29. "நீக்ரோ யார்? - ஆங்கில வலைத்தளக்கட்டுரை".
 30. "கறுப்பினத்தவரும் பில் கிளிண்டனும் - ஆங்கிலம் - சாலன்.காம்".
 31. "தி பைனல் டேஸ் - கூகுள் புக்‌ஸ்".
 32. "பராக் ஒபாவின் பேச்சு - ஆங்கிலம்" (PDF).
 33. "பராக் ஒபாமா - நிறத்தவர் - டைம் கண்டெண்ட் ஆங்கில வலைத்தளச் செய்தி".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கறுப்பின_மக்கள்&oldid=3355656" இருந்து மீள்விக்கப்பட்டது