ஆபிரிக்க அமெரிக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆபிரிக்க அமெரிக்கர்கள் (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின் போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.

1860 அளவில் மூன்றரை மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக இருந்தனர். 1863 இல் அமெரிக்க சிவில் போர் காலத்தில் ஆபிரகாம் லிங்கன் அனைத்து அடிமை ஆபிரிக்கர்களுக்கும் சுதந்திரம் தரும் கட்டளையில் கையொப்பமிட்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆபிரிக்க_அமெரிக்கர்&oldid=3071046" இருந்து மீள்விக்கப்பட்டது