உள்ளடக்கத்துக்குச் செல்

கணினி இயங்குபடம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
"இயக்கம் கைப்பற்றல்" நுட்பத்திலிருந்து தயாரிக்கப்படும் கணினி இயங்குபடம்.

கணினி இயங்குபடம் (Computer animation) என்பது இயங்குபடங்களை எண்முறையில் உருவாக்க பயன்படும் செயல்முறையாகும். கணினி உருவாக்கிய படங்கள் நிலையான காட்சிகள் மற்றும் மாறும் படங்கள் இரண்டையும் உள்ளடக்கியது, அதே நேரத்தில் கணினி இயங்குபடம் நகரும் படங்களை மட்டுமே குறிக்கிறது.

நவீன கணினி இயங்குபடம் வழக்கமாக இரு பரிமாண படத்தை உருவாக்க முப்பரிமாண கணினி வரைகலை பயன்படுத்துகிறது, இருப்பினும் இரு பரிமாண (2D) கணினி வரைகலை இன்னும் பயன்பாட்டில் உள்ளது. அது குறைந்த அலைவரிசை மற்றும் வேகமான நிகழ்நேர வழங்கல்கள் ஆகியவற்றிற்கு பயன்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் இயங்குபடத்தின் இலக்கு கணினிதான் ஆனால் சில சமயங்களில் திரைப்படமும் கூட தான்.

வரலாறு

[தொகு]
இது ஒரு முப்பரிமாண நிகழ்ப்பட ஆட்ட கணினி இயங்குபடம்.
  • ஆரம்பகால எண்முறை கணினி இயங்குபடம் 1960 களில் எட்வர்ட் ஈ. ஜாஜாக், ஃபிராங்க் டபிள்யூ. சிண்டன், கென்னத் சி. நோல்டன் மற்றும் ஏ. மைக்கேல் நோல் ஆகியோரால் பெல் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கப்பட்டது.[1]
  • 1967 ஆம் ஆண்டில் சார்லஸ் சிசுரி மற்றும் ஜேம்ஸ் ஷாஃபர் ஆகியோரால் "ஹம்மிங்பேர்ட்" என்ற கணினி இயங்குபடம் உருவாக்கப்பட்டது.[2]
  • 1968 ஆம் ஆண்டில் "கிட்டி" என்ற கணினி இயங்குபடம் தயாரிக்கப்பட்டது. இது ஒரு கிட்டி என்ற பூனையை சுற்றி சித்தரிக்கப்பட்டது.[3]
  • 1971 ஆம் ஆண்டில், "மெட்டாடேட்டா" என்ற கணினி இயங்குபடம் உருவாக்கப்பட்டது, இது பல்வேறு வடிவங்களைக் காட்டுகிறது.[4]
  • முதல் முழு நீள கணினி இயங்குபடம் 'ரீபூட்'[5] என்ற தொலைக்காட்சித் தொடர் ஆகும்.[6] இது செப்டம்பர் 1994 இல் அறிமுகமானது. இது ஒரு கணினி உள்ளே வாழ்ந்த கதாபாத்திரங்களின் சாகசங்களை மையமாக வைத்து தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sito 2013, ப. 69–75.
  2. [1]
  3. [2]
  4. [3]
  5. Sito 2013, ப. 188.
  6. Masson 1999, ப. 430.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_இயங்குபடம்&oldid=3059222" இலிருந்து மீள்விக்கப்பட்டது