விடலைப் பருவத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விடலைப் பருவத் திரைப்படம் (Teen films) என்பது விடலைப் பருவ இளைஞர்களுக்கான இலக்காகக் கொண்ட ஒரு திரைப்பட வகையாகும். இது அவர்களின் சிறப்பு நலன்களை அடிப்படையாகக் கொண்டது.[1] அதாவது வயதுக்கு வரும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம், கொடுமைப்படுத்துதல், முதல் காதல், பாலியல் ரீதியான ஈர்ப்பு மற்றும் எதிர்ப்பு, பெற்றோர்களுடனான முரண்பாடு, நண்பர்களுடனான பகடி போன்றவையே முன்வைத்து உருவாக்கப்படுகின்றது. பல விடலைப் பருவக் கதாபாத்திரங்கள் 18 முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் வயது நடிகர்களால் சித்தரிக்கப்படுகின்றன. சில விடலைப் பருவப் படங்கள் இளம் ஆண்களை ஈர்க்கின்றன, மற்றவர்கள் இளம் பெண்களை ஈர்க்கின்றன.[2]

இந்த வகையின் திரைப்படங்கள் பெரும்பாலும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அமைக்கப்படுகின்றன, அல்லது உயர்நிலைப் பள்ளி அல்லது கல்லூரி வயதுடைய கதாபாத்திரங்களைக் கொண்டிருக்கின்றன. விடலைப் பருவத் திரைப்படங்கள் பெரும்பாலும் காதல் நகைச்சுவைக்கு ஒத்ததாகும். விடலைப் பருவ திகில், விடலைப் பருவ நாடகம், விடலைப் பருவ ஆபாச நகைச்சுவை, விடலைப் பருவ சண்டை, விடலைப் பருவ அறிவியல் போன்ற வகைகளிலும் உருவாக்கப்படுகின்றது.

தமிழ்த் திரைப்படத்துறையில் காதல், அதிரடி, நகைச்சுவை போன்ற வகைகளில் விடலைப் பருவத் திரைப்பட ங்கள் தயாரிக்கப்படுகின்றது. பெரும்பாலான திரைப்படங்களை காதலை மையமாக கொண்டது. அலைபாயுதே (2000), சிநேகிதியே (2000), மின்னலே (2001), குத்து (2004), காதல் (2004), கல்லூரி (2007), விண்ணைத்தாண்டி வருவாயா (2010) போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]