உள்ளடக்கத்துக்குச் செல்

கனவுருப்புனைவுத் திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனவுருப்புனைவு கதாபாத்திரங்கள்

கனவுருப்புனைவுத் திரைப்படம் (Fantasy film) என்பது அற்புதமான கருப்பொருள்கள், மந்திரம், இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள், புராணங்கள், நாட்டுப்புறவியல் கதைகள் அல்லது கவர்ச்சியான கற்பனை உலகங்களைக் கொண்ட கற்பனை வகையைச் சேர்ந்த திரைப்படங்கள் கனவுருப்புனைவுத் திரைப்படம் ஆகும். இந்த வகை ஊகப்புனைவு, அறிபுனைத் திரைப்படம் மற்றும் திகில் திரைப்படங்களுடன் சேர்ந்த புனைகதைகளின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. கனவுருப்புனைவுத் திரைப்படம் பெரும்பாலும் மந்திரம், புராணம், அதிசயம் மற்றும் அசாதாரணமான வாழ்வியலை கொண்டது.[1]

1980 களில் வரை கற்பனைத் திரைப்படங்கள் மிகக் குறைவாகவே இருந்தன, உயர் தொழில்நுட்ப திரைப்படத் தயாரிக்கும் நுட்பங்களும் பார்வையாளர்களின் ஆர்வமும் அதிகரித்ததால் இந்த வகை தற்பொழுது செழித்து வளர்ந்துள்ளது. 1903 ஆம் ஆண்டு இயக்குநர் ஜார்ஜஸ் மெலிஸ் என்பவரால் முதல் ஊமைத் திரைப்படம் பிரஞ்சு மொழியில் தயாரிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]