உளவு திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உளவு திரைப்படம் (Spy film) என்பது ஒரு திரைப்பட வகையாகும். சில சமயங்களில் வேவு பார்த்தல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த வகை படங்கள் யதார்த்தமான வழியில் ஜான் லே காரே எழுதிய புதினங்களின் தழுவலாகவோ அல்லது கனவுருப்பனை கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் என்பவரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகின்றது. உளவுப்புனைவுகதை வகையின் பல புதினங்கள் ஜான் புச்சன், லெ காரே, இயன் ஃப்ளெமிங் மற்றும் லென் டீடன் ஆகியோரின் படைப்புகளின் இருந்து திரைப்படங்களுக்கு தழுவின.

இந்த வகை திரைப்படங்கள் பிரித்தானியத் திரைப்படத்துறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. அத்துடன் முன்னணி பிரித்தானிய இயக்குநர்களான ஆல்பிரட் ஹிட்ச்காக் மற்றும் கரோல் ரீட் ஆகியோர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினர்கள்.[1][2] பெருபாலான உளவுத் திரைப்படங்கள் அரசாங்கத்தை சார்ந்து உளவு நடவடிக்கைகள் மற்றும் அவர்களின் எதிரிகளால் கண்டுபிடிப்பது போன்றே காட்டப்படுகின்றது. இது 1940 களின் நாசிசம் உளவு முதல் 1960 களின் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்கள் வரை உளவு படம் எப்போதும் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பிரபலமாக உள்ளது.

இந்த வகை திரைப்படங்களில் நவீன தொழில்நுட்ப கருவிகள், கவர்ச்சியான இடங்கள், சிறந்த சண்டை வீரர், எதையும் புத்திக்கூர்மையுடன் கையாளும் கதாநாயகன் என அதிரடி மற்றும் அறிவியல் புனைகதை வகைகளை கொண்டு பார்வையாளர்களை கவரும் விதமாக உருவாக்கப்படுகின்றது. 1945 ஆம் ஆண்டு போர் உளவு திரைப்படமாக பர்மா ராணி என்ற படம் வெளியானது. அதை தொடர்ந்து 1965 ஆம் ஆண்டில் கே. சங்கர் இயக்கத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா, எல். விஜயலட்சுமி நடிப்பில் குடியிருந்த கோயில் என்ற திரைப்படமும் வெளியானது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Spying Game: British Cinema and the Secret State", 2009 Cambridge Film Festival, pp. 54–57 of the festival brochure.
  2. "Spy movies - The guys who came in from the cold". The Independent. October 2, 2009.
  3. "குடியிருந்த கோயில்". கல்கி. 31 March 1968. p. 25. Archived from the original on 18 September 2021. பார்க்கப்பட்ட நாள் 18 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உளவு_திரைப்படம்&oldid=3753659" இலிருந்து மீள்விக்கப்பட்டது