வாழ்க்கை வரலாறு திரைப்படம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாழ்க்கை வரலாறு திரைப்படம் (Biographical film) என்பது திரைப்படங்களில் உள்ள ஒரு வகையாகும்.[1] இது கற்பனையற்ற வரலாற்று அடிப்படையிலான நபர் அல்லது மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படம் வாழ்க்கை வரலாறுத் திரைப்படம் ஆகும். இத்தகைய திரைப்படங்கள் ஒரு வரலாற்று நபரின் வாழ்க்கையைக் காட்டுகின்றன, மேலும் மைய கதாபாத்திரத்தின் உண்மையான பெயர் பயன்படுத்தப்படுகிறது.[2]

இந்த வகை திரைப்படம் ஆவணத் திரைப்படம் மற்றும் வரலாற்று நாடகப் படங்களிலிருந்து வேறுபடுகின்றன, அதில் அவர்கள் ஒரு நபரின் வாழ்க்கைக் கதையை அல்லது அவர்களின் வாழ்க்கையின் மிக வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டுகளை விரிவாகச் சொல்ல முயற்சிக்கிறார்கள்.

ஒரு நபரை பற்றி சித்தரிக்கப்படும் பொது உண்மையான நபர்களாக இருப்பதால், அவற்றின் செயல்களும் குணாதிசயங்களும் பொதுமக்களுக்குத் தெரிந்தவை (அல்லது குறைந்தபட்சம் வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டவை) அதன் காரணமாக வாழ்க்கை வரலாற்றுப் பாத்திரங்க ளில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைக ள் தேர்வு மிகச்சரியாக இருத்தல் வேண்டும்.

1972 ஆம் ஆண்டு அகத்தியர் என்ற தமிழ் சித்தரை மையமாக வைத்து இயக்குனர் ஏ. பி. நாகராஜன் என்பவரால் அகத்தியர் என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பெரியார் (2007), நடிகையர் திலகம் (2018) போன்ற திரைப்படங்கள் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]