நடிகையர் திலகம் (திரைப்படம்)
நடிகையர் திலகம் | |
---|---|
இயக்கம் | நாக் அஸ்வின் |
இசை | மிக்கி ஜெ. மேயர் |
நடிப்பு | துல்கர் சல்மான் கீர்த்தி சுரேஷ் |
ஒளிப்பதிவு | டேனி சான்செஸ் லோப்ஸ் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகையர் திலகம் (Nadigaiyar Thilagam), என்பது 2018 ஆண்டைய இந்தியத் திரைப்படமாகும்.[1] இப்படம் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய நான்கு மொழிகளில்[2], வைஜெயந்தி மூவிசின் தயாரிப்பில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம். துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாக மற்றும் கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடித்துள்ளனர். இப்படம் மிக்கி ஜெ. மேயரின் இசையில், டேனி சான்செஸ் லோப்சின் ஒளிப்பதிவில், படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 31, மார்ச்சு 2017இல் தொடங்கியது. இப்படம் 9 மே 2018 அன்று தெலுங்கில் மகாநடி என்ற பெயரிலும், 11 மே 2018 அன்று தமிழிலும் வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- துல்கர் சல்மான் - ஜெமினி கணேசன்
- கீர்த்தி சுரேஷ் - சாவித்திரி கணேசன்
- ஜூனியர் என்டிஆர் - என். டி. ராமராவ்
- மாளவிகா நாயர் - அலமேலு கணேசன்
- மோகன் பாபு - எஸ். வி. ரங்கராவாக
- பிரகாஷ் ராஜ் - அலுரி சக்கரபாணி
- தருண் பாஸ்கர் தாசயம் - சிங்கீதம் சீனிவாசராவ்
- சாலினி பாண்டே - சுசீலா
- விஜய் தேவரகொண்டா - ஆண்டனி (நீட்டிக்கப்பட்ட கேமியோ)
- சமந்தா - மதுரவாணி (நீட்டிக்கப்பட்ட கேமியோ)
படப்பணிகள்
[தொகு]மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப்படமே நடிகையர் திலகம்[3] இப்படம் தெலுங்கில் மகாநதி’ என்ற பெயரிடப்பட்டுள்ளது. [4] நடிகர் பிரகாஷ் ராஜ் , சாவித்ரி நடித்த சில திரைப்படங்களுக்கு கதை எழுதிய அலூரி சக்ரபாணியின் வேடத்தில் நடித்துவருகின்றார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2018-ம் ஆண்டின் சிறந்த தமிழ்த் திரைப்படங்கள்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2018/Dec/31/best-tamil-films-of-2018-3068493.html. பார்த்த நாள்: 13 December 2024.
- ↑ "'Mahanati' makers revealed a glimpse of Keerthy Suresh's look from the flick on her birthday - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/entertainment/telugu/movies/news/mahanati-makers-revealed-a-glimpse-of-keerthy-sureshs-look-from-the-flick-on-her-birthday/articleshow/61119353.cms.
- ↑ https://www.vikatan.com/news/cinema/87424-dulquar-salman-is-play-the-role-of-gemini-ganesan-and-savitri-biopic.html
- ↑ https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2017/12/08082147/1133332/Nadigaiyar-Thilagam-movie-gets-Release-date.vpf
- ↑ https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-savithiri-biopic-movie-names-as-nadigaiyar-thilagam-in-tamil/articleshow/60940891.cms